‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு
February 20, 2016
ஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(
ஆனால் இவர்கள் பாவம், இந்த ப்ரொடெஸ்ட்களையெல்லாம் பெரிய விஷயம் போல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்; நம்முடைய செல்லங்களான (பெரும்பாலான) இளைஞர்களுக்கு – அவர்களுடைய பாவப்பட்ட தகப்பன் செலவில், நம் வரிப்பணத்தின் பிச்சையில், அவர்கள் உயிர்வாழ்ந்துகொண்டு இருப்பதால் – நன்றி மறவாத தன்மையுடன், நம் சமூகத்தின்மீது கரிசனம் இருக்கவேண்டும் போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்… (இம்மாதிரி கவலைப் படுபவர்களுக்கெல்லாம் ஒரு உடனடி வேக்ஸிநேஷன் அருமருந்து – இம்மாதிரி இளைஞர்களுடன் கொஞ்ச நேரமாவது கழிப்பது, அவர்கள் பேசுவதைக் குறுக்கிடாமல் கேட்பது – முடிந்தால் ‘நேர்காணல்’ செய்கிறேன் என்று இம்மாதிரி ஆசாமிகளுடன் உரையாட முயற்சிப்பது இன்னபிற… அய்யா சாமீ! இதையெல்லாம் ஒருமுறையல்ல, பலமுறை செய்துவிட்டு பயங்கரமாக நொந்துபோனபின்னர்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன், சரியா?)
இந்தியாவில் சமூக நிகழ்வுகள் என்பவை பெரும்பாலும் நகைச்சுவைகளின் தோரணம்தான். நமக்கு எல்லாமே கேளிக்கைதான் – இந்தப் பதிவு உட்பட; ஆனால் நகைச்சுவை இன்றேல், வாழ்க்கை மிகவும் வெறுத்துவிடும் என்பதும் (எனக்கு)உண்மைதான்!
…ஆக, நாளை நடக்கப்போகும் இன்னொரு போக்கத்த ப்ரொடெஸ்ட் என்பதும் முதல் நகைச்சுவை நிகழ்வல்ல. அதுதான் கடைசி என்று நம்மால் சோகப்படவும் முடியாது. அதேபோலத்தான் ஜேஎன்யு நகைச்சுவையும். கவலை வேண்டேல். நமக்கு இம்மாதிரி எதிர்மறை விஷயங்களிலெல்லாம், நெடிய போக்கத்த பாரம்பரியம் இருக்கிறது. (ஆனால் பிற நேர்மையான பாரம்பரியங்களும் இருக்கின்றன; ஒரு காலத்தில் பாபுஜி பல உண்மையான போராட்டங்களை நடத்தினார்; அண்மைய காலங்களில் (=’எமர்ஜென்ஸி’) அவற்றை ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்தினார்… அதற்குப் பிறகு திராவிடர்கழகக் காரர்கள் பூசாரி வேலை அனைவருக்கும் வேண்டும் எனத் தொடர்ந்து மெய் நோக்காமல், கண் குஞ்சாமல் போரோதிபோராடிக் கொண்டிருக்கிறார்கள்… சட்டென்று வேறெந்த திக போங்காட்டமும் நினைவுக்கு வரவில்லை, மன்னிக்கவும்!)
மேலும் புர்ச்சி கிர்ச்சி போராட்டம் என்றெல்லாம் வக்கணையாகப் பேசிவிட்டு, ஏதாவது பெரிய பன்னாட்டு நிறுவன வேலைகீலை கிடைத்தால், போராட்டத் தட்டிகளைக் கடாசிவிட்டு, சோறுகண்ட இடமே சொர்க்கலோகம் என ஆனந்தமார்க்கத்தில் ஈடுபடுவார்கள்; ஆகவே, ஒப்புக் கொள்ளவேண்டும் – ஜேஎன்யு பையன்களின் திரியாவரம், பச்சையப்பன்களை விடக் கொஞ்சம் அதிகமே!
பப்பரப்பா அலைகளில் நம் கூறுகெட்ட ‘காமன் மேன்’களைத் தத்தளிக்க வைப்பதையே, தலையாய பணியாகக் கொண்டுள்ளவர்கள்தாம் இந்த ஊடகப் பேடிகள்.
நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன; அவற்றில் ஒன்றையாவது ஓரளவுக்காவது புரிந்துகொண்டு, அதன் ஒரு சதவீதத்தையாவது நம்மால் ஒரு நேனோமீட்டராவது அசைக்க முடியுமா எனப் பார்க்காமல், அரைகுறை முதிராவிடலைகளின் – அவர்கள் ஜேஎன்யு காரர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஐஐடிகாரர்களாக இருந்தாலும் சரி – அவர்களுடைய அடாவடித்தனங்களின் மீது நம் கவனத்தைக் குவித்தல் சரியேயில்லை என நினைக்கிறேன். இப்படிக் குவிப்பதற்கு மேற்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு – இந்த பக்கம்தான் சரி, அந்தப் பக்கம் சரியில்லை, அந்தப் பக்கம் ரொம்ப ஒழுங்கா, நீ ரொம்ப யோக்கியமா என்றெல்லாம் கேட்டு நமது முடை நாற்றமெடுக்கும் அழுக்குத் துணிகளை ஆனந்தமாக மற்றவர்கள் மேல் வீசியெறியவேண்டிய அவசியமேயில்லை எனவும்தான்!
அவசரமாகக் கருத்துதிர்த்து (சகிப்புத்தன்மை, மனிதவுரிமை, தேசபக்தி, சுதந்திரம், தந்திரம் என்கிற ரீதியில் – கண்ணையாக்களை ஆதரித்தோ காதைய்யாக்களை கரித்துக்கொட்டியோ, மூக்கையாக்களுக்கு முட்டுக்கொடுத்தோ, வாயைய்யாக்களுக்காக வாய்தா வாங்கியோ) நம் நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமேயில்லை.
என்னைப் பொறுத்தவரை – நாம் இந்த போராட்ட வகையறாக்களை அளவுக்கு மீறி பொருட்படுத்தி, ஊடகப் பேடிகளின் பப்பரப்பாக்களிடம் நம்மை அறியாமலேயே, மூளையை அடகு வைத்துவிட்டுச் சரணடையும் மனப்பான்மையை விட்டொழித்தால்தான் நமக்கு விமோசனம். பரந்த படிப்பறிவோ, சமூகத்தின்மீது அக்கறையோ, தம் குடும்பங்களின்மீது கரிசனமோ இல்லாத ஸெல்ஃபி தலைமுறையிடம், ‘ஏனப்பா, உருப்படியாக எதையாவது செய்யக்கூடாதா?’ என்று கேட்பது நம்மை மூளையற்றவர்கள் என நமக்குநாமே சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது. அதாவது – பர்க்காதத், ராஜ்தீப் ஸர்தேஸாய், அனன்யா வாஜ்பேயி, தீஸ்தா சீதளவாத், மல்லிகா ஸாராபாய் போன்ற அறிவுலகப் போராளிப்போலிகளிடம், அடிப்படை நேர்மையை எதிர்பார்ப்பது போன்றது.
இல்லாவிடில், நாம் தொடர்ந்து இந்த வியாதியால் (=JNUtitis) பீடிக்கப்பட்டு அல்லாடினால் – நேரவிரயத்தால் நம் வாழ்க்கையும் வீண்; ஊக்க போனஸாக, நம் ஆரோக்கியமும் பாதிக்கும். நமக்கு இது தேவையா?
சரி. ஜேஎன்யு தொடர்பான நகைச்சுவை (=அனைத்து) நிகழ்வுகளிலேயே, எனக்குத் தெரிந்தவரை, தலைசிறந்த (=Head specialized ©எஸ்.ராமகிருஷ்ணன்) நகைச்சுவை (=Jewelry taste ©எஸ்.ராமகிருஷ்ணன்) என்பதை நான், என் தோழியும் முழுநேரத் தொழில்முறை ப்ரொடெஸ்ட்வாலாவுமான ஸாகரிகா கோஷ் அவர்களின் ட்வீட் ஒன்றுக்குத் தான் கொடுப்பேன்.
என்னுடைய வரைமுறையேயற்ற மரியாதைக்குரிய மகாமகோ ஸாகரிகா அம்மணியின் வளமான கற்பனைக்கு அளவேயில்லை. அம்மணியார் அவர்கள், இந்த எல்எஸ்இ (லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்) நிறுவனத்தையும் ஸர்பான் (இது பொதுவாக, ஒரு பாரிஸ் நகரக் கட்டிடத்தையும், அதிலிருந்து பணிபுரியும், (எனக்குத் தெரிந்தே)ஆறேழு பல்கலைக் கழக அலுவலகங்களையும் குறிக்கிறது; பலவாண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் பல்கலைக்கழகமாக இருந்ததின் பேரக் குழந்தைகள் இவைகள்!) ஒன்றே போலக் கருதுவதையே விடுங்கள் – பலப்பல பத்தாண்டுகளாகத் தரம் வாய்ந்த கல்விசாலைகளாக இருக்கும் இவை இரண்டையும், போயும்போயும் இந்த ஜேஎன்யு-வுடன் பொருத்திப் புளகாங்கிதம் அடைவதைப் பார்த்தால் எனக்குச் சகிக்கமுடியவில்லை. Sorry. #IndianIntolerance, what else!
…ஆகவே, என் துணிபு என்னவென்றால் – இந்த மகாமகோ பேரண்டத்திலேயே, ஜேஎன்யு-வுக்கு இணை என்பது ஜேஎன்யு தான்; அது மட்டமேதான்! இதுவும் நம் பாரதத்தில்தான் இருக்கமுடியும் – ஆகவே இருக்கிறது என்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியே! ஆனால் – என் மார்பு விம்மிப் புடைத்து எழவு, சாதாரண நிலைக்கு வராமல், நேற்றிரவெல்லாம் ஒரே வலி. :-(
…விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே, இந்த ஸாகரிகா ட்வீட்டின் சுட்டியை எனக்கு அனுப்பியவன் – 1979ல் படிப்பை முடித்த பழைய ஜேஎன்யு ஆளும், இப்போது உயர்பதவி ஐஏஎஸ் அதிகாரி ஒருவனாகவும் இருக்கும் ஒரு துரோகி. இவனைப் போன்றவர்கள், அக்கால ஜேஎன்யு நிகழ்வுகளையும் இக்கால நடப்புகளையும் (=’one day in the life of JNUprotestwallah’) பகடி செய்து நடித்துக்காட்டும்போது சிரிப்புசிரிப்பாக வரும். :-((
ஆனாக்க பஸ்ங்க்ளா… ஸுஸ்ஸீல் ஆரனோட அவ்ளோ பெரீய்ய கட்ரைல, அம்ணிக்கு இந்த ப்ரேன்ட் எழவு வெவகாரம் தாண்டா கண்ல பட்ருக்கு டா!
-0-0-0-0-0-0-0-
சரி. நம் வரிப்பணம் பலவழிகளில் வியர்த்தமாகிறது, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (MIDS=கஞ்சா கடை) என்றெல்லாம் பம்மாத்துகள் நடக்கின்றன. அதன்கூட இந்த ஜேஎன்யுவும் பத்தோடு பதினொன்று, என விட்டுவிடவேண்டியதுதான்.
வாழ்க போராட்டம், வளர்க போங்காட்டம்!
- எனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு…30/04/2015
- மதுகிஷ்வர், அருணாராய், ஜெயமோகன் தளத்தில் ‘பாலா’ – சில அலுப்படையவைக்கும் விவாதங்கள் 11/03/2015
- அனன்யா வாஜ்பேயி: நம்பவேமுடியாத அரைகுறைத்தனம்… 16/09/2014
- அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள் 19/07/2015
- மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
February 21, 2016 at 15:15
nirmala sitharaman is also a jnu alumni
February 21, 2016 at 18:52
அன்புள்ள ராம்,
கடைசி வரை எது பிரச்சனையோ அதை விடுத்து , வேறு எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறீர்கள் :(
கோர்ட் வாசல்ல வச்சி அடிச்சு இருக்காங்க…இது வரை அவர் செய்த குற்றம் என்ன? Protest செய்வது குற்றமா?
<<நம் வரிப்பணத்தின் பிச்சையில், அவர்கள் உயிர்வாழ்ந்துகொண்டு இருப்பதால்
சுத்தமா புரியல.. Students படிப்பது தவிர வேறு எதுவும் செய்ய கூடாதா ?
Protest செய்வது மூலம் பிரச்சனைகள் உடனே தீரப் போவது இல்லை.. ஆனால் அதன் மூலம் குறைந்த பட்சம் ஒரு விவாதம் நடக்குமே.
பாபுஜி சுதந்திரம் கிடைத்து ஒரு பத்து வருடம் உயிரோடிருந்தால் , அந்த கால கட்டத்தில் கூட அவர் ஏதாவது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார். Freedom alone is not his destination.
February 21, 2016 at 21:45
அய்யா, எனக்கு இம்மாதிரி ப்ரொடெஸ்ட்களில் நம்பிக்கையே இல்லை; சொல்லப்போனால் இவற்றை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் பாணியில் ப்ரொடெஸ்ட் கேளிக்கைகள் செய்துகொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.
சர்க்கஸ்களில் கோமாளிகள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வார்கள். போராடுவார்கள். பொளேர் என்று அடித்துக்கொள்வார்கள். குட்டிக்கரணம் அடிப்பார்கள். நாமெல்லாம் சிரிப்போம். அவர்கள் அடிவாங்குவதற்கு நான் ப்ரொடெஸ்ட் செய்யமாட்டேன் – ஏனெனில் அவர்கள் நம் கேளிக்கைக்காகத்தான்அதனைச் செய்கிறோம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், பாவம். அந்த அளவில் தான் இந்த ஜேஎன்யு நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். மேலும் இந்த கேளிக்கைகளின் பின்னுறைந்திருக்கும் arrogant sense of entitlement என்பதையும் unlimited sense of irresponsibility என்பதனையும் பார்க்கிறேன்.
நான் ஜேஎன்யு பற்றி ஓரளவுக்கு அறிவேன். எனக்கு அதன் இக்கால (~கடந்த 15-20 ஆண்டுகளாக) மாணவர்களிடம் மதிப்பே இல்லை. மன்னிக்கவும்.
இதுவும் கடந்துவிடும். நன்றி.
February 21, 2016 at 21:50
இன்னொரு விஷயம்; நானும் ப்ரொடெஸ்ட் (குடிக்கு எதிராக, ரௌடிகளுக்கு எதிராக, தேர்தல் நாள் ஊழல்களுக்கு எதிராக, ஜாதிவெறிக்கு எதிராக) என்றெல்லாம் பலமுறை செய்திருக்கிறேன். நன்றாக அடி உதையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறேன். நான் அஹிம்ஸாவாதியும் அல்லன் – எனக்கு அநீதியாக உதை கொடுக்கப்பட்டபோது பதிலளிக்கவும் முயன்றிருக்கிறேன்.
ஆனால், எனக்கு இவற்றால் கொஞ்சம் வருத்தமும் உடல்வலியும்தான் மிஞ்சியதே தவிர, கழிவிரக்கம் இல்லை. என்னை யாரும் ஆதரித்து அறிக்கை விடவேண்டும் என்று அலறவில்லை. இது ஒரு பெரிய விஷயமும் இல்லை. புலம்பவேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், நான் பிரபலமாகவேண்டும், ஊடகங்களுக்கு முன் உளறவேண்டும் என்று ஒரு எழவையும் செய்ததில்லை. மன்னிக்கவும்.
February 21, 2016 at 19:08
என்ன சார், பாதி படிக்கவே முடியவில்லை. எந்த ஊர் தமிழ் சார்? ஆயினும் ஒருவாறாக புரிந்த வரையில், ஜேஎன்யூ மிக படு பாதாளத்திற்கு சென்று விட்டது, இதில் இடதுசாரிகள் பங்கு மிக மிக அதிகம், என தெரிகிறது. ஆசிரியர்கள் மாற்றம், வயதான மாமா மாணவர்கள் வெளியேற்றம், ஓசியில் தங்கி இருக்கும் அரசியல்வாதிகள் வெளியேற்றம்…..என சிலவற்றை செய்யலாம் என்பது என் எண்ணம். சரியா தவறா…தெரியவில்லை.
February 21, 2016 at 21:37
நீங்கள் சொல்வது சரியே. நன்றி.
February 22, 2016 at 16:45
நமக்குள்ள விட்ட குறை தொட்ட குறையா இருக்குதே சார் ஸ்டுடென்ட் protest
ஏதோ என் பங்குக்கு.பல ஹிந்துத்வா வாதிகள் கிட்டே கேட்டேன்.பதிலே கிடைக்கல.நீங்களாவது………
தேசபக்தி பொங்கி வழியும் மனிதர்களை கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதால் நாடெங்கும் மாணவர்களுக்கு பல பிரட்சினைகள் உருவாகி இருப்பதை பார்க்கிறோம். எது தேச பக்தி என்று முடிவு செய்யும் அதிகாரம் (ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ )எப்போதும் சங்க பரிவாரங்கள் இடமே இருப்பதால் பரிவாரங்களை நோக்கி சில கேள்விகள்.
அரசியல் சட்டத்தில் இருக்கும் எவற்றை எதிர்த்தால் தேச துரோகம்.எவற்றை எதிர்த்தால் தேச பற்று. 370 ஐ எதிர்த்தால் தேச துரோகமா தேச பற்றா
அரசியல் சட்டத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராடினால் தேச பற்றா தேச துரோகமா
அரசியல் சட்டத்தை மாற்ற கோருவது,திருத்தங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா
தனி மாநிலம் கோரி போராட்டங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா (உத்தர்காந்து டெலெங்கானா போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் தேச துரோகிகளா ,தேச பற்று பொங்கி வழிபவர்களா )
தங்கள் தாய் மொழியில் கல்வி,வினாத்தாள்கள் வேண்டும் என்று போராடுபவர்கள் தேச துரோகிகளா
அரசியல் சட்டம் அனுமதித்த art 29 மைனோரிட்டி கல்வி நிலையம் நடத்தும் உரிமைகளை நீக்க வேண்டும் என்று போராடுவது தேச துரோகமா
அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு தரும் அதிகாரமான கோவில்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் அறநிலையத்துறை உருவாக்கத்தை எதிர்ப்பது தேச துரோகமா
அரசியல் சட்டத்தில் இருக்கும் எதையும் யாரும் எதிர்க்க கூடாது எனபது பரிவாரங்களின் கருத்தா.இது இதை எதிர்க்கலாம் ,இதை எதிர்க்க கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறதா அல்லது பரிவாரங்களிடம் எதை எதிர்த்தால் தேச துரோகம் என்று தீர்ப்பு சொல்லும் அதிகாரம் /உரிமை /கடமை இருக்கிறதா
காஷ்மீரை பற்றிய முடிவை காஷ்மீரிகள் எடுப்பார்கள்.அது தான் சரி,ஞாயம் எனபது தேச துரோகமா
தவறான தீர்ப்பு,அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கபட்டான்/முக்கிய குற்றவாளிகள் சிக்காததால் அகப்பட்ட ஒருவனுக்கு ,குற்றவாளிகளுக்கு சிறு உதவிகள் செய்த காரணத்துக்காக குற்றத்துக்கு தகுந்த தண்டனை தரும் தீர்ப்பாக இல்லாமல் வேறு யாரும் மாட்டாததால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று சொல்வது தேச துரோகமா
February 23, 2016 at 12:50
\\ ஏதோ என் பங்குக்கு.பல ஹிந்துத்வா வாதிகள் கிட்டே கேட்டேன்.பதிலே கிடைக்கல.நீங்களாவது………\\
ஸ்ரீமான் பூவண்ணன் அவர்களுக்கு ஸ்வாகதம். ஸுஸ்வாகதம்.
இன்னிக்கி காத்தால காக்கா கத்தின போதே நெனச்சேன். பூவண்ணன் சார் வரணுமேன்னு. இப்படி நிராயுதபாணியா வரது மட்டும் சரியில்ல. அவ்வளவு தான்.
ராம் கேக்க மறந்தாலும் நான் நிச்சயமா கேப்பேன். இந்த ஸ்டூடெண்ட் வார் டேன்ஸ் (= போர் + ஆட்டம்) பற்றி நீங்கள் ஒரு வ்யாசம் எழுதுவதாக ப்ரதிக்ஞை செய்திருந்தீர்கள். அது எங்கே எங்கே என்று அலுக்காம நிச்சயமா கேழ்ப்பேன்.
வார் டேன்ஸாய ஸ்வாஹா. ஃப்ளெக்ஸ் தட்டியாய ஹும்பட். இப்படி ஸ்டூடண்ட்ஸை (= அப்பன் பணத்தில் குத்தாட்டம் போடும் தமிழக மக்கு மாணவர்களை) நீங்கள் அம்போன்னு விட்டு விடுவது நெசமாலுமே ந்யாயமில்லை.
\\ அரசியல் சட்டத்தில் இருக்கும் எவற்றை எதிர்த்தால் தேச துரோகம். \\
விவாதத்திலேயே இல்லாத விஷயத்தை விவாதத்தில் இருப்பது போல் பாசாங்கு செய்வதும் முக்யமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயத்தை நைஸா சாய்ஸ்ல விடுவதும் பூவண்ணன் சாருக்கு புதுசா? என்ன கொஞ்சம் மாட்டுக்கறி கோத்ரம் நு உங்கள் ரெகுலர் ஃபார்முலா சேத்திருந்தா கொஞ்சம் காரம் சரியா இருந்திருக்கும்.
தேவரீர் முன்வைக்கும் பல விஷயங்கள் ஜே என் யூ விவாதத்தில் இல்லை ஸ்வாமின்.
ஹிந்துஸ்தானத்தை சுக்கு நூறாக உடைப்பது (டுக்டே டுக்டே கரேங்கே) என்று மாணவக் குஞ்சாமணிகள் கோஷம் போட்டது தேச பக்தியா இல்லையா என்று ராணுவ மேஜராகிய நீங்கள் தான் சொல்லுங்களேன்.
அஃப்ஸல் தேரே காதில் ஜிந்தே ஹைன் (அஃப்ஸல் உன்னுடைய கொலையாளிகள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்) என்று மாணவக் குஞ்சாமணிகள் கோஷம் போட்டது தேச பக்தியா இல்லையா என்று நீங்கள் சொல்லுங்களேன். அஃப்ஸலுக்கு தண்டனை கொடுத்தது தேசத்தின் ந்யாயாலயங்கள். கொடுத்தவர்கள் ந்யாயாதிபதிகள். கொடுக்கப்பட்டது சட்டத்தின் வாயிலாக.
சட்டத்தின் வாயிலாக தண்டனை கொடுத்த ந்யாயாதிபதிகள் கொலையாளிகள் என்று மாணவக் குஞ்சாமணிகள் பேத்துவது சரியா என்று சொல்லுங்களேன்.
இடஒதுக்கீடு, அரசியல் சட்டத்தில் மாற்றம், தனிமானிலம், தாய் மொழியில் வினாத்தாள் என்று ஜக ஜகான்னு யாரும் பெருசா விவாதிக்கவே விவாதிக்காத விஷயத்தை ஏதோ பெருசா விவாதத்தில் இருக்காப்போல பாசாங்கு செய்வதும் அதுவும் தேச பக்தி அல்லது தேச விரோதம் என்ற அலகீட்டில் அதைக் கொணர முயல்வதும் ………….. நெம்ப டமாஸ் பண்றீங்க சார்.
\\ அரசியல் சட்டத்தை மாற்ற கோருவது,திருத்தங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா \\ அரசியல் சட்டம் அனுமதித்த art 29 மைனோரிட்டி கல்வி நிலையம் நடத்தும் உரிமைகளை நீக்க வேண்டும் என்று போராடுவது தேச துரோகமா \\ அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு தரும் அதிகாரமான கோவில்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் அறநிலையத்துறை உருவாக்கத்தை எதிர்ப்பது தேச துரோகமா \\
சேர்த்து படிச்சா வடிவேலு காமெடி மாதிரி இருக்கு சார் :-)
அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை யாரும் தேச பக்தி அல்லது தேச விரோதம் போன்ற அலகீடுகளில் நிறுத்திப்பார்க்க விழையவில்லையே. அஃதாகப்பட்டது தேவரீரை விடுத்து.
\\ அரசியல் சட்டத்தில் இருக்கும் எதையும் யாரும் எதிர்க்க கூடாது எனபது பரிவாரங்களின் கருத்தா \\
இல்லீங்க்ளே சார்.
\\ இது இதை எதிர்க்கலாம் ,இதை எதிர்க்க கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறதா அல்லது பரிவாரங்களிடம் எதை எதிர்த்தால் தேச துரோகம் என்று தீர்ப்பு சொல்லும் அதிகாரம் /உரிமை /கடமை இருக்கிறதா \\
பரிவாரங்களிடம் இல்லை. ஆனால் செங்கொடியாளர்களிடம் மட்டிலும் இதற்கு ஏகபோக குத்தகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ?
\\ காஷ்மீரை பற்றிய முடிவை காஷ்மீரிகள் எடுப்பார்கள்.அது தான் சரி,ஞாயம் எனபது தேச துரோகமா \\
இல்லாங்காட்டி என்னன்னு ராணுவ மேஜராகிய நீங்கள் சொல்லுங்களேன்.
\\ தவறான தீர்ப்பு,அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கபட்டான்/முக்கிய குற்றவாளிகள் சிக்காததால் அகப்பட்ட ஒருவனுக்கு ,குற்றவாளிகளுக்கு சிறு உதவிகள் செய்த காரணத்துக்காக குற்றத்துக்கு தகுந்த தண்டனை தரும் தீர்ப்பாக இல்லாமல் வேறு யாரும் மாட்டாததால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று சொல்வது தேச துரோகமா \\
சார் சொல்லக்கூடாது உங்களுக்கு ரொம்பவே ஹாஸ்ய ரஸம் ஜாஸ்தி. இதப் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். இப்படியெல்லாம் எப்புடி சார் யோஜனை செய்கிறீர்கள். எந்த நாடாக இருந்தாலும் சண்டை சச்சரவுகள் ஏதோ ஒரு கோர்ட்டில் முடிவுக்கு வந்து விடும் சார். என்னவோ போங்க………………………………….
February 23, 2016 at 17:46
அய்யா க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு…
நன்றி! நன்றி!! நன்றி!!!
(உங்கள் உதவியால் கொஞ்சம் தெம்பு வந்தது!)
February 23, 2016 at 08:03
பாவம் சார் நீங்கள்! பூவண்ணன் திரும்ப வந்தே விட்டார்!! வெயில் வேறு கொளுத்த ஆரம்பித்து விட்டது!.எவ்வளவு தெளிவாக,வசதியாக அவர் தரப்பு அயோக்கியதனங்களையெல்லாம் சுத்தமாக மறந்து விட்டு இப்படி காற்றில் சிலம்பாட இவரை போன்றவர்களால் முடியும். வாழ்க பாரதம்?
February 23, 2016 at 08:17
வலதுக்கும்,இடத்துக்கும் நடக்கும் அதிகார சண்டை , இதில் வலதுக்கு தேசபக்தி , இடத்துக்கு பேச்சு உரிமை .. அவ்வளவே..
சரி, ரோஹித் பிரச்சனையில் நம் அரசியல்வியாதிகள் சவுண்டு விட்டது , அவருடைய சாதியினால் தான் ..
இப்போது மாட்டி கொண்டு இருக்கும் கண்ணையா , பூமிகார் சாதி. அதான் , எல்லாரும் கப்சிப் .
எல்லா பாசத்தையும் விட பெரியது பிள்ளைபாசம்.அதான் நம் டி.ராஜா பதை பதைபதைகிறார் (அவர் மகள் இந்த பல்கலையில் படிக்கிறார் )
நம் பல்கலைகழகம் ,எல்லா வேண்டாத விஷயங்களிலும் முதலிடம், பாலியல் தொந்தரவுகளில் முதலிடம் ,
சமீபத்தில் ஒரு ஆசிரியர் நீக்கபட்டார் ,பாலியல் பிரச்சனையில் மாட்டி,
நம்முடைய போராட்ட திலகம்கள் ,இந்த விஷயத்தில் கப்சிப், ஏனென்றால் , இந்த ஆசிரியரும் இந்த போராட்ட அமைப்பை சேர்ந்தவர் ,,
நம் ஊர் ஆட்களை மிஞ்சி விடுவார்கள் போல இவர்கள் .. !!
February 23, 2016 at 08:27
our communist friends will never answer….
1)
http://www.thenewsminute.com/article/you-point-fingers-hindutva-wadi-politics-why-whitewash-communist-brutalities-kerala-39225
2) our tn friends will never answer on
TN law college riots and murder of annamalai students .
3) all will be trailblazing on prof.sabharwal murder because it is by abvp!!
நீ ஒடச்சா தங்க குடம், நான் ஒடச்சா மண் குடம்..
thats it!!
February 24, 2016 at 08:38
All Comrades !! just visit ..
http://swarajyamag.com/politics/jnu-diary-part-1
http://adarshliberal.blogspot.in/
அம்புட்டு தான் அய்யா !! ஒன்னியும் சொல்றதுக்கு இல்லை . இதுக்கு தான் இத்தினி அலப்பரை
February 29, 2016 at 21:30
இது போன்ற ஒரு விவாத சமயத்தில் வேலை மெனக்கெட்டு அப்சல் குரு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்திருக்கிறேன். குரு மீது அரசு தரப்பு வைத்து நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட குற்றங்கள் “குற்றம் செய்தோருக்கு அவர் செய்த சிறு உதவிகள்” என்ற வகையில் வராது. பெரும் உதவிகள் அவை. நரோடா பாட்டியாவில் இந்துத்வ வெறிக்கும்பல் படுகொலைகள் செய்தபோது மாயா பென் கோட்னானி சும்மா மேற்பார்வைதானே செய்தார் என்றா சொல்லமுடியும்!
எங்கும் பொய்மை
மண்டிக்கிடக்குதைய்யா
இறைவா
எங்கும் பொய்மை
மண்டிக்கிடக்குதைய்யா
March 12, 2016 at 12:59
//குரு மீது அரசு தரப்பு வைத்து நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட குற்றங்கள் “குற்றம் செய்தோருக்கு அவர் செய்த சிறு உதவிகள்” என்ற வகையில் வராது. பெரும் உதவிகள் அவை. நரோடா பாட்டியாவில் இந்துத்வ வெறிக்கும்பல் படுகொலைகள் செய்தபோது மாயா பென் கோட்னானி சும்மா மேற்பார்வைதானே செய்தார்//
இது கள்ள ஆட்டம் .. உம்மை போன்ற பார்பன வெறியர்களின் சதி .. அப்சல் குரு சும்மா கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தார் .. அம்புட்டு தான் ..