நீதி பரிபாலனம் – உச்ச நீதிமன்றம் (பாஜக-மோதி குறிப்புகள் 8/n)

April 3, 2019

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் விவரம் கீழே…

மோதி/பாஜக அரசின், நீதிபரிபாலன அமைப்பு/வர்க்கங்களுடனான அணுக்கமான நடவடிக்கைகளால், அதிகாரவர்க்கத்தை முடுக்கிவிடும் பாங்கினால், தொடர்ந்த மேற்பார்வையினால் – நிலுவை எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டு வருகிறது; இத்தனைக்கும் மோதிக்கு (அதாவது நல்லாட்சிக்கு) எதிராக அணி திரண்டுள்ள கொள்ளைக்கார கும்பல்களின், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்துக்குப் போவோம் என்கிற அழிச்சாட்டியமும் நடந்து கொண்டிருக்கிறது…. அதே சமயம் – முன்னர் காங்கிரஸ்+திமுக மெத்தனக் கொள்ளை ஆட்சியில் – இந்த எண்ணிக்கை – தொடர்ந்து பலவருடங்களாக ஏறிக்கொண்டிருந்ததை கவனிக்கவும்.

போகவேண்டிய தூரம் அதிகம்தான் – இருந்தாலும் மோதி/பாஜக அரசில் இது ஒரு நல்ல தொடக்கம் இல்லையா? நிலுவை எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருக்கிறது இல்லையா?

-0-0-0-0-

நிலுவையில் இருக்கும் வழக்கு உட்பட விஷயங்களின் அட்டவணை கீழே. பாருங்கள், முந்தைய அரசின் ஆட்சிகாலத்தில் – 2014 வரை 60,000த்துக்கு மேற்பட்ட விஷயங்கள் நிலுவையில் இருந்தன. பாஜக ஆட்சியில் இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருவதைப் பாருங்கள்… (இத்தனைக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அத்தனை இழுபறி… + ஊடகப் பேடிகளின் உசுப்பிவிடும் ஆகாத்தியம்…)

-0-0-0-0-

இன்னொன்று: அரசியல் சட்டம் குறித்த பெஞ்ச் அமர்வுகள் 2017 ஜூலைக்குப் பிறகு மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு – உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் ஒத்துழைத்துத் தரம்/சிக்கல் வாரியாகப் பிரிக்கப்பட்டுக் கையாளப் படுகின்றன. (இந்த அளவு வருவதற்கே கொஞ்சம் சிடுக்கல் – ஏனெனில் மத்திய அரசு நல்லெண்ணத்துடன், நிலுவை விஷயங்களைக் கூடிய சீக்கிரம் முடிக்கவேண்டும் என நினைத்தாலும், அதற்காகக் காத்திரமாக, சட்டதிட்டங்களுக்குட்பட்டு முயன்றாலும் – சிலபல நீதிபதிகளுக்குக் காமாலைக் கண். என்ன செய்ய!)

அதற்கு முன் பொத்தாம் பொதுவாக இந்த எண்ணிக்கைகள், புள்ளியியல் விவரங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

-0-0-0-0-0-

மோதி குஜராத்தில் இருந்தபோது – நீதிமன்றங்களின் வேலை நேரத்தை நீட்டித்தும், அதிக பெஞ்சுகளை உருவாக்கியும், நீதிமன்றங்களின் வேலை நாட்களை அதிகரித்தும், பிறவழிகளில் சட்டபூர்வமாக வழக்குகளை ஃபைஸல் செய்யவும் – பலப்பல முயற்சிகள் எடுத்தார். ஊழியர்களுக்கு, அதிகப்படி வேலைக்கான அதிகப்படி ஊதியமும், அலவன்ஸ்களும் கிடைக்க ஆவன செய்தார். இதன் விளைவாக குஜராத் மாநிலத்தில், நீதி பரிபாலனத்திலும் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது.

இன்னமும் சில முறை பாஜகவுக்கு மத்திய அரசமைக்க வாய்ப்புக் கிடைக்குமானால் – உச்ச நீதிமன்றத்துக்கும் அணுக்கமாக இருந்து, இந்த நிலுவை வழக்குகளைப் பலவிதங்களிலும் குறைக்க, நீதி பரிபாலன முறைமைகள் ஒப்புக்கொள்ளக்கூடிய நேர அளவில் செயல்பட, தேவையற்ற தாமதங்களில்லாமல் நம் மக்களுக்கு நீதி கிடைக்க, சிதம்பரம், கனிமொழி, ஸோனியா, ராஹுல் போன்ற பொறுக்கிகள் போர்க்கால ரீதியில், சட்ட-நீதிபரிபாலனரீதியாக உள்ளே தள்ளப்பட – ஆவன செய்யப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

ஏனெனில் பாஜக-மோதியின் ட்ரேக் ரெக்கார்ட் அப்படி! சாதித்துவிட்டுத்தான், கொஞ்சமாகப் பேசுகிறார்.

ஆனால் – எதிரணியில் கஞ்சா அடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, உளறிக்கொட்டும் கூறுகெட்டக் குறுமதியாளர்கள்தாம் இருக்கிறார்கள்.

ஆகவே!

மோதி மீண்டும் வரவேண்டும்!

 

2 Responses to “நீதி பரிபாலனம் – உச்ச நீதிமன்றம் (பாஜக-மோதி குறிப்புகள் 8/n)”

  1. K.Muthuramarishnan's avatar K.Muthuramarishnan Says:

    Really good track record by Modi Government. But for you I would not have come across this statistics.Good research. Happy Modi gives his time and attention to every aspect of governance.


Leave a Reply to மேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து | ஒத்திசைவு... ओ̰̥̠̬̯͕̾͑̓̀͂̀͝͡ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *