“தேடிச் சோறு நிதந் தின்று… … வீழ்வே னென்று நினைத்தாயோ,” திராவிடக்கொடை ஜாதிவெறியால் தாழ்ந்த தமிழ்நாடு – குறிப்புகள்

November 6, 2023

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது.

நம் ‘சமூக நீதி’ புகழ் திராவிடத் தமிழகத்தின் ஜாதிவெறிக் கொலைகளும் குண்டர் அட்டூழியங்களும் தொடரும் ‘சகஜமப்பா’ நிகழ்வுகள் என்பதால், விடியல் இசுடாலிரின் கொள்ளைக்கார-அயோக்கிய ஆட்சியில் இவை அபரிமிதமாகத் தொடர்ந்து நடப்பதும், வெட்கங்கெட்ட ‘போராளி’ ஊடகப்பேடிகளும், திராவிடயூட்யூபர் பொறுக்கிகளும், முதுகெலும்பற்ற அறிவுஜீவிகளும் இவற்றைக் கண்டு கொள்ளாமல் கடப்பதிலும் எனக்குத் துளிக்கூட ஆச்சரியமில்லை.

ஆனால், சிலபல அன்பர்கள் இம்மாதிரி விஷயங்கள் குறித்த செய்திக் குறிப்புகளை வெகு மும்முரமாக எனக்கு அனுப்பிவிடுகிறார்கள், பாவிகள்… இதுதான் ஆச்சரியம்!

இதனால் இவர்கள் என்ன சாதிக்க முயல்கிறார்கள் என்றே தெரியவில்லை – மாறாக என் ரத்த அழுத்தத்தை ஏற்றத்தான் அது என்றால் அவர்கள் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டார்கள் என்பது ப்ளடி உண்மை.

…கீழ்கண்ட செய்தி கிட்டத்தட்ட ஒருவருடம் முன்பு, ஒரு அன்பர் இது குறித்து எழுதுங்கள் எனும் விண்ணப்பத்துடன் அனுப்பியது… 

ஆனால் இம்மாதிரி ஸேம்ஸேம் விஷயங்கள் ஷேம்ஃபுல்லாகப் பல இடங்களிலும்  நம் திராவிடத் திருநாட்டில் நடக்கின்றன என்பதை அறிந்துள்ளவன் என்பதால் சலிப்புடனான சோகத்துடன் இதனை விட்டுவிட்டேன்

(ஒருவருடத்துக்குப் பின்னும் வேங்கைவாசல் பட்டியல்திரளினர் உபயோகிக்கும் நீர்த்தொட்டியில் திராவிடர்களால் பெரியார் ஆசியுடன் மலம் கலக்கப்பட்ட விஷயத்தை – துப்புத் துலக்கவே முடியவில்லையாமே இந்த ‘ஸ்காட்லேண்ட் யார்ட்’ புகழ் தமிழகக் காவல்துறை?

இந்த வெட்கங்கெட்ட தன்மை எனக்குக் கொடுக்கும் இறும்பூது இருக்கிறதே… ப்ளடி பேஸ்கெட்ஸ்…)

சென்ற வாரம் – ‘ஆதிக்க சாதி வன்முறை தர்மபுரி ஆணவக்கொலை’ என்கிற ரீதியில் ஒரு ஸ்னிப்பெட்டை ஒரு அன்பர் தேவை மெனெக்கெட்டு அனுப்பியிருந்தார். (அதென்ன ப்ளடி ஆதிக்கசாதி? பயபீதியில் யார் அவர்கள் எனும் உண்மையைச் சொல்ல மறுக்கும் பேடிகள்!  அன்பரைச் சொல்லவரவில்லை – அந்த கையாலாகாத கோழை ஊடகப் பேடிகளைத்தான் சொல்கிறேன்… அதே சமயம் இந்தப் பேடிகள் ‘தலித்’களுக்குள்ளேயே அதன் உட்பிரிவுகளுக்குள்ளேயே நடக்கும் ஆதிக்கசாதி முழுப்பூசணிக்காய் வெறுப்பியத்தை அப்படியே திராவிடச் சோற்றில் மறைத்து விடுவார்கள்… என் வாழ்க்கையில் நிறையப் பார்த்துவிட்டேன்… இந்த ‘சமூக நீதி’ என்பதே ஒரு பெரும் பம்மாத்து மட்டுமே…

அதென்ன ‘ஆணவம்?’

கயமை திராவிடஜாதிவெறி என்று உண்மையைச் சொன்னால் நாக்கு சுட்டுவிடுமா, ப்ளடி?)

அதனை உடனே டெலீட் செய்துவிட்ட காரணத்தால் அதனைப் பதிப்பிக்க முடியவில்லை என்பதற்கு நீங்கள் மகிழலாம்.

இருந்தாலும் சொல்வேன்: இவை ஆணவக் கொலைகள் அல்ல; வெறும் திராவிடஜாதிவெறிக் கொலைகள்தாம், அவை மட்டுமே தாம்!

திராவிடமாவது சமூக நீதியாவது மசுராவது

கீழே காண்பது ரெண்டு நாட்களுக்கு முன் எழவெடுத்த அன்பர் ஒருவர் செய்த உபகாரம்:

ஆகவே…

BTW: A better and a more screaming & narrative-encashing title/headline would have been: “Newly-wed Backward-Caste couple hacked to Death in Modi’s Brahminical Hindutva India!” – unfortunately this golden chance has been missed out by the semi-literate dravidian hack scum of Tamilnadu.

இது இன்று காலையில் நான் (சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை) பார்க்க நேர்ந்த, தொடரும் திராவிடவெறி அவலம்:

திராவிட ஏகோபித்த ஒற்றை அடிப்படையான ஜாதிவெறியால் காவு வாங்கப்பட்ட சிறுவன் கதை பரிதாபமாக இருந்தாலும் – பத்தாங்க்ளாஸ் படிக்கும் இளவிடலைக்குக் காதல் ஒரு கேடா என்றும் தோன்றுகிறது.

திராவிடத்தின் தூண்களில் ஒன்றான கேவலபாக்கத் திரைப்படங்களில் தண்டக் கருமாந்திர விஜய்களும் சூனியக்கார சூரியாக்களும் அரைகுறைகளின் விடலைக் காதலையும் கட்டிலா கொலைவெறியையும் ‘தமிழர் மாண்பு’களாகச் சித்திரிக்கும்போது, இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

இதைத் தவிர, திராவிட ஊடகப் பேடித் தற்குறிகளின் ‘தற்கொலைகளைத் தூக்கிப் பிடிக்கும்’ அசிங்கம் வேறு – இவர்களுடைய தற்கொலைப் போராளித்தனம், இஸ்லாமிய ஜிஹாதிகளின் கொலைவெறிக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது…

திராவிடப் பொர்க்கீங்க்ளா! நல்லா வெளங்கிடுண்டா வொங்க வெடியல்…

2

…  “ஸார், நீங்க ப்ராமின்ஸா?

அந்த அழகான இளைஞன் என்னைத் தயங்கித் தயங்கிக் கேட்டான். என்னிடம் இருந்து ஒரு பெருமூச்சுதான் உடனடி பதிலாக வந்தது.

இத்தனைக்கும் நானும் ஒரு ஒரிஜினல் அக்மார்க் நயம் திராவிடக் கிருஷ்ணன் தான். இயற்கைக்கு நன்றியுடன் மெலனின் வேண்டிய அளவு தொடர்ந்து சுரந்து, என்னை இந்தச் சுட்டெறிக்கும் சூரியனிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பேச்சும் பொதுவாகவே நம் பழம்பெரும் பாரம்பரியங்களில் ஒன்றான மெட்ராஸ் கொச்சை ‘அடீங்… கொம்மாள...’  பாஷையில்தான். கட்டைகுட்டையாக தாடி நரைத்த மொட்டைத்தலைதான் பெரும்பாலும். கூட பக்கவாத்தியமாக கிழிந்த டீஷர்ட்டும், அதன்மேல் துண்டும், தொடைமயிர் தெரிய டப்பாக்கட்டு வேஷ்டியும், ஒண்ணரைக் கண்ணும்…

போதாக்குறைக்கு எள்ளும்கொள்ளும் சதா வெடித்துக்கொண்டிருக்கும் முகபாவம்…

டேய்,  என்னைப் பார்த்தால் தத்துவ விற்பன்னன், பணிவும் அன்பும் கனிவும் கண்ணியமும் நிரம்பிய ஞானவான், போற்றுதற்குரிய குரு, சமனநிலை மிக்கவன் போலவெல்லாமா  தெரிகிறது? என் வட்டாரத்தில் அப்படி யாருமே இல்லையே! அப்படி யாராவது உங்கள் வட்டாரங்களில் இருக்கிறார்களா என்ன??  ங்கொம்மாள…  ஞானசூனியன்களா, நான் வெறும் கிருட்டிணச் சாமான் இருக்கும் சாமானியன் தான். குட்டிச்சுவரான குட்டிச் சின்னிக் கறுப்பன்தான்; அதுவும் – புதுப்பெரும்பொலிவும் நீட்டமும் – ஆகவே  பொழுதன்னிக்கும் தமிழ்ப்படச் சதைநாயகிகளின் முலைகளையும் துடைகளையும் புட்டங்களையும் பார்த்து எழுச்சி பெற்று ஆனால் கைகூடாக் காரியத்தால் இதயம் இனிக்காமல் கண்கள் மட்டும் பனித்து வாட்டம் கொண்ட பராக்கிரமம் மிக்க திராவிடச் சாமானியன்.

நான் அக்மார்க் திராவிடத் தமிழன். அறச்சீற்றத்துடன் அபரிமிதமாகப் பேசிக்கொண்டே மற்றவர்கள் கொட்டையை கமுக்கமாக நசுக்கிக்கொண்டிருக்கும் பின்நவீனத்துவ சமூக நீதிக்காரன், ஆகவே ஆண்குறிக்கோள் குவியப்பார்வை மிக்கவன் – இதனைச் சாராதவைகள் எனக்குத் துச்சம்.

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க!

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

இரண்டா?? அய்யய்யோ! என்னை ஏமாற்றி விட்டனரே, பாவிகள் – என் திராவிட மூதாதைகள்! எனக்கு ஒன்றேஒன்றுதானே இருக்கிறது. :-(

அல்லது பாலன்தேவராயன் கொட்டைகளைக் குறியுடன் சேர்த்துக் குழம்பிவிட்டாரோ? எப்படியும் – திராவிடக் குறியீடுகளின் மகாமகோ பெரும்பாட்டனாரான, திராவிடப் பண்பாட்டின், அதன் அதிகாரக் குவியத்தின் ஊற்றுக் கண்ணான ஆண்குறிமுதல்வாதத்தை (=ப்ரிக்கிஸ்ம்) எப்படி இந்த பாலன் கூட்டிக்கொடுக்க முடியும்? சொல்லுங்கள். இந்த தேவராயன் என்பவன் ஆரிய நச்சுப்பாம்போ?

பச்சைத் திராவிடனுடையது தான் உலகத்திலேயே நீளமானது அல்லவா? உலகின் முதல் குறியீடு திராவிடப் பெருங்குறியீடுதானே?

கூனிஃபொர்ம் (இதனை ராமாயணக் கூனியின் முதுகுவளைந்த சித்திரத்தைப் பொருத்தி திராவிட அரைகுறைதனத்துடன் புரிந்துகொள்ளவேண்டாம்! கூனி + ஃபார்ம்) எனும் விடைத்து நிற்கும் ஆண்குறியீட்டுக் குச்சியெழுத்துகள் தானே முதலில் வந்த எழுத்துருக்கள் – பின் வந்தவைதானே யோனிக்குறியீடுகளான வட்டெழுத்துகள், ஹ்ஹ!  இதனை மறுதலிக்கவும் முடியுமோ?  பெண் நாசமாப் போகட்டும்.

மன்னிக்கவும். இதுவும் திராவிடக் கொள்கைதான். இதுகூடத் தெரியாதா உங்களுக்கு? திராவிடன் இருக்கிறான் – ஆனால் திராவிடச்சிகள் என்று திராவிடத்தைக் கண்டுபிடித்த அந்த கால்ட்வெல்லோ அபே துப்வா போன்றவர்களோகூட  எங்குமே குறிப்பிடவில்லையே! ஆண்கள் தான் திராவிடர்கள். பெண்கள்? அவர்கள் வெறும்  பெண்கள்தாம்.

பல திராவிட ஆண்ணியக் காரர்கள் மனதாற நம்பி, ஆனால் பகிரங்கமாக வெளியில் சொல்லாததைப் போல பெண் = முலை + துடை + புட்டம் + யோனி + வீட்டுவேலை. லூஸ்ல விடுங்க.

சரி அய்யா. நான் ஆரியப் பழங்கஞ்சி அல்லன். உங்களிடம் இருப்பது ராங் அட்ரெஸ். இன்று, ஈது வேறு கிழவன். ஞானக்கூத்தனல்லன். போங்கடா!

ஹ்ம்ம்ம்… இருந்தாலும் என்னைப் பல சமயங்களில், நம் தங்கத் தமிழ் நாட்டில், சமதர்மப்பூங்காவில், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களெல்லாம் கூட இப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

 “ஸார், நீங்க ப்ராமின்ஸா?”

வடக்கிலாவது –  ‘நீ மதறாசியா’ என்பதோடு விட்டுவிடுவார்கள், என்  செல்ல தக்கணி ஹிந்திக் கொச்சையைக்கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டு, பாவம் அவர்கள்… கைகோ ரே ஸாலே, க்யா ஹுவாரே லவண்டே, பம்பூ லகா தூங்கா மாதர் சோத்…

3

 “ஸார், நீங்க ப்ராமின்ஸா?”

இம்மாதிரி கேள்விகளில் எப்போதுமே பன்மை தான் – பேருந்து நடத்துநர்கள் ஒரே ஒரு பெண் ஏறினாலும்,  ‘யோவ்! லேடீஸ்க்கு இடம் கொடு!!‘ என்று சொல்வது போன்ற பன்மை. பன்மை = மரியாதை என்கிற வழமையோ என்ன இழவோ  அல்லது எதிலும் ஜாதி எங்கும் சதி  என்று அலையும் வெறியோ!

எப்படித்தான் இதனைக் கஷ்டமே படாமல் ‘அசால்ட்டாகக்’ கண்டுபிடிக்கிறார்களோ(!) நம் மறத்தமிழர்கள் என்று நான் நினைக்காத நாளில்லை.

இது எனக்கு மாளா ஆச்சரியம் தருவது; சுமார் 35-40 வருடங்களுக்கு முன் எவ்வளவோ தமிழகப் பகுதிக் கிராமங்களில் சுற்றியிருக்கிறேன். எவ்வளவோ திண்ணைகளிலும் பஸ் ஸ்டாண்டுகளிலும் தூங்கியிருக்கிறேன்; இவற்றில் ஒரு முக்கியமான  (+ பிடியே படாத) விஷயம் நான் கற்றுக் கொண்டது: ஒரு வார்த்தை பேச வேண்டாம்; ஒரு சில வினாடிகளில், நம் தமிழர்கள் ஜாதியைக் கண்டு பிடித்துவிடுவார்கள்… அப்போதே அம்மாதிரி இருந்த நமக்கு இப்போது பன்மடங்கு வீரியம் அதிகரித்திருக்கிறதுதான்! #திராவிடமாடல் எழவுக்கு நன்றி!

எது எப்படியோ…

…மகாமகோ கார்ல் மார்க்ஸ் 1853லேயே தன்னுடைய கட்டுரை ஒன்றில் சொல்லாதது போல –

 “தோழர்களே! திராவிடனின் ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னால் ஜாதிவெறியப் பார்வை ஓளிந்திருக்கிறது”

(ஆதாரம்: கார்ல் மார்க்ஸ் கட்டுரை)

… என்பது உண்மையோ?

ஹ்ம்ம்… எது எப்படியோ, என் முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தையோ பெருமித அசட்டையையோ அல்லது அழுக்குச் சட்டையையோ கண்டுகொண்டு இப்படி பளிச்சென்று உலகத்துக்கே வாழ்வாதாரமான விஷயத்தை நொடியில் கண்டுகொள்கிறார்கள் – அல்லது  இடியாப்பச் சிக்கலை அவிழ்த்துவிடுகிறார்கள். ஆழிசூழ் உலகே ஸ்தம்பித்து விடுகிறது.

பல பத்து வருடங்கள் முன்னரெல்லாம் – பொதுவாக (பெரும்பாலும் திராவிட முயக்க அரைகுறைக் குஞ்சாமணிகளால்) இப்படிக் கேட்கப்பட்டவுடன் நான் முகத்தைச் சுளித்துக் கொண்டு –  ‘அது உங்களுக்கு ரொம்ப முக்கியமா? உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்??’ எனப் பதில் கேள்வி ஒன்றைச் சுர்ரென்று கேட்டு அவர்கள் வாயை அடைத்துவிடுவேன் – இதெல்லாம் என் இளம் வயதில்.

ஆனால், மிகவும் வருத்தம்  தரக்கூடியதாக  – இப்போதெல்லாம்  நான் அப்படியில்லை; மேலும் — நீங்க முதலியார்ஸா /  நாடார்ஸா / பிள்ளைஸா / கவுண்டர்ஸா / தேவர்ஸா /  நாய்டூஸா / இன்னபிறஸா… என்றெல்லாம் நம் திராவிட சமத்துவபுரங்களில் (அதாவது அசட்டுவபுரங்களில்) கேட்கப் படுவதை கவனிக்க ஆரம்பித்ததும்  – இந்தச் சலிக்கவைக்கும் கேள்வியை இன்னொரு பின்புலத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.

அதாவது – இப்படி ஒரு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சலிக்கவைக்கும் கேள்வியைக் கேட்பவர்களால் — ஏதாவது உரையாடல் திறப்பிற்காக ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பின்னர் தொடர்ந்து பேசுவதற்கான முஸ்தீபாகவும், ஒரு ஆபத்தில்லாத, ஜாதி அசூயையற்ற, ஜாதிவெறியற்ற கேள்வியாகத் தான் இக்கேள்விகள் அப்பாவித்தனமாகக் கேட்கப் படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள, சமன நிலையில் அவற்றை அணுக, எனக்குப் பலவாண்டுகள் பிடித்தன.

(ஆனால், ‘டேய், நீ பாப்பானா?’ வகையறா கேள்விகள் நிச்சயம் ஜாதிவெறிக் கேள்விகள் தான் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை; இப்படி நான் பலமுறை விளிக்கப்பட்டிருக்கிறேன் – சில திராவிட இயக்க அரைகுறைக் குளுவான்களுடன் சுவாரசியமான தள்ளுமுள்ளுகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இதெல்லாம் வேறு கதை; இன்னொருசமயம் பார்க்கலாம்!)

… அன்றும் அப்படித்தான்.

அந்த இளைஞனின் கேள்விக்குப் பதிலாகச் சிரித்துக் கொண்டு, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்போ நீங்களும் தமிழரா?’ எனப் பதில் கேள்வி கேட்டு, கர்வம் பிடித்த சுயமோகியான என்னுடன் பேச எத்தனிக்கும் பாவப்பட்ட மற்றவர்களுக்கு, சங்கோஜமும் படபடப்பும் தரும் முதலறிமுக நிமிடங்களைக் கடந்து – பின்னர் உரையாட ஆரம்பித்தோம்.  (அதாவது பெரும்பாலும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்)

-0-0-0-

சுமார் இருபது வருடங்கட்கு முன்வரை நாங்கள் பெங்களூரின் வடகிழக்குப் பகுதியில், (அப்போது) அமைதியான குடியிருப்பு ஒன்றில் வசித்துக் கொண்டிருந்தோம்.

அழகான, சுத்தமான தெருக்கள்; இருமருங்கிலும் மாபெரும் ஆஃப்ரிகன் ட்யுலிப் மரங்களும், ஆஹாவென்று எழுந்து நிற்கும் தூங்குமூஞ்சி மரங்களும். சாலை விளிம்புகளில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ரோஜாக்களும் செம்பருத்திப் பூக்களும் – இவற்றினூடே, அந்தக் காலத்து தூர்தர்ஷனில் பிஎஸ் சசிரேகா அவர்கள் (இவர் எங்கேயிருக்கிறார்? தொடர்ந்து பாடுகிறாரா??) வெகு சுலபமாக, உச்ச்ச்ச்ச்சஸ்தாயியில் பாடிய ‘காக்கைச் சிறகினிலே…’ மூளையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும், சிலசமயம் கேஜே யேசுதாஸின்  ‘ஏழாவது மனிதன்’ படத்து அதே பாட்டும்.

ஜில்லிப்பு மிகுந்த, பட்சிஜாலம் சூழ்ந்த மார்கழிப் பனிக்காலக் காலை நடைகள் மிக அழகானவை. என் அம்மாவும் கூட வருவார் சில சமயங்களில். அழ வள்ளியப்பா, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை, ரசிகமணி டிகேசி, பாரதி, பசவண்ணா, அக்கம்மா, பைரப்பா (பர்வா!) என்று சுழித்தோடிக்கொண்டோடும் பேச்சு.

பல நாட்கள், என் 1-2 வயது மகனையும் தோளின்மேல் தூக்கிக் கொண்டு செல்வேன். அவன் அப்போதிலிருந்தே, வேறெந்த குழந்தையையும் போலவே, ஒரு கேள்வி ஞானி. அவன் பேச (=கேள்வி) ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் திக்கித் திணறி விடுவேன். சாலையோரச் செடிகளின் தாவரவியல் இரட்டைப் பெயர்களையும் (’ஸொலேனம் ஸுரட்டென்ஸ்’ – கூடவே தமிழில் கண்டங்கத்திரி)…

… சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். பின் அவைகளில் எது எதற்கு உதவிகரமானது என்ன சத்துகள் இருக்கின்றன என்றும்… இவனுக்குப் பயந்தே, போகிற  ‘ரூட்’டில் இருக்கிற செடிகொடிமரங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமேனும், முன்னதாகவே தெரிந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தேன்.

… சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் கார்களின் பெயரும் – ஒரே அப்பா, அத்தோ பாரூ, அப்பா இத்தோ பாரூதான்.  அதேபோல ‘அந்த வண்டிக்குப் பின்னால் டிஃபரென்ஷியல் இல்லை, ஏன்?’  முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழில் தெளிவாகப் பேசக்கூடியவனாகவும் இருந்தான் அவன். வீட்டில் மேஜை நாற்காலிதான் – டேபிளோ சேரோ இல்லவேயில்லை. (எல்லா குழந்தைகளும் அடிப்படையில் ஞானிகளாகவே இருக்கிறார்கள் – ஆனால், அவர்களில் பெரும்பாலோர், நம்மைப் போன்ற சராசரிப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு அநியாயமாக மத்யமர்களாகவும் அதமர்களாகவும் உருவெடுத்து விடுகிறார்கள். இதுதான் நம் சமகாலங்களின் மகத்தான சோகம்)

ஆச்சரியத்தையும் அயர்வையும் ஒருங்கே அளிக்கும் அக்கணங்கள்… சில சமயம் சாலையோர ரோட்ரோலர் மேல் உட்காரவைத்தால் கொஞ்ச நேரம் மானசீக சாலை போட்டுக் கொண்டிருப்பான். நானும் இம்மாதிரி கேள்விகளற்ற இடைவெளிகளில் கண்ணை மூடிக் கொண்டு எதையாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அன்று அலுவலகத்தில் என்ன செய்யலாம் எனும் திட்டக் கணக்குகளும் ஒடிக் கொண்டிருக்கும். (ஆம். எனக்கும் அந்தக் காலத்தில், தொழில்முனைவுகள், அலுவலகம், வேலை போன்றவையெல்லாம் இருந்தன. ஆனால், அலுவலகத்தில் பாவம், அவர்களுக்கு என்னுடன் அனுசரித்துப் போகவேண்டிய, என் தாளங்களுக்கு ஆடவேண்டிய தலைவிதி!)

… இம்மாதிரி ஒரு காலைவேளையில்தான், என் மகன் ரோட் ரோலரை ஓட்டிக் கொண்டிருந்தபோது அந்தப் பையன் பேசவந்தான்.

(பயப்படாதீர்கள்! அடுத்த ஓரிரு பாகங்களோடு, இந்த கதா காலட்சேபம் முடிந்து விடும் என நினைக்கிறேன்; கவலை வேண்டேல்!)

4 Responses to ““தேடிச் சோறு நிதந் தின்று… … வீழ்வே னென்று நினைத்தாயோ,” திராவிடக்கொடை ஜாதிவெறியால் தாழ்ந்த தமிழ்நாடு – குறிப்புகள்”

  1. Anonymouse's avatar Anonymouse Says:

    அவர் நமக்கு சொல்ல போவதில்லை, சுஜாதாவின் மெக்சிகன் சலவைக்காரி நகைச்சுவை போல.


    • This is that Sujatha’s ‘Mexico desaththu salavaikkaari joke:’

      A passerby to a Mexican town wants to know the time. He finds a washerwoman sitting and washing clothes while her donkey is in front of her. He asks her the time. She lifts the donkey’s tail, looks under and says “It’s one ‘o’ clock señor”. The passerby is surprised and flustered that she did that. He leaves anyway. After a while he comes back and sees the same woman in the same place with the same donkey. This time he wants to test her even though he knows what time it is. He asks her again what the time is and she again lifts up the donkey’s tail, looks under and says “It’s 3 o clock señor”, which btw was in fact the correct time.

      The man couldn’t contain his curiosity and asks her, how could she tell the time by looking at the donkey’s balls. The lady replies “Balls, what balls? I lifted the tail to have a clear view of the town clock tower”.

  2. Muthukumar's avatar Muthukumar Says:

  3. dagalti's avatar dagalti Says:

    ஐயா, கண்டபெருண்ட பறவையூர்க்காரரே, அது:

    ஆண்பெண் குறிகள் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க


Leave a Reply to Anonymouse Cancel reply

Your email address will not be published. Required fields are marked *