தெருவுக்குத் தெரு, வீட்டுமனைஇல்லம் தோறும் தேடித்தேடி அடாவடி ஆக்கிரமிப்பு! …இதுதாண்டா #திராவிடமாடல் புகழ் திரு* முகஸ்டாலின் அரசின் ஒரேயொரு தகத்தகாய, மகத்தான, ஒளிரும் சாதனை!

October 4, 2025

 இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(

…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்! 

* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.

(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை  6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)

…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?

1

இந்த ப்ளடி பொதுமக்கள், தகத்தகாய திராவிடமாடலுக்கு எதிராகப் பரப்புரை செய்யும் அயோக்கியத்தனமாக வதந்திகள் கொஞ்ச நஞ்சமல்ல: எடுத்துக்காட்டுகளாக… சிறுபெண்பிள்ளைகள் முதல் கிழபோல்ட் 80வயது பாட்டிகள் வரை துரத்தித் துரத்திக் கற்பழிப்பு (மன்னிக்கவும், அதெல்லாம் சங்ககாலம், இது திராவிடகாலம் ஆகவே “பாலியல் பலாத்காரம்!”) +​ குடி போதைக் கொலைகள், சீரழிவுகள் + அதி நவீன போதை வஸ்துக்கள் புழக்கம் + இளம் மாணவர்கள் திராவிட வழியில் ஆசிரியர்களை அடித்துத் துரத்துதல், மேற்கொண்டு வசதிப் பட்டால் கத்திக்குத்து அரிவாள்வீச்சு + ஜாதிவெறிப் பள்ளிச் சிறுவர்கள் பிற ஜாதிக் குழந்தைகளைக் குத்திக் கொலை செய்வது + குத்தாட்டம் போடும் சமச்சீரழிவுப் பள்ளியாசிரியர்கள் + ரசிகர்மன்றத் தலைவராக ஜொலிக்கும் திராவிடக் கல்வியமைச்சர் + யார்அந்தஸார்கள் கும்பல் + ரியல்எஸ்டேட் மாஃபியாக்கல் + கூலிப்படைகள் + காவல்துறையினர் செய்யும் கொலைகள் + காவல்துறை ஏவல்துறையாக வேட்டை நாய்களாதல் + பேச்சுரிமை நசுக்கப் படல் +  விமர்சனங்களை அணுக அதிகார துஷ்பிரயோகம் + இதுவரை திராவிடமாடல் கூடக் கண்டிராத அளவுக்கு ஹிமாயமலையை வெட்கம்கொள்ளவைக்கும் ஊழலோ ஊழல் + பிரிவினை வாதம் + ஹிந்துமத எதிர்ப்பு + ஸ்டிக்கர் முதல்வாதம் + திராவிட அரசக் குடும்பத்தினர்களின் போட்டாபோட்டிப் பெருங்கொள்ளைகள் + சினிமாச் சீரழிவுகள் + திரைப்படப் பொறுக்கிகளுக்குப் பதவிகள்-பரிசுகள் + தீவிர மணற்கொள்ளை +கிரானைட் கொள்ளை + டாஸ்மாக் வசூல்கள் + வருவாய்த்துறையின் %கள் + தொழிலதிபர்களிடமிருந்து கட்டாய வசூல் + கட்டப்பஞ்சாயத்து + மாதாந்திரக் ‘கவர்’ வாங்கும் ஊடகப்பேடிகள் + ஜால்ரா அகழ்வாராய்ச்சிகள் இகழ்வாராய்ச்சிக் காரர்கள் + திசைதிருப்பும் மீடியாமேனேஜ்மெண்ட் + இலவசங்கள் என்றபெயரில் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்குவது + ஜிகினா வேலைகள் +  தமக்குத்தாமே புகழ்ந்துகொள்ளும் இழி நிலை + திராவிடக் கொத்தடிமைகள் (‘தோழமைக் கட்சிகள்’ உட்பட) +++ +++ +++

மேற்கண்டவற்றில் ஒன்றுகூட உண்மையேயில்லை; ஒன்றுக்குக்கூட முகாந்திரமேயில்லை. ஏனெனில், உண்மை என்பது திராவிடர்கழகத்தின் பத்திரிகை; மன்னிக்கவும்.

சரி.

2

இப்படியாகத்தானே என் சக-கிழபோல்ட் நண்பருடன் அதிகாலை வேளைகளில் வாரக்கணக்கில் நடைப் பயணம் சென்றேன் (ஜூன்-ஜூலை 2025). இந்த நண்பர், அவருடைய விசிலடிச்சான் குஞ்சப்பப் பேரன் “தளபதி விஜய்ய மொதலமைச்சராக ஆக்கணும்…” பற்றியெல்லாம் அண்மைய பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறேன்…

“தத்தம் இளமைகளில் பாட்டன் முதலமைச்சன் ஒரு தொழில்முறை ஸ்த்ரீலோலன், மக்கா முதலமைச்சன் ஒரு கடைந்தெடுத்த பொம்பளைப் பொறுக்கி, பேராண்டி துணைமுதலமைச்சனும் காமாந்தகக் கொடூரன்… கொள்ளுப்பேரன் கதை தெரியவில்லை… நம் படுகேவல வாழ்க்கை இப்படியிருக்கையிலே…” July 9, 2025

…இப்பதிவெழவை, அதன் ஒருமாதிரி தொடர்ச்சியாகக் கொள்ளலாம், சரியா?

பொதுவாகக் காலை 5 மணிக்கு அவர் வீட்டு கேட்டருகில் நிற்பேன், அவரும் ஆற அமர ஆடிக்கொண்டே வெளியே வருவார். பின் ஓரளவு துரிதமாக கஸ்தூர்பா நகர், ஸாஸ்திரி நகர், வண்ணாந்துறை, கலாக்ஷேத்ரா, மருந்தீஸ்வரர் கோவில், பெஸண்ட் நகர், தியொஸாஃபிகல் ஸொஸய்டி வளாகம் என ஒன்றுக்கு இருமுறை சுற்றி சுமார் 7 கிமீ முடிந்தவுடன் (ஊக்க போனஸ்ஸாக, அவருடைய தொடர், சலிப்பிலா நாட்டுநடப்பு வளவளா அலுப்புக் கமெண்டரியுடன்) – அவருடய மாரத்தன் வம்பும் தொடர்பெருமூச்சும் எனக்கு மூச்சுமுட்டினாலும் மரியாதையுடன் நண்பரை அவர் வீட்டில் ஒருவழியாக விட்டுவிட்டு, நான் சிந்தனையில் (அதாவது நிந்தனையில்) ஆழ்ந்தபடி நடைபாதை-உடைபாதைகளைத் துள்ளிக்குதித்துத் தொடர்தாண்டல் தாண்டி, படுவேக ஸ்விக்கி-ஸொமேட்டொ யமதூதர்களை படுஅலர்ட்டாகத் தவிர்த்து, வெறிபிடித்தலையும் தெருத்திராவிட நாய்களுக்கு டிமிக்கி கொடுத்து என் செல்ல விடுதிக்குச் சென்றுவிடுவேன். …ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. யப்பாடா!

இப்படியாகத்தானே…

சுமார் இருபதுமுப்பது வருடங்களுக்கு முன்பே என் அப்பாவுடன் இந்த அடையார் வட்டாரக் குடும்பங்களைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. சிலபல தூரத்துச் சொந்தக் காரக் குடும்பங்களும் அச்சமயத்தில் அப்பகுதியில் வசித்துவந்தன என்பதும்… இவர்கள் வயதான பெற்றோர்கள்.

பிள்ளைகள் அம்ரீகாவில் ‘ஸெட்டில்’ ஆகி வருடத்துக்கு ஒருமுறை, சல்லீஸாக விமானடிக்கெட் கிடைத்தால்  முக்கிமுனகி அம்மாஅப்பாவைப் பார்க்ககொள்ள என தஸ்புஸ் ஆங்கிலம் (அம்ரீகா உச்சரிப்பு எடிஷன்)  புடைசூழ பிலுக்கிக்கொண்டு வலம் வருவார்கள்… பெரும்பாலும் பொட்டிதட்டும் சராசரி குமாஸ்தா தொழிலாளர்களாகிய இவர்கள் – க்ராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் தின்பண்டங்களையும் அடையார்ஆனந்தபவன் ( A2B என்றால் C2D – Cholesterol to Diabetes) பணியாரங்களையும் அமோகமாகச் சாப்பிட்டு குசுவிட்டு, ‘நல்லீஸ் ஷாப்பிங்’ செய்து. பெற்றோரிடம் குற்றவுணர்ச்சி கொஞ்சமேனும் குறையும்படிக்கு ஊடாடிவிட்டு, ஊக்கபோனஸ்ஸாக எத்தையாவது ரியல் எஸ்டேட் எழவில் முதலீடு செய்து…. … மறுபடியும் அம்ரீகா++ சென்றடைவார்கள்… இதற்குமேல் இவர்களிடம் எதிர்பார்க்கக்கூடியது என ஒன்றுமில்லை.

“என்ஆர்ஐ ஆர்ஃபன்ஸ்” என என இந்த என்ஆர்ஐக்களின் பெற்றோர்-முதியோர்களைக் குறிப்பிட்டார் அப்பா; முதன்முதலில் அவரிடமிருந்துதான் இப்பதத்தைக் கேள்விப்பட்டேன். ஏனப்பா இப்படிச் சொல்கிறாய் எனக் கேட்டதற்கு, அவர் சொன்ன சிந்தனையும் அனுமானமும் தோய்ந்த பதில்: “…அவரவருக்கு அவரவர் வாழ்க்கை, இக்காலம் வேறு, அக்காலம் வேறு; ஒருவரையும் ஒற்றைப்படையாகக் குற்றம் சொல்வதற்கில்லை. இருந்தாலும்.பலப்பல என்ஆர்ஐ  பையன்கள்-பெண்கள் தங்கள் பெற்றோர்களை பயன்படுத்தித் தூக்கி எறியும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ விதத்தில் பார்க்கிறார்கள்… சில சமயங்களில் பெற்றோர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளும், சதா நொள்ளை சொல்லும் போக்கும், காலங்கள் மாறுவதைக் கருத்தில் கொள்ளாத தன்மையும், தலைமுறைகளினூடே மனப்பான்மைகள் மாறுவதை அறிந்துகொள்ள முயற்சி கூடச் செய்யமாட்டேன் எனும் பிடிவாதமும், ‘அந்தக் காலத்துலே’ வகை பிலாக்கணங்களும், 60 வயதுக்குமேல் ஆனாலும் சொந்தக் குடும்பத்துக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு ஸ்தூலமான விஷயத்திலும் ஆழமோ பிடிப்போ இல்லாமலிருத்தலும் –   இம்மாதிரி க்ஷீணித்த நிலைக்கு காரணங்கள்;  இன்னொன்று உடல் நிலை குறைவான மூத்தவர்களைப் பார்த்துக் கொள்வதில் அடுத்த தலைமுறையினருக்குப் பிரச்சினைகள்… வீட்டிலேயே பெற்றோர்களை வைத்துக்கொண்டால் தம் ‘ப்ரைவஸி’ போய் விடுமே, தம் மனைவி/கணவனுடன் மேலதிகப் பிணக்குகள் கூடுமே, ‘வாழ்க்கையைச் சுதந்திரமாகச் சுகிக்க முடியாதே’ எனும் நியாயமான ஒப்புக்கொள்ளக்கூடிய சிந்தனைகள். சிலபல சமயங்களில் இந்த என்ஆர்ஐக்கள் சுயகாரியப் புலிகள்… வெட்கங்கெட்ட பேராசைக் காரர்கள்… கருமிகள், ஹிந்து பாரம்பரியங்களைத் துளிக்கூட அறியாதவர்கள்… ஆனால் காரணங்கள்- குற்றங்கள் யார் பக்கம் இருந்தாலும் நிதர்சன உண்மை என்னவென்றால், இந்தப் பெற்றோர்கள், போக்கற்ற அநாதைகளே! +++ வரும் காலங்களில் இவர்கள் தொடர்பான சொத்து+அபகரிப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்யும்… +++ +++”

என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. பல சமயங்களில் அவர் நினைவும், ப்ரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் அவருடைய போக்கும், தாமரை-இலை-நீர் போன்ற பக்குவமும், கர்மயோகி போன்ற மனநிலையும் நினைவுக்கு வருகின்றன;

“என்ஆர்ஐ ஆர்ஃபன்ஸ்” என்பவர்கள் இப்போது சகல ஜாதிகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் பொதுவாக 70+ வயதான தம்பதிகள் அல்லது தனிமையில் இருப்பவர்கள்… இவர்களுடைய வாழ்க்கையானது: அளவு/எடுப்புச் சாப்பாடு – தூக்கம் – மருந்தோதிமருந்துகள் – கொஞ்சம் நடைப்பயணம் இல்லையேல் படுக்கையோடு அனைத்தும் – ஸீனியர் ஸிட்டிஸன் ஹோம் வாழ்க்கை – வீட்டோடு நர்ஸ் – பிள்ளை-பெண்களின் டெலிஃபோன் அழைப்புக்கு, அவர்களுடைய குரலைக் கேட்க ஏக்கம் – மற்றபடி சாவுக்குக் காத்திருத்தல் – பக்கத்து வீட்டுச் சாவுகளுக்குப் போதல் – நமக்கு எப்படி முடிவுவருமோ என பயங்கள்+++ +++.

பிரச்சினை என்னவென்றால் இவர்களில் பலருக்கு (எப்போதோ வாங்கிப்போட்ட, ஆனால் இக்காலங்களில் பலப்பல கோடிகள் மதிப்புடைய) வீட்டுமனைகள், வீடுகள் எனச் சென்னை மாநகரத்தில் (ஏன், பிற நகரங்களிலும்) இருக்கின்றன. அதே சமயம், இந்த என்ஆர்ஐ அநாதைகளின் ‘அம்ரீகா+++ வாழ்’ பிள்ளைகளுக்கு இந்த சொத்துகளின் மீது ‘ஒரு கண்’ இருந்தாலும், அதை முறையாகப் பரிபாலித்துக் காத்துக் கொள்ளத் துப்பில்லை அல்லது திராணியில்லை…

இங்குதான், நம் செல்லங்களான கொள்ளைப் பொறுக்கித் திராவிடர்கள் வருகிறார்கள்.

ஏற்கனவே அவர்கள் பொதுச்சொத்துகளை லபக் செய்வதிலும், பெருங்கொள்ளை அடிப்பதிலும் கைதேர்ந்த பிரகிருதிகள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்றில்லை.  ஏற்கனவே, (எனக்குத் தெரிந்தே 1970களின் ஆரம்பத்திலிருந்து) புதுவீடு கட்ட, அல்லது புத்துருவாக்கம் செய்யகொள்ளவென யார் முயன்றாலும், வீட்டின் வாசலில் முதல்லோடு செங்கல்/மணல் வருவதற்கு முன்பே திராவிட ‘வட்டச் செயலாளர்’ தெருப்பொறுக்கி வந்துவிடுவான், அவனுடன் லோக்கல் கவுன்ஸிலர்  தெருநாய், கவுன்ஸிரலரிச்சி, கவுன்ஸலரிச்சிபுருஷன் என அவரவர் சக்திக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி அனைத்து திராவிடன்களும் அணிவகுத்துக் கமிஷன் அடிக்க அமோகமாக வருவார்கள்…

ஆனால் கடந்த 20-30 வருடங்களாக இந்தத் திராவிடக்கொள்ளைத் தொழில் இன்னமும் ஆழமும் வீரியமும் பெற்று பட்டொளி வீசிப் பறக்கிறது. எனக்கு இந்த #திராவிடமாடல் சாதனையின் பேரில் அலாதி ஈர்ப்பு+மகிழ்ச்சி. வேறென்ன சொல்ல…

3

வீட்டில் தனியாகக் கிழங்கள் இருக்கின்றன என்பது தெரிந்தாலே – அல்லது வீடு பூட்டப்பட்டிருக்கிறது எனத் தெரிந்தாலேயே திராவிட வற்புறுத்தல் ஹர்ராஸ்மெண்ட் ஆரம்பித்து விடும்; பல்வேறு வகைகளில் அன்றாட வாழ்வினை ஓட்டிக்கொண்டு செல்வதிலேயே பிரச்சினைகள் செய்வார்கள். வீட்டினை விற்பதாக முஸ்தீபுகள்/எண்ணங்கள் இருந்தாலேயேகூட இந்த திராவிட மோப்ப நாய்கள் அவற்றைக் கண்டுபிடித்துவிடும். சில சமயங்களில் அடாவடி ஆக்கிரமிப்பு ஏற்படும். வாடகைக்கு வீட்டினை எடுத்து, மாத வாடகை கொடுக்காமல் இருப்பது, காலி செய்ய மறுப்பது என்பதிலிருந்து ஆரம்பித்து, ‘மத்தியஸ்தம் செய்ய திராவிடக் கொள்ளைவீர குண்டர்கள் வருகை’ அவர்களுடைய ‘அறிவுரை’ எனத் தொடரும்… வீட்டினைத் தாங்கள் சொல்லும் ஆட்களுக்குத்தான் ‘அடிமாட்டு விலை’க்கு விற்கவேண்டும் எனவெல்லாம் கதைகள் ஓடும். அல்லது குண்டர்களுடன் மட்டுமே ‘டெவலப்மெண்ட் அக்ரிமெண்ட்’ போடவேண்டும் என அழுத்தம் கொடுக்கப் படும். எப்படியும் தமிழகக் காவல்துறையென்பது அதிகாரபூர்வ திராவிடதண்டல்காரப் படையென மாறிப் பல மாமாங்கங்கள் ஆகின்றன – ஆகவே இவர்கள் ஒதுக்கித் தள்ளத் தக்கவர்கள் – அதிக பட்சம் இவர்கள் ‘அனுசரித்துப் போக’ச் சொல்வார்கள், அல்லது திராவிட குண்டர்களுக்கு ஏவலாட்களாக அவர்கள் பணியினைச் செவ்வனே தொடர்ந்து செய்வார்கள்… ‘பெரிய இடத்தில் தொடர்பு’ அது இயல்பாகவோ அல்லது ‘வாங்கப் பட்டோ’ இல்லாமல் இருக்கும் பட்சத்தில், வீட்டுச் சொந்தக்காரர்களின் கதி அதோகதிதான். இருந்தாலும் பிரச்சினை என்பது வேறு…

‘நமக்கெதுக்கு வம்பு’ என்றிருக்காமல் வெகு முனைப்புடன் செயல்படும் என்ஆர்ஐ பிதுரார்ஜிதசசொத்ததிபர்கள் என்பவர்கள் சொற்பம் – இவர்களுக்கும் வருடக்கணக்கில் வழக்குவியாஜ்ஜியம் என்றலைய பணச்செலவு செய்யவேண்டிவரும்; அடியுதை என உதை கும்பலால் உதைக்கப் படும்; ஏன், அக்மார்க் #திராவிடமாடல் படி உயிராபத்தே ஏற்படும். பலர் விட்டாற்போதும் என கையில் கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிரயம் செய்துவிடுவார்கள். (முகஸ்டாலின் கும்பலுக்கு சித்தரஞ்சன்சாலை சொத்து ‘விற்க’ப்பட்டதைப்போல…)

அவ்வளவுதான்.

சக-கிழபோல்ட் நண்பர், “ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்த பட்சம் ஒருவீட்டை எப்படியாவது ஆட்டயப் போட்டிருக்கிறார்கள்” என்றார். எடுத்துக் காட்டுகளாக சிலபல தெருக்களில் சில வீடுகளைக் காட்டினார். அடாவடி அபார்ட்மெண்ட் ப்ளாக் கூட ‘ஜாயிண்ட் டெவலப்மெண்ட்’ என்கிற பெயரில் கட்டியிருக்கிறார்கள் என, அடையார் இந்திராநகரில் ஒரு வீட்டைக் காண்பித்தார்.

“அண்ணா காலத்தில் திமுக இவ்வளவு மோசமாக இருந்திருக்கவில்லை; ஆகவே, பக்கா திராவிடனான எனக்கு, அந்தக் காலத்தில் உணர்ச்சி பூர்வமாக சுய அர்ப்பணிப்புடன் போஸ்டர் ஓட்டி கோஷ்டம் போட்ட எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது – இந்தமாதிரி தெருப்பொறுக்கிகள் திராவிடர்களே அல்ல!”

நான் சொன்னேன்: “யோவ் பெர்ஸு, ஒங்க அண்ணா காலத்துலயே அப்டிதான்பா இருந்தது திராவிடப் பொறுக்கித்தனமும் ஊழலும்! அவர் பார்க்காத ‘படி தாண்டாப் பத்தினியா?’ ஒங்க கருணாநிதி புறங்கைய நக்கிட்டு இருந்தப்போ இதே அண்ணா அதை எதுத்தாரா? சம்பத்துக்கு எதுத்து எப்படியெல்லாம் ஊழல் அரசியல் செஞ்சார்? உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சாலும் கண்டுக்காம கமுக்கமா இருந்துருவீங்க… ஆனாக்க எனக்கு அந்த அவசியமேயில்ல – என் அப்பா காமராஜ் உபாசகர்… உங்க அப்பா மாரீ இல்ல… எப்படியும் உங்க தலைவன்கள் எல்லாம், ஒரு விதிவிலக்குகூட இல்லாம ஒரே ரகம், ஒரே சாக்கடையில் ஊறிய அழுகிய மட்டைதான்… ஒரு மசுத்துக்கும் வித்தியாசமேயில்லை; அறிஞர் கலைங்கர் எல்லாருமே ஒரே கச்சடா ஆசாமிகள்தாம்… ஏன், ஒங்க ஸ்டாலின் சித்தரஞ்சன் சாலேல ஆட்டயப் போடலியா? உதைக்கு அவ்ளோ பணம் எப்டி கெடச்சுதுன்னுட்டு ஒரு கேள்வி கேட்ருக்கீங்களா? மாப்ள சபரீசன் இவ்ளோ மாமாமாபெரும் திடீரெக்ஸ் பணக்காரன் ஆன விஷயம்??”

அவருக்கு, பொதுவாக என் கருத்துகளுடன் ஒத்துப்போனாலும், நான் அண்ணா பற்றி வைத்த விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாது எனத் தெரியும். இருந்தாலும் பலமுறை அவர் புறமுதுகிட்டு ‘அமைதி காத்தாலும்’ எனக்கு ஒரு மாதிரி குரூரப் பித்து, வேரென்ன சொல்ல. அடுத்தமுறையாவது அறிங்கர் என்வாயில் விழுந்து புறப்படாமல் இருக்கவேண்டும்….

“என் சகலேயே இப்டி அடாவடீ செய்றவன் தான்! எல்பிஎஃப்ல இருந்தான், இப்ப கட்சில வட்டப் பொறுப்பாளர்கள்ல ஒர்த்தன்… அயோக்கிய ராஸ்கல்… சொல்லிக்கவே வெக்கமா இருக்கு!”

நான்: “ஐயா! இதெல்லாம் ஒங்க தெராவிடமாடல்ல சகஜம் இல்லியா – மேலேர்ந்து கீழ வரிக்கும் தெருப்பொறுக்கீங்கதான்…

ஊழல்-அடாவடி-கற்பழிப்பு தெருப்பொறுக்கித்தனம் போன்றவையெல்லாம் உங்கள் திராவிடத்தின் அடிப்படைப் பண்புக்கூறுகள் இல்லையா? அவர் பக்கா திராவிடனாகத்தானே இருக்கிறார்? ஆனாலும் – எனக்குத் தெரிந்து அவர் கற்பழிப்பு எல்லாம் செய்யவேயில்லையே!”

அவர்: “அதுவும் செஞ்சிருக்கான் அந்த மாபாவி! அதுக்கப்பறம் அவனை என் வூட்டுக்குள்ள வுட்றதில்ல!

நான்: “ஆனாக்க ஒங்கள மாரீ அந்தக்கால உணர்ச்சிகர வெள்ளந்தி ஆசாமீங்களும் இருக்கீங்க இல்லியா?”

அவர்: “சரி, நாங்கல்லாம் ரெண்டுமூணுபேர்தாம்பா, ஒட்டுமொத்த கட்சீல அப்டி இருக்கோம்… இப்ப இருக்கறவங்க கதயே வேற… கொள்கையக் கண்டானுங்களா கொள்ளையைக் கண்டானுங்களா, இந்த தற்குறீங்க… சரி, அத்த வுடுங்க… அந்தக் காலத்த விடுங்க – இந்தக் காலத்துக்கு வாங்க… என் பேராண்டி விஜய் ரசிகன்ண்றதே எனக்கு வெச்ச ஆப்புதான்…” எனச் சொல்லி டபாய்த்தார் அவர். (இம்மாதிரி வழுக்கியோடல்களும், பேச்சுப்புள்ளி மடைமாற்றலும் எங்கள் உரையாடல்-நரையாடல்களில் வழக்கமானதொன்றுதான்…)

பார்த்தால் பாவமாக இருந்தது. அவர் கண்ணெதிரில் அவர் நம்பிய ‘சமூக நீதி’ என்பது வெறும் திராவிடமாடல்  பொறுக்கிப் பாவலா என ஐயம்திரிபற அறிந்துகொண்ட அவரின் நிலைமை சோகம்தான். பாவம்.

ஆகவே ஆறுதலாகச் சொன்னேன்.

“ஒங்க #திராவிடமாடல் ஒண்ணும் அவ்ளோ மோசமில்ல; ஏன்னாக்க தெருவுக்கு ஒரு வீடு மாரீதான ஆட்டயப் போட்டிருக்காங்க? அது தெருவுக்குப் பத்து சதவீதம் கூட இல்லையே! மிச்ச வூட்டயெல்லாம் இன்னீதேதிக்கு ஃப்ரீயாதான வுட்ருக்கானுங்க? அத்தொட்டு திமுக முன்னேற்றம்ண்றது 90% வெற்றிதானே! என்ன சொல்றீங்க?”

ஒரு வினாடி அதிர்ந்த அவர், அடுத்த நொடி வாய்விட்டுச் சிரித்தார்: “பாப்பாரக் குசும்புண்றது எனக்கு இப்பதாம்பா புரியுது!”

நான்: “இன்னொண்ணு பாருங்க! இந்த தியஸோஃபிகல் ஸொஸைய்டிக்கு எவ்வளவு நெலம் ஏக்கர் கணக்குல இருக்குது – அதையும் இதுவரிக்கும் உங்க திராவிடனுங்க ஆட்டயப் போடலியே! இதுவும் ஒரு மாபெரும் சாதனைதானே!:

அவர்: “ஹஹ்ஹா! அதுலியும் சில பிரச்சினைகளை எங்க ஆளுங்க உருவாக்கிட்டு இருக்காங்க… ஒங்களுக்குதான் ஒண்ணும் தெரீல!”

நான்: “கலாக்ஷேத்ரா நிலம்??”

அவர்: “அது ஸெண்ட்ரல் கெவுர்மெண்ட் – அதனால் எங்க பப்பு பெருசா வேகல! இருந்தாலும் அங்கயும் எங்க ஆளுங்கள வுட்டு கொழப்பம் செஞ்சிக்குனு இருக்கோம்… ரெண்டுமூணு வருஷம் முன்னாடி மீடியா பப்ளிஸிட்டி செஞ்ச பாலியல்வன்முறை வதந்தீங்க, எங்க திமுக ப்ராஜெக்ட்தான்!”

அவருக்கும் தற்காலத் திராவிடம் என்றால் அலர்ஜியாகத்தான் இருக்கிறது – இருந்தாலும் அவர் ஏதோ கற்பனையுலகத்தில் சஞ்சரித்து ‘திராவிடம் = சமூக நீதி + வளர்ச்சி + ஊழலற்ற ஆட்சி’ எனக் கற்பனையுலகத்தில் ஈடுபடுபவர். ஆகவே அவர் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக குண்டர்களுக்குத்தான் ஓட்டுப் போட முனையப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.

விரக்தி மிகும்போது “என்னோடு இந்த, அர்த்தமற்ற திராவிட அபிமானம் ஒழியட்டும்” எனவும் அவர் சொல்லியிருக்கிறார், பாவம்… அவரை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை…

என்ன, அடுத்த சில மாதங்களில் ஓரிரு முறையாவது அவரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன். முடிந்தவரை அவரை ‘வெளிச்சத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்த+செயல்பட’ வைக்கவும் ஆசை. அவர் ஸெண்டிமெண்டல் ஃபூலாக இருக்கலாம் – அவரை அப்படியே அழைத்திருக்கிறேன்: Sentimental Fool – இருந்தாலும்…

பார்க்கலாம். வாழ்க்கையில் அதிசயங்கள் சாத்தியம். பாரதீயஜனதாகட்சிக்கு +1 ஓட்டு?

எப்படியும்.- தெருப்பொறுக்கிக் கொள்ளைக்காரத் திராவிடம் இருந்த/இறந்த இடத்தில் புல்முளைக்கவேண்டும் என்பது என் அவா.

பாரத்மாதா கி ஜெய்.

4 Responses to “தெருவுக்குத் தெரு, வீட்டுமனைஇல்லம் தோறும் தேடித்தேடி அடாவடி ஆக்கிரமிப்பு! …இதுதாண்டா #திராவிடமாடல் புகழ் திரு* முகஸ்டாலின் அரசின் ஒரேயொரு தகத்தகாய, மகத்தான, ஒளிரும் சாதனை!”

  1. தமிழன்'s avatar தமிழன் Says:

    //அவர் ஸெண்டிமெண்டல் ஃபூலாக இருக்கலாம்//
    ஆனால் ஐயா, கண்முன்னே தலைவிரித்தாடும் த்ராவிடியாக்களைத் தரிசித்த பின்பும் அவர்களை மீண்டும் மீண்டும் அரியணை ஏற்ற எண்ணுவோரை மேற்கண்டவாறு வகைப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை.


    • ஐயன்மீர், அவருடைய வயதைக் குறைத்து மதிப்பிட்டிருந்தேன் – 82 வயது ஆகிறது என்று சொன்னார், பாவம்.

      உங்கள் கருத்து எனக்குப் புரியாமலில்லை – ஆனாலும், இந்த மூத்த வயதில் தங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்பவர்கள் சொற்பம் – ஆகவே, அவர் தனக்கு முடிந்த அளவில் #திராவிடமாடல் பொறுக்கித்தனத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம் எனப் படுகிறது.

      அண்ணாதுரையைத் தவிர (!?) பிற திராவிட லும்பன்களை வசைபாடுபவர்தாம் அவர். ஆகவே அவரை லூஸ்லவுடுகிறேன்; உங்களுக்கும் அப்படியே ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
      நன்றி.

      • தமிழன்'s avatar தமிழன் Says:

        ஐயா, எனது பதில் மேற்கண்ட பெரியவரைக் குறித்து மட்டுமன்று, தெரிந்தே தீயசக்திக்கு துணைபோகும் அனைவருக்குமானது. எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர், தனிப்பட்ட முறையில் மதிக்கதக்க பண்புகளைக் கொண்டவர், வெளிநாடுகளில் பணியாற்றியவர். ஆனால், அவரது கருத்தும் ‘அண்ணாவிற்கு பிறகு திமுக சீரழிந்துவிட்டது’ என்பதாகவே உள்ளது. அப்படியானால், எதிர்த்து வாக்களிப்பாரா என்றால் அது சந்தேகமே. மேலும், பிரதமர் மோதி குறித்த எதிர்மறைப் பார்வையும் அவருக்குண்டு, இவரைப் போன்றவர்களும் திராவிடச் சாய்வைக் கொண்டிருப்பதே கவலையளிப்பதாக உள்ளது.


      • 🙏🏾 😩 🧘🏾‍♂️


Leave a Reply to தமிழன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *