ஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்

January 15, 2019

தரம்வாய்ந்த புவியியலாளரான பேராசிரியர் எஸ் எம் அலி அவர்களின் இந்த அழகான புத்தகம்/மொனொக்ராஃப் 1966ல் தில்லியில் வெளியிடப்பட்டது. A fine work of scholarship that a thirsting Bharatiya cannot do without.

சுமார் முப்பது வருடங்கள் முன் நான் மிகவும் மதிக்கும் (மதித்த) பெரியவர் ஒருவரிடம் (இப்போதும் இம்மாதிரிப் பெரியவர்கள், கருத்துலக ஜாம்பவான்கள், சான்றோர்கள், குருமார்கள் பாரதத்தில் நிறையபேர் இருக்கவேண்டும்; ஆனால், எனக்குத்தான் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு ஊடாட லபிக்கவில்லை, சிஷ்யனாக விகாசம் பெற ஒத்துவரவில்லை, என்ன செய்வது!)  – ப்லான்ட்ஸ் ஆஃப் த பைபிள் (Plants of the Bible by Moldenke & Moldenke)  போல ஏன் நம்மால் நம் புராண/இதிஹாஸங்களை வைத்து ஆய்ந்து இதனை  இம்மாதிரி தாவரவியல், கணிதம், விலங்கியல், இயற்பியல் உள்ளிட்ட பலப்பல துறைகள் இன்னபிற பற்றிய குறிப்புகளைத் தொகுத்து எழுதமுடியாது – எனப் பிலாக்கணம் வைத்தேன்.

பெரியவர் சொன்னது (குறிப்புகளிலிருந்து சிலவற்றைத் தொகுத்து எழுதுகிறேன்):

1. அம்மாதிரி புத்தகங்கள் நிச்சயமாக இருக்கின்றன; மேலும் நிறைய வரவேண்டியதற்கு ஏகப்பட்ட சான்றுகளும், நிரூபணங்களும் இருக்கின்றன.

2. எழுத நிறையபேர், அறிஞர்கள் இருந்தார்கள்; ஆனால் விடுதலைக்குப் பின்னரும் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டார்கள். ஏனெனில் அரசதிகாரத்தில் இருந்த பலருக்கு பாரதஞானம் சுத்தமாகவே இல்லை  – ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அதனை எள்ளி நகையாடினார்கள்; வெற்றிடத்தில் ஏதாவது வந்து நிரம்பும் என்பது இயற்பியல் உண்மை இல்லையா? ஆகவே – கஞ்சிக்கலயத்தில் மேற்கத்தியர் போட்டதை ஞானம் என உண்மையாகவே நம்பினார்கள், பயபக்தியுடன் அப்படியே உட்கொண்டார்கள். ஆகவே ஸ்வதேஷிய வரலாறுகளைக் குறித்து குற்றவுணர்ச்சி கொண்டார்கள். காலத்திற்கேற்ப புதியன வருவதும் பழையன புதிய கண்ணோட்டங்களால் விமர்சிக்கப்படுவதும் சரிதான் – ஆனால், தாழ்மையுணர்ச்சியால் பாதிக்கப்பட்ட வெள்ளையமோகிகளால், ‘எல்லாமே குப்பை’ எனமட்டுமே நம் பாரம்பரியங்களைப் பார்க்கத் தோன்றியிருக்கிறது.

3. ஆகவே இவர்கள் பொத்தாம்பொதுவாக – இந்த ஸ்வதேஷி அறிஞர்கள் எல்லோரையும் ‘வெட்டிப் பழம்பெருமை பேசுபவர்கள்’ என முத்திரை குத்திப் புறந்தள்ளிவிட்டார்கள். அவர்களைச் சரியாக போஷகம் செய்வதற்கு ஆட்கள் இல்லை; ஸமஸ்தானங்களும் தனவந்தர்களும் அளித்த உதவிகள் குறைந்தன – ஆனால் பாரதமக்களின் வரிப்பணத்தில் இயங்கிய அரசில் இருந்து, பாரதத்தின் நியாயமான பெருமைகளைப் பேசுபவர்களுக்குக் கூட சிறுவுதவிகள் கிடைக்காத அவலம். மாறாக ஏளனம்.

4. இந்திராகாந்தி நேரு போல பாரதப் பாரம்பரியத்தை அதீதமாக வெறுத்த ஃபேபியன் ஸோஷலிஸ்ட் அல்லர். இருந்தாலும், அவர் ஆட்சிக் காலத்தின் கடைசியில் இன்னொரு சோகம்; இடதுசாரிகளுடன் ஏற்பட்ட ‘உடன்படிக்கையால்’ நூருல் ஹஸன் போன்றவர்கள் 1970களின் கடைசியில் இருந்து – ஒட்டுமொத்தமாக நம் பல்கலைக்கழகக் கட்டமைப்புகளை ஊடுருவினார்கள்; வரைமுறையற்ற இடதுசாரி திரிபுகளையும் திரித்தல்களையும் கல்வியில் புகுத்தினார்கள். இவர்கள் காலடியில் படித்தவர்கள்தாம் நம் தற்கால சோட்டா அறிவுஜீவிகள். [ராம்ஷரன் ‘ஆர் எஸ்’ ஷர்மா அல்லது ஸூரஜ் பாஹ்ன் அவர்களின் மாணவர் ஒருவரின் பெயர், மசி காகிதத்தில் கசிந்து என் கையெழுத்து எனக்கே புரியவில்லை!] போன்றவர்கள்.

5. இந்தக் கொடூரங்களையும் மீறி இப்போதும் சான்றோர்கள் இருக்கிறார்கள்; எப்போதும் பிரதிபலன் பார்க்காமல் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். தொடர்ச்சி இருக்கிறது ஆனால் குறைவாக இருக்கிறது.

6. இந்த எஸ் எம் அலி எழுதிய புராணப் புவியியல் புத்தகத்தைப் படி.  இன்னொரு சுவையான புத்தகம் ஹோர்ட்டஸ் மலபாரிகஸ். (பின்னதைப் பற்றி நான் அறிந்திருந்தேன். ஆனால் முன்னதையல்ல. இந்தத் தாவரவியல் பகுப்பு பற்றிய  சிலசெய்திகள் அரவிந்தன் நீலகண்டன்+சாந்தினிதேவி ராமசாமி எழுதிய புத்தகம் ஒன்றில் இருக்கின்றன)

7. லக்ஷ்மி தாத்தாச்சாரைப் போய்ப் பார். ஏன், நீயே இம்மாதிரி விஷயங்களை எழுதக் கூடாது?  சும்மா சிரிக்காதே. வாழ்க்கையைத் தீவிரமாக அணுக முயற்சிசெய். (அப்போது வந்த திகைப்பு எனக்கு இன்றுவரை அகலவில்லை; judgement விஷயத்தில் பெரியவர்களுக்கும் அடிசறுக்கும் என்பதே அன்றும் புரிந்துகொண்டேன்!)

…இந்த உரையாடல் நடந்த அடுத்த இரண்டு வருடங்களில் எனக்கு தில்லி போக (இந்திய அரசு செலவில்!) ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது அதனை உபயோகித்து தில்லி தேசஆவணக் காப்பகத்துக்கு சென்று அலி அவர்களின் அழகான புத்தகத்தைப் படித்தேன். :-)

நூலகரிடம் கடன்வாங்கி (=கெஞ்சிக்கூத்தாடி) அதை நகலெடுக்கவேண்டும் என ஆசை – ஆனால், அப்போது அங்கு ஸெராக்ஸ் வசதியில்லை – அந்தப் பிராந்தியமே பெரும் கட்டடங்களும் அரசதிகாரங்களும் விசாலமான சாலைகளும் நிரம்பிய பிரதேசம். ஸெராக்ஸ் கடை என்றால் கடைகண்னிகளைத் தேடி நான்கைந்து கிலோமீட்டர் நடக்கவேண்டும் என்றார்கள்; ஏற்கனவே ஜனவரிக் கடும்குளிர். வீம்புடன் வேட்டி+கதர்ஜிப்பாவுடன் வீரத்தமிழனாக மீசையை முறுக்கிக்கொண்டு ஊர்வலம்வேறு, தேவையா? புறநானூற்று மறவனுக்குக் குளிர்வெடவெடப்பு தாங்கவே முடியவில்லை; நடுங்கிக்கொண்டேயாவது சிறுநீர் கழிக்கலாமென்றால் அதன் கதை, சுருக்கம்; குனிந்துபார்த்தாலும் எங்கே போனதென்றே தெரியவில்லை  – ஆகவே விட்டுவிட்டேன், அதாவது ஸெராக்ஸ் எடுத்துக் களிப்பதை!

…பின்னர் – சில மாதங்கள் முன் அகஸ்மாத்தாக, எனக்கு மிகவும்  பிடித்தமான ஆர்கைவ்.ஆர்க் தளம் சென்றபோது…(இதைத் தான் ‘சகிப்புத்தன்மையற்ற’ பாரத அரசு முடக்கிவிட்டது என ஒரு சமயம் ஜெயமோகன், விஷயத்தைச் சரிபார்க்காமலேயே போராளித்தனப் புரளியைப் பரப்பி அருளிச் செய்தார் – ஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ தளம் இந்தியாவில் முடக்கம்’ )

…இந்த புத்தகம் தரவேற்றப் பட்டிருந்தது. (அதாவது என் கண்ணில் பட்டது)

ஆச்சரியம் + புளகாங்கிதம்! :-)

-0-0-0-0-

கீழே அதன் உள்ளடக்கம், பாருங்கள் – இதே எவ்வளவு அழகாக இருக்கிறது!

இதற்கு கடும் உழைப்பு மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்திருக்காது. இம்மாதிரி கலைக்களஞ்சிய ரீதி ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதவேண்டுமானால் ஸம்ஸ்க்ருத படிப்பறிவும், விஷயங்களைப் பொருத்திப் பார்க்கும் தன்மையும், துறையில் (புவியியல்) ஆழ்ந்த பாண்டித்யமும் – நுண்மான் நுழைபுலம் அறியும் பாங்கும் வேண்டும்.

நாவிலும் கையிலும் ஸரஸ்வதி நடனமாடவேண்டும். அலி அவர்களுக்கு அதி லபித்திருக்கிறது.

நம் பாக்கியம்.

விவரணைக்கான படங்களும் அழகு. ஒரு புவியியல்காரருக்கான கறார் அறிவியற்சார் பார்வையும் பாரதப் புராணங்களை சிரத்தையுடன் படித்து அதிலுள்ள புவியியற்கூறுகளை அவற்றின் பின்புலத்துடன் பொருத்திப் பார்த்து எழுதவும் கடும் உழைப்பு செய்தால் தான் முடிந்திருக்கும்.

இதில் பாரதவர்ஷத்தின் காஸ்மாலஜி பற்றிய ஒரு அழகான கட்டுரை இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தமானது. புத்தகம் முழுவதிலும் வாயுபுராணத்திலிருந்தும் பிற முக்கியமான புரானங்களிலிருந்தும் புவியியல் விவரணைகள் எடுக்கப்பட்டு அவை பிரத்யட்சமாக இருக்கும் பல்வேறு புவியியற் பகுதிகளுடன் கோர்க்கப்பட்டு அதிகாரபூர்வமான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.

அழகு.

சரி; முதலில் ஒடிப்போய் ஆர்கைவ்.ஆர்க் தளத்துக்குச் சென்று படிக்கவும்.

 

17 Responses to “ஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்”

  1. K.Muthuramakrishnan Says:

    Thank you Sir for your valuable reference.Request more such info.

  2. Vinoth S Says:

    Hi, Have you come across Shrikant G Talageri, and his Out-of-India theory, as an opposition to AIT. He says that there are enough evidences that the ancestor of Sanskrit could gave originated in India.
    Came across these three lectures recently, but don’t have enough knowledge on this subject to conclude whether the evidence he present are valid.


    • ஐயா, நன்றி.

      பலப்பல வருடங்கள்முன்பு அவருடன் அளவளாவியிருக்கிறேன்; புத்திசாலி.பாரதத்தின்மீதும் அறிவியல்பூர்வமான பார்வையின்மீதும் கரிசனம் மிகுந்தவர். எளிமையானவர்.

      அவருடைய ஒரு புத்தகம் படித்திருக்கிறேன் – ரிக்வேதம் குறித்ததை இனிமேல்தான்.

      ஆனால் மேற்கண்ட காணொலிகளைப் பார்த்ததில்லை; அடுத்த இரண்டுவாரங்களில் பார்க்கிறேன்.

      அவருடைய பார்வைகளுடன் எனக்கு ஒத்துவரும். (ஆனால் நம் எழுத்துபூர்வமான/அகழ்வாராய்ச்சித் தரவுகளுடன் நான் உயிரியல்/புவியியல்/கனிமவியல் தொடர்பான விவரங்களையும் கோர்த்துக் கொள்வேன்)

  3. வால்பையன் Says:

    திவால் ஆகுமா இந்தியா?

    http://valpaiyan.blogspot.com/2018/12/4.html


    • ஐயா வால்பையர்,

      உங்களுடைய சுட்டி, பங்குமார்க்கெட் குறித்து இருக்கிறது; என் பதிவுக்கும் அதற்குமோ, அல்லது ஒத்திசைவின் குவியத்துக்கோ(!) ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறது.

      இந்தமுறை பரவாயில்லை; அடுத்தமுறை இப்படிச் செய்வதைத் தவிர்ப்பீர்களா?

      நன்றி.

  4. Rajagopalan Says:

    ஜெயமோகனை கிண்டல் செய்யும் காரணத்தால் உங்களை டைவர்ஸ் செய்து ஜீவனாம்சம் கொடுக்காமல் கதறச் செய்யும் முடிவில் இருந்தேன். ஆனால் இப்படிப் பதிவுகளை எழுதி தப்பித்துக் கொண்டீர்கள். வாசித்து விட்டு முடிவினைச் சொல்கிறேன். அதுவரை நகத்தைக் கடித்துக் கொண்டே இருக்கவும், உங்கள் நகத்தை.

    அன்புடன்,
    ராஜகோபாலன் ஜா


    • ஐயா ஜாரா,

      இடுக்கண் வருங்கால் நகம்கடிக்க என்கிறீர்கள்.

      அதைத்தவிர ஆகப் பெரிய ஆகச் சிறந்த வேலை எனக்குப் பிறிதொன்றில்லை எனவா நினைத்தீர்?

      பேரன்பர் இப்போது க்ரிட்டிகல்தியரியில் முழுமூச்சாவுடன் இறங்கியிருக்கிறார்போல!

      https://www.jeyamohan.in/117063 படித்து மகிழ்ந்தேன். நீங்கள்?

      நகமோமு கடித்தேனி
      நா ஜாராலி தெலிஸீ

      ;-)

      • சேஷகிரி Says:

        “ஐயா ஜாரா” என்பதை அவசரத்தில் ஐயா ஜால்ரா! என்பதாக வாசித்துவிட்யேன் மன்னிக்கவும்.

  5. Somu Says:

    இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் இஸ்லாம் மீதான வெறுப்பை அவர்களே மற்றவர்களிடம் ஏற்படுத்தும் இஸ்லாமியர்கள் தற்போது பெரும்பான்மையாக ஆகிவிட்டனரோ என்று நிறைய நேரங்களில் தோன்றுகிறது.

    சென்ற வாரம் கூட, ஒரு இஸ்லாமிய மாவட்ட ஆட்சியர் காஷ்மீர் அடிப்படைவாதிகளை ஆதரித்தும், இந்திய அரசை எதிர்ப்பது போலவும் பேட்டி கொடுத்திருந்தார்.

    இஸ்லாமியர்களை தவறாக நினைக்கும் சமயங்களில் இந்திய தேசியத்தின் மீது, கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்களை (Mother India, Son of India போன்ற திரைப்படங்களை இயக்கி தயாரித்த மெஹபூப் கான் போன்றவர்களை) நினைத்துக் கொள்வேன்.

    ஸையத் முஸஃபர் அலி புராணங்களை முன்வைத்து நிலப்பரப்புகளை இவ்வளவு ஆராய்ந்து உள்ளதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இனி SM அலி அவர்களையும் நினைத்துக் கொள்வேன்.

    இருந்தாலும் இவர்கள் வாழ்ந்தது எல்லாம் ஒரு காலமோ என்றும் தோன்றுகிறது.

  6. SB Says:

    Sir
    Thanks for your precious info.

    quote :
    நடுங்கிக்கொண்டேயாவது சிறுநீர் கழிக்கலாமென்றால் அதன் கதை, சுருக்கம்; குனிந்துபார்த்தாலும் எங்கே போனதென்றே தெரியவில்லை – ஆகவே விட்டுவிட்டேன், அதாவது ஸெராக்ஸ் எடுத்துக் களிப்பதை!

    Unquote:
    You must have thought about ‘ Kovaikai’ .
    If not for that ‘diversion to Xerox’, smaller than given illustration may have popped up.
    Some may, If not Mr.Ra Ja (being the Sishya of Jeymoh take umbrage of seeing Nehru offended.

    Thank you.

    Regards
    SB


  7. Sir

    Your exact thoughts being reverberated everywhere.Thought transference working full time.
    Regards
    SB

  8. Swami Says:

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி

  9. gopalasamy Says:

    sir, do you follow jayashree saranathan blog?


  10. Yes! Finally something about walmart apparel coupon codes.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s