என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ?
May 11, 2019
…இப்டீயே தொடர்ந்து கண்டமேனிக்கும் அட்ச்சிவுடுவதற்கு?
இந்த அறிவிலி தண்டக்கருமாந்திரம் பற்றியெல்லாம் எழுத நான் நிறைய பாவம் செய்திருக்கவேண்டும். (தமிழிலக்கிய அரைகுறைகளைப் பற்றி ஏகத்துக்கும் எழுதியிருப்பதைச் சொல்லவில்லை – அதெல்லாம் புண்ணியம். மன்னிக்கவும்!)
-0-0-0-0-0-
கீழ்கண்ட ராஹுல்காந்தி உளறலைக் கண்டுகளிக்கவும்; திராவிடத்துக்கு நன்றியுடன், ஹிந்தி மொழியை அறியவாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு, ‘ஒருமாதிரியான’ தமிழாக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்.
“நாங்கள் [ஆட்சிக்கு வந்தால்] ஒர்ரேயடியாக ஏழ்மைமீது போர் தொடுக்கப்போகிறோம். ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்தான்!
எங்களுடைய முந்தைய ஆட்சியில், பதினான்கு கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து அகற்றினோம்.
அடுத்தமுறை 25000 கோடி [கொஞ்சம் யோசித்துவிட்டு, தம் கணக்கை கஞ்சாப்புகை சூழச் சரிபார்த்துக்கொண்டு, மறுபடியும்], 25000 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முன்னேற்றுவோம்…“
அட, என் செல்ல தண்டக்கருமாந்திரமே!
0. பதினான்குகோடி ஏழைகளை எங்கு, எப்போது ஏழ்மையிலிருந்து அகற்றி முன்னேற்றினீர்கள்? ஒருவேளை ஜவஹர்லால், இந்திரா, ஸஞ்ஜய், ராஜீவ், ஸோனியா, ப்ரியங்கா, க்வாட்ரொக்கி, ராபர்ட் வாத்ரா தாங்கள் – போன்ற சுதந்திரப் போராட்ட வீரவீராங்கனைகளைப் பிழியும் ஏழ்மையிலிருந்து முன்னேற்றிப் பல்லாயிரம்கோடிப் பணக்காரர்களாக்கியதைச் சொல்ல வருகிறீர்களா? இது எனக்குச் சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், இது லூஸ்ல வுடப்படுகிறது.
1. பாரதத்தின் தற்போதைய மக்கள்தொகை ~135 கோடி. அதாவது 1.35 பில்லியன். அவ்ளோதான்!
2. 25000 கோடி என்றால் 250 பில்லியன்! ஐய்யய்யோ!! தற்போதைய உலக மக்கள்தொகையே ~7.8 பில்லியன் தான்!
3. இதனை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
3.1 ராஹுல்காந்தியும் நம் சீமானார் இசுடாலிர் போன்றவர்களைப் போல ஒரு, ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாக்கூ அரைகுறை உளறலாளர்தாம். (ஆனால் இது மானுடத்தின் மீதான என் கரிசனமின்மையை வெளிப்படுத்துவதாகவும் வெறுப்பியத்தின் பாற்பட்டதாகவும் இருக்கிறது இல்லையா? ஆகவே…)
3.2 இளகிய/நல்ல மனதுடைய ராஹுல்காந்தியார், நரேந்த்ரமோதியின் ‘ஸப்கா ஸாத் ஸப்கா விகாஸ்’ எனும் தாரக மந்திரத்தை (அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி) இன்னொரு பரிணாமவளர்ச்சி செய்து, பிற ஜந்துக்கள் – இருந்தவர்கள் இறந்தவர்கள் அனைவரையும் சேர்த்து, பக்கத்துக் கிரகங்களின் ஆசாமிகளையும் சேர்த்தியிருக்கிறார். கெரகம்.
3.3 எனக்கு வேறுவேலையில்லை போலிருக்கிறது.
பின்குறிப்பு: ஆகவே, இன்றிலிருந்து ஒத்திசைவு படிப்பவர்களின் எண்ணிக்கை 7.5யிலிருந்து 75000 பில்லியன் ஆகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
May 11, 2019 at 18:27
யார் நைனா கணக்கு கேட்கப்போகின்றான்,சும்மா அட்ச்சுவிடவேண்டியதுதான்.இசுடாலிரின் வழிகாட்டலில்.
May 11, 2019 at 19:14
:-) நம் இலக்கிய, போராளி வகையறாக்களிடம் நன்றாகவே பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் போல! அளவிலாத அட்ச்சிவுடல்தான்!