ஸ்வாமி ஸானந்த் – சில +குறிப்புகள்
July 24, 2018
ஸானந்த்ஜி அவர்களைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன்.
-0-0-0-0-
-0-0-0-0-
உத்தராகண்ட் அரசு அவரை – அவர் விரதம் இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திய பிறகும்கூட, தம் விரதத்தைத் தொடர்கிறார் என அறிகிறேன்.
யோகிக்கு 86 வயதாகிவிட்டது. அற்புதமான ஆசாமி. பாரதத்தின் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் – அமைதியாகவும் தொடர்ந்தும் செயல்பட்டு வருபவர். ஐஐடி-கான்பூரில் பேராசிரியராக இருந்தவர். பிரமாதமான எஞ்ஜினீயர். பள்ளிகளிலும் கல்வியிலும் ஈடுபாடு உள்ளவர். ஸ்திதப் ப்ரக்ஞர்.
-0-0-0-0-0-
சில வருடங்கள்முன் வாய்த்த சிலபல உரையாடல்களினால் அவருடன் கொஞ்சம் நெருக்கமானேன். அவரும் பலமுறை அழைத்தார். கடந்த இரண்டு வருடங்களாக, மூன்றுமுறை அவர் வசிக்கும் ஆசிரமத்துக்குச் (இது வாராணசீ ‘பெனாரஸ்’ பக்கத்தில் இருக்கிறது) செல்லவேண்டும் எனத் திட்டமிட்டாலும் – கடைசி நிமிடத்தில் ஏதாவது ஏற்பட்டு, போகமுடியவில்லை.
இன்று காலை மனைவியுடன் ஸானந்த்ஜீ அவர்களைப் பற்றி கொஞ்சம் ஆதங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். அவள் – ‘நீ இப்போதே கிளம்பிப் போ, தில்லிக்குப் பற, உடனடியாக ரிஷிகேஷ் போ, சும்மா பேசிக்கொண்டிருக்காதே’ என்றாள்.
ஆனால், எனக்கு முட்டியடி எதிர்வினைகள் புரிபடுவதில்லை. ஏதாவது காத்திரமாகச் செய்யாமல் அவர் காலடியில் சோகத்துடன் உட்கார்ந்துகொண்டிருப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அவரும்கூட இதனை விரும்பமாட்டார்தாம்.
ஹ்ம்ம்… ஸானந்த் அவர்களின் கரிசனமும் புரிகிறது.
ஆனால் அமைப்பு+நிதி ரீதியாக, அரசுக்கு இருக்கும் இடியாப்பச் சிக்கல்களையும் புரிந்துகொள்கிறேன். காங்கிரஸ் ஆட்சி 50-60 ஆண்டுகளில் மெத்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் இருந்து உருவாக்கிய இடியாப்பச் சிக்கல்கள் பல – இப்போது எளிதில் தீர்க்கமுடியாதவையாக மாறிவிட்டன; இந்தப் பின்புலத்தில் மோதி ஆட்சி நான்காண்டுகளில் முடிந்தவற்றையெல்லாம் செய்தாலும், இன்னமும் பலப்பல விஷயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
கங்காஜீ பிரச்சினையும் அப்படியேதான். பார்க்கலாம். விஷயங்கள் சரியாக நடந்தால், லிபரலல்லாத, ஸெக்யூலரரைகுறைகளல்லாத சூழல் உருவானால், அடுத்த 5-10 வருடங்களில் அவள் சுத்திகரிக்கப்படுவாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவேன். மோதி அரசின் செயல்படும் தன்மையையும் அறிவேன். (ஆனால் எல்லாவற்றுக்கும் சரியான சூழலும், நேரமும் வாய்க்கவேண்டும்)
எது எப்படியோ – ஸானந்த்ஜீ இந்ததடவை எப்படியாவது தன் உண்ணாவிரதத்தைக் கூடிய விரைவில் முடித்துக்கொள்ள பாரதத்துக்கு வாய்க்குமானால், அடுத்த சில மாதங்களில் அவரைப் பார்த்து, சில நாட்களையாவது அவரருகில் கழிக்கவேண்டும் என உறுதியெடுத்துக் கொள்கிறேன்.
அப்படியாகாமல், அவர் இந்தமுறை போய்ச் சேர்ந்தேவிட்டால்… கொஞ்சம் வருத்தமாக இருக்கும். நான் இறக்கும்வரை இந்தச் சோகத்தையும் ஒரு மூலையில் சுமந்துகொண்டிருப்பேன்.
கொஞ்சம் தளர்ச்சியாகவே இருக்கிறது. மும்முரமாக நான்கைந்து மணிநேரம் தோட்டவேலை செய்தால் சரியாகிவிடுமோ?
பார்க்கலாம்.
July 25, 2018 at 07:32
மும்முரமாக நான்கைந்து மணிநேரம் தோட்டவேலை செய்தால் சரியாகிவிடுமோ?
I’ve read somewhere that Seymour Cray used to do that. Once the mind clears, drop the shovel and pick up the work where you’ve left off.
July 24, 2019 at 13:20
[…] ஆர்வமானது – பெரியவர் ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா […]
October 19, 2020 at 14:40
[…] ஸ்வாமி ஸானந்த் – சில +குறிப்புகள் 24/07/2018 […]