பேராசிரியர் பெர்னார்ட் ‘பார்ணி’ பேட் (1961 – 2016) – சில குறுங்குறிப்புகள்
April 16, 2016
இந்த மானுடவியல் அறிஞர், தமிழச் சமூகத்தைப் பற்றிய மிக முக்கியமான அவதானிப்புகளை அளித்துள்ளவர், ஏப்ரல் மார்ச் 10, 2016 அன்று இறந்துபோனதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இவர் எப்படி, ஏன் இறந்தார் என்ற விவரமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஹேஷ்யங்களாகவும் மட்டுமே இருக்கின்றன.
-0-0-0-0-0-
சுமார் பத்துவருடங்களுக்கு முன், இந்த மனிதருடன் அளவளாவ ஒரு சிறு சந்தர்ப்பம் வாய்த்ததை, நான் வாஞ்சையுடன் நினைவுகூர்கிறேன்.

அவருடைய நண்பர் அலெக்ஸ் கொலுப் அவர்கள் எழுதியுள்ள ஒரு இரங்கல் செய்தி: Vale Bernard Bate
…And then one day you find ten years have got behind you
No one told you when to run, you missed the starting gun
— டைம் / பிங்க் ஃப்லாய்ட்
-0-0-0-0-0-0-
என் தகப்பனார் (சாமினாதன்: மறுசுழற்சி 13/02/2014) உபயோகப்படுத்திய பதங்களில் ஒன்று, நம் சொரணையற்ற தனத்தைக் குறித்தது. அது: ‘எருமைமாடு மேல மழை பெய்வதைப்போல…‘
இந்திய_தமிழகப் பல்கலைக்கழக வட்டாரங்களில், ஏன், ஜெர்மனி-ஃப்ரான்ஸ்-அமெரிக்கா (குறிப்பாக, ஜெர்மனி) போன்ற நாடுகளில் நம் தமிழ்ச் சிகாமணிகள் செய்யும் சமூக/மானுடவியல் ஆராய்ச்சி எழவுகளை முடிந்த வரை தொடர முயன்று, எனக்கு என் செல்ல எஸ்ராமகிருஷ்ணனே போதும் என்ற அலுப்பில் அல்லாடிக்கொண்டிருக்கும் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – பார்ணி போன்றவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்ப ஓராயிரம் ஆஇரா வேங்கடாசலபதிகளாலும் முடியாது.
கொடிது கொடிது, தமிழக ஆராய்ச்சிச்சூழல் கொடிது. சராசரித்தனத்திலும் அதிசராசரித்தனத்தில் அமர்க்களமாக மூழ்கிக்கொண்டு, இன(!)மான(!!) அரசியல் மாய்மாலங்களை அரங்கேற்றிக்கொண்டிருப்பது அது…
April 16, 2016 at 16:42
ஐயா, பெர்னார்ட் இறந்தது மார்ச் 10 அல்லவா? அவரது நண்பரின் இரங்கல் மார்ச் 11ம் தேதியில் எழுதப்பட்டுள்ளது. நன்றி.
April 16, 2016 at 19:09
நன்றி, தினேஷ் – திருத்திக்கொள்கிறேன்.