சொரணை இருக்கிறதா யுவகிருஷ்ணாவுக்கு?

July 3, 2018

இல்லவேயில்லை. இனிமேல் திடுதிப்பென்று சொரணை அவரைக் கண்டடைந்து சரணடையவும் சாத்தியக்கூறு இல்லவேயில்லை. மன்னிக்கவும்.

சொரணை இருக்கிறதா நமக்கு?  –   July 3, 2018

இப்படியா அமோகமாகப் பொய்பல சொல்லி உளறிக் கொட்டுவார்கள்? பத்தியைத் ‘தேத்துவார்கள்?’

விக்கிபீடியா பக்கத்தைப் பார்த்துக்கூடச் சரியாகக் காப்பி அடிக்கத் தெரியவில்லையே!

குப்பைத்தனமான உள்ளடக்கத்துடன், துள்ளல் நடையில் மானேதேனே சேர்த்து கொஞ்சம் போராளிப் பொங்கலையும் கலந்து பரிமாறும் கொடும் பிச்சைக்காரக் கலை என்பது இவரை விடாதுபோல!

அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து அட்ச்சிவிட, அதுவும் மறுபடியும் மறுபடியும் திருடி கையும் களவுமாக கட்டும் பேஸ்ட்டுமாக மாட்டிக்கொண்டாலும், வுடான்ஸ் வுடவுடக் கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து இப்படி ஒரு களப்பிணி ஆற்ற, மேற்தோல் அநியாயத்துக்கும் வீங்கிய ஒரு திராவிடனால் மட்டுமேமுடியும்போல.

-0-0-0-0-0-0-

இந்த மனிதர்(?) எழுதியுள்ள கட்டுரையில் வரிக்கு வரி உளறல்கள். அளவற்ற அறியாமைகள். கடைந்தெடுத்த பொய்கள். எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியவில்லை.

இவர் எழுதும் அதி அற்புதக் கட்டுரைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பலப்பல முறை எழுதி அலுத்துவிட்டதால் கீழ்கண்டவற்றை மறுபடி படித்துக்கொள்ளவும்.

வேண்டுமளவு நொந்து விட்டீர்களா? :-(

-0-0-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால் – இதே கொச்சபம்பாவிலிருந்து ஒரு குழு, 2014ல் தமிழகத்துக்கு வந்திருந்தது. (நான் உள்ளிட்ட) ஒரு குழுவினர் அவர்களுக்குச் ஊர்சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தோம். (நீர், வன மேலாண்மை குறித்து)

அவர்களுடையது சோகக்கதை.

  • அவர்களுடைய ‘போராட்டம்’ வெற்றி. ஆனால் நீர்ப்பிரச்சினை பலமடங்கு அதிகமாகிவிட்டது.
  • இரண்டுவாரங்களுக்கு ஒருமுறைதான் குடிப்பதற்காக நீர்.  பணம் படைத்தவர்கள் (சுமார் 5%) நீர் வாங்கிக்கொள்ளமுடிகிறது. ஆனால் பிறருக்கு? ஏண்டா இப்படிக் குப்பைத்தனமாகப் போராடி தனியார்மயத்துக்கு எதிராகப் போராடினோம் என்று குய்யோமுறையோ.
  • 2000 வாக்கில் இருந்த நீரின்விலை 2014ல் 12-15 மடங்காகிவிட்டது. போராட்டத்துக்கு ஜே!
  • 2011 வாக்கில் – இவர்கள் போராடிய அதே கம்பெனியுடன் (கம்பெனிகள் அல்ல, யுவகிருஷ்ணா!) பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்களுடன் ஒப்பந்தம் போடவும் முயன்றிருக்கிறார்கள் – ஆனால் அவர்கள் திக்குபக்கம் வரமாட்டேனென்று சொல்லிவிட்டார்கள்.
  • பிற நிறுவனங்களும் வரமாட்டேனென்று சொல்லிவிட்டன. சுபம்.
  • இப்போது (அவர்களுடைய நகர அரசு உட்பட) நகர மேலாண்மைக்குக் கடன் பெறமுடியவில்லை. ஏனெனில் வரி ஏய்ப்பு. நீர் திருடல். ஆகவே மார்ஜின் செலவுக்குக் கூடப் பணமில்லை.
  • இன்று வரை கடும் பிரச்சினை தொடர்கிறது.

ததிங்கிணத்தோம். நன்றி.

-0-0-0-0-0-

இவ்வளவு பேசுகிறார்களே, இந்த உடன்பிறப்புகள் – இந்த ஜந்துக்களில் ஒரு அரைகுறைக்காவது நீர்மேலாண்மை பற்றி ஒரு மிலி அளவாவது தெரியுமா?

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

…நவீன காலனி பழைய காலணி என்று உளறிக்கொட்டி படுதெகிர்யமாக எழுத சொரணை இல்லாமல்தான் முடியும். நன்றி.

யுவகிருஷ்ணாக்கள் பேடித்தனமாக உளறிக்கொட்டுவதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த ஜந்துக்கள் கூட்டிக்கொடுக்கும் உசுப்பின் காரணமாக, போராட்டத்துக்கும் வெறியாட்டத்துக்கும் பெயர்போன நம் தமிழக அரைகுறை இளைஞக் கூவான்கள் இதற்கும் போராடுகிறேன் என ஆரம்பித்து கோவையையும் சுடுகாடாக்காமல் இருந்தால் சரி.

 


 

 

14 Responses to “சொரணை இருக்கிறதா யுவகிருஷ்ணாவுக்கு?”


    • நன்றி, நவீன்குமார் லோகநாதன்.

      மிக அழகாகவும் தார்மீக அடிப்படையிலும் தரவுகளின் பேரிலும் எழுதியிருக்கிறார் இந்த ஆர்எஸ்பிரபு. இவர்களைப் போன்றவர்கள் நீடுழிவாழ்க.

      ஆனால் நம் செவிட்டுக்கூப் போராளிகள் காதில் இவையெல்லாம் விழவேண்டுமே!

      • A.Seshagiri's avatar A.Seshagiri Says:

        “ஏப்ரல் மாதம் கம்பெனி பதிவுசெய்து ஜூன் மாதம் 15000 கோடிக்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத, மோடியின் நண்பரான அம்பானியின் கம்பெனிக்கு அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை பின்னுக்குத் தள்ளி டெண்டர் கிடைத்தபோது கமுக்கமாக இருந்த தேசபக்தர்கள் இப்போது குதிப்பதில் ஆச்சரியமில்லை.”

        இந்த தகவல் உண்மையா சார்?


      • கொஞ்சம் உண்மை – நிறைய பொய். சரியில்லை. ஆர்எஸ்பிரபு அவர்களே எழுதியிருந்தாலும், இது அநியாயப் பரப்புரைதான்.

        இந்த உலகமே சாம்பல் நிறமைய்யா.

  1. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    AS FORWARDED
    AS FORWARDED

    //*பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள் !*
    —————————————————–

    *காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்களோ !*

    *ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 3,150 கோடிக்கு பிரஞ்சு நாட்டின் சுயஸ் Suez என்னும் தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது.*

    *ஆதாரம் இதோ :* https://www.suez.com/…/SUEZ-wins-a-contract-worth-near-400-…

    *இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது Website ல் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.*

    *இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவதாது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம்.*

    *இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும்.*

    *தற்போது பொலிவியா Boliva நாட்டில் Cochabamba என்னும் நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.*

    *அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் SEMAPA என்னும் தனியார் கம்பனிக்கும் பின் இதே SUEZ சுயஸ் என்னும் தனியார் கம்பனிக்கு வழங்கியது.*

    *கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.*

    *இப்படி ஆனதால், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் கம்பனி. ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள். (இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்)*

    *சரி ஆற்றில் தான் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், Bore well ல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள்.*

    *வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த கம்பனி மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து.*

    *மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என… Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.*

    *வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.*

    *ஆதாரம் :* https://en.m.wikipedia.org/wiki/Cochabamba_Water_War

    https://nஆதாரம்cla.org/…/bolivia-privatized-water-company-d…

    *இனி சுயஸ் க்கு பணம் கொடுத்தால் தான் குடிக்க தண்ணீர். அவன் வைப்பது தான் கட்டணம். கட்டணம் செலுத்தவில்லை எனில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும்.*

    *தண்ணீரை சுத்தம் செய்கிறேன் என்ற பேர்வழியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது.*

    *மீடியாக்களில் இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை.*

    *இந்தப் பிரஞ்சுக் கம்பெனி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வராது. யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.*

    *இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள்.*

    *அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள். கட்டணத்தையும் அவர்களே நிர்ணயம் செய்வார்கள்.*

    *குடிக்கும் நீருக்கும், கர்பப்பைக்கும், சிறுநீரகத்திற்கும் குழந்தைப் பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மரபு மருத்துவர்கள் அறிவார்கள்.*

    *நம் கலாச்சாரத்தில் நீருக்கு எந்த அளவு நாம் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை நீங்களே அறிவீர்கள்.*

    *நீரின்றி அமையாது உலகு – வள்ளுவர்*
    *தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே – பழமொழி*

    *Science – Water has Memory.*

    *இன்னும் எத்தனை எத்தனை. நீர் உங்கள் உயிருடன் தொடர்புடைய ஒரு உயிர்ப்பொருள்.*

    *நம் தாய் மண்ணில் உருவான சிறுவானி நீரை, இனி உங்கள் நாவில் நினைக்க, நீங்கள் பிரஞ்சு நாட்டு காரனுங்கு கப்பம் கட்ட வேண்டும்.*

    *தன் சொந்த நாட்டு மக்களுக்கு குடிநீரை கூட விநியோகிக்க துப்பில்லாத இந்த அரசு தான், நாளை அணு விபத்து ஏற்பட்டால் நம்மை காப்பாற்ற போகிறது.*

    *நம்புங்கோள் மக்களே !*

    *இது தான் சுதந்திர இந்தியா*
    *இது தான் மக்களுக்கான அரசு*

    *பணப்பேய் பிடித்த பிணந்தின்னிகள் இந்நாட்டை ஆளும் வரை இது தொடரும்…*

    *நன்றி*

    *இரா.மதிவாணன்*//

    மேற்படி பகீர் செய்தி வாட்ஸ்அப்பில் வந்தது. அதை யுவகிருஷ்ணா (CtrlC + Ctrl V) செய்திருக்கிறேன். இதைப் பார்த்துவிட்டுத்தான் CtrlC + Ctrl Vயார் (யுவகிருஷ்ணா) பொங்கியிருக்க வேண்டும். பத்ரி பகிர்ந்துள்ள RS பிரபுவின் எதிர்வினையும் இதற்குத்தான் என நினைக்கிறேன்.


    • இதைச் சுட்டியமைக்கு உங்களுக்கு நன்றி கிடையாது, ஆனந்தம். :-(

      தமிழகப் போராளிகள் என்ன செய்தாலும் அது கழுதைத்தனமாக மட்டுமே இருக்கும் என்பது தெரிந்தாலும், இந்த அறிவிலிக் கூவான்களின் ஆகாத்தியம் தாங்கவே முடியவில்லை.

      இந்த அழகில் இன்னொரு ஆசாமி ஏதோ ஒரு தனியார் ‘ஆள் பிடித்துக்கொடுக்கும் மாமா’ நிறுவனத்தின் அரைகுறை ரேட்டிங் எழவுகளைக் காட்டி, இந்தியப் பல்கலைக்கழகம் அதில் ஒன்று கூட இல்லையே என்று வாயைக் கோணிக் காண்பித்திருக்கிறார்.

      சலிப்பாக இருக்கிறது – எங்கு ஆரம்பித்து எப்படி இந்த நபும்சகர்களைக் கதறக் கதற பகிரங்கமாக கருத்தழிப்பு செய்வது என்று…

      உதவமுடியுமா?

  2. Unknown's avatar Anonymous Says:

    பாப்பாரக் குள்ளனரியே ஒரு பொய் கூட காட்டாமல் தோழர் யுவகிருஸ்ணா பொய் சொன்னார் என்றாய், ஒண்ணாவது காட்டு நேர்மையிருந்தா


    • அய்யா, உயரக் கழுதையாரே!

      இதோ, நீங்கள் புரிந்துகொள்ள முடியும்படியான ஒரு எடுத்துக்காட்டு.

      யுவகிருஷ்ணா பொய்:

      > சில மரணங்களும் ஏற்பட்டன.

      உண்மை: ஒரேயொரு போக்கற்ற போராளி இளைஞன் மட்டுமேதான் இறந்தான்.

      நிலைமை அத்துமீறி போராளிகள் (அவர்கள் வழக்கம்போலவே) வன்முறையில் ஈடுபட்டபோது, அவனைச் சுட்ட காவல்துறை அதிகாரி முதலில் ஸஸ்பென்ட் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு பதவி உயர்வு கொடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

      நன்றி.
      பிகு: பிற பாணா தவறுகலையும் உலரள்கலையும் னீங்கலே கன்டுபிடித்து, உங்கல் யுவகிருஸ்னாவைக் கொன்டாடவும்.

  3. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    Quacquarelli Symonds இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலா நீங்கள் குறிப்பிட்டது? எனில் இந்தியாவில் MIT ஆக்ஸ்ஃபோர்ட், ஹார்வர்ட் அளவு தரமான பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்கள் உள்ளது என்று சொல்ல வருகிறீர்களா?


    • ஆமாம்.

      அந்த ‘அறிக்கை’யின் முறைமை – எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் ஓரளவுக்கு அறிவேன். அந்த ஸர்வேயில் பங்கு(!) பெற்ற மூவரை நேரடியாகவும். (அதிகமில்லை)

      ஆகவே, இந்த ஸர்வேயை நான் பெரிய அளவில் மதிக்கவில்லை.

      நான் இந்த அமெரிக்க எம்ஐடி-யுடன் (அதில் இரண்டு பெரிய பிரிவுகளுடன்) இரண்டு வருடம் மல்லாடியிருக்கிறேன். இரண்டுமுறை சென்று வாக்குவாதம் செய்து, இந்த வருடம் அந்த ஒத்துழைப்பே/சங்காத்தமே வேண்டாம் என முனைந்து அதில் வெற்றி(!)யும் பெற்றேன். அது ஒரு சோகக்கதை. ஊழலும் அசிரத்தையும் மேம்போக்குத்தனமான செயல்பாடுகளையும் கொண்ட அம்மாக்களைக் கண்டு சலித்துப்போனேன். (ஆனால் – அதில் மிகவும் மதிக்கத்தக்க ஆசாமிகளும் உள்ளனர், அது ஒரு அழகான, கொண்டாடத்தக்க நிறுவனம்தான்)

      அதேசமயம் – இந்தியாவின் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் இதில் சேர்க்கவேபடவில்லை என்பது (அந்த ஸர்வே நடத்தப்பட்ட முறைமைபடி) புரிந்துகொள்ளக்கூடியதே.

      என்னைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் சுமார் 8-10 உலகத்தரம் வாய்ந்த அப்படியாப்பட்ட கல்வி நிறுவனங்கள் பாரதத்தில் இருக்கின்றன. முதல் 100ல் அவை சர்வ நிச்சயமாக (சர்வே நிச்சயமாக இல்லாவிட்டாலும்) இடம்பிடிக்கக்கூடியவை. ஆனால் இவ்வளவு பெரிய நாட்டுக்கு இந்தச் சிறிய எண்ணிக்கை கொஞ்சம் சோகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

      அதேசமயம், சுமார் 15-20 நிறுவனங்கள் அப்படி உருவாகி வருகின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் – வெறுமனே இப்படி வரும் ஸர்வேக்களை திடமாகக் கருதவே முடியாது. அவை பாரதத்துக்குச் சாதகமாகவே இருந்தாலும் சரி. (பாதகமாக இருந்தால் அதை மண்டையில் தூக்கி வைத்துக்கொண்டு பாரதத்தின்மீது காறித்துப்ப ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள், ஆக அது பிரச்சினையில்லை)

      இது தொடர்பான ஒரு பாணா விவாதத்தை சிறிது நேரம் முன்னால் தான் முடித்தேன். இவன் முப்பது வருட நண்பன்தான். படித்தவர்களாகத் தங்களை நினைத்துக்கொள்பவர்களுக்கு பகுத்தறிவு என்பது இல்லை. சும்மா எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு அதன் பின்புலம் அறியாமல் துள்ளுகிறார்கள். நல்லவேளை நான் ஃபேஸ்புக்கில் இல்லை. இருந்தால், வாழ்க்கையே சண்டையாக மாறிவிடும்.

      அவர்கள் அணுகுமுறை கோர்வையாக இல்லையென்றால் அவர்கள் வாதங்களில் உள்ள மகத்தான இடைவெளிகளைச் சுட்டினால் – உடனே ஹிந்துத்துவா நேஷனலிஸ்ட் என என்னைச் சொல்கிறார்கள். நானும் உண்மைதான் எனச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

      திரும்பி இப்படி ஏதாவது அக்கப்போர் வரும், மறுபடியும் ஃபோன் செய்து நோண்டுவான். நோண்டட்டும். (ஆனால் யாருக்காவது எதற்காகவாவது பணஉதவி என்று நான் கேட்டால், மறுபேச்சில்லாமல் நேரடியாகக் கொடுத்துவிடுகிறான், என்ன செய்ய!)

      நன்றி.

      • ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

        நன்றி. சிரமத்துக்கு மன்னிக்கவும். //குறைந்தபட்சம் சுமார் 8-10 உலகத்தரம் வாய்ந்த அப்படியாப்பட்ட கல்வி நிறுவனங்கள் பாரதத்தில் இருக்கின்றன.// உங்களுக்கு சிரமம் எதுவும் இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் பட்டியலைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? இங்கு இயலாவிட்டால் மின்னஞ்சலிலாவது? நீங்கள் தரத்துக்கு முக்கியம் தருபவராகையால் உங்கள் நன்மதிப்பைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் எவை என்று அறிந்துகொள்ளும் ஆர்வம்தான், வேறெதுவும் இல்லை.


      • அனுப்பியிருக்கிறேன். தரத்துக்கு மட்டுமல்ல, நேர்மைக்கும் (முடிந்த அளவில்).

        இங்கு பதிக்கக்கூடாது என்றில்லை.

        அற்ப அரைகுறை சொகுசு என்ஆர்ஐ-களுக்கு இங்கு எதிர்வினை தரவேண்டுமா என என் மனதில் ஒரு கேள்வி.

        மேலும் பாரதம் என்று எதை எடுத்தாலும் அதனைப் பற்றி ஒரு துக்குணியூண்டு அறிவுகூட இல்லாமல் எள்ளி நகையாடுவது என்பது ஒரு மோஸ்தர்.

        இந்தக் கழுதைகளுடன் பொருத எனக்கு அலுப்பாக இருக்கிறது என்பது என் இயலாமை.

        நன்றி.


  4. […] பெருமிதிப்புக்குரியவருமான யுவகிருஷ்ணா அவர்களுக்கு வழங்கப்படுவதில் […]


  5. […] பாற்சுரப்பிகள், சம்பந்தமேயில்லாமல் கொச்சபம்பா போன்ற திராவிட ஆன்மிக விஷயங்களில் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *