நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி?

November 21, 2016

ஃப்ரிட்ஹொஃப் கப்ரா அவர்களின் மிகப் பிரபலமான  ‘இயற்பியலின் தாவோ’ (The Tao of Physics – 1975?) + ‘திருப்புமுனை’ (The Turning Point) போன்ற பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுத்தனங்களை விட, 1995 வாக்கில் வெளிவந்த அவருடைய ‘உயிரின் வலைப்பின்னல்’ (The Web of Life – A New Scientific Understanding of Living Systems) எனும் முக்கியமான புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்கங்களில் ஒன்று. பின்னதின் மூலம், கப்ரா அவர்கள், தான் முன்னவற்றை எழுதிய படுபாவத்தைத் தொலைத்துவிட்டார் எனவே நினைக்கிறேன்.

இதே ரீதியில் – பொதுவாகவே, எனக்கு இந்த ஜேரட் டையமன்ட், நஸ்ஸிம் நிகோல் தாலெப், தாமஸ் ஃப்ரீட்மென், நோம் சாம்ஸ்கி* வகையறாக்களின் (அவர்களின் அடிப்படைத் துறைகள் சாராத ஆனால் சார்ந்ததாகப் பாவலா செய்துகொண்டிருக்கும்) அரைகுறை ஜல்லியடித்தல்களும் அகழ்வாராய்ச்சிகளும் ஒத்துவரமாட்டா. இவர்கள் இனி எழுதப்போகும் முக்கியமான புத்தகங்களுக்காக, நான் நெஞ்சும் மார்பும் படபடக்கக் காத்துக் கொண்டிருக்கும்போதுதான்**

*சிலவருடங்களுக்கு முன், மேதகு என் ராம் அவர்களுடைய ஃரன்ட்லைன் பத்திரிகை சார்பாக (என நினைவு) நடந்த ஒரு ம்யூஸிக் அகடெமி கூட்டத்தில் நோம் சோம்ஸ்கி அவர்கள் உளறிக்கொட்டியதைக் கேட்டு மனம் நொந்தபின்னரும், அவருடைய பல ஓப்ராவின்ஃப்ரெ பாணி அரசியல் போராளிக்கட்டுரைகளை, அதிசராசரித்தனங்களைப் படித்துவிட்டும்தான் இப்படி எழுதியிருக்கிறேன். இந்த மனிதர் இப்படித் தனக்குத் தொடர்பில்லாத துறைகளில் கண்டமேனிக்கும் கருத்து தெரிவிக்க, இவரென்ன அற்ப ட்விட்டர்/ஃபேஸ்புக் போராளியா? ‘ஒப்புதலை உருவாக்குவது’ (மேனுஃபேக்சரிங் கன்ஸெண்ட் – Manufacturing Consent) எழவில் ஆரம்பித்த வீழ்ச்சி தொடர்கிறதே! சலிப்பாக இருக்கிறது. :-(

—-0000—-

**நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களின் கீழ்கண்ட குறிப்பை (ஒரு நண்பர் அனுப்பி) படிக்க நேர்ந்தது. சர்வ நிச்சயமாக, அட்சரத்துக்கு லட்சம் பொன், வேறென்ன சொல்ல…

Heuristic: in any profession, 90% of the people are clueless but work by situational imitation, except for journalism where it is about 100%

exception: Those in advocacy journalism (e.g. propagandists, chekists). They know exactly what they are doing.

இவர் எங்கே இப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் – இந்த மனிதர், இப்படி ரத்தினச் சுருக்கமானதொரு அவதானிப்பினால் – ‘கறுப்பு அன்னம்’ (ப்ளேக் ஸ்வேன் – Black Swan) எழுதிய பாவத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டுவிட்டார் என்றே சொல்வேன்.

என் தமிழ்மொழிப் படுத்திஎடுத்தலில் இந்த மேற்கோள் இப்படி விரிகிறது:

பட்டறிவுசார் கருதுகோள்: எந்த ஒரு துறையிலும், அதில் ஈடுபட்டிருப்பவர்களில் 90% பேர் முட்டாக்கூவான்கள் – ஆனால் இவர்கள் சமயத்திற்கேற்றவாறு [பிறத்தியாரைப் பார்த்து] காப்பியடித்துத் தம்மைக் கரையேற்றிக் கொள்பவர்கள்; அதாவது, ஊடகத் துறை தவிர – ஏனெனில், ஊடகத்துறையில் இவர்கள் ஏறத்தாழ 100%.

விதிவிலக்குகள்: போராளித்தன ஊடகக்காரர்கள் [தஹிந்துத்துவா, ஃரன்ட்லைன், என்டிடிவி, ஸாகரிகா கோஷ்கள், ப்ரதாப்பானு மேஹ்தாக்கள், ஆனந்தவிகடன்கள் இன்னபிற ஊடகப்பேடி உதிரிகள்]; இவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் தாம் என்ன செய்கிறோம் என்று.

-0-0-0-0-0-

சிலபல வாரங்களுக்கு முன்: இந்தியப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் சிலவற்றில் இந்திய ராணுவத்தின்  ‘ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடந்தபோது சமூகப் போராளி அரைகுறைகள் அனைவரும் பாதுகாப்பு பற்றிய விமர்சனங்களில் விற்பன்னர்களானார்கள். இந்திய-பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான ராஜரீக விவகாரங்களில் ஆழ்ந்த கருத்துகளைத் தெரிவித்தார்கள். நன்றி.

ஓரிரு வாரங்களுக்கு முன்: ட்ரம்ப் அய்யா கெலிப்பாரா? க்லிண்டன் அம்மணியா? – ஏகத்துக்கும் ஆழமான, தீர்க்கமான கருத்துகள்…

தற்போது: இந்தப் பழைய 1000, 500 ரூ கழித்துக்கட்டல் விவகாரத்தில், அனைவரும் பொருளாதார நிபுணர்களாகி விட்டார்கள்! கண்டமேனிக்கும் நிர்வாகத்திட்ட மேதைகளாகிவிட்டார்கள்! பொதுமக்கள் மேல் கரிசனத்துடன் கருத்துக் குவியல்களைப் படையல் வைக்கிறார்கள்! அரசுக்கு அறிவுரைகளை வாரிவாரி வழங்குகிறார்கள்… வாழ்க!

என்னே அறிவுகூர்மை! என்னே அவர்களின் செயல்திறம்!! என்னே அவர்களுடைய நுண்மான் நுழைபுலம் காணும் அறிவு!

மசுர்க் கூச்செறிகிறது – இந்த சமூகப் போராளிகளின் மாண்பை அவதானிக்கும்போது.

நாளை: ?

-0-0-0-0-0-0-

…கடைந்தெடுத்த முட்டாக்கூவான்கள். அதிகபட்சம் ஊடகப் பேடிகள். அவ்வளவுதான்.

அய்யா, நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களே! நீங்கள் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை உதிர்க்கக் கூடாது, ஹ்ம்ம்ம்?

 

4 Responses to “நஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி?”

  1. Vinothkumar Partha Says:

    இப்போ வலதுகளின் ட்விட்டர் பக்கங்களில் இந்த கட்டுரைதான் மிக பிரபலம்….

    View at Medium.com

  2. A.Seshagiri. Says:

    இந்த மஹோத்ஸுவத்தில் லேட்டஸ்ட் ஆக சேர்ந்திருக்கும் நமது “சாரு அண்ணா” சும்மா அடிச்சுவிட்ட கட்டுரையும்.அந்த கட்டுரையின் அரைவேக்காட்டுத்தனத்தை தோலுரிக்கும் சுட்டியும் கீழே:
    http://minnambalam.com/k/1479666613
    Calm Down, Everyone! Here’s Why Vijay Mallya’s Debt Write-Off Is Not A Waiver

    SBI Still Pursuing VIJAY MALLYA Loan Recovery-Arundhati Bhattacharya


    • சாரு அவர்கள் ஆழம் தெரியாமல் கண்டவிஷயங்களில் காலை விடுவது என்பது ஒரு தொடரும் சோகம்.

      அய்யா சேஷகிரி, என் மேல் ஏனிந்தக் கோபம். இப்படிப்பட்ட ஆட்களில் அஎழுத்துகளை என் பார்வைக்குக் கொண்டு வருகிறீரே! :-(

      “துனிசியாவின் அருகே ஐ.எஸ். போராளிகளை அழிப்பதற்காக ஊரையே குண்டுபோட்டு அழித்திருக்கிறது அமெரிக்க ராணுவம். போராளிகளோடு நூற்றுக்கணக்கான மக்களும் காலி. ”

      என்ன சோகம். போகிற போக்கில் இப்படி அமெரிக்கஎதிர்ப்புணர்ச்சி! இப்படி அட்ச்சுவுடுவதற்கு நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கும் தெகிரியமே அலாதிதான்… படிப்பறிவுள்ளவன் தங்களைப் படிக்கமாட்டான் எனும் உறுதியான எண்ணம்தான் இவர்களை உந்துகிறதோ?

      உதிரித்தனம்தான், வேறென்ன சொல்ல… :-(

      பிகு: நீங்கள் கொடுக்காத அந்தச் சுட்டிகள்: http://www.huffingtonpost.in/2016/11/17/what-is-a-debt-write-off-and-why-do-banks-do-it/

      http://www.dnaindia.com/money/report-sbi-still-pursuing-vijay-mallya-s-loan-recovery-arundhati-bhattacharya-2274874


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s