ஸஃபர் ஸரேஷ்வாலா – மோதியின் பல முஸ்லீம் ஆதரவாளர்களில் ஒருவர்: சில குறிப்புகள், சுட்டிகள்

October 2, 2013

ஸஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) அவர்கள் ஒரு இந்தியர். குஜராத்தியர். கடவுள் நம்பிக்கையுடைய ஒரு முஸ்லீமும் கூட.

தொழில்முனைவில் இருக்கும் இவர் – உலகளாவிய பிரசித்தி பெற்ற பிஎம்டபிள்யு கார் விற்கும் ஒரு பெரிய ‘டீலர்ஷிப்’ + கார் பராமரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர். அந்த நிறுவனம்: குஜராத்தில் அஹ்மெதாபாத், ஸூரத் நகரங்களிலிருந்து இயங்கி வரும் பர்ஸொலி மோட்டர்ஸ். இந்த நிறுவனம் நல்ல லாபகரமாகவும் தொடர்ந்த காலாண்டு-மேல்-காலாண்டு வளர்ச்சியுடனும் இயங்குகிறது. செல்வச்செழிப்புடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எண்ணற்ற குஜராத்தி முஸ்லீம்களைப் போலவே – இவரும் பாஜக/மோதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் இருக்கிறார்.

குறிப்புகள்:

1. எனக்கு ஸஃபர் ஸரேஷ்வாலா அவர்களை நேரடியாகத் தெரியாது. அறிமுகமும் இல்லை. தனிப்பட்ட முறையில் பழக்கமான ஒரு நெடுநாள் குஜராத்தி நண்பர் (ஆரிஃப் ஸையத் ஹுஸ்ஸைய்ன்) மூலமாகத் தான் ஸஃபர் அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டேன்.

2. ஆரிஃப் அவர்களுடன் சுமார் 18 வருடங்களாக (விட்டு விட்டு) தொடர்பில் இருக்கிறேன் – இருந்தாலும் நேரில் பார்த்துப் பேசி பல வருடங்களாகி விட்டன. எங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள ஸூஃபியானா கலாம் ஈடுபாட்டினாலும், பண்டைய இஸ்லாமிய கணிதஅறிவியல் தொழில்நுட்பப் புரிதல்களினாலும்தான் (அதாவது இந்திய கணித, அறிவியல் தரிசனங்களை முன்னகர்த்திச் சென்ற இஸ்லாமியத் தத்துவவாதிகள் + பின், இவர்கள் கொடுத்த கொடையால் மேற்கத்திய தத்துவார்த்தங்கள் வளர்க்கப் பட்டமை போன்றவை) ஆரிஃப் அவர்கள் எனக்கு அறிமுகமானார். மோதி மீது வீசப்படும் பொய்களை மிகுந்த வருத்தத்துடன் எதிர் கொள்பவர் இவர்.

எடுத்துக் காட்டாக, செப்டெம்பர் 13, 2013 வெளிவந்த ந்யூயார்க டைம்ஸ் பத்திரிக்கைச் செய்தி: (இவர் அனுப்பிய சுட்டிதான் இதுவும்)

“Mr. Modi sits astride deep fissures in India’s polyglot society, with many ethnic fault lines that sometimes explode into violence. He is widely despised by Muslims here for the role he played in the 2002 Gujarat riots, when more than 1,000 people, mostly Muslims, were killed in brutal attacks that led babies to be impaled and women to be thrown alive onto burning pyres.”

எப்படித்தான் வலிந்து வலிந்து  இப்படியெல்லாம் மறுபடியும் மறுபடியும்  எழுதுகிறார்களோ! ஒவ்வொரு வார்த்தையிலும் கயமைப் பொதுப்படுத்தல்கள், வடிகட்டிய பொய்கள், தர்க்கரீதியற்ற குதிப்புக்கள்… ம்ம்,  இவர்கள் இப்படி எழுதுவார்கள். பின்னர் இவர்களைக் காப்பியடித்து இந்தியப் பத்திரிகைக்காரர்கள் எழுதுவார்கள். பின் அவர்களைக் காப்பியடித்து முன்னவர்கள்… பின் நம்முடைய அறிவுஜீவிச் சிகாமணிகள், ட்விட்டர் போராளிகள், பின்னூட்டப் பிலுக்கர்கள்… வதந்திகளையும் கற்பனைகளையும் பரபரவென்று சுற்றிச் சுற்றிப் பரப்புவதுதான் எவ்வளவு எளிய செயல்! நல்லவேளை, மோதி ஏகே47 எடுத்து முஸ்லீம்களைச் சரமாரியாகச்  சுட்டார் என்று எழுதுவதில்லையே என்று மகிழ வேண்டியதுதான். (ஆனால் செய்திருப்பாரோ? இந்தத் தாடிக்காரனுவள நம்பவே முடியாது!)

சரி, ஆரிஃப் அவர்கள் பக்கம் திரும்பி வருவோம். இவர் அடாவடியாகப் பேசுவதையோ, நினைப்பதையோ (என்னைப் போலல்லாமல்) விரும்பாதவர். பண்பாளர். ஆனால், வருந்தத் தக்க விதத்தில், இவர் ஒரு ‘இனிது இனிது ஏகாந்தமினிது’வாதி. A recluse. :-( புத்தகங்களும், சிந்தனைகளுமே கதியென்று இருப்பவர். :-((

3. இவரைப் போன்ற படிப்பாளிகளெல்லாம் நேர்மையாளர்களெல்லாம், அவர்கள் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படையாக எழுதி, பகிரங்க அரசியலில் ஈடுபட்டால், வஹ்ஹாபியச் சார்பு அரைகுறைச் சப்பட்டை நுரைதள்ளல்களை எதிர்கொண்டு – பன்முக, பலதரிசனங்களுடைய இஸ்லாமை வளர்க்கமுடியும்.  பரந்து பட்ட மக்களை அரவணைத்துச் சரியான திசையில், சுபிட்சத்தை நோக்கிய பாதையில்  வளர்த்தெடுக்க முடியும். ஆனால்… இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. (இன்னொரு சமயம், இது பற்றி)

4. ஆரிஃப் அவர்கள் அனுப்பிய சுட்டிகளைத்தான் நான் கீழே கொடுத்திருக்கிறேன். என் நண்பர் — ஸஃபர் அவர்கள் எழுதியிருக்கும் விஷயங்களை 200% சரியென்கிறார். யாருக்கும் பயந்தோ, திராவிடத் தனமாகப் ‘பொட்டி’ வாங்கிக் கொண்டோ ஸஃபர் ஸரேஷ்வாலா இவற்றை எழுதவில்லை என்கிறார். இவர்கள் இருவரும், மெய்யாலுமே தங்களுடைய குஜராத்தின், தங்களுடைய இந்தியாவின் வளர்ச்சியை விரும்புபவர்கள்; சுய கௌரவத்துடன் (ஏமாந்தால், சுயநலக் காரியம் ஆகவேண்டுமென்றால் மற்றவர்களின் உள்ளங்காலைச் செருப்புடன் மட்டுமல்லாமல் அதில் ஒட்டியிருக்கக் கூடிய அழுக்குகளையும் சேர்த்து நக்கும் நம்மூர் திராவிட பிரான்ட் இனமானச் சுயமரியாதையல்ல  இது) வாழ்கிறவர்கள்.

5. ஸஃபர் ஸரேஷ்வாலா சொல்வது, என்னுடைய மற்ற அறிமுகங்கள், பல சமயங்களில் எனக்குச் சொல்லியிருப்பவைகளுடனும் என் அனுபவங்களுடனும் ஒத்தும் போகிறது.

-0-0-0-0-0-0-

ஆக, ஸஃபர் ஸரேஷ்வாலா அவர்கள் எழுதியுள்ள ஆத்மார்த்தமான மூன்று கட்டுரைகளின் சுட்டிகளை இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்களே அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்… கவனிக்கவும்: இவை ஆங்கில மூலக் கட்டுரைகளே- ஆனால் எளிமையாக, நேரடித்தன்மையுடன் எழுதப் பட்டுள்ளன.

ஏன் குஜராத்தி முஸ்லீம்கள், மோதியின் பக்கமிருக்கிறார்கள்?
http://ibnlive.in.com/group-blog/the-india-blog/3581/why-gujarati-muslims-are-with-modi/64627.html

மோதி இருகூறாகப் பிரிக்கப்பட்ட மக்களை இணைப்பவர்!
http://ibnlive.in.com/group-blog/the-india-blog/3581/modi-is-a-de-polarizing-figure-in-gujarat/64838.html

இந்திய முஸ்லீம்களுக்குச் சில கேள்விகள்
http://ibnlive.in.com/group-blog/the-india-blog/3581/a-few-questions-for-indian-muslims/64640.html

-0-0-0-0-0-0-

கடை விரிக்கிறேன். கொள்வாரில்லையென்றாலும் கடையை விரித்தே வைக்கிறேன். YMMV. ஆமென்.

தொடர்புடைய பக்கம் (தொடர்புள்ள பதிவுகள் இப்பக்கத்தில்):

 

2 Responses to “ஸஃபர் ஸரேஷ்வாலா – மோதியின் பல முஸ்லீம் ஆதரவாளர்களில் ஒருவர்: சில குறிப்புகள், சுட்டிகள்”

  1. rbkaran Says:

    good articles ,please this type of article must be translate to tamil , here mentioned manushi website article also translate tami because lot of people not to understand English http://www.manushi.in/docs/Modinama-ebook.pdf , please sir you can translate tamil ,please ,please ,consider my kind request,thanking you

  2. poovannan Says:

    ஸஃபர் ஸரேஷ்வாலா அவர்கள் நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை புகழ்வதில் தவறுண்டோ

    சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து வாழ்த்துவது மிக சரி.

    எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை ஸஃபர் ஸரேஷ்வாலா பாடுவது பெருமையாக உள்ளது.

    மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா

    2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர் அல்லவா மோடி .

    சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

    அப்பாவி பெண்ணாக இருந்தாலும் கணவன் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அந்த வன்செயல்களை புகழ்ந்து வோட்டு வாங்கி வெற்றி பெற முடியும் என்று காட்டியவரை இஸ்லாமியர் மட்டுமல்ல அகில உலகமும் அல்லவா போற்றும்,போற்ற வேண்டும்
    டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர் நல்ல வேலையாக சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
    அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்
    ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர் மேல் பாராட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் வந்து குவிவதில் ஆச்சரியம் ஏது


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s