ரிச்சர்ட் ஹாம்மிங்: நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும்
January 2, 2023
ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் ‘மறுவாசிப்பு’ செய்யும் நற்கட்டுரைகள், நனிபுத்தகங்கள் என, பலப்பல இருக்கின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்று, மஹாமஹோரிச்சர்ட் ஹாம்மிங் அவர்களின் கட்டுரை. (இதைப் பற்றிப் பின்னர்)
அவருடைய கீழ்கண்ட இரு புத்தகங்களும் மேற்குறிப்பிடப்பட்ட ஜாபிதாவில் உள்ளடக்கம்.
ஒவ்வொரு பக்கத்தையும் மறுபடியும் படிக்க மாட்டேனென்றாலும், முழுவதுமாகப் புரட்டிப் பார்ப்பேன். இன்ப லாகிரி, வேறென்ன சொல்ல.
வாழ்க்கையில் பலப்பல விஷயங்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் தேவைதான்.
-0-0-0-0-
ஏன் மகத்தான புத்தகங்களை, முடிந்தபோதெல்லாம் மறுபடியும் மறுவாசிப்புகளைச் செய்தபடி இருக்கவேண்டும்?
ஏனெனில், மறுபடியும், மீண்டும் அதே (பல அடுக்குகளில் ஞானத்தை உட்கொண்டிருக்கும்) வரிகளைப் படித்தால், எனக்கு (=நமக்கும்) புதிதுபுதிதாக (நம் முந்தைய வருட அனுபவங்களின் அசைபோடுதல் வழியாகவும்) கிடைக்கும் திறப்புகள், அவை கொடுக்கும் விகசிப்புகள், அற்புதங்கள் போன்றவை அழகானவை. நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் அடையவேண்டும் எனத் தூண்டி நம்மை ஆக்கபூர்வமாக செயற்பட வைப்பவை.
(மேலும். சான்றோர்கள் இப்புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதச் செலவழித்துக் கொண்டிருக்கும் நேரத்துக்கு நாம் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையும் இதுதான் என நினைக்கிறேன்)
சரி.
மகத்தான பால் க்ரஹம் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை முழுவதுமாக இருக்கிறது. இதே கட்டுரையை இன்னொரு எழுத்துரு, கட்டமைப்பில் படிக்கவேண்டுமென்றால் ஸாம் ஆல்ட்மன் பக்கம் சரணடையவும். இவ்விருவரையும் நான் மிகவாக மதிக்கிறேன் கூட.
இக்கட்டுரையில் உள்ள பலப்பல விஷயங்களை ஒருமாதிரி ‘டெம்ப்லேட்’ போல வைத்துக்கொண்டு, நான் சென்றுள்ள சிலபல ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களிலும் என் நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன். இவை கொடுத்த மேலதிகத் திறப்புகளும் அடிப்படைப் புரிதல்களும் அலாதியானவை.
ஏன் ஸோஷியல் ஸைன்ஸ் என டகால்ட்டித்தனமாக அழைக்கப்படும் சமூகக் கதையாடல்/வம்பளப்பு ஜோடனைப் புரட்சிகரத் துறைகள் சார்ந்த சில பல பம்மாத்துப் பேராசிரியர்களுடனும் கூறுகெட்ட ஆர்வலர்களுடனும் கூட விவாதங்களைச் செய்ய முயன்றிருக்கிறேன்.
அவர்களும் பாவம், நானும் பாவம் – நம் பாரதமும் பாவம். வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.
சரி.
நம் ஏழரைகளில் சிலபலருக்கு அறிவியல்/தொழில் நுட்பம் எல்லாம் பிடிபடாதவை என்பதையும் அறிவேன். இருந்தாலும் இவை அவர்களுக்கும் உதவலாம் என நினைக்கிறேன்.
ஆகவே… முடிந்தவர்களெல்லாம், சிரமம் பார்க்காமல் படியுங்கள், உங்கள் கருத்துகளை (முனைப்பு இருந்தால்) பகிருங்கள்; ஏனெனில், நம் தமிழகத்தில் ஆராய்ச்சி, ஆழ்ந்த படிப்பு, அறிவார்ந்த ஈடுபாடுகள் எல்லாம் அவல நிலையில் இருக்கின்றன (‘தமிழ்’ குறித்த உரையாடல்கள் உட்பட) என்பதை நாமெல்லாம் அறிந்துள்ளவர்கள்தாம் அல்லவா? :-(
-0-0-0-0-0-
(எப்போதாவது (ஆனால் அவசியமாக), இந்த முக்கியமான கட்டுரை குறித்த அசைபோடல்களைத் தமிழில் எழுதிப் பகிரவேண்டும் எனக் குறித்துக் கொள்கிறேன்; பார்க்கலாம்.)
January 3, 2023 at 12:04
Ram, Thanks for this blog post. I am being fully absorbed into this piece of writing(or talk)given in the link, within the context of of my current thinking process. Given the standard of my language skills and intensity of doing things, it may take a few days or weeks to complete it. Shall write again about it, once complete the reading and processing of it. Thanks!
January 3, 2023 at 14:14
Please do let me know, your reflections on the essay – as and when…
January 4, 2023 at 07:03
Thanks for the link :)
January 15, 2023 at 22:52
மிக்க நன்றி ஐயா, அறிவியல்/ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரும் இக்கட்டுரையைப் படித்தால் நலம்.
//Luck favors the prepared mind//
நூறு சதம் உண்மை ஐயா, துரதிர்ஷ்டவசமாக பெரும்பான்மைத் தமிழர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதன் அவசியத்தை உணர்வதில்லை, அல்லது மிகத் தாமதமாகவே உணர்கிறோம் (வாக்குமூலம்). பருவத்திற்கேற்ற பயிற்சியின்றி, திறன் மேம்பாட்டின் அவசியத்தை உணராமலேயே முனைவர் பட்டம்வரை ‘வாங்குவது’ (தீராவிடத்திற்கு நன்றி) இங்கே சாத்தியம், தப்பிக் கரைசேர்வோர் மிகச்சிலரே. அவ்வாறு கரைசேர்ந்தோரைக் கயவர்களாக வரித்துக்கொண்டு கரித்துகொட்டுதற்கான பயிற்சி மட்டுமே அறியாமையில் திளைக்கும் பெருந்திரளுக்கு ஏகோபித்து வழங்கப்படுகிறது (தீராவிட மாடல்), விளைவாகத் தரம் தரைமட்டமாகவே நீடிக்கிறது.
//John was a genius and I clearly was not. Well I went storming into Bode’s office and said, “How can anybody my age know as much as John Tukey does?” He leaned back in his chair, put his hands behind his head, grinned slightly, and said, “You would be surprised Hamming, how much you would know if you worked as hard as he did that many years.” I simply slunk out of the office!//
ஹேம்மிங் அதிர்ஷ்டசாலிதான், இதுபோன்றதோர் அனுபவம் என்னைப் போன்ற சராசரித் தமிழர்களுக்கு வாய்ப்பதரிது, அப்படியே வாய்த்தாலும் அங்கே பலியாடாகக் கதறி கடைத்தேற்ற வழிகாட்டுவோரைக் கசாப்புகாரராகச் சிந்தரிப்பதே நடக்கும்.
//Given two people with exactly the same ability, the one person who manages day in and day out to get in one more hour of thinking will be tremendously more productive over a lifetime.//
நம்மவர்கள் இதை அதிர்ஷ்டம்/சாதீயம் என்றே குறிப்பிடுவர் (© திராவிடியா உருட்டுத் திரட்டு).
//The people who do great work with less ability but who are committed to it, get more done that those who have great skill and dabble in it//
உழைப்போ திறனோ அர்ப்பணிப்போ ஏதுமின்றி குறுக்கு வழியில் குபேரனாக விழையும் நபும்சகர்களை நினைத்திட்டால்…
//Another fault is anger. Often a scientist becomes angry, and this is no way to handle things. Amusement, yes, anger, no. Anger is misdirected. You should follow and cooperate rather than struggle against the system all the time.//
நெடுந்தூரம் பயணிக்க அவசியமான காரணிகளில் ஒன்று (இன்றளவும் முழுமையாகக் கடைபிடிக்க முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்).
இன்னும் எண்ணற்ற திறப்புகளை உள்ளடக்கிய மிகச்சிறந்த உரை, காலம்கடந்து கிடைக்கப்பெற்றாலும் கிடைத்ததில் மகிழ்ச்சி, பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி ஐயா!
January 16, 2023 at 16:42
கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ‘தமிழன்’ அவர்களே!
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – நம்மளவில் சிறு குழுக்களாக (சேர்ந்தும் பிரிந்தும்) பணி செய்ய முடிந்தால், சில தொழில் நுட்ப விஷயங்களில் நல்ல, மரியாதைக்குரிய உச்சங்களை எட்டலாம்.
(ஆரம்பிக்கும்போது தன்னார்வம் காரணமாகத் தான் இருக்கும்; கடினமான உழைப்பையும் கொடுக்கவேண்டும், பிரதிபலனையும் எதிர்பார்க்க முடியாது – தனிப்பட்ட முறை பிரச்சினைகள், சிடுக்கல்கள் என ஆயிரம் இருக்கலாம், ஆனால் பிற்பாடு, மூலதன உழைப்பையும் அனுபவத்தையும் (இந்த ஐடியா இல்லாவிட்டால், அந்த ஐடியா என விரிந்து) பணரீதி மூலதனமாகவும் மாற்றமுடியும் எனவும் தோன்றுகிறது, பார்க்கலாம்…
மனிதனாகப் பிறந்ததற்கு ஏதாவது உருப்படியாகச் செய்தேயாகவேண்டும் அல்லவா?)
January 16, 2023 at 22:45
//மனிதனாகப் பிறந்ததற்கு ஏதாவது உருப்படியாகச் செய்தேயாகவேண்டும் அல்லவா?//
சர்வநிச்சயமாக ஐயா🙏
January 17, 2023 at 10:54
January 17, 2023 at 18:04
[…] is also this young gent ‘Tamizhan’ who has shared his views & comments on Richard Hamming. Thanks to him […]