என்காக விமர்சனம்: சாதா எஸ்ராமகிருஷ்ணனும் மைக்ரோஎஸ்ராமகிருஷ்ணனும்

March 10, 2025

ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். 

இம்மாதிரி உதிரி இம்சைகளிடமிருந்து சாதா தமிழ் வாசகனுக்கு விடுதலையே இல்லையா?

இந்த மைக்ரோரைட்டிங் மீதான என்காகபுதுக்கழுதை விமர்சனம்:

ஆளை விடும், இதுவும் கடந்துவிடும்.
ஆனால்
எஸ்ரா ஏகே47னுடன் அலையவில்லையே!
ஜெயமோகன் பட்டாக்கத்தியால் தலையைச் சீவவில்லையே!!
குடிகார சாருநிவேதிதா என் சட்டையில் வாந்தி எடுக்கவில்லையே!!!
அதனால்
பரவாயில்லை கடனெழவே
இதுவும் கடந்துவிடும்

மைக்ரோகுறிப்பு: நான் சொல்லவருவதற்கு முன்பே, மைக்ரோ என்றால் ‘என் காகம்’ என்ற நுண்ணறிதலை நீங்கள் நுணுக்கமாக உணர்ந்து நுனி வரை நுங்கெடுத்துத் தெளிந்திருந்தால், நீங்கள் மைக்ரோபிஸ்தா.

மைக்ரோபாடபேதம்: மைக்ரோ என்றால் ஒலிவாங்கிவரிசை என்பதாகவும் இருக்கலாம் என்ற உண்மையை நீங்கள் ஆல்ரெடி எஸ்ராத்தனமாக என்காக்காஉள்வாங்கியிருந்தால், நீங்கள் ப்ளடி மைக்ரோமுந்திரிக்கொட்டை.

பின்தற்குறிப்பு: மஸானபு ஃபுகோக்கா போல, இனிமேலிருந்து நம் உலகப்புகழ்பெற்ற அலக்கியவாதி, எஸ்ரா என்காக்கா என அழைக்கப்படுவார்.

மைக்ரோநன்றி.

2 Responses to “என்காக விமர்சனம்: சாதா எஸ்ராமகிருஷ்ணனும் மைக்ரோஎஸ்ராமகிருஷ்ணனும்”

  1. Kannan's avatar Kannan Says:

    இது போன்று டி ஆர் நிறைய எழுதிய ஞாபகம் வருகிறது. சாம்பிளுக்கு ஒன்று
    “ஒனக்காக பிரியாணி வச்சேன், எனக்கு புடிக்கில்ல அதுனால வச்சேன்”


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *