‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்!

July 21, 2015

திராவிடர்களது அடிப்படையே பீலா விடுவதும், தாங்கள் விடும் பீலாக்களைத் தாங்களே நம்பிவிடும் தன்மையும்தான்.

திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…

திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.

ஆகவே, வீரமணி அவர்கள் தொடர்ந்து, ஏகோபித்து உளறிக்கொட்டுவதில் ஆச்சரியமேயில்லை!

-0-0-0-0-0-0-0-

இதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், நகைச்சுவையாக-கிண்டலாக ஏதாவது எழுதப்பட்டாலும்கூட அதனையும் படு ஸீரியஸாக (அதை வெள்ளைக்காரன் எழுதிவிட்டான் என்பதாலேயே?) எடுத்துக்கொண்டு நகைக்கத்தக்க விதத்தில் குடுகுடுவென்று ஓடிவந்து உளறிக்கொட்டுவது என்பது திராவிடர் கலக ‘பெரிய சன்னிதானம்’ வீரமணி அவர்களின் புதிய பரிணாம வளர்ச்சி! வாழ்க!!

…என்ன ஆயிற்று அய்யா, உங்களுக்கு? ஆரிய திருஷ்டி பட்டுவிட்டதோ? அல்லது ஏதாவது பூதம்பிரேதம் என எதையாவது ஏடாகூடமாகப் பார்த்துவிட்டு பயப்பிராந்தியில் புத்திபேதலித்துவிட்டதா??

எதற்கும், வீட்டில்  ‘சுற்றிப்போடச்’ சொல்லவும்! உங்கள் இனவிரோதிகள் எப்படியெல்லாம் உங்களைக் கவிழ்க்கலாம் எனத் தொடர்ந்து சதிசெய்வது உங்களுக்குத் தெரியாதா என்ன?

மேலதிகமாக,  பாவப்பட்ட தஞ்சையில் நஞ்சைபுஞ்சை நிலங்களை வளைத்துப்போட்டு, அழித்து நிர்மாணிக்கப்பட்ட உங்கள் அதிசெல்லமான  பெரியார்மணியம்மை பல்கலைக் கழகத்தில் – உங்கள் ப்ரேன்ட் விஞ்ஞான(!)! வளர்ச்சிக்காக சாவகாசமாக உழைக்கும்போது – அவசியம், பக்கத்திலிருக்கும் நவக்கிரகத் தலங்களுக்கும் கமுக்கமாக முட்டாக்குப் போட்டுகொண்டு (அல்லது மதச்சார்பின்மையுடன் ஒரு பர்தா/புர்கா போர்த்திக்கொண்டு) சென்று பரிகாரம் தேடிக்கொள்ளவும்.

-0-0-0-0-0-0-

சரி. என்னுடைய வாராந்திர வழக்கத்தினால் – இன்று அதிகாலையில்  ‘விடுதலை’ தளத்திற்குக் கேளிக்கைக்காகச் சென்றால்  – எனக்குப் படு பயங்கர பீதி, அதிர்ச்சி!

ஏனெனில் – வீரமணி அவர்களின் முழநீள அறிக்கையொன்று அங்கே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது: கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே! அமெரிக்க உளவியல் சங்கத்தின் முடிவினைப் பாரீர்! (http://viduthalai.in/headline/105474-psychology-american-god-beleive.html)

அமெரிக்க உளவியல் சங்கத்தின்(!) கர்ஜனைக்கு திராவிட உளறியல் சிங்கத்தின் பஜனை!

அமெரிக்க உளவியல் சங்கத்தின்(!) கர்ஜனைக்கு திராவிட உளறியல் சிங்கத்தின் பஜனை!

!

உடனே, நான் உட்கார்ந்த முக்காலியில் இருந்து கீழே வீழ்ந்து உருண்டு உருண்டு சிரித்து, என் குண்டியை நானே நீக்கிக் கொண்டேன். (ROTFLMAO© எஸ். ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு)

என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!! ;-)))

-0-0-0-0-

விஷயம் என்னவென்றால் ஜூலை 15, 2015 அன்று ந்யூஸ்நெர்ட் எனும் கிண்டல்தளம் ஒரு கட்டுரையைப் பதிப்பித்தது; அதன் சாராம்சம்/தலைப்பு: “American Psychological Association to Classify Belief in God As a Mental Illness”  (http://www.thenewsnerd.com/health/apa-to-classify-belief-in-god-as-a-mental-illness/)

அதாவது: ‘ கடவுள் நம்பிக்கையை ஒரு மூளை நோய் என அமெரிக்க மனோதத்துவ சங்கம், பகுக்கப் போகிறது!

உடனே அதிலுள்ள கருத்துகளைப்(!) பிடித்துக்கொண்டு தொங்கி, ஒரு அறிக்கையையும் தேற்றி விட்டார், தமிழின் ஒர்ரே இனமானத் தலைவர். :-(

ஆனால் – இந்த ந்யூஸ்நெர்ட் தளம் – கிண்டலான கட்டுரைகளுக்கு, அதுவும் ஆய்வுக் கட்டுரை போன்ற தொனியிலேயே முழநீளமும் அடிக்குறிப்புகளுமாக எழுதப்படும் பகடிப் பதிவுகளுக்குப் பிரசித்தி பெற்றது. பலதடவை இந்தத் தளத்தின் புத்திசாலித்தனமான கிண்டல் பதிவுகளைப் படித்துவிட்டு வாய் விட்டுச் சிரித்திருக்கிறேன்.

மேலும் இதன் ஒவ்வொரு பதிவிலும், கீழ்க்கண்டது படிக்கக்கிடைக்கும்:

About The News Nerd: The stories posted on TheNewsNerd are for entertainment purposes only. The stories may mimic articles found in the headlines, but rest assured they are purely satirical.

அதாவது:

ந்யூஸ்நெர்ட் தளத்தைப் பற்றி: இத்தளத்தில் பதிப்பிக்கப்படும் கட்டுரைகள் / கதைகள் /  விஷயங்களெல்லாம் கேளிக்கைக்காக மட்டுமே! அவை தற்போதைய பப்பரப்பா செய்திகளைப் போலத் தோன்றலாம் – ஆனால் அவையெல்லாம் பகடி எழுத்துகளே! கவலை வேண்டேல்!

…ஆனால், மூளையிலிருந்தும் துப்புரவாக விடுதலை பெற்ற வீரமணிகளுக்கு இதெல்லாம் படிக்க, சிரிக்க – சுக்களவு கொடுப்பினையுமில்லை என்பதுதான் விசேஷம்.

இதையெல்லாம் படுஸீரியஸாக எடுத்துக்கொண்டு மேலதிகமாக உளறக்கூடிய அளவில்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது சாதாரணத் தமிழர்களுக்கு ஆசுவாசம் அளிக்கலாம் என்பது மேலதிக விசேஷம்.

“…விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெ ரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்பட்டுவரும் இதழில் வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள் ளும்படியாக வெளியிடப்படும் என்றும் அச்சங்கத் தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவல் http://www.thenewsnerd.com  எனும் இணையத் தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.

மேற்கண்ட அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை – துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இவை சரியானவைகளே என்று முடிவு கட்டவும் இந்த ஆய்வுகள் பயன்படும்; இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.

இங்குள்ள பல கோடி மக்களை மதம் பிடித்துள்ளதோடு, கடவுள் நம்பிக்கை எத்தனை மோசமான நிலையில் அவர்களை வைத்துள்ளது!”

அழகான உளறல்கள். :-)))) மறுபடியும், என் குண்டியை அகற்றிக்கொண்டு, உருண்டு உருண்டு தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறேன்! [© எஸ். ராமகிருஷ்ணன்]

ஆராய்ச்சிக்கும் மரப்பாச்சிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை அறியாமல் இருப்பது இருக்கட்டும் – இந்த இனமான வீரர்களுக்கு எது கிண்டல் எது கிண்டலில்லாமல் கிண்டப்பட்டது என்பது குறித்த அடிப்படைப் புரிதல் கூட இல்லை!

இவர்களெல்லாம்தான் பகுத்தறிவாளர்களாம்! திராவிடக் கோமாளிக் கோமகன்களைப் பற்றி நினைத்தாலே கூட சிரித்துச் சிரித்து வயிறே வலிக்கிறது.

கொஞ்சம்கூடப் பொறுப்புணர்ச்சியோ அல்லது வெறும் புணர்ச்சியோ கூட இல்லாமல் – பின்புலத்தைப் புரிந்துகொள்ளாமல், இப்படியா முழ நீளத்துக்கு உளறிக் கொட்டிக் கும்மியடிப்பது?

யுவகிருஷ்ணாவே, ‘காகித நக்ஸலைட்’ வினவு ஆசாமிகளே கூட இவ்வளவு மோசமில்லையே! :-(

-0-0-0-0-0-0-0-

Screenshot from 2015-07-21 10:02:47

இந்த சிரிப்புத் துணுக்கை இன்னமும் துண்டுதுண்டாக ஆக்கிவேறு தமிழகத்தில் படையல் வைக்கவேண்டுமாம். எப்படி இருக்கிறது (தற்போது சிங்கப்பூரில் இருக்கும்) இனமானச் சிங்கத்தின் கட்டளை? 8-)

Screenshot from 2015-07-21 06:52:27

திக முழுவதும் முட்டாள்களால், பகுத்தறிவு அற்றவர்களால் – வெறும் அற்ப வெறுப்பாளர்களால் நிரப்பப்பட்டது என்பதற்கு, இதனை விட ஒரு மேலதிகச் சான்று தேவையா என்ன?

-0-0-0-0-0-0-0-

சரி.

நான் திராவிடனல்லன். ஆகவே கயமைவாதியோ, கொள்ளைக்காரனோ அடிமுட்டாளோ அல்லன். விசிலடிச்சான் குஞ்சப்பன் அல்லன்.  அரைவேக்காட்டு அயோக்கியன் அல்லன்.

ஆனால், நான் ஒரு சாதா, சாமானியத் தமிழன். ஆகவே சும்மனாச்சிக்கும் உளறிக் கொட்டாதவன். மனதாறத் திருடாதவன்.  மூளையுள்ளவன், ஹோம்வர்க் செய்பவன்.

மேலும் – மிக முக்கியமாக, தன் எல்லைகளை அறிந்தவன்.

ஆக, இந்த ந்யூஸ்நெர்ட் விஷயம் தொடர்பாக இன்னமும் கொஞ்சம் நோண்டினேன். அதாவது – இந்த ‘அமெரிக்க மனோதத்துவ சங்கம்’ என்பது விடுதலை வீரமணி அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல அரைவேக்காட்டு, வெறுப்பிய ‘ஆராய்ச்சி’ எழவுகளைச் செய்யவே செய்யாது – அது மனோதத்துவச் சான்றோர்களின் தொழில்முறைக் குழுமம், ஆகவே மிக மரியாதைக்குரிய நிறுவனம் என்பது தெரிந்தாலும் – இப்படிச் செய்தேன்.

‘அமெரிக்க மனோதத்துவ சங்கம்’  தளத்தில் இது தொடர்பாக ஏதாவது, ஒரு சுக்காவது வந்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை.

ஆகவே ‘அமெரிக்க மனோதத்துவ சங்கம்’ ஆட்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இந்த விஷயங்கள் தொடர்பாக ஏதாவது நடந்துகொண்டிருக்கிறதா என்று விசாரித்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் எனக்கு பதில் வந்தது; அதன் சாராம்சம்.

“எங்கள் ‘அமெரிக்க மனோதத்துவ சங்கம்’ தொடர்பாக  ‘ந்யூஸ்நெர்ட்’ எழுதியிருப்பது கேளிக்கைக்காக மட்டுமே; அதில் உண்மையில்லை. அது நகைச்சுவை.

“திரு வீரமணி, அவருடைய தளத்திலிருந்து எங்கள் அமைப்பின் ‘ஆராய்ச்சி’ தொடர்பான பொய் விவரங்களை அகற்றவேண்டும். இல்லையேல் அவர், ந்யூஸ்நெர்ட் தளத்தைப்போல ஒரு டிஸ்க்லெய்மர் போட்டுக்கொள்ளலாம். மனோதத்துவ அறிஞர்களாகிய எங்களுக்கும் நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. தவறான செய்திகளைப் பரப்பினால் அது அமெரிக்கச் சட்டப்படி குற்றமாகும். ஆகவே, இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல, நீங்கள் அதன் ஆங்கில மொழியாக்கத்தை அனுப்பினால் உதவியாக இருக்கும்.

“சரியான விவரங்களுக்காக திரு வீரமணி,  தாராளமாக எங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்கள் அமெரிக்க தொலைபேசி எண்கள்: (800) 374-2721,  (202) 336-5500; எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ள: public.affairs@apa.org. மேலதிக விவரங்கள் இங்கே: http://www.apa.org/about/contact/contact.aspx

அவ்வளவுதான்.

ஹ்ம்ம்… இந்த ஒரு குறைந்த பட்ச சரிபார்த்தலைக்கூட இந்த பகுத்தறிவாலறிவர்கள் செய்யவில்லை என்பதுதான் புளகாங்கிதம் தரும் ஆச்சரியம்…

இதுதாண்டா அரைகுறை திராவிடத்தனம்!

-0-0-0-0-0-0-

இப்போது, மகாமகோ விடு தலை வீரமணி அவர்களிடம் ஒரு அற்ப அடியேனின் –   தாழ்மையான விண்ணப்பம்:

அய்யா, பகுத்தறிவுப் பகலவ தமிழர்தலைவ மானமிகு வீரமணி அவர்களே,

தங்கள் சன்னிதானத்துக்கு, ஒரு அற்பத் தமிழனாகிய நான் – தெண்டனிட்டு, கைகூப்பி, கண்ணீர் மல்க வைக்கும் கோரிக்கை.

இதே ந்யூஸ்நெர்ட் தளத்திலிருந்து சில மேலதிக திடுக்கிடவைக்கும் கட்டுரைகளின் சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன். இவற்றையும் மொழிபெயர்த்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட துண்டுப் பிரசுரங்களாக தமிழகத்தில் கொடுக்கமுடியுமா?

என்னைப் போன்ற முட்டாக்கூ தமிழர்களை உய்விக்க முடியுமா?

திராவிட இயக்கத்தின் இனமானத்தைக் காப்பாற்ற, இதனைக்கூடச் செய்யமாட்டீர்களா என்ன?

அறிவியல், ஆராய்ச்சி என பொழுதன்னிக்கும் அலையும் நீங்கள், ஒரு மகாமகோ பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் — உங்கள் அடிவருடிகளின், பாவப்பட்ட மாணவர்களின் மேன்மைக்காக இதனைக் கூடச் செய்யமாட்டீர்களா என்ன?

நன்றி.

இப்படிக்கு:

சிரிப்புமிகு ராமசாமியார்

–0-0-0-0-0–

விடுதலை வீரமணி அவர்களின் பின்னால் அணிவகுத்து, தங்கள் மூளைகளை அடமானம் வைப்பவர்களால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அவருடைய பாவப்பட்ட மாணவர்களை நினைத்தால் தான்  பரிதாபமாக இருக்கிறது.

ஆனாலும் – நீர் தன் மட்டத்தை, படு மட்டத்தை அடையும் என்பதும் உண்மைதானே! ஆக – அடிப்படையில் மோசமான மாணவர்களுக்கு, அவர்களைவிடப் படுமோசமான கல்விக்கடைகள்தான் கிடைக்கவேண்டும் அல்லவா?

:-(

27 Responses to “‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்!”

  1. ravi Says:

    அசத்தல் பதிவு…
    //அய்யாவின் mind வாய்ஸ் .//.
    எதோ பிழைப்பு ஓடுகிறது .. அதையும் கெடுக்க பார்கிறீர்களே ..ஆரிய சதி …

  2. Selvaraj Says:

    உங்கள் எழுத்துக்களை சமீபகாலமாக படித்து வருகின்றேன். திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நீங்கள் கலாய்ப்பது ஞாயமாகவே படுகிறது. ஆனால் இவர்கள் மட்டும்தான் தவறு செய்கிறார்களா? திராவிட உணர்வு இல்லாதவர்கள் உண்மையாய் இருக்கின்றார்களா? அவர்கள் செயல்கள் எல்லாம் தவறே செய்வதில்லையா? அவர்களை எப்போழுதாவது விமர்சித்ததுண்டா ?


    • அய்யா செல்வராஜ், க்ராய்டன் எப்படி இருக்கிறது? குளிரோ??

      நான் தமிழன். ஆனால், ஒரு திராவிடன் அல்லன். ஆம், எனக்கு இந்த திராவிட இழவு உணர்வு இல்லை. என்னை மன்னிக்கவேண்டாம்.

      நான் ஒரு நடு நிலைக் காரனல்ல, இரட்டைவேடம் போடுபவனல்ல. ஆக, எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றியும் பிடிக்காத விஷயங்களைப் பற்றியும்தான் நான் எழுதமுடியும். பார்க்க: ராமசாமி – யாரில்லை? https://othisaivu.wordpress.com/page-1/page-9/

      நான் என்னையும் கூடவேதானே கலாய்த்துக் கொல்கிறேன்? எனக்கு என்னுடைய நகைச்சுவை உணர்ச்சியில் நம்பிக்கை உண்டு. ஆகவே திராவிடத்தை நம்புகிறேன். திராவிடம் இல்லாமல் என் வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்வேன் என்றே தெரியவில்லை. :-(

      நானும் தவறுகளைச் செய்பவன்தான். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ள முயல்கிறேன். அவ்வளவுதான்.

      எடுத்துக்காட்டாக, இந்தப் பின்னூட்ட எதிர்வினையே ஒரு தவறோ? :-)

  3. A.Seshagiri. Says:

    பாவம் அவர்! தந்தி டி .வி ரங்கராஜ் பாண்டேயிடம் மாட்டிகொண்டபின் இப்படி ஆகிவிட்டார். பிழைத்து போகட்டும் விட்டு விடுங்கள்.

  4. R.Venkatachalam Says:

    சிரியோ என்று சிரித்துவிட்டு பிறகு விலா நோவிலிருந்து விடுபட மருந்து தேடிக்கொண்டிருக்கிறேன். வீரமணி வக்கீலுக்குப் படித்து இருக்கிறார். வக்கீல்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஆனால் இவர் . . .

    • nparamasivam1951 Says:

      30 சதவீத வக்கீல்கள் உண்மையில் வக்கீலுக்கு படிக்காமல் பதிவு செய்து பணி புரிவதாக வக்கீல்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

  5. சரவணன் Says:

    ***தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர்களும் நீண்ட காலமாகக் கூறி வருவதை அமெரிக்கன் உளவியல் ஆய்வு நிரூபித்துள்ளது மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியதாகும். ***

    அப்படின்னா இத்தனை நாள் நிரூபிக்கப் படாத ஒன்றையா கூறி வந்தார் வீரமணி? நிரூபிக்கப் படாதவரை நம்பக்கூடாது என்பதுதானே பகுத்தறிவு? குழப்பமாக இருக்கிறதே!

    இன்னொன்று, நீங்கள் (அதாவது பகுத்தறிவாளர்கள்) நெடுங்காலமாகக் கூறிவருவதை நிரூபிக்க இத்தனை நாள் ஏன் ஐயா எந்த முயற்சியும் எடுக்கவில்லை? இதை அமெரிக்கர்கள் ‘நிரூபிக்கும்’ வரை எதற்காகக காத்திருக்க வேண்டும்? நீங்களே ஆய்வு செய்து, ஒருவேளை நிரூபிக்க முடியவில்லை என்றால் நாங்கள் கூறியது தவறு என்று ஒப்புக்கொண்டிருக்கலாமே?

    இப்ப ஏ.பி.ஏ.-வே தாங்கள் அப்படி எதுவும் ஆய்வு செய்யவோ நிரூபிக்கவோ இல்லை என்று விளக்கிவிட்டார்களே, அப்படியானால் ‘நாங்கள் சொல்லி வருவது நிரூபிக்கப்படாத, வெறும் அபிப்பிராயம் மட்டுமே, அதாவது எங்கள் ‘நம்பிக்கை சார்ந்த, நிரூபிக்கப்படாத விஷயம்’ மட்டுமே என்று அறிவிப்பீர்களா? அப்படி அறிவித்தால் நீங்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல என்று ஆகிவிடும்; அறிவிக்காமல் இருப்பதும் பகுத்தறிவுபூர்வமான செயல் இல்லையே! என்னதான்யா செய்வீர்கள்? பாவம்தான் நீங்கள்!

  6. சரவணன் Says:

    ஐயா பகுத்தறிவாளர்களே,
    பகடிக்கட்டுரையில்கூட, கடவுள் கருணையே வடிவானவர் என்று நம்புபவர்களுக்கு மனநலப் பாதிப்பு அந்த அளவுக்கு இல்லை என்றுதான் எழுதியிருக்கிறார்கள். (The study stated that those who perceived God as punitive was directly related to their poorer health, while those who viewed God as benevolent did not suffer as many mental problems.) அதை அப்படியே மொழிபெயர்க்கும் நேர்மைகூட இல்லாமல்,

    *** கருணையே வடிவானவன் என்று கருதுவதுடன் தங்களுக்கு மன அமைதியைத் தருபவர் என்றெல்லாம் கடவுள்குறித்து எண்ணிவரும் கடவுள் நம்பிக்கை யாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். ***

    என்று திரித்து வெளியிடுகிறீர்களே, இதுதானா உங்கள் பகுத்தறிவு?


    • அய்யா சரவணன் – நீங்கள் எனக்கு முன்னறிகமாயுள்ள சரவணன் அல்லர் என நினைக்கிறேன்.

      ஆனால் – அநியாயத்துக்கு, நான் அடுத்த பதிவில் எழுத நினைத்ததை (அதாவது வீரமணியின் அறிக்கையின் வாக்கியங்களை அலசுவதை) நீங்கள் இப்படி எடுத்துக் காட்டி விட்டீர்களே!

      உங்களுக்கு இது தகுமா? ;-)

      • சரவணன் Says:

        வழக்கமாகப் பின்னூட்டமிடும் சரவணன்தான்… இ-மெயில் ஐ.டி.பெட்டியில் தவறுதலாக என்னவோ நிரப்பப்பட்டு விட்டது..மன்னிக்கவும்.

  7. Venkatesan Says:

    சூப்பர்! உங்கள் திராவிட இயக்கம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளில், இது சிறப்பாக உள்ளது. என் மனம் கவர் கணிதத்தின் துல்லியம்!

    //திக முழுவதும் முட்டாள்களால், பகுத்தறிவு அற்றவர்களால் – வெறும் அற்ப வெறுப்பாளர்களால் நிரப்பப்பட்டது என்பதற்கு, இதனை விட ஒரு மேலதிகச் சான்று தேவையா என்ன//

    ஒரு விஷயத்தை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும், “QED” போடுமளவுக்கு இந்த விஷயம் இருக்கத்தான் செய்கிறது!

    பெரியார் மணியம்மை பல்கலையை விடுங்கள். அறிவியல் பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் இவர்கள், தமிழகத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? நோபெல் பரிசெல்லாம் வேண்டாம். Science, Nature கூட வேண்டாம். அந்தந்த துறைகளின் சிறப்பான அறிவியல் சஞ்சிகைகளில் (journals) தமிழக பல்கலை பேராசிரியர்கள் எத்தனை கட்டுரைகள் எழுதி உள்ளனர்?

    திரு வீரமணி அவர்களை அடுத்தபடியாக “Onion” படித்து துண்டறிக்கைகள் விநியோகிக்குமாறு பரிந்துரைக்கிறேன். nerdnews தளத்தையும் மீறிய அதிரடி சமாச்சாரங்கள் அங்கே கிடைக்கும் :-)

    உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
    பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
    தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
    மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே!

    அய்யய்யோ, எனக்கு பெரிய மன நோய். சீக்கிரம் டாக்டரை கூப்புடங்க! சட்டைய கிழிசுக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கத்துல இருக்குறவன் கொரவளைய கடிக்கரதுக்கு முன்ன சீக்கிரம் டாக்டரை கூப்புடங்க.

  8. Sivakumar Viswanathan Says:

    May be the next article in Viduthalai will refer fakingnews.firstpost.com. So be it


  9. […] விடுதலை வீரமணி செய்த முட்டாள்தனம் பற… வேடிக்கையாக இருந்தது. திக காரர்களின் வழக்கமான அசட்டுத்தனம். அவர்கள் எப்போதுமே மேலைநாடுகளில் ஞானம் விளைவதாக நம்பும் மூடர்கள். ஆனால் நாசா ராமர்பாலத்தை அடையாளம் கண்டுவிட்டது என்றும் சனீஸ்வரன் கோயில் முன் துணைக்கோள்கள் திசைமாறுவதாக நாசாவே சொல்லிவிட்டது என்றும் நம்பும் இந்துபக்தர்களும் இதே மனநிலைகொண்டவர்கள்தான் […]

  10. Jesreel Says:

    நாத்திகம் பேசுவது திராவிடர்கள் மட்டுமல்ல….நாத்திகர்களின் தலைவர் வீரமணியும் அல்ல…..இறை நம்பிக்கை அற்றவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நல்ல பதில் தருவதே நல்ல சிந்தனையாகும்…..அதை விடுத்து தவறாக புரிந்து (error ) எழுதியதை விமர்சிப்பது அனாகரீகமாகும்.


    • அய்யா, தங்களுடைய பகுத்தறிவுக்கு நன்றி.

      நானும் இறை நம்பிக்கை அற்றவன் தான், சரியா? ஆனால் நான் அற்ப கேள்விகளைக் கேட்கமாட்டேன். அறிவுரைகளையும் கொடுக்கமாட்டேன். இரட்டைவேடம் போடமாட்டேன்.

    • Venkatesan Says:

      பகுத்தறிவென்ற பெயரில் பலரையும் சீண்டிக்கொண்டு, அறிவுரை சொல்லிக் கொண்டு இருப்பவர் பகுத்தறிவோடு இருக்க வேண்டாமா? பகுத்தறிவென்பது பகுத்து, ஆராய்ந்து அறிவது. கடலை மிட்டாய் பொட்டலம் வாங்கிய காகிதத்தில் இருப்பதை அப்படியே ஏற்பதல்ல!

      • nparamasivam1951 Says:

        பகுத்தறிவு என்பது வேலையற்ற வீணர்களின் வீண் சவடால். வாய் வீச்சால் வயிறு வளர்ப்பவர்கள் என எப்போதோ படித்த ஞாபகம்.

  11. poovannan73 Says:

    சான்றுகளின் அடிப்படையிலா கடவுளை நம்புகிறார்கள்.முட்டாள்தனம்,ஆராய்ந்து பார்க்காமல் கொண்டாடுவது எனபது எனபது கடவுளை நம்புபவர்களுக்கு மட்டும் தானா.

    மோடி தான் சிறந்தவர்,குஜராத் உலகத்துக்கே வழிகாட்டுகிறது என்று அடித்து விட்டது எல்லாம் எதன் கீழ் வரும்

    கணினியில் கணினியோடு ஆடும் சதுரங்க விளையாட்டுக்கு, நமக்கு வேண்டிய நிலையோடு விளையாடலாம்.ஒன்றாம் நிலையோடு விளையாடி கொண்டு மகிழ்ச்சி அடைவதை நீங்கள் இணையத்தில் செய்கிறீர்கள்.சான்றுகளின் அடிப்படையில் விளையாடினால் தோற்று விடுவோம் என்ற பயம் இருப்பது மகிழ்ச்சி தான்

    இப்படி உண்மையிலேயே ஒரு ஆராய்ச்சி நடந்து இருந்தாலும் அது ஏற்று கொள்ளப்படுமா.இவை அனைத்துமே subjective வகை ஆராய்சிகள் தான். ஆராய்ச்சிக்கும் கிண்டலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

    எந்தவித சான்றுகளும் இல்லாமல் இஸ்லாமியர்களை பற்றி எப்படி அவதூறுகளை அள்ளி விட முடிகிறது,ஹிந்துத்வா இயக்கங்களை தலையில் தூக்கி கொண்டாட முடிகிறது.தனக்கு சாதகமாக பொய்களை,பகடிகளை பயன்படுத்துவதை உங்களை போல வீரமணியும் செய்து இருக்கிறார்.

    ஹிந்டுத்வர்களிலேயே மிக மிக புத்திசாலி தாங்கள் தான்.இந்தியாவை சார்ந்த,உலகத்தின் பல பகுதிகளில் வாழும் ஹிந்டுத்வர்களை நோக்கி சான்றுகளின் அடிப்படையில் கேள்விகளை சில ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்களேன் சார்

    கடவுள் நம்பிக்கை பற்றிய கேள்விகளுக்கும்


    • வாங்கய்யா பூவண்ணன், வாங்க! :-)

      எங்கே உங்களை நெடுநாட்களாகக் காணோம் என்று ஆச்சரியப் பட்டுக்கொண்டிருந்தேன்!

      // ஆராய்ச்சிக்கும் கிண்டலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

      இம்மாதிரி அற்புதமான பொன்மொழிகளை நான் இதுவரை கேட்கும் பாக்கியமே கிட்டியதில்லை!

      இப்போது உங்கள் தயவால், இவையெல்லாம் சாத்தியமாகி இருக்கின்றன. பொலிக, பொலிக!

      ஒரு விண்ணப்பம்: கொஞ்சம் பொறுமையாக உங்கள் பின்னூட்டங்களை இடலாமே! நான் செய்வதைப் போன்ற தவறுகளையாவது தாங்கள் களைந்துகொள்ளலாம் அல்லவா?

      நன்றி.

      • poovannan73 Says:

        சார் SUBJECTIVE STUDIES ஒபினியன் போல் போல தான் .

        நக்கீரன்,ஜுவி அல்லது பல முறை சரியாக கணித்த வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் ஒபினியன் போல் விஞ்ஞானம் என்பீர்களா

        உருவ வழிபாடு,பல தெய்வ வழிபாடு மன நோய் என்று பல ஆயிரம் பேரை ஆய்வு செய்து ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டால் ஏற்று கொள்வோமா

        நாசா கண்டு பிடித்து விட்டது எனபது தான் தவறான மத நம்பிக்கை/அசட்டுத்தனம் மற்றவை (யாகம் வளர்ப்பது,குடமுழுக்கு செய்வது,வேத மந்திரங்கள் ஓதுவது,இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்வது,உணவு படைப்பது,கடவுள் வருவார் ,தண்டிப்பார் என்று நம்புவது எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று போல பேசுவது அசட்டுத்தனம் இல்லையா

  12. poovannan73 Says:

    இருக்கும் ஒன்றை பற்றி தான் ஆராய்ச்சிகள் செய்ய முடியும்,எதிர்க்க முடியும்,முடிவுகள் தவறு என்று சான்றுகளை திரட்ட முடியும் ,முன் வெளிவந்த ஆராய்ச்சிகள் தவறு என்று நிரூபிக்க ஆராய்ச்சிகள் செய்ய முடியும்.

    கடவுள் நம்பிக்கை ஒரு முட்டாள்தனம்,அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்றால் அதற்க்கு எதிராக கடவுள் மறுப்பு என்பதும் முட்டாள்தனமாக தான் இருக்கும்,இருக்க முடியும்.கடவுள் மறுப்பு ஒரு புது மதம்.எல்லா மதங்களை போல அதன் அடிப்படையும் பொய் புரட்டுகளின் மீது தான் இருக்கும்.

  13. ravi Says:

    பூவண்ணன், உங்களுக்கான தளம், வசவு(வினவு) ஆகும் .. சம்பந்தம் இல்லாமல் எதற்கு இங்கே !!!
    ஒரு சாதாரண நகைச்சுவை கட்டுரையை கூட புரிந்து கொள்ளாமல் விடுதலை பத்திரிக்கை அடிச்சு விட்டு உள்ளது .இதை பற்றி கேட்டால் , சம்பந்தம் இல்லாமல் எதற்கு ஹிந்டுத்வா , இஸ்லாம் எல்லாம் !!!! முற்போக்கு என்றால் இது தானோ ..

    சரி , ஆம்பூர் கலவரம் பற்றி என்ன கருத்து உங்களுக்கு ??? எல்லா முற்போக்கு ஜீவிகளும் பம்முவது எதனால்?????????

    • nparamasivam1951 Says:

      பூவண்ணன் பதில் அளிக்க முடியாத கேள்விகளை கேட்டு விட்டீர்கள். ஆகவே அவர் வினவு தளத்திற்கே செல்ல முடிவு எடுத்து விட்டார்.

    • poovannan73 Says:

      தல , நாட்டாமையா மாறி யார் எந்த தொழில் செய்யனும்,என்ன படிக்கணும்,என்ன படிக்க கூடாது ,எங்கு பின்னூட்டம் போடணும் நு தீர்ப்பு சொல்றதை இன்னும் விடலையா

      ஆம்பூர் கலவரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தார்கள்.ஒரு இஸ்லாமியரை சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்து கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

      ஹிந்டுத்வர்கள் இப்படி கொலை செய்த ஒரு இன்ச்பெக்டருக்காக பொங்கியது ஞாபகம் இருக்கிறதா.அவர் இப்போது தண்டிக்கபட்டு இருக்கிறார். அத்தி பூத்தார் போல சில சமயம் சில நேர்மையான தீர்ப்புகளும் வரும்.காவல்துறை ஆய்வாளருக்கு ஆதரவாக பொங்கிய இந்துத்வர்களே காலம் மிக மெதுவாக வேணும் மாறி வருகிறது


Leave a reply to Selvaraj Cancel reply