எழுதாக்குளவி

April 30, 2018

என் நெடுநாள் நண்ப அரைகுறைக்கு அவனுடைய நண்ப அரைகுறை (=அடியேன்!) மேல் ஏகக் கோபம்.

ஏண்டா ஜெயமோகனைக் கொட்டுகொட்டென வாஸ்ப் போலக் கொட்டுகிறாய். பாவம்டா அவர். வுட்ரு. வேற ஏதாவது அறிவியல் கணிதம் பற்றி எழுது. இப்படியே வெறுப்பில் எழுதினால் நானும் படிப்பதை நிறுத்திவிடுவேன்.

என் பதில்:

1. போடாங்.

2. நான் wasp அல்ல. isp. இறந்தகாலமல்ல. இருக்கும், தொடரப்போகும் காலம். அல்லது காலன். அதாவது நடப்பவன்.  அவ்ளோதான்.

3. நான் கிண்டல் செய்தேன், அதுவும் தரவுகளின் மேற்பட்டுதான் – சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுடவில்லை. எல்லை மீறவில்லை. (ஆனால், அவர் அட்ச்சுவுட்டார், வுடுகிறார் – இதுதான் பிரச்சினை)

4. இன்னமும் பலப்பல விஷயங்களைப் பற்றி விலாவாரியாகவும் ஆதாரபூர்வமாகவும் சொல்லமுடியும். ஆனால் மாட்டேன். ஏனெனில் அவர் எழுதும் சில விஷயங்களுடனும் அவருடைய திறமையுடனும் நான் சர்வ நிச்சயமாக ஒத்துப்போகிறேன். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் – அவரைச் சிறுமை படுத்தவேண்டும் என அலைவதில் எனக்கு ஈடுபாடில்லை.

5. எப்படியும் நான் ஒரு பெரிய்ய மயிராண்டி அல்லன், ஆகவே என்னைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அதனால் – அவர் பாவம் அல்ல, புண்ணியம்தான்.

6. அவருக்கு அவர் வழி. எனக்கு என் வழி. உங்கள் மரமண்டைக்கு, ங்கொம்மாள, உங்களுடைய செல்லமான முட்டுச்சந்து. அவ்ளோதான்.

7. எனக்கு வெறுப்பு இல்லை எனப் பொய் சொல்லமாட்டேன். பல விஷயங்களில் அது இருக்கிறது. ஆனால் எனக்குப் பொறுப்பின்மை இல்லை எனவே நினைக்கிறேன். தேவையற்றுப் பொய் சொல்வதிலோ அட்ச்சுவுடுவதிலோ பெரிய நம்பிக்கை இல்லை எனவும்.

மேலும் என் விருப்புகளும் எக்கச்சக்கம். ஆகவே வாழ்க்கை நன்றாகத்தான் ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஏக்கங்கள் இல்லாமலில்லை – அவற்றை நிவர்த்தி செய்துகொள்வதையும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். பார்க்கலாம், வாழ்க்கை எப்படி விரிகிறதென்று.

8. எனக்கு என்ன எழுதவேண்டும், வேண்டாம், முடியாது என்பதைப் பற்றிய அறிவு இருக்கிறது. என்னைப் பற்றிய அதீதமான பிரமைகள் கொண்டவனல்லன் நான் (ராமசாமி – யாரில்லை?).

ஆக – நீங்கள் தாராளமாக அகலலாம். பாவம், உங்களுக்கும் அறிவுரை கொடுத்துக் கொடுத்து மாளவில்லை. உங்களுடைய சான்றோரிய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டு அவற்றின் படி ஒழுக, எனக்கு மூளையோ விவேகமோ பாக்கியமோ ராமசாமியோ இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு பிரச்சினையுமில்லை. ஏனெனில் அது உண்மையும்கூட.

சர்வ நிச்சயமாக இந்த வருடமும் ‘அடுத்த வருடம் இந்தியா வந்தடைந்து ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்தப்போகிறேன்’ என உங்கள் வழக்கமேபோலச் சொல்லிக்கொண்டிருக்க, சொகுசாக தொலைதூரக் கரிசனப் பொழுதுபோக்குகளில் ஈடுபட, தட்டச்சுவிசைப்பலகையுடன் சல்லாபிக்க, வாழ்த்துகள். நன்றி.

9. நீங்கள், தாராளமாக நான் எழுதும் எழவுகளைப் படிப்பதை நிறுத்தலாம். நானே உங்களுக்கும் சேர்த்தி இரண்டுமுறை மேலதிகமாகப் படித்துப் புளகாங்கிதப் பட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் வாசக எண்ணிக்கை (= 7 ½ ) எனக்கு மிகவும் முக்கியம்.

மேலும் சம்பூகன் என்றொரு வினவுதர விடலை ஒன்றும் இப்போது தொடர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறது போல. நீங்கள் போகிறீர்கள், சம்பூகன் வருகிறார். எண்ணிக்கை சரியாயிற்று, ஆஹா!

-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால் – இம்மாதிரி மத்யஸ்தக்காரர்களுக்கு – மற்றவர்களுக்கு மாளா அறிவுரை கொடுத்துக் கொடுத்து ஏகத்துக்கும் அனுபவம் இருப்பதனால் –  தங்களுக்கு, உண்மையாகவே இம்மாதிரியெல்லாம் அறிவுரை கொடுக்கத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டுவிடுகிறார்கள். (இதில் இவர்களுக்கு இணை நான் தான்!)

போங்கடா, போக்கத்த போங்காட்ட என்ஆர்ஐங்களா…

13 Responses to “எழுதாக்குளவி”

  1. Vignaani's avatar Vignaani Says:

    “பிரச்சினை என்னவென்றால் – இம்மாதிரி மத்யஸ்தக்காரர்களுக்கு – மற்றவர்களுக்கு மாளா அறிவுரை கொடுத்துக் கொடுத்து ஏகத்துக்கும் அனுபவம் இருப்பதனால் – தங்களுக்கு, உண்மையாகவே இம்மாதிரியெல்லாம் அறிவுரை கொடுக்கத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டுவிடுகிறார்கள். (இதில் இவர்களுக்கு இணை நான் தான்!)”

    இவர்களின் எண்ணிக்கை நிறைய உள்ளது; அந்த வரிசையில் அடியேனும்


    • அய்யா, ஒரு பிரச்சினையுமில்லை; ஆனால் என் நெடுநாள் நண்பர்கள் ;-) போல என்னை வெறுப்பேற்றுபவர்களில் நீங்கள் ஒருவரில்லை. ஆகவே திட்டமாட்டேன். :-)

      கவலை வேண்டேல்.

      ஏற்றம்? உங்களுக்கு ஏத்தம்தான்! ;-)

  2. Unknown's avatar Anonymous Says:

    ஒரு விமர்சனமும் இல்லையேல் ஜெ அவர்களையும் ஈ .வே .ரா போல் பிம்பமாக அவர்களுடைய வாசகர்கள் நிறுத்தி விடுவார்கள். உதாரணம் ஜெ அவர்களின் இணைய பக்கம் (சவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்).

  3. Kannan's avatar Kannan Says:

    Keep writing, don’t bother about naysayers.

    Someone has to write about the deceptions committed by the so called great authors.

    :)

  4. Vijay's avatar Vijay Says:

    ஐயா,
    திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்தையும் சில சமயம் அவரின் மேடை பேச்சையும் கேட்டு இருக்கிறேன். அவரின் பரந்த அறிவும், அயராத உழைப்பும், படைப்பாற்றலும், மேன் மேலும் இளையவர்களுடன் தொடர்ந்து பணியாற்றும் ஆற்றலும் என்னளவில் வியக்கத்தக்கது. அவரை மானசீகமாக ஒரு ஆசிரியராகவே பார்க்கிறேன் (seriously).நான் ஒரு முறை அவர் அட்ச்சுவுட்டார் என நீங்கள் குறிப்பிடுவது போல் ஒரு சம்பவம் நடந்ததையும் பார்த்தேன்.

    If he were a reporter, he would have been in trouble (eg. Brian Williams, https://en.wikipedia.org/wiki/Brian_Williams). However, in my opinion, considering his prodigious amount of work, i did not mind it a bit, but i agree with your opinion. To each his own.

  5. Prabhu deva's avatar Prabhu deva Says:

    ஐயா,
    நான் பதில் எழுதாவிட்டாலும், தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை தங்கள் நட்புப்படையில் இருந்து கழித்துக்கட்டி விட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  6. Prabhu deva's avatar Prabhu deva Says:

    ஜெமோ அவர்களின் ரசிகர்கள் கூடியவிரைவில் அவருடைய கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி நமக்கு அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

  7. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    நீஙகள் என்னதான்பெருமதிப்பிற்குரிய ஜெமோஅவர்களைப்பற்றி சரியான தரவுகளோடு சில விஷயங்களைப்பற்றி எழுதினாலும்அவரை பலவகைகளில் ஆசானாக கருதும் என்னைப் போன்றவர்கள், தாங்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும்சாம்பல் நிறத்தை கருத்தில்கொண்டு இதை புறம்தள்ளும் அதேநேரத்தில்தங்களிம்ஏழரையிலும்தொடர்கிறோம்என்பதையும்ம்தெரிவித்துக்கொள்கிறோம் சரியாக எழுதாக் குழவியாக இதுவரை இருந்த நீங்க எழுதுகிற ‘குளவியாக’ மாறிவிட்டீர்கள் !!!!!!


    • நன்றி அய்யா. :-) ஆனால் ஆசானியம் என்பது ஒரு அடிப்படைவாதத் துகள்.

      ஆக, ஏழரையாகவே தொடர்ந்து எழவெடுத்தால் அதுவே எனக்குப் போதுமானது. ;-)

      ​இப்படிக்கு,

      எழுதும்கிளவன்

  8. A..Seshagiri's avatar A..Seshagiri Says:

    இந்த துகள் வைகோவின் செல்ல துகளான நியூட்ரினோ துகளுக்கு என்ன உறவு முறை வரும் ?

  9. rjgpal20's avatar rjgpal20 Says:

    பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு,

    நான் ஜெயமோகன் அவர்களின் நண்பன். ஒரு எழுத்து பொதுவில் வருமானால் அது விமர்சனத்துக்கு உட்பட்டதே. அதை ஜெயமோகனும் ஒப்புக்கொள்வார். இங்கு ராமசாமி அவர்கள் இடும் கருத்துகள் அவருடைய அளவில் முன்வைக்கப்பட வேண்டியவையே. ஜெயமோகனை அவமதிக்கிறார் , புறக்கணிக்கிறார் எனும் சொந்தக் எண்ணங்களை எழுதுவது சரியாகாது. ஜெயமோகன் மீதான ராமசாமியின் விமர்சனம் பொருத்தமற்றதல்ல என்று நினைத்தால் அந்த அளவில்தான் பதில் எழுத வேண்டும். மாறாக உனக்கு என்ன ஜெயமோகனைத் தெரியும் , நீ யார் ஜெயமோகனைக் கேட்க என்று சொல்வதானால் அவர் ஜெயமோகனையே சரியாக வாசிக்கவில்லை என்றுதான் பொருள். பகடி, நகைச்சுவை இன்றும் தமிழின் அறிவார்ந்த சூழலில் நீடிப்பது ஜெயமோகனிடமும், ராமசாமியிடமும்தான். ஜெயமோகனை ராமசாமியும், ராமசாமியை ஜெயமோகனும் விமர்சிக்க எல்லா உரிமைகளும் உண்டு என்பதால் இதில் கருப்பு வெள்ளைத்தனம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    எனக்குத் தெரிந்தவரையில் ஜெயமோகனுக்கும் இதே எண்ணம்தான் இருக்கும்.

    ராஜகோபாலன் ஜா


    • அய்யா ராஜகோபாலன், தன்யனானேன். தனியனாகவில்லை என்பது ஒரு அளவில் அமைதியைக் கொடுக்கிறது. :-)

      உங்கள் நம்பிக்கைக்கும் சமனத்துடன் விஷயங்களை அணுகும் மனப்பாங்குக்கும் நன்றி.

      பார்க்கலாம், எதிர்காலம் (=OppositeTime) எப்படி விரிகிறதென்று…

      ரா.


Leave a Reply to Prabhu deva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *