மனுஷ்யபுத்திரன்! ராக்ஷசபுத்திரி!! அறுமணம்!!! திமுக!!!! சகாயம்!!!!! பூனைக்குட்டி!!!!!! உளறல்!!!!!!! ஆ!!!!!!!! + ஊக்கபோனஸ்: என்னுடைய மப்புத்தனமான டுபுக் கவிதை முயற்சி!!!!!!!!!! அய்யய்யோ!!!!!!!!!!

April 8, 2016

மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-(  இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி.

நேரடியாகவே இணையம் மூலமாக என் வங்கிக்கணக்கிலும் இவற்றைச் செலுத்தலாம்; விவகாரங்கள் கீழே:

வெ. ராமசாமி
Exclamat!on Mark Bank of Lemur!a – Drav!dastan Branch
Account No: !!!!!420!!!!007 !!!!!
!FC! Code:  EMBL0420007

…தமிழில் கவிதை எழுதுபவர் எனத் தொடர்ந்து, என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களாலுமே கூட – ஈவிரக்கமில்லாமல், மனிதநேயமில்லாமல், மிகமிக அநியாயமாகக் குற்றம் சாட்டப்படும் பாவப்பட்ட மேதகு மனுஷ்யபுத்திரன் அவர்கள், அதிகாரபூர்வமாக, திமுக கூடாரத்தில் சரணடைந்துவிட்டார் என்பதைப் படுசாவகாசமாக  இன்று (தான்! வா ‘நிசப்தம்’ மணிகண்டன் அவர்களின் ‘சில கேள்விகள்’ ஃபெப்ருவரி 2016 பதிவின் மூலம்…) அறிந்துகொண்டு இறும்பூதடைந்தேன்.

இது தொடர்பாக வந்திருந்த பழைய, படிக்காமல் விட்ட மின்னஞ்சல்களையும் மகிழ்ச்சியுடன் படித்தேன். மப்பு அவர்கள் சொல்வது போலவே ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!’ என் புளகாங்கிதத்துக்கு அளவேயில்லை.

மேலும், முழுநேர அரசியலில் ஈடுபட்டால், மேதகு மப்பு அவர்கள், தன்னுடைய செல்லங்களான கவிதைக் கழுதைகளை அட்ச்சுவுடும் வீரியமும் வேகமும் குறையும் என்ற  நியாயமான எதிர்பார்ப்பும், எனக்குப் படபடக்கும் புல்லரிப்பினை ஏற்படுத்துகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்! நன்றி! நன்றி!! நன்றி!!!

-0-0-0-0-0-0-0-

ஆனால் — இந்தப் புனிதத்திராவிட ஜோதியில் ஐக்கியமாதலுக்கு, ஏதோ திமுக கொடுக்கவிருக்கும் விருது விவகாரம் தான் காரணம் என்று இது தொடர்பான ஃபேஸ்புக் செய்தியை அனுப்பிய நண்பர் குறிப்பிடுகிறார். எனக்கு இந்த எழவு பற்றி ஒரு மண்ணும் தெரியாவிட்டாலும், தெரிந்துகொள்ள ஆசையும் இல்லாவிட்டாலும்… விருது என்றால், எந்த தொழில்முறை அரைகுறை விருதாவுக்காவது கசக்குமா, என்ன! புரிந்துகொள்கிறேன்.

ஆனால், ஒருவேளை, எதிர்காலத்தில் ஏதாவது திராவிட சகிப்புத்தன்மைப் பிரச்சினை என்பதுபோல, என்னுடைய செல்லக் கவிதையாசானுக்கு வந்தால், இதனைத் திருப்பிக்கொடுக்கிறேன் என மினுக்கிக்கொண்டு, தன்னுடைய ‘சகிப்பின்மை குறிந்த சகிப்பின்மை ரேட்டிங்’ எழவை மேலேற்றிக்கொள்ள, இந்த விருது வசதியாக இருக்குமோ? சந்தேகமாகவே இருக்கிறது. எந்தப் ப்ளடி பொட்டியில் எந்த ப்ளடி ஷ்ராடிங்கர் பூனையோ!

சரி. எது எப்படியோ, அவருடைய பகுத்தறிவு ஜாதகப்படி, மனுஷ்யபுத்திரனாருக்குக் காலம் கூடிவருவதால், பேரும் புகழும் மேன்மேலும் பெற்றுத் திகழ்வார் எனத்தான் படுகிறது.

ராக்ஷசபுத்திரி + மனுஷ்யபுத்திரன் அறுமணம்!

ஆகவே முதற்காரியமாக மனுஷ்யபுத்திரனுக்கும் அவரது முறைப்பெண்ணும், என் அன்புத் தோழியுமான ராக்ஷசபுத்திரி அவர்களுக்கும் ஒரு மதச்சார்பின்மைத் தாலியறுப்புத் திருமணத்தை நடத்தி விட்டேன். அதை, இன்று காலையில் எமகண்டத்தின் போதுதான் விமரிசையாகக் கொண்டாடினேன்.

ஆனால், பகுத்தறிவுப் பாசறையில் சரணடைந்து விட்டதால், அவர் தன் திருமணத்தை அறுமணம் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று திராவிடத்தனக் கவித்துவம் சொட்டச் சொட்டச் சொன்னதால், சரி, அப்படியே ஆகட்டும் என்று விட்டுவிட்டேன்! அதேசமயம், அவர் தன் ஒரிஜினல் பெயரையும் (=அப்துல் ஹமீத் ஷேக் மொஹெம்மத்) புனைபெயரையும் (=மனுஷ்யபுத்திரன்) பரிசுத்தத் திராவிடத் தமிழ்ப் படுத்திக் கொள்வாரா என்று தெரியவில்லை. அவை ராசியான பெயர்கள், என அவர் பகுத்தறிவுடன் கருதிக்கொண்டிருக்கிறாரோ என்ன எழவோ!

சரி. கவலைப் படாதீர்கள்! அறுமணம் என்பது எப்படியும் அமங்கலம். ஆகவே எழவு கிழவு என்றெல்லாம் இச்சமயம் சொன்னால் – அவர் மேலதிகமாகக் கோபித்துக்கொள்ளவே மாட்டேன் என, தன் பகுத்தறிவுக் கடவுள் மேல் சத்தியமாகச் சொல்லியிருக்கிறார்.

தேனிலவுக்கு புது அறுமணத் தம்பதியினரை, அன்பும் அரவணைப்பும் மதச்சார்பின்மையும் பூத்துக் குலுங்கும் பூலோக சுவர்க்கமான ஸவூதி அரேபியாவுக்கு அனுப்புவதாக இருக்கிறேன். பார்க்கலாம். எப்படியாவது அவர்களுடைய சுற்றுலாவின்போது கண்டுமகிழ ஒன்றிரண்டு கழுத்தறுப்புகள் அங்கு நிறைவேறினால் மகிழக் கூடுபவனே நான் தான்!

ஆனால் ஒரு அநியாயம் நிகழ்ந்துவிட்டது.  :-( நரேந்த்ர மோதி அவர்கள் ஸவூதிக்கு முந்திக்கொண்டு சென்று விட்டதால், மானுடப்பையனாருக்குக் கனகோபம் வந்து, ஸவுதிஅரேபியாவையே ஹராம் என்று கருதி அதனை ஒதுக்கினால் என்னசெய்வது என்று தெரியவில்லை… :-((

-0-0-0-0-0-

நிற்க, என் நண்பர் மானுடப்பையனார் அவர்கள் பேசும் (=  தொடர்ந்து கண்டமேனிக்கும் பேத்தும்) யூட்யூப் வீடியொக்களை எனக்கு சில எழவெடுத்தவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவற்றில் ஒருசிலவற்றைப் பார்த்தவகையில் வாய்ச் சவடால் + எச்சில் தெறிக்கப் பேசுதல் + உளறிக் கொட்டுதல் (=திராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனாராகவிருத்தல்) போன்றவற்றை மிக நன்றாக, நகாசு வேலைகளுடன் இவர் செய்கிறார் என்பது புரிகிறது.

அதாவது, இதுவரை இருந்த 90% விகிதத்திலிருந்து 100% திராவிட அரைகுறையாக மாறிவிட ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறார் என்பதும்தான்! முட்டாள்தனமான முயற்சி திருதிருவினையாக்கும் அல்லவா?

மானுடப்பையனார் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லை.

ஏன் திடுதிப்பென்று இப்படி, பையனாரைப் பற்றி எழுதுகிறேன் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

இதன் பின்புலமானதாவது: யாரோ பாவம், அந்த பாவப்பட்ட சகாயம் (ஐஏஎஸ்) அவர்களுடன் அரசியலை இணைத்து, ஒரு சுவரொட்டி மாதிரி இணைய விளம்பரம் ஒன்றை வெளியிட,  பொங்கலுக்கு முன்னாலேயே பொங்கோதி பொங்கு என்று பொங்கிவிட்டார், கலக வொடன்பெற்ப்பு! தேவையா?

Screenshot from 2016-03-25 17:46:33

ஆதாவிஸ்கி: https://www.facebook.com/photo.php?fbid=1252272824798626&set=a.548093941883188.144635.100000477613498&type=3

எனக்கு, என்னுடைய மகாமகோ செல்லங்களில் ஒருவரான  இந்தக் கோமாளிக் கோமகனாரின் பொங்கல் பற்றிப் பெரிதாக ஒரு வருத்தமும் இல்லை; ஆனால், ஜெயமோகன் அவர்கள் – ‘மப்பு ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர்’ என மறுபடியும் மறுபடியும் வருந்திச் சொல்கிறாரே என்று ஏதாவது கவிதை கிவிதை எழவு ஏதாவது இந்தப் பொங்கலில் முந்திரிப்பருப்பு போல முழித்துக்கொண்டிருக்குமோ எனச் சந்தேகம் வந்து, எனது கையறு நிலைமையை, ஒரு மனுஷ்யபுத்திர இஷ்டைல் கவிதையாகவே அதனை வடித்திருக்கிறேன்.

…வழக்கம் போலவே தங்கள்   அனாதரவைத் தொடர்ந்து நல்கவும்.:

க-வித்தை

(சமர்ப்பணம்: என்  மரியாதைக்குரிய மகாமகோ மானுடப்பையனார் அவர்களுக்கு)

 நான் தாண்டா விக்கிரமன்
மொயற்சியக் கைவுடவே மாட்டேண்டா
அத்தொட்டுதாண்டா நான்
அக்கிரமன்
மனுஷ்யபுத்திரக் கவிதையாம் அது
எனக்கு
கெரகம்
என்பது சரிதான்

இரண்டுமூன்று முறை
அதைத் திரும்பித் திரும்பிப்
படித்துப் பார்த்தேன்
திரும்பாமலும்தான்
 
ஓரக்கண்ணால் பார்த்தேன்
ஒன்றரைக்கண்ணால் பார்த்தேன்
ஒரேயடியாகப் பார்த்தேன்

சுற்றிச் சுற்றி வந்தேன்
படுபீதியுடன் வெறித்தேன்
தலைகீழாக நின்றுகொண்டு
மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு
சவாசனம் செய்துகொண்டு
மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டு

பரக்கப் பரக்கப்
பறந்துகொண்டு
ஓடிக்கொண்டு
நொண்டிக்கொண்டு
நீந்திக்கொண்டு
உருண்டுகொண்டு
ஆனால்…
ஒரு எழவும் தேறவில்லை

பொங்கலைக் காகிதத்தில் எழுதி
அதனைக் கசக்கிப் படித்தேன்
நீரில் மூழ்கவைத்தேன்
நெருப்பில் பொசுக்கினேன்…
அமிலத்தில் ஊறவைத்தேன்
இருந்தாலும்
எழவு, புரியவேயில்லை

கோட்டுசூட்டு அணிந்துகொண்டு
நிர்வாணமாக இருந்துகொண்டு
புடவை கட்டிக்கொண்டு
லெக்கிங்ஸ் போட்டுக்கொண்டு

தலைமசுத்தைப் பிடுங்கிக்கொண்டு
தாடி வுட்டுக்கொண்டு
மொட்டையடித்துக்கொண்டு
கழிப்பறையில் இருந்துகொண்டு
விதம்விதமாக
முயற்சித்தேன்
எனக்குத் தாளவில்லை

திட்டிக் கொண்டு
நொந்து கொண்டு
அழுதுகொண்டு
சிரித்துக் கொண்டு
துப்பிக்கொண்டு
சிந்திக்கொண்டு
முழித்துக்கொண்டு
எனக்கு மாளவில்லை

சொறிந்து கொண்டு
பிறாண்டிக் கொண்டு
மூத்திரம் அடித்துக்கொண்டு
விட்டுக்கொண்டு
என்னால் சுத்தமாகவே முடியவில்லை

இருந்தாலும்
அசுத்தமானவனாகிய நான்
புரட்சிப் பூபாள வேதாளனாகிய யான்

என் வழக்கம்போலவே
முருங்க மரத்தில் ஏறிக்கொண்டு
சவங்களைத் தூக்கிக்கொண்டு
சவத்த காளையாகிக்கொண்டு
பிண்டங்களை உண்டுகொண்டு
அகோர அகோரியாகிக்கொண்டு
பசித்த மானுடப்பையனாகிக்கொண்டு
தண்டமான திராவிடனாகிக்கொண்டு

…தாங்க முடியவில்லையே!

ங்கொம்மாள, பிர்யவேயில்லையே நைய்னா!
ஆள வுடு,  அம்புட்டுதேன்
ஜூட் வுட்றேன், மன்சிக்கோபா

-0-0-0-0-0-

அல்லாம் ஜெரிதேன்…
மப்பு ஒரு கவிஞ்சராமே
அப்படியா என்ன?
அய்யகோ!

எப்டிக்கீதுபா என்னோட மப்பு இஷ்டைல் டுபுக் கவித? ;-)

… ஹ்ம்ம்… எது எப்படியோ, இந்தப் படுபீதியளிக்கும் கவிதானுபவம்  தொடர்பாக, என் மனம் அநியாயமாக வெந்துவிட்டதால், ஜெயமோகனுக்குக்  கோபமான கடிதம் ஒன்றை எழுத ஆரம்பித்திருக்கிறேன். பாவம், அவர்.

-0-0-0-0-0-0-

 சரி. மானுடப்பையனார் அவர்கள் எழுதியிருக்கிறார்:

‘இங்கே யாரும் முட்டாள் அல்ல. பூனைக்குட்டிகள் சில நாட்களில் வெளியே வரும்’

சகாயம் தன் பெயரால் செய்யப்படும் அரசியல் பற்றி ஏன் மெளனமாக இருக்கிறார். பின்னால் இருந்து தூண்டிவிடுகிறாரா? தன் பெயரால் ஒரு அரசியல் மாநாடு நடப்பதை ஒரு அரசு அதிகாரியாக எப்படி ஏற்கிறார்? வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்து களத்தில் குதிக்கலாம் என்று காத்திருக்கிறாரா? சகாயத்தை ஒரு மாற்றுசக்தியாக முன்னிறுத்த விரும்பும் எந்த ஊடகமும் ஏன் அவரின் கருத்தை இந்த விவகாரத்தில் கேட்கவில்லை? ஜெயலலிதா போலவே ஊடகங்களால் அணுக முடியாதவரா சகாயம்? இந்த நாட்டில் யார்வேண்டுமானாலும் உயிரோடு இருக்கும் யார் பெயரில் வேண்டுமானாலும் அவர்களின் ஒப்புதலின்றி இயக்கம் நடத்த முடியுமா?

சகாயம் முதல்வராக முடியாது என்று வேறு யாரையும்விட சகாயத்திற்கு தெரியும். ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுக்களில் சில ஆயிரங்களையேனும் எதிர்கட்சிக்கு போகாமல் சிதறடிக்க முடியும் என்று யாரோ நம்புகிறார்கள். அவர்கள் இந்த சகாயம் ஆதரவு அலை ஒன்றை உருவாக்குகிறார்கள். சகாயம் அதை மெளனமாக ரசிக்கிறார். யாருடையை நலனுக்காக இந்த நாடகம்?

இந்த இயக்கத்திற்கு பின்னால் இருப்பவர்கள் தன்னெழுச்சியாக ஒருங்கிணைந்தவர்கள் என்று நம்பும் அளவிற்கு இங்கே யாரும் முட்டாள் அல்ல. பூனைக்குட்டிகள் சில நாட்களில் வெளியே வரும்.

…பிரச்சினையென்னவென்றால், பாவப்பட்ட ஃபேஸ்புக் தளத்தையாவது இவர் விட்டுவைத்திருக்கலாம். ஆனால்,  அங்கும் விட்டை மட்டுமே விடுவேன் என இவர் பிடிவாதம் பிடிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

-0-0-0-0-0-

சரி. மனுஷ்யபுத்திரனாரின் அக்மார்க் உளறல் (=அவருடைய தொடரும் களப்பணிகள்) பற்றிச் சில கருத்துகள்: (யாரும் என்னைக் கேட்கவில்லை; தன்னிச்சையாகத்தான் எழுதுகிறேன்)

1. இப்படி ஒரு வெட்டிச் சுவரொட்டிக்காக – இணைய முயற்சிக்காகப் பொங்க வேண்டிய நிலையிலா தெராவிட வொடன்பெற்ப்புகள் இருக்கிறார்கள்?  அவ்வளவு மோசமாகவா இருக்கிறது அவர்களுடைய பரிதாப நிலைமை? (பரிதாப நிலை அப்படியே தொடர என் வாழ்த்துகள்)

2. எதற்கெடுத்தாலும் இப்படியா முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொட்டுவார்கள்? ‘எங்கெங்கு காணினும் சதியடா’ ரீதியில் மட்டுமே தங்கள் பிரச்சினைகளைப் பார்த்து, அவற்றுக்குப் பிறரை மட்டுமே காரணமாகக் காட்டி, தங்கள் குண்டிகளில் இருக்கும் மலங்களைப் பார்க்காமல் இருப்போம் என்கிற பார்வையையா முதலில் வைப்பார்கள்?

3. அப்படியே சதி நடக்கிறது என்று ஒரு பேச்சுக்குக் காதில் பூவைத்துக்கொண்டு யோசித்தாலும்கூட, திமுக காரர்கள் செய்யாத அயோக்கியங்களா? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்?  திமுக செய்த அயோக்கியத்தனங்களில் ஒரு சிறுபகுதியை அதற்கெதிராகத் திருப்பினால் என்ன பெரிய பிரச்சினை – அதுவும் வெட்கமேயில்லாமல் திமுக தன் அற்பத்தனங்களைத் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு உளறலா?

4. திராவிட நச்சரவங்களின் கால்களைப் பற்றி, திராவிட நச்சரவம் ஒன்றுதானே அறியும்?  அந்த அரவம் அண்மையில்தான் பொய்மை ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறது என்றாலும் கூட இதுதானே உண்மை?  (ஆனால் நான், சாதா-பாவப்பட்ட பாம்புகளை மிகவும் மதிப்பவன்)

5. மனுஷ்யபுத்திரன் அவர்களுடைய மகோன்னத உளறல்களில் ஒன்று, இந்த ‘பூனைக்குட்டிகள் வெளியே வந்துவிட்டன’ விவகாரம்; இதே விஷயத்தை அவருடைய தலைவரான டாக்டர் (இருமுறை) கலைஞர் அவர்களும் தொடர்ந்து, தப்பும்தவறுமாக உபயோகிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். இது ஒரு சோகமான விஷயம்.

-0-0-0-0-0-

சரி. இந்த எழவெடுத்த ‘பையிலிருந்து பூனைக்குட்டியை வெளிப்படுத்துவது’  (=letting the cat out of the bag) விஷயத்தைக் கொஞ்சம் பார்க்கலாம். இந்த வெள்ளைக்கார உருவகத்தை, நமக்குப் பிடிபடாத பின்புலமற்ற, ஆகவே உதவாக்கரையான படிமங்களை முட்டாள்தனமாக உபயோகிப்பதில், அரைகுறைத்தனமாக மேற்கோள் காட்டுவதில் – நம் திராவிடத்திலகங்களுக்கு ஈடுஇணையே இல்லை, வேறென்ன சொல்ல!

ஆனால் – இந்த அரைகுறைத்தனத்தைப் பற்றி, பின்னொரு பதிவில் பார்க்கலாம்…

மப்பு வகைக் கவிதை ஒன்றை எழுதியதில் எனக்கு, சக்தியெல்லாம் கரைந்துவிட்டது. ஆகவே நீங்கள் தப்பிவிட்டீர்கள்.

ஆனால், அடுத்த முறை உங்களைச் சும்மா விடமாட்டேன், கபர்தார்!

அதுவரை  — மேலும் படிக்க, களிக்க, சுளிக்க – மனுஷ்யபுத்திரப் பதிவுகள்

4 Responses to “மனுஷ்யபுத்திரன்! ராக்ஷசபுத்திரி!! அறுமணம்!!! திமுக!!!! சகாயம்!!!!! பூனைக்குட்டி!!!!!! உளறல்!!!!!!! ஆ!!!!!!!! + ஊக்கபோனஸ்: என்னுடைய மப்புத்தனமான டுபுக் கவிதை முயற்சி!!!!!!!!!! அய்யய்யோ!!!!!!!!!!

  1. பொன்.முத்துக்குமார் Says:

    // ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுக்களில் சில ஆயிரங்களையேனும் எதிர்கட்சிக்கு போகாமல் சிதறடிக்க முடியும் என்று யாரோ நம்புகிறார்கள். //

    இவர் தனது பூனைக்குட்டியை வெளியே மியாஆஆஆஆவ் என்று மிழற்றவிட்டுவிட்டு, மற்றவர்களது பூனைக்குட்டி வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பது நகைச்சுவைதான்.

    சரி, ஜெ-வுக்கு எதிரான வாக்குகள் மு.க-வுக்குத்தான் போயாகவேண்டும் என்று எந்தரீதியிலாவது கட்டாயம் இருக்கிறதா என்ன ? ஏன் இந்தளவுக்கு பதட்டம் ? அதை தடுக்குமளவுக்கு இவர்களிடத்தில் வக்கோ வலிவோ இருந்திருந்தால் – இருக்குமளவுக்கு நடந்துகொண்டிருந்தால் இப்படி ஒரு முகநூல் பக்கத்துப்பதிவுக்கெல்லாம் மனநோயாளி போல பயந்து அலறக்கூடிய தேவை இருந்திருக்காதே !

    ஏப்போதோ மு.க பெருமகனார் ஜெ-வை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிலையை நொந்து (’அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக’ கணக்காக – ஒப்புமை சரியில்லையெனினும் – ‘ராஜாஜியவே எதுத்து அரசியல் பண்ணினவன், காமராஜை எதுத்து அரசியல் பண்ணினவன்’) “புராணீக ரீதியில் சொல்லப்போனால் என் நேரம்” என்று தமது பகுத்தறிவை பல்லிளிக்க வைத்தார்.

    மேஜை திரும்ப, விஜய்காந்துக்காகவெல்லாம் காத்திருக்கவைத்ததும் அதே “நேரம்”-தான் :)

    பரிதாபம், அந்தோ பரிதாபம் :)


  2. இன்றைக்கு பேஸ்புக்கில் கண்ணில் பட்டது

    /சுஜாதா விருதுகள்…
    சுஜாதா விருதுகளில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான நேர்மை என்னை எப்போதும் பிரம்மிப்பில் ஆழ்த்தும். இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
    சிறந்த கவிதை தொகுப்பு- ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் (உயிர்மை பதிப்பகம்)
    சிறுகதை விருது- அனார்கலியின் காதலர்கள் (உயிர்மை பதிப்பகம்)
    சிறந்த நாவல்- ஐந்து முதலைகளின் கதை (உயிர்மை பதிப்பகம்)
    சிறந்த இனையவிருது- பிரபு காளிதாஸ் ( (உயிர்மை புகைப்பட கலைஞர்)
    உமா மகேஸ்வரன் (தி.மு.க)
    சிறந்த சிற்றிதழ்- உயிர்மை இதழுக்கு கிடைக்காதது வருத்தமே/

    • பொன்.முத்துக்குமார் Says:

      சிறந்த பத்திரிகையாளர் விருது மனுஷ்-க்கு கிடைக்கலையா ? அடடே :)


Leave a reply to இலவசக்கொத்தனார் Cancel reply