‘வால்பையன் என்பது வால் போன்ற சிறிய உருவம் கொண்டது, தோற்றத்தில் பையன் போல இருக்கும்’

June 12, 2017

… இது வாலுக்கும் பையனுக்கும் இடையில் இருக்கும் ஜந்து.

மைசூர் போண்டா என்பது மைசூர் போன்றது ஆனால் தோற்றத்தில் போண்டா போல இருக்கும். இது மைசூருக்கும் போண்டாவுக்கும் இடையில் இருக்கும் தின்பண்டம்.

மத்தூர் வடை என்பது  மத்தூர் போன்றது ஆனால் தோற்றத்தில் வடை போல இருக்கும். இது மத்தூருக்கும் வடைக்கும் நடுவில் இருக்கும் சட்டினி போன்றது.

வடைகறி என்பது வடை போன்றது ஆனால் தோற்றத்தில் கறி போல இருக்கும். இது வடைக்கும் கறிக்கும் இடையே உள்ள ஊசிப்போன பிரதேசம்.

கோபி மஞ்சூரியன் என்பது கோபி போன்றது ஆனால் தோற்றத்தில் மஞ்சூரியன் போல இருக்கும். இது கோபிக்கும் மஞ்சூரியாவுக்கும் இடையில் இருக்கும் பிரதேசம்.

கருத்துப் படம்: கோபி

மெட்றாஸ் பாஷை என்பது மெட்றாஸ் போன்றது ஆனால் தோற்றத்தில் பாஷை போல இருக்கும். இது மெட்றாசுக்கும் பாஷைக்கும் இடையில் இருக்கும் பாலம்.

திருநெல்வேலி ஹல்வா என்பது திருநெல்வேலி போன்றது ஆனால் தோற்றத்தில் ஹல்வா போல இருக்கும். இது திருநெல்வேலிக்கும் ஹல்வாக்கும் நடுவே இருக்கும் வழுக்குப்பாதை.

திருப்பதி லட்டு என்பது திருப்பதி போன்றது ஆனால் தோற்றத்தில் லட்டு போல இருக்கும். இது திருப்பதிக்கும் லட்டுக்கும் இடையே இருக்கும் ஈ போன்ற உயிரினம்.

தலப்பாகட்டு பிரியாணி என்பது தலப்பாகட்டு போன்றது ஆனால் தோற்றத்தில் பிரியாணி போல இருக்கும். இது தலைப்பாகைக்கும் பிரியாணிக்கும் இடையே உள்ள ஜொள்ளொழுகும் வாய் போன்றது.

இனமானம் என்பது இனம் போன்றது ஆனால் தோற்றத்தில் மானம் போல இருக்கும். இது இனத்துக்கும் மானத்துக்கும் தொடர்பேயில்லாமல் வெளியே எங்கோ கொரட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும்.

சுயமரியாதை என்பது சுயம் போன்றது ஆனால் தோற்றத்தில் மரியாதை போன்றிருக்கும். இது சுயத்துக்கும் மரியாதைக்கும் கட்டுப்படாமல் தத்தாரியாக வெளியே உதிரித்தனமாகப் பொறுக்கிக்கொண்டிருக்கும்.

பகுத்தறிவுப் பகலவன் என்பது பகுத்தறிவு போன்றது ஆனால் தோற்றத்தில் பகலவன் போன்றிருக்கும். இது பகுத்தறிவுக்கும் பகலவனுக்கும் இடையே உள்ள அதலபாதாளம்.
டியர்மெளஸ் என்ற உயிரினம் எலி போன்ற சிறிய உருவம் கொண்டது ஆனால் தோற்றத்தில் மான் போல இருக்கும். இவைகள் எலிகளுக்கும், மான்களுக்கும் இடையில் இருக்கும் உயிரினங்கள்
http://valpaiyan.blogspot.in/2017/06/blog-post.html

இந்த வால்பையருக்கு ஆனாலும் தெகிரியம் அதிகம்தான்!

பரிணாமம் என ஒரு காட்டுரையை அதிஅறிவியல் பூர்வமாக எழுதி என் மசுர்க்கூச்செறிதலை மேலதிகமாகச் செறிவடைய வைத்துவிட்டார். என் இறும்பூதனை விவரிக்க வார்த்தைகள் போதா!

-0-0-0-0-0-

இந்த டியர்மௌஸ் என்பது சர்வ நிச்சயமாக மான் அல்ல. அதே சமயம் நம்மூர் சாதா எலியுமல்ல. ஆனால் இவற்றுக்கு எலிகளுடன் தொப்புள்கொடியுறவு இருக்கிறது. ஆகவே திராவிடப் பெருச்சாளிகள் இவற்றுடன் தாராளமாகச் சொந்தம் கொண்டாடலாம், நன்றி.

…மேலும் இந்த ஜந்துவின் ரோமம் (pertaining to the city of Rome, I mean) சருமம் கொஞ்சம்போல மான் நினைவை வரவழைப்பதால் + அதுவும் குதித்துக்குதித்தோடும் ஜந்து இது என்பதனால் இந்தப் பெயர் என ஐதீகம். குறிப்பாக இதன் உடலின் கீழ்ப்பகுதிக்கும் மேற்பகுதிக்கும் நிறத்திலும் செறிவிலும் வித்தியாசங்கள், அதாவது கொஞ்சம் மான் போலவே.  கீழே, சில படங்கள்.

கருத்துப்படம் ->> டியர்மௌஸ், மான், வால்+பையன் (பாவன் இந்தச் சிறுவனை நம் வால்பையனாரோடு இணைத்ததற்கு கூக்ல் தான் காரணம்)

ஆனால் பரிணாம ரீதியாக, வால்பையனார் அட்ச்சுவுட்டுருப்பதைப் போல இல்லை. எலி பரிமாணவளர்ச்சியடைந்து மரமேறி மானாகவில்லை. கடலேறிக் கழுதையாகவில்லை. வானமேறி வைகுந்தம் போகவில்லை. பரிணாம வீழ்ச்சியடைந்து அண்ணா நாமம் வாழ்க என அலையவில்லை. நன்றி.

எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் நம் இளம் அறிவாளிகள்! நமக்கெல்லாம் புல்லரிப்புக்குப் பஞ்சமேயில்லை. அறிவியலாவது, மூளையாவது, மசுராவது… போங்கடா!

ஹ்ம்ம்… ஆனால் எவ்வளவுபேர் இப்படிக் கிளம்பியிருக்கிறார்களோவென நினைத்தால் கலக்கமாக இருக்கிறது…

தற்குறிப்பு: ஏண்டா பாவிகளா, உருப்படுவீர்களா? இம்மாதிரிப் பக்கங்களை எனக்கு அனுப்பி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வது மட்டுமில்லாமல், வயிறு நோகச் சிரிக்கவைத்து முழ நீளத்துக்குக் கதறவைத்து என் பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறீர்களே! நீவிர் வாழ்க!! :-(

One Response to “‘வால்பையன் என்பது வால் போன்ற சிறிய உருவம் கொண்டது, தோற்றத்தில் பையன் போல இருக்கும்’”

  1. SivaKumar Viswanathan's avatar SivaKumar Viswanathan Says:

    உண்மையிலேயே இங்கு எண்ண நடந்தது இன்று புரியவில்லை. ஆனால் மானின் விழி கண்கள் கொண்ட மானே மானே என்ற வரிகள் மட்டும் மன ஓட்டையில் (ஓடை அல்ல) துள்ளி துள்ளி நுழைந்து ஓடுகின்றன. நகைச்சுவை மன்னன் (jewel taste king) என்ற பட்டத்தை எனக்கே நான் அளித்துக்கொண்டு பிரெஞ்சு இலக்கிய தாக்கத்தில்.. ஆஆ


Leave a Reply to SivaKumar Viswanathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *