ப்ரேட் பிட்டுக்கு மண் சுமந்தாரார், ரஜினிகாந்தியம், கமல்ஹாஸ்யம் – சில குறிப்புகள்

May 16, 2017

அண்மையில் புரட்டிப் படுகோரமாகத் துணுக்குற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று.

-0-0-0-0-0-0-

தவறுதவறு – இன்னாள் வரை நம் தங்கத் திராவிடத் தமிழர்களை மட்டுமே முட்டாக்கூவான்கள்,  என நினைத்திருந்தேன்; நடிகர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுத்து புல்லரிப்படைபவர்கள், பயன்களை அறுவடை செய்பவர்கள் எனவும்.

…ஆனால், அந்த ஆனானப் பட்ட ;-) அமெரிக்காவிலுமேகூட, பொழுதுபோக்கு அம்சங்களைச் சில சமயங்களில் ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு விடுவார்கள் என இன்றுதான் அறிந்துகொண்டு புளகாங்கிதம் அடைந்தேன். நன்றி போக்கற்ற பேராசியர் பெருமகனார்களே!

ஆங்கில முனைவர் பேராசிரியர் இராபெர்ட் பென்னெட்டார் என்பார், போற்றத்தக்க, பொன்னெழுத்துகளில் பொரித்துக் கொறிக்கப்படவேண்டிய கீழ்கண்ட வார்த்தைகளை அழகு கொஞ்சும் சமூகவியலாள ஆங்கிலத்தில் அட்ச்சுவுட்டிருக்கிறார்:
“Simultaneously reifying and challenging hegemonic codes of race, class, gender and regional or national identity, his characters explore the complex and changing postmodern cultural landscape.”

:-))))

…மேற்கண்ட புகழுரைகள், ஆலிவுட் புர்ச்ச்சிநடிகர், சகலகலா வல்லவர், பேரண்ட நாயகர் ப்ரேட் பிட்டார் பற்றித்தான்! படிக்கப் படிக்க ஒர்ரேயடியாகப் புல்லரிக்கவில்லை?  இது பேராசிரியராரின் முன்-நுரையிலிருந்து. நன்றி.



-0-0-0-0-0-0-

கழுதை இருக்கட்டும். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், கமல் போன்றவர்களின் ஹாஸ்யம் (அவர் நடித்த, இயக்கிய திரைப்படங்களைப் பற்றிச் சொல்லவில்லை இங்கு!), ரஜினி போன்றவர்களின் காந்தியங்களைப் பற்றி – நம்மூரில் மெத்தப் படித்த சமூக அறிவியலாளப்(!) பெருந்தகைகள் இப்படியெல்லாம் ஆராய்ச்சி எழவுகள் செய்து புத்தகங்கள் பல பதிப்பிக்கும் காலம் எப்போது வரப்போகிறது?

இவர்களைப் பற்றி அப்படியெல்லாம் வெள்ளக்காரனுங்களைப் போல எழுத இங்கு ஆட்களில்லையா என்ன? தெருவுக்குத் தெரு இங்குள்ள சமூக அறிவியலவியலாளர்கள் இப்படியெல்லாம் களப்பணி செய்யாமல் என்னதான் முடிக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்?

அதுவும் டீகன்ஸ்ட்ரக் ஷன் கட்டுடைப்பு கட்டாத உடைப்பு என்றெல்லாம் எவ்வளவு நாட்களாக ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்கள், நம்முடைய மண்ணாங்கட்டி தெருப்புழுதி ஆராய்ச்சியாளர்கள்? அந்த அனுபவங்களெல்லாம் எங்காவது ஒடிப் போய்விட்டனவா?

என்னுடைய செல்லங்களான ஆ இரா வேங்கடாசலபதிகள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்? ஹ்ம்ம்? ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் இம்மாதிரி புத்தகங்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது வெளிவரவேண்டாமா? அதுவும் அடுத்த எட்டே மாதங்களில் அடுத்த சென்னை புத்தகச் சந்தை வேறு வந்துகொண்டிருக்கிறது! சொம்பேறிகள் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் கட்டுடைப்புகளை!
எனக்குப் பொறுமையே இல்லை – டேய்ங்களா, எப்படா இத்தப் பத்தீ எள்தப் போறீங்கோ?

எத்தையாவது நல்கை கொல்கை என ஃபோர்ட் ஃபௌண்டேஷன் ஆசாமிகளிடமிருந்து துட்டு வாங்கிக்கினு, அவசரகதியல அள்ளித்தெள்ச்சி எள்தி முடிங்கடா! ங்மொம்மாள

5 Responses to “ப்ரேட் பிட்டுக்கு மண் சுமந்தாரார், ரஜினிகாந்தியம், கமல்ஹாஸ்யம் – சில குறிப்புகள்”

  1. Sridhar Tiruchendurai Says:


    • அஹோ கேளும் ஸ்ரீதராய்!

      நீங்கள் கொடுத்திருக்கும் புத்தகச் சுட்டியைப் படித்தால் அது ஒரு விசிறித்தனமான புத்தகம் போல இருக்கிறது. சமூகவியல் எழவுகள் இல்லையென்றாலும், மேனேஜ்மெண்ட் வகையறா இருக்கிறது… ஆனால் ஏணி வைத்தாலும் பென்னெட்டார் புத்தகம் கிட்டேகூட வரமுடியாது… இது போங்காட்டம்.

  2. ஆனந்தம் Says:

    உன்னெ யாராச்சும் எதுக்காச்சும் கருத்து கேட்டு எள்த சொல்லோ நீயே எள்திக்க நைனாங்கிறே. அத்தொட்டு இந்த மேட்டர நீயே எள்தலாம் இல்ல? கிள்க்கு பதிப்பகத்தில சல்லீசா போடுவானுங்கோ. அப்பாலிக்கா கிண்டில்லயும் பட்ச்சுக்கோன்னுவானுங்கோ. ஆனா ரஜினி, கமல் பத்தி எள்திட்டு அஜித் விஜய்ய மட்டும் விட்டே…. உன்மேல திராவிட வசவெல்லாம் ஏவிவிட்ருவோம், ஸொல்ட்டேன்.


    • ஆனந்தம்!

      உங்கள் அருள்வாக்களிக்கும் வாய்க்கு ஒரு கிலோ சர்க்கரை குரியரில் அனுப்பப் படுகிறது.

      விஷயம் என்னவென்றால், உங்களுடைய பின்னூட்டத்தைப் படித்துவிட்டு சாட்சாத் பத்ரி சேஷாத்ரி அவர்களே நேற்று ஒரு ஃபோன் போட்டு ஒரே தொல்லை. உடனடியாக ரஜினி, கமல் பற்றி ஒரு கட்டுடைப்புப் புத்தகத்தை எழுதச் சொல்லி அட்வான்ஸாக ஒரு லட்சம் காசோலை அனுப்பிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

      அவருக்கு, கட்டுக்கட்டாக இந்த கட்டுடைப்புப் புத்தகம் தேங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையேயில்லை போலும்! ஒருவேளை அட்டையை மட்டும் பிய்த்தெடுத்துவிட்டு எஸ்ரா புத்தகமாக அது சந்தையில் இறக்கப் பட்டுப் பேராசானுக்கு ஸாஹித்ய விருதை வாங்கித் தந்துவிடுமோ?

      ஆனால், எனக்கு எதிர்காலத்தின் மீது நன்னம்பிக்கை இருக்கிறது. நன்றி.

      • ஆனந்தம் Says:

        அந்தப் புத்தகம் உங்கள் பெயரிலேயே வெளிவரும். (அநேகமாக அதன் பேர் உப ரஜினியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்) அதற்கு எஸ்ராவின் தளத்தில் விமர்சனக் கச்சேரி நடக்கும் என்று பயமாக இருக்கிறது. (Self action shoots self: ESRAW) எனக்கென்னமோ உங்களைப் பழி வாங்க (purchasing blame) எஸ்ரா பத்ரியுடன் சேர்ந்து செய்கிற கூட்டு சதியோ என்று சந்தேகம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s