பாவப்பட்ட நார்ஸிஸஸ்ஸை, கதறக்கதற நாறடிக்கவைப்பது எப்படி

July 4, 2015

(அல்லது) நார்ஸிஸஸ்ஸை  நார் நாராகக் கிழித்து தினகரனில் தொங்கவிடுவது எப்படி?

இப்படித்தான்!

மதிமாறன் அவர்கள், தன்னுடைய மாளா உழைப்பால், சொந்த முயற்சியால் – ஒரிஜினல் அக்மார்க் வெறுப்பிய அபத்தக் களஞ்சியங்களைத் தொடர்ந்து மானாவாரியாக எழுதக் கூடியவர் என்றால், பராக்கிரமம் மிக்க மானமிகு யுவகிருஷ்ணா அவர்கள், அப்படியெல்லாம் மெனக்கிடாமல் – முழுமுதல் அபத்தங்களை இரக்கமேயில்லாமல் சுளுவாக அட்டைக் காப்பியடித்து மட்டுமே அபத்பாந்தவனாக தரிசனம் தந்து மினுக்கிக்கொண்டு அலைபவர்.

இருவருக்கும் விமோசனம் இல்லை, சரி. ஆனால், அவ்வப்போது நகைச்சுவைத் தேவைகளுக்காக இவர்களைப் படித்து, இவர்களின் எழுத்துச்சிந்தனைகளின் ஆழத்தையும் வீச்சத்தையும் கண்டு ஆச்சரியப்படும் எனக்கும் அதே அதோகதிதான், வேறென்ன சொல்ல! (என்னை யார் இந்த எழவுகளையெல்லாம் படிக்கச் சொல்கிறார்கள் என்பது நல்லொதொரு கேள்விதான். ஆனால், பத்ரிசேஷாத்ரியின் வலைத்தளம், அடியேன் உட்பட  கண்ட கழுதைகளின் காட்டுரைகளின் சுட்டிகளையும் ஆட்கொண்டு இருப்பதுதான் பிரச்சினையே! ! இதிலும் ஆரிய – பார்ப்பன – வடவ – அமெரிக்க – இஸ்ரேலிய – ஹிந்துத்துவ – பன்னாட்டு நிறுவன – உலகமயமாக்கல் சதி இருக்கிறதோ?)

இதுதாண்டா அரைகுறை (=திராவிட) தமிழ் இளைஞம்! :-(

ஹ்ம்ம்… இப்படிச் சொல்லும்போதே – இருவருக்குமே இருக்கும் தேவைக்கதிகமான திராவிட நகைச்சுவை உணர்ச்சியால், பரந்த ‘படிப்ப’றிவால், இன்னமும் சுமார் 50 வருடங்களுக்காகவது இதேரீதியில் யந்திரகதியில் இவர்கள் எழுதிக்குவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளினால் –   நான் பொறாமைத் தீயில் பொதுவாக வேகிறேனோ என்றும் சந்தேகமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்…

-0-0-0-0-0-0-0-0-

பிரபல டமில் பத்தி எள்த்தாலரும் மிகச்சமீபத்தில் மனோதத்துப்பித்துவ மருத்துவக் கட்டுரையாளராகவும் மாறியிருக்கும் மேதகு யுவகிருஷ்ணா அவர்கள் எழுதிய(!) இந்தக் கட்டுரை எழவைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்: டிஜிட்டல் நார்சிஸம்

-0-0-0-0-0-0-0-0-
யுவகிருஷ்ணனாரின் இல்லை வரிசை:
  • நார்ஸிஸஸின் கதை தெரியவில்லை.
  • நார்ஸிஸஸ் தொன்மம் கிரேக்கத்தைவிட லத்தீன் மொழியில்  தான் முழுமை பெற்றது என்பது தெரியவில்லை.
  • நார்ஸிஸ்ம் எனும் சொல்லை – மனோதத்துவரீதியில் முதலில் உபயோகித்தது பால் நாக் (Paul Näcke) எனும் ஜெர்மானியர் – அதுவும் 1899லேயே என்பது தெரியவில்லை.
  • ஸிக்மன்ட் ஃப்ராய்ட் தன் நார்ஸிஸப் புத்தகத்தை எழுதி நார்ஸிஸ்ம் எனும் பதத்தை பரவலாக்கியது 1914 முதல்தான் என்பது தெரியவில்லை.
  • ஸிக்மன்ட் ஃபிராய்ட் எழுதிய நார்ஸிஸ்ம்: ஒரு அறிமுகம் எனும் நூலையும் படித்தமாதிரி தெரியவில்லை. (ஏனெனில் விக்கிபீடியாவில் அது இல்லையோ?)
  • நார்ஸிஸ்ம் = மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாத, முழுவதுமாக உட்குவிந்த பார்வை என்பதிலிருந்து விரித்தெடுத்து, மானுடத்தின் அடிப்படைப் பண்பாக இந்த சுயமோகத்தைக் கண்டார் இந்த ஃப்ராய்ட் – என்பதைப் பற்றிய அவதானிப்பு இல்லை.
  • நார்ஸிஸ்ம் என்பதற்கும் எக்ஸிபிஷனிஸ்ம் என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தெரியவில்லை.
  • ஈகோ என்றால் என்ன, நார்ஸிஸ்ம் என்பதற்கும் அதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று ஆராயும் மனப்பான்மையும் இல்லை.
  • நார்ஸிஸ்ம் என்பதை சமகால மனோதத்துவ அல்லது ‘மனநிலை ஆய்வாளர்கள்’ எப்படிப் பார்க்கிறார்க்ள் என்பதைப் பற்றிய அவதானிப்பு இல்லை.
  • வெட்கம் என்பதற்கும் நார்ஸிஸ்ம் என்பதற்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை என்பது தெரியவில்லை.
 யுவகிருஷ்ணனாரின் இருக்கும் வரிசை:
  • ஆனால் ஜனரஞ்சகமாக, மேதாவித்தனமாக ஏகோபித்து உளறிக்கொட்ட முடிகிறது.
  • தனக்குப் புரியாத ஆங்கிலக் கலைச் சொற்களைச் சாணி கரைத்து அள்ளித் தெளித்துக்கொண்டு, தினகரனில் பக்கங்களை ‘தேத்த’ முடிகிறது. (இவர் என்னுடைய செல்லப் பத்திரிகைகளில் ஒன்றான ‘புதியதலைவலி’யை விட்டுவிட்டு ‘கேடி சகோதர புகழ்’ தினகர தினசரியில் ஐக்கியமாகிவிட்டாரா என்ன?)
  • ஆனால் இணையத்தின் சிலபல பக்கங்களில் இருந்து வெட்கமில்லாமல் அரைவேக்காட்டுக் கருத்துகளைக் கந்தறகோளமாக உருவி கட்டுரை ஒன்றை வடித்தெடுக்க முடிவதன் சாத்தியக் கூறுகள் தரும் புளகாங்கிதம் கிடைக்கிறது. (இவர் தன் காட்டுரையை உருவியெடுத்த குறைந்த பட்சம் நான்கு ஆங்கில உளறல் பக்கங்களின் சுட்டிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, பாதி ராஜகுமாரியும் முழு ராஜ்யமும் (=என்னுடைய அடியில் கண்ட சொத்து) இனாம்!)
  • டிஜிட்டல் கிஜிட்டல் என்று தேவையேயில்லாமல் வெள்ளைக்காரப் பத்தியாளர்கள் உளறிக்கொட்டினால், அந்த உளறல்களையும் புரிந்துகொள்ளாமல் – அவற்றையும் அட்டைக் காப்பியடிக்க முடிகிறது.
  • ‘தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான … தேவை பெருகியது’ என்றெல்லாம் – இந்த ‘புதிய’ சிந்தனைகளுக்கு ஒரு துரும்பு துப்புகூட இல்லாமல் இருந்தாலும் தைரியமாக எழுதமுடிகிறது.
  • ‘மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது’ – என்ற ஆச்சரியப் படத்தக்க அவதானிப்புகளை வாரிவிட முடிகிறது.
  • ‘அதிகாரம்’ என்பது பற்றிய உளறல்களை பவனி வரச் செய்யமுடிகிறது – அதாவது அதற்குரிய அதிகாரத்தை அவரே அவருக்கு அளித்துக்கொண்டுள்ளதை நினைத்தால் மசுர்க்கூச்செறிகிறது.
  • “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான் – என்றெல்லாம் எழுதிப் புளகாங்கிதம் அடைந்து,  சந்தடிசாக்கில் ஓங்கிஓங்கி ஜால்ரா அடிக்க முடிகிறது.
  • சிலசமயம் – ‘போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான்’ எனத் தன்னிலை விளக்கமும் கொடுக்க முடிகிறது.
  • ‘நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது’  — பொதுவாக மனிதனானவன் தான் எப்படி தன்னைப் பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறானோ அதேபோல உலகத்தையும் பார்க்கிறான் என்கிற ரீதியில் தான் இருக்கும் கூடத்தை உலகக்கூடமாகவும் பார்க்கமுடிகிறது…

-0-0-0-0-0-0-0-

…நார்ஸிஸஸ் கலகம் ;-) நன்மையில் முடியுமா? திருந்துவார்களா? (சந்தேகம்தான்!)

இருந்தாலும் எந்த தைரியத்தில், என்ன மசுத்துக்கு இப்படியெல்லாம் கட்டுரைகளை வடிக்கிறார்கள் என்பது தெரியவேயில்லை.

இவர்களுக்கு ஈகோ பிரச்சினையா, நார்ஸிஸ்ம் ஆட்டுவிக்கிறதா அல்லது நாறாக ரசம் பசுவிக்காமல் இருக்கிறதா என்பதே, எழவு புரியவேமாட்டேனென்கிறது…

எது எப்படியோ, என் பரிந்துரை என்னவென்றால் – என்னைப் போலவாவது, சிலவாரங்களுக்கு ஒரு முறையாவது — யுவகிருஷ்ண_மதிமாற தளங்களைத் தீவிரமாகப் படித்து, அமோகமாக  இன்புறவும்.

நன்றி!

மீண்டும் வறுக்க!!

தொடர்புடைய யுவகிருஷ்ண-மதிமாற பதிவுகள்: (புதியவை மேலே, பழையவை கீழே வகையறா வரிசையில்)

அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )

 

 

 

9 Responses to “பாவப்பட்ட நார்ஸிஸஸ்ஸை, கதறக்கதற நாறடிக்கவைப்பது எப்படி”

  1. Tamilian's avatar Tamilian Says:

    All our political leaders are narcissists only. None of them can deny.

  2. Unknown's avatar Anonymous Says:

    ராம், சோனமுத்தானை ஏன் இந்த காய்ச்சு காச்சறீங்க. பொழச்சிப் போகட்டும் விடுங்க. வேஸ்ட் ஆளுங்களைப் பிரிச்சி மேயாமெ ஐஎஸ்ஐஎல் பத்தி எழுதலாமே.

  3. Unknown's avatar Anonymous Says:

    சோனமுத்தான் சொல்லுறான் –

    //எல்லாத்தையுமே நெகடிவ்வா பார்க்குறவன், கடைசிகாலத்தில் மாமல்லன் மாதிரி வானத்தை பாத்து ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்


    • சரி, விட்டுத்தள்ளுங்கள் அனாமதேயக்காரரே: யுவகிருஷ்ணா சொல்றான். ராமசாமி கேக்றான்.

      இரண்டு கேள்விகள்:

      1. அவர் என்னைப் பற்றித்தான் இப்படிச் சொன்னாரா (+ எங்கு இப்படிச் சொன்னார்) அல்லது விமலாதித்த மாமல்லன் அளவுக்கு என்னை மதிக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. மாமல்லன் காட்டமாக எழுதுபவர் (என் அளவுகோல்களின் படியும்கூட) என்றாலும், அவர் ஒப்பாரி வைத்திருப்பததாகவோ, கடைசிகாலத்தில் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை. இதனை யுவகிருஷ்ணா சொல்லியிருந்தால் – இதுவும் உளறல் வகை கையலாகாத்தனம்தான். தொடர்ந்து திருடிக் கொண்டே – ஆனால் மாட்டிக்கொண்டவுடன் – ஓலமிடுவது, சாபம் கொடுப்பது எல்லாம் கீழ்த்தரமாந (=திராவிட) நடவடிக்கைகள்தாம். (அதே சமயம் நீங்கள் குறிப்பிட்டிருப்பதை யுவகிருஷ்ணா சொல்லவில்லையானால், அது பொய்ச் செய்தியானால் – என் மேற்கண்ட கருத்துகளை வாபஸ் வாங்கிக்கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்தால் என்னைத் திருத்திக் கொள்வதில் எனக்கு நிச்சயம் ஒரு பிரச்சினையும் இல்லை)

      2. இந்த ‘சோனமுத்தான்’ என்பது யுவகிருஷ்ணாவைக் குறிப்பிடும் ஒரு காரணப்பெயர்(?) என்பது புரிகிறது. இதற்கு ஏதாவது புராணம் உண்டா?

      திராவிட இளைஞர்களில் – நேர்மையான,அறிவுள்ள ஒரேயொரு
      நம்பிக்கை நட்சத்திரமாவது இருக்கிறாரா?

  4. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    “மதி” மாறனாரின் புத்தம் புதுசு:
    பாபநாசம்: அசைவம் சைவமாக மாறிய கதை

    https://mathimaran.wordpress.com/2015/07/03/papanasam-1105-1/

  5. elavasam's avatar elavasam Says:

    http://www.theguardian.com/media-network/media-network-blog/2014/mar/13/selfie-social-media-love-digital-narcassism

    பாதி ராஜகுமாரி வேண்டாம். ராஜ்ஜியம் மட்டும் போதும்! :)


    • :-) ஹ்ம்ம்… ‘அடியில் கண்ட சொத்து’ உங்களுக்கே, அதுவும் இலவசமாக! ;-) ஆனால் – இந்த இலவச இணைப்பு என்னிடம் இருப்பதோ ஒன்றேயொன்றூதான்… என்ன செய்ய.

      அய்யா, இன்னும் மூன்று இடங்களிலிருந்தும் கமுக்கமாகக் கொஞ்சம் அமுக்கியிருக்கிறார் – அதுவும் ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் – நம் யுவகிருஷ்ணனார்!

  6. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    நடுநிலை ஜந்துவுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் அதற்காக இவ்வளவு ஓர வஞ்சனை கூடாது.
    என்னதான் மதிமாற இளைய கருப்ப என்று சேர்த்து வரிசைப்படுத்தினாலும் தாங்கள் இளைய கருப்பர் அளவு மதிமாறனாரைக் கண்டுகொள்வதில்லை. எஸ்ராவின் நெகிழோதி நெகிழ்வுகள், பாவப்பட்ட வவ்வால்கள் போல் மதிமாறனாரை வரிவரியாகப் பீராய்வதில்லை. கைபர் போலன் வழியாக 2000 வருஷமாக திராவிடர்களைப் பிரித்தாள்கிற பார்ப்பனத் திமிர்!
    (சும்மனாச்சுக்கும் ஒண்ணே ஒண்ணாவது அந்தமாரி எள்துபா! நேயர் விருப்பம் ;-))


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *