அழு தமிழகமே, அழு…
June 15, 2017
மன்னிக்கவும். இப்படி அழுமூஞ்சி உணர்ச்சிகரமான ஆவேசத் தலைப்புகளை என் பதிவுகளுக்கு வைப்பதில்லை; ஆனால் இது காலத்தின் கோலம், என்ன செய்வது சொல்லுங்கள்.
-0-0-0-0-0-0-
இன்று காலையில் நண்பர் இப்படியொரு சோகச்செய்தியை அனுப்பியிருக்கிறார். நான், இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கவில்லை; அய்யா, மன்னிக்கவும். நீங்கள் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டீர்கள். திருப்தியா?
இச்செய்தியின்படி, அனேகமாக இந்த ந்யூட்ரினோ ஆய்வு மையம், ஆந்திராவுக்கோ அல்லது வேறெங்கோ போகப் போகிறது எனத்தான் படுகிறது.
இந்த அற்ப அரைகுறைத்தனப் போராட்டக் காரர்களைப் பற்றியும் அவர்களுடைய தொழில் நுட்ப எதிர்ப்பு அழிச்சாட்டியத்தையும் பற்றியும் பலமுறை எழுதியிருக்கிறேன்:
- தேனி ந்யூட்ரினோ ஆய்வு மையமும் தேவரடியார் புதல்வர்களும் 29/10/2016
- ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்) 11/05/2015
- அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
- மேதகு ‘கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர்… 08/06/2017
- போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்…14/03/2014
- தமிழகக் கடலோரத்தில் ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்+++ அரக்கன்! 02/03/2017
- இதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்!! (2/2) 20/02/2015
- இந்திய அறிவியல் காங்க்ரெஸ் 2016 – சில குறிப்புகள் (1/2)19/01/2016
-0-0-0-0-0-0-
பேருக்கு, பூவுலகின் நண்பர்கள்…. ஆனால் உண்மையாகவே அதன் எதிரிகள். அறிவியல் தொழில் நுட்பங்களின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் அனுபவித்துக்கொண்டே அதனைப் பேடித்தனமாகக் கரித்துக்கொட்டுபவர்கள்; அன்னையின் பால்தரும் முலைகளைச் சப்பி உயிர் வாழ்ந்துகொண்டே, அவற்றை நன்றியில்லாமல் ரத்தக் களறியாகக் கடித்துக் குதறுபவர்கள்…
…கோவை சி.மா. பிரிதிவிராஜ், புதுவை தமிழ்மணி, ‘பொறியாளர்’ கோமதிய(ற்ற)ப்பன் சுந்தர்ராஜன்…
. ..இம்மாதிரி அரைவேக்காட்டுப் போராளிகளும் ‘பொறி’யாளர்களூம் வைத்துள்ள பொறியில் – நம் தமிழகமும் ஆக்கபூர்வமான வளர்ச்சியும் மாட்டிக்கொண்டு தவிப்பது பரிதாபம்தான்! இந்த பொறியாள சுற்றுச்சூழல்காலிகளுடன் அணிசேர ஒரு கூறுகெட்ட குளுவான் பட்டாளம் வேறு…
நீண்டகால நோக்கில் ஒரு நல்ல விஷயமும் நடந்துவிடவேகூடாது என்பதில் இந்த ஆசாமிகளுக்கு அப்படியொரு உற்சாகம்!
நன்கொடைப் பிச்சை எடுத்தாவது ஊரை ஓழிக்கவேண்டும் என அப்படியொரு முனைப்பு.
பயமுறுத்தி பயமுறுத்தியே கூசாமல் பொய் சொல்லியே, நம் மக்களை அறியாமையில் ஆழ்த்திக் குளிர்காயவேண்டும் என அப்படியொரு அற்பத்தனம்.
ஊடகப்பேடிகளுடன் சேர்ந்து பேய்க் கதக்களி. ச்சீ. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, வேறென்ன சொல்ல.
தமிழகத்துல, அறிவியலும் கல்வியும் நல்ல வெளங்கிடும்டா, அயோக்கியனுங்களா!
பின்குறிப்பு: டேய் கயமைக் கபோதிகளா! இப்ப திருப்திதானடா? ஆனா மற்ற மாநிலங்களாவது இந்த மையத்த வெச்சிக்கட்டம்டா. எப்படியாச்சும் அங்கியாவது மூளயும் அறிவியலும் வளரட்டும்டா, அறிவிலிக் கூவான்களா…
நாம்ப திராவிட லெமூரிய அறிவியல வெச்சிக்கினே பளம்பெரும பேசிக்கினே இர்க்கலாண்டா!
போவோமாஆஆஆஆஅ… ஊர்கோஓஓஓஓஓஓஓஓஓஓலம்…
June 15, 2017 at 11:13
தமிழகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றதா? :(
June 15, 2017 at 13:28
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜனையும், பச்சைத்தமிழகம் அமைப்பை சார்ந்த உதயகுமாரையும் அரவணைப்பது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் மற்றும் அவரது நியூஸ்7 தொலைக்காட்சி.
கூடங்குளத்தின் மிக அருகே கடல் சார்ந்த சூழலைக் கெடுக்கும் அளவுக்கு மணல் அள்ளுவதை பற்றி இந்த யோக்கியர்கள் பேசுவதேயில்லை.
June 23, 2017 at 21:48
ஐயா
கூடங்குளம் அணு உலை நியுட்ரினோ திட்டம் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்தும் விரிவாக எழுதுங்களேன். என்னைப் போன்ற சாமானியர்களுக்கு பயனுள்ளதாக அமையும். உங்களின் தளத்திலிருந்து நிறைய பயனுள்ள கருத்துகளை நான் தெரிந்து கொண்டுள்னே;. என் மகன் இது குறித்து கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. இணயத்தில் மாறுபட்ட முரண்பட்ட கருத்துகளில் உண்மை கண்டறிய இயலவில்லை.
மேலும் கணிதம் அறிவியல் தொடர்பான (5 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய) புத்தகங்கள் பற்றிய விவரம் வேண்டுகிறேன்.