எம் பெரும்பேராசான் ஜெயமோகன், இனி தெகிரியமாகவும், வாழ்நாள் பெருஞ்சாதனையைச் சாதித்து அடித்து நிமிர்த்திவிட்ட பெருமகிழ்ச்சியுடனும் ரிட்டையர் ஆகலாம்

November 19, 2021

ப்ளீஸ்!

வாசகன் பேராசானுக்கு ஆற்றும்உதவி இவன்ஆசான்
என்னோற்றான் கொல்எனும் சொல்
(அதிகாரம்:சீடன்பேறு; பால்: அறம் (இது முக்கியம், கேட்டோ?); குறள்:70)

மேற்கண்ட தெருக்குரலில், ‘கொல்எனும்’ என்பதை, இரக்கமின்றிக் கொல்வதுடன் குழப்பிக் கொள்ளவேண்டாம் – தற்காலத் தமிழ் அலக்கியம் என்றாலே படுகொலை என்பது நமக்கு நன்றாகவே தெரிந்தாலும்…

மேலும்.

மாறாக.

ஏனெனில்.

… நேற்று அடைமழையில் இன்று முளைத்த காளான்களாகவும், ‘ஈசல், வசைபட வாழ்தல்’ எனும் மூதுரைக்கு ஏற்ப, ஈசானிய மூலையிலிருந்து கிளம்பிய புற்றீசல் கூட்டம்போலவும் – அவரை உள்வாங்கி ஒற்றியெடுத்து – செயற்கையான நெகிழ்வாலஜியும், நைந்த சொற்றொடர்களுடனும், தேவையற்ற இறும்பூது வர்ணனைகளும் கலந்துகட்டி, சொற்சிக்கனமும் கோடிகாட்டிவிட்டுச் செல்வதும் துளிக்கூட இல்லாமல் மாறாக நீட்டிமுழக்கிப் பொழிப்புரை எழுதி நமக்கு இன்பலாகிரிக் கிறக்கம் தரும்படிக்கு நூட்ல்ஸ் சிடுக்கி,  சுற்றிச்சுற்றித் தட்டாமாலை தட்டி எழுதும் பலர் – பேராசானுடைய சிஷ்யகேடிகள், காக்காபாடினிகள், ஏகலைவர்கள்-ஏகலைவிகள் அவர்வர் குறுவாசகக் கூட்டங்களுடன் பெருமலக்கிய பூதங்களாகப் பேருறுக்  கொண்டு பூமியைப் பிளந்துதித்துச் செம்புழுதியினூடே வீறிட்டெழுந்து கிளம்பி விட்டார்கள்.

அவர்களுக்கு அன்றிப் பிறிதொன்றில்லாத ஆகச்சிறந்த எழுத்துக்களை, புறக்கணிக்கலாகா களையோகலை, கோலாகலமாகக் கைகூடிவிட்டது.

அதுமட்மல்ல… அவர்களுக்கு போஸ்ட்-மாடனிஸமும் தம்வசம் வந்து, சாட்சாத் மோட்சம் கிட்டிவிட்டது…

ஒருமாதிரிக்கு:

நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான் நதிக்குள் இழுபட்டேன். கால்களை நதியின் தரையில் உந்தி எழுந்தபோது எதிரில் தைப்பூச மண்டபம் தெரிந்து மறைந்தது. அதுகூட முழுக்கவுமே சந்தன நிறத்தைக் கொண்டது. மீண்டும் நீருக்குள் இழுபட்டிருந்தேன். அமலை போன்ற செடிகளும், மனிதர்களின் விசை கொண்ட கால்களும் தெரிந்தன. அவர்கள் நீந்துகிறார்கள். தேசலாய் கரையோரம் நின்றிருந்த மாடனும் தெரிந்தார். அந்த மாடனுக்கு என்னுடைய அப்பாவின் சாயல் இருந்ததை இத்தனை வருடங்களுக்குப் பிறகு  இப்போது தான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மாடன் தண்ணீருக்குள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார். மாடன் மறைந்து அப்பா மட்டுமே அங்கிருந்தார். பிறகு ஆனதை விழித்தபிறகு கோர்க்க முடியவில்லை. இவையுமே கூட கனவின் எச்சங்கள் தான். முழுமையல்ல.. முழுமையானதல்ல என்பதே கனவுகள். அந்த படித்துறையில் தான் அப்பா எனக்கு முதன்முதலாக நீச்சல் கற்றுத் தந்திருந்தார்…

மேற்கண்டது ஒரு சிறு, போஸ்ட்-மாடன் முத்தாய்ப்புப் பத்திதான்; நீங்கள் முழுவதும் பத்திஎரிய வேண்டுமென்றால்… ஓராயிரம் பார்வை.. ஜா.தீபா

!

ஒப்புக் கொள்கிறேன்.

தமிழ் அலக்கியத்தின் வரலாற்றுக் காலம் சங்கம் மானபங்கம் எனவெல்லாம் பிரிக்கப் படவேண்டாம். மாறாக – இனிமேலிருந்து அது ஜெமு ஜெபி  எனப் பிரித்துப் புரிந்துகொள்ளப் படவேண்டும்

பெரும்பேராசானே! நும் அருள் பொங்கி வழிந்து பிரவாஹித்து, அதாவது உங்கள் நடை/மோஸ்தர் எலக்கணப் பிழைகள் உட்படக் காப்பியடிக்கப் பட்டு, சந்துபொந்தெல்லாம் அலக்கியப் பிசாசுகள் ‘நாங்கள் வந்துவிட்டோம்’ எனப் பறையறிவித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மகிழ்ச்சிகரமான, உங்களுக்கும் திருப்தி தரும் தருணத்தில்…

இன்னொரு, ஆனால் பழம்பெருமையும் பராக்கிரமும் வாய்ந்த வாசகப் பெரும்பூதப்ரேதமான அடியேனின் கோரிக்கையை தயை செய்து பரிசீலிக்கவும்.

தமிழலக்கியத்துக்கு உங்களிடமிருந்து பணிமூப்பு உண்டா?

:-(

6 Responses to “எம் பெரும்பேராசான் ஜெயமோகன், இனி தெகிரியமாகவும், வாழ்நாள் பெருஞ்சாதனையைச் சாதித்து அடித்து நிமிர்த்திவிட்ட பெருமகிழ்ச்சியுடனும் ரிட்டையர் ஆகலாம்”

  1. Kannan's avatar Kannan Says:

    சில சிஷ்யர்கள் முறுக்குவதும் பிழிவதும் இன்னும் தரமாக இல்லை.

    ஆசான் “மோகனார் நோட்ஸ்” கொண்டு வந்து அவர்களை கடைத்தேற்றவேண்டும்.

    • Ramesh Narayanan's avatar Ramesh Narayanan Says:

      சுரா-ஜெமோ குரு-சிஷ்யப் பொருத்தம் ப்ரமாதம்,
      ஜெமோ-கசீ,இத்யாதி ஆசான்-சீடர்கள் பொருத்தம், பேஷ், பேஷ், ரொம்ப நன்னாப் பிழியறாளே


    • What is this bleddy Shoptheorem, man?

      • Kannan's avatar Kannan Says:

        சிஷ்யர்களுக்கு மடத்தில் ஒரு “நீட்டி” தேர்வு வைத்தால் இன்னும் பல பேருக்கு உபயோகமா இருக்கும்.

        மாதிரி வினா ஒன்று:

        “ராமு கடைக்குப் போனான்” என்பதை நாலு பக்கத்துக்கு குறைமால் எவனுக்கும் புரியாமல் தமிழில் எழுதவும்.

        கடைசி வரி மட்டும் “ஆம் நண்பர்களே,” என்று எதையாவது எழுதி முடிக்கவும்.


  2. நீர் தானே சொன்னீர் (sic): ‘ஒரு ஆசிரியரின் நடையை போன்மை செய்துகாட்டுவது, குறைந்தபட்ச வாசிப்பு தேர்ச்சிக்கு சான்று’ என்று.

    சிற்றெல்லையை மட்டும் சொல்லிவிட்டு, பேரெல்லையை வகுக்காமல் விட்டுவிட்டீர்.

    அகந்தையின்றி ஆசிரியரின் ஆகர்ஷணத்துக்கு ஆட்பட்டவர்களை இடித்துரைத்தல் முறையோ?

    எப்போதும் துருத்திக்கொண்டு நிற்கும் பிரக்ஞையின் இடையீட்டால் எதிலும் ஆழமுடியாது உழல்வோர்க்கு பூரணமான வாஸகாநுபவம் ஸித்தித்தோரைக் காணும்போது கடுக்கத்தான் செய்யும்.

    திராவிட தர்க்க சாஸ்திர ஆப்த வாக்யமான: ‘கதறு கதறு’ வை தங்கள் மீது பாவிக்கிறேன்.

    அதற்கு உபாயம் இதுவே: எஸ்ராமு-எஸ்ராபி என்று ஆகியிருக்கக்கூடிய வரலாற்று அசந்தர்ப்பம் இங்ஙனம் தவிர்க்கப்பட்டிருப்பதை எண்ணி பேராசுவாசம் அடைக.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *