[ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள்

August 26, 2014

ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம் – SNR: http://en.wikipedia.org/wiki/Signal-to-noise_ratio  – எம் ராஜா அவர்கள் கவனிக்கவும்; விக்கிபீடியா சுட்டி கொடுத்திருக்கிறேன்! ;-)

இன்னிக்கி இத்தாண்டா என்னோட கர்த்து! பிட்ச்சிக்கினு ஓட்ரா…‘  ரீதியில் மணிகண்டன் அவர்கள் இக்காலங்களில் எழுதுவது குறித்து என் பிலாக்கணமும், சில நண்பர்களின் கருத்துகளும், என் எதிர்வினையும் – இதற்கு ஒரு தனி பதிவு தேவையா என்றாலும்…

(சிலவற்றில் நண்பர்களின் வரிகளையும் பிறவற்றில் முடிந்தவரை சுருக்கிச் சாராம்சத்தை மட்டுமும் கொடுத்திருக்கிறேன். இப்பதிவில் முடிவில் உள்ள ‘தொடர்புள்ள பதிவுகளில்’ – மூன்றாவது சுட்டி – இந்த உரையாடலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து)

1. ஒரு நண்பர் எழுதினார்:  ‘அவர் பல நல்ல காரியங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பல பள்ளிகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார், தெரியாதா உனக்கு? ஆக அவர் எழுதுவதில் வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கலாமே? பொறாமை காரணமாக நீ எழுதியிருப்பாய் எனவும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர் நிறைய எழுதினால் தினம்தினம் எழுதினால் என்ன பிரச்சினை?

அய்யா – அவர் செய்திருக்கலாம், ‘அடிப்படையில்’ நல்ல மனிதராக இருக்கலாம். ஒரு நல்ல குடும்பஸ்தனாக குடும்ப வேலைகளில் சரிபாதியாவது செய்பவராக இருக்கலாம். வேலையிடத்தில் துப்புரவாக, அருமையாகப் பணிசெய்பவராக, ப்ரொஃபெஷனலாக இருக்கலாம். சுற்றுப் புறச் சூழலைப் பேணுபவராக, வாய்ப்பேச்சு மட்டும் இல்லாதவராக, ஒரு நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் – எழுதுவதில் சிலசமயம் அரைகுறைத்தனத்தை தம்பட்டம் அடிப்பதாகவும் அரைவேக்காட்டுத் தனத்தையும் வெளிப்படுத்தலாம். பாதகமேயில்லை. ஆனால் – பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரவவிடுவதை – அறிவுஜீவிய நேர்மையில்லாமல் (intellectual dishonestyயுடன்) எழுதுவதைத் தான் நான் வெறுக்கிறேன்.

சரி. ஒரு பேச்சுக்கு, நான்  ஒரு கிராமாந்திரப் பள்ளியில் பலவருடங்களாகச் சுய அர்ப்பணிப்புடன் இலவசமாக வேலை செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் என்னிடம் சந்தோஷமாக இருக்கிறார்கள், ஏதோ கற்றுக்கொள்கிறார்கள் எனவும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், மேலதிகமாக  ஊக்கபோனஸாக – படிக்கவரும் சிறுமிகளிடம் ‘பாலியல் வம்பு’ செய்பவனாக, பள்ளிச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவனாக நான் இருந்தால் — நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒப்புக்கொள்வீர்களா? நல்ல காரியங்களைச் செய்கிறேன் என்று – காமாந்தகனான. திருடனான என்னை விட்டுவிடுவீர்களா?

அவர் எழுதும் பாடுபொருட்களைப் பார்த்தால், முதிர்ச்சியைப் பார்த்தால்  – அவர் ஒரு இளைஞராகத்தான் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை 30வயதினராக இருக்கலாம். நான் ‘காலாகாலத்தின் திருமணம் செய்துகொண்டு லைஃபில் ஸெட்டில் ஆகி இருந்தால்’ எனக்கு மகனாகவே கூட இருக்கலாம் அவர். நான் ஏன் அவரைப் பார்த்துப் பொறாமையடையப்போகிறேன்? :-) அவருடைய சில கட்டுரைகள் நான் முன்னமே எழுதியதுபோல மினுக்மினுக் என்று அழகாகவே இருக்கின்றன.

மேலும் நான் ஒரு தமிழ் எழுத்தாளனுமல்லன். தமிழில் எழுதுபவனெல்லாம் தமிழ் எழுத்தாளன் என்றால் ஒத்துவருமா? ஆனால் அவர் ஒரு எழுத்தாளர். அவருடன் போட்டியிடும் தரமும் ஆசையும் எனக்கு நிச்சயம் இல்லை. நான் எழுதுவதற்குக் காரணங்களே வேறு.

மணி அவர்கள் மணிமணியாக தினம்தினம், மணிக்கு மணி எழுதுவதெல்லாம் பிரச்சினையில்லை. ஆனால் என்னவற்றை எழுதுகிறார் எப்படி எழுதுகிறார் என்பதுதான்… அவர் தொடர்ந்து தரமாக எழுதினால் நானும் தொடர்ந்து படித்துவிட்டுப்போகிறேன். எனக்கு ஒரு மானப் பிரச்சினையுமில்லை. நான்  ஓரளவுக்கு அறிவுள்ள ஒரு வாசகன் மட்டுமே!

மேலும் இவருடைய கவிதைப் புத்தகம் ஒன்றை விலைகொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன் – ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி.’

நிச்சயம் இதனால் இவர் மேல் கோபம் என்றெல்லாம் இல்லை. வெறும் பெருமூச்சுதான். ஆனால், இனிமேல் — எந்த  முன்அறிமுகமுமற்ற,  நான் மதிக்கும் நண்பர்களால் பரிந்துரைக்கப்படாத தமிழ்க் கவிதைக்காரனையும் நான் படிக்கவே போவதில்லை என்று மட்டும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

-0-0-0-0-0-0-

2. இன்னொருவர் எழுதினார்: “அவர் எழுதினால் உனக்கு என்ன வந்தது? Why can’t you ignore him and proceed? Surely there are good, other interesting things that you can write about instead of wasting time. Why are you focusing on the negative sides?

அய்யா, என் வட்டாரச் சிறுவர்கள் (இப்போது விடலைகள் – இளைஞர்களாகப் போகிறவர்கள்) + கல்லூரி செல்லும் இளைஞர்கள் சிலரிடம் நான் தொடர்ந்த தொடர்பில் இருக்கிறேன். அவர்களிடம் தமிழிலும் (நல்ல/பிற) கட்டுரைகளைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன். நம் உலகத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள, நடக்கும் விஷயங்களைப் பற்றி – தமிழ் பின்புலத்தில் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள இவை உதவலாம் என எண்ணுகிறேன். சில முக்கியமான (என் பார்வையில்) பத்திரிகைகளையும் வாங்கிக் கொடுத்து – இவர்களிடம் சுற்றுக்கு விடும் பழக்கமும் இருக்கிறது. ஆழம், காலச்சுவடு, எகனாமிஸ்ட், புத்ததர்மா, ஒரையன் சஞ்சிகை போன்றவற்றை இப்படிச் செய்கிறேன். மேலதிகமாக, அவர்களுக்கு நான் சுட்டி கொடுப்பது பத்ரி சேஷாத்ரி அவர்களின் தளம் மட்டுமே; அது மிகவும் வசதியாக இருக்கிறது. அங்குள்ள இடதுபக்கச் சட்டத்தில் போய், வாரத்திற்கு ஒருமுறையாவது அதில் இருக்கும் சுட்டிகளைப் படிக்கச் சொல்வேன். முடிந்தால் அவற்றை விவாதிப்போம். பலமுறை செய்திருக்கிறோம். அப்படித்தான் யுவகிருஷ்ணா அவர்களின் தளம் சென்று வெறுத்துப் போனேன். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை எனக்கு முன்னமே நன்றாகத் தெரியும் என்றாலும்  இந்தப் பையன்கள் மூலமாகத்தான் அவருடைய இணைய அவதாரத்தைப் பற்றி அறிந்துகொண்டேன். தலையலடித்துக்கொண்டேன். வினவு பற்றித் தெரிந்துகொண்டது கூட, இந்தப் பையன்களுடன் அதனைப் படித்துச் சிரிக்கும்போதுதான். ஞாநி அவர்களின் அணுகுண்டுகளைக் கூட இப்படித்தான் அறிந்துகொண்டேன்.

ஆக  – இந்த இளைஞர்கள்/குழந்தைகள் (இவர்கள் மட்டுமல்ல  – பிறரும் கூட) தவறான விஷயங்களை – அரைகுறைத்தனங்களை, அற்ப சராசரித்தனங்களை இனம் கண்டுகொள்ளவேண்டும் எனவும் விரும்புகிறேன். ஒதுக்கவேண்டும் என விழைகிறேன். முடிந்தவரை அவர்களுக்கு (என் பார்வையில் தான்) ‘மாடல்ஸ் ஆஃப் எக்ஸெல்லன்ஸ்’களை அறிமுகப் படுத்த விழைகிறேன். இல்லாதபோது, ஏற்கனவே தமிழகத்தின் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வந்து கொண்டிருக்கும் எனக்குப் பித்தம் தலைக்கேறிவிடுகிறது.

ஆகவே – இந்த மாதிரி பொதுசபையில் எழுதுபவர்களுக்குக் கொஞ்சமேனும் பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும் என விழைகிறேன். இல்லாதபோது கொதிப்படைகிறேன்.  நேர்மையற்று எழுதினால் எனக்குக் கோபம் வருகிறது. நான் போகவேண்டிய தூரம் அதிகம்.

இந்தக் கதையைப் பற்றிய (இந்த இளைஞர்/குழந்தைகள் குழாம்) முந்தைய பதிவுகள்:

ஆனால் அய்யா – எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டுதானே இருக்கிறேன்? சில புத்தகங்கள், மனிதர்கள், இசைகள், திரைப்படங்கள் பற்றியெல்லாம் கூட நான் எழுதுவதுண்டுதானே.

ஆனாலும் நான் போகவேண்டிய தூரம் அதிகமே! ஒப்புக்கொள்கிறேன்.

-0-0-0-0-0-0-

3. இரண்டாமவர் தொடர்கிறார்: “Remember the Bernhard Goetz incident when we were in college? You think you are a vigilante? Why do you take it upon yourself to right all the wrongs? Why spend time on criticizing mediocrity?”  (பெர்ன்ஹார்ட் கெட்ஸ் பற்றிய விக்கிபீடிய குறிப்பு: http://en.wikipedia.org/wiki/Bernhard_Goetz; எம் ராஜா அவர்களே! திருப்தியா??)

அய்யா – வேறு யாராவது இந்தக் கந்தறகோளங்களைப் பற்றி எழுதினால்  – நான் அவற்றைப் படித்து ‘லைக்’ போட்டுக்கொண்டிருப்பேனே? எனக்கு இது லபிக்கவில்லை.

தமிழ்ச் சூழலில் – ஒரு விஷயம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதுதான் விமர்சனம் எனப் பார்வைகள் திரிந்து போயிருக்கின்றன. இது ஒரு சோகம்.
ஆக – கவலையேயில்லாமல் அவதூறுகளைப் பரப்பலாமா? அதுவும் பின்புலங்களை ஒன்றும் புரிந்துகொள்ளாமல் – எதிர்மறைப் பரப்பியக் கருத்துகளை அற்பத்தனமாகக் கடன் வாங்கிக் கொண்டு??

மேலும் அய்யா, எனக்கு மணிகண்டன், எஸ் ராமகிருஷ்ணன், ஆஇரா வெங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, அரவிந்த அடிகா, அருந்ததிராய் (அனைவரும் ஒரே தரமில்லை என்றாலும்) போன்றவர்களெல்லாம் நன்றாக எழுதினால் – பிடிக்கும்தான். ஆனால் – நாசூக்குப் பார்த்தே அரைகுறைத்தனங்களுக்குக் கொம்புசீவி விடுகிறோம்.

சரியில்லாததைச் சரியில்லை என்று சொன்னால்  – அது விஜிலன்டிஸ்ம் என்றால், எனக்குப் பிரச்சினையில்லை.

மேலும் பெர்ன்ஹார்ட் கெட்ஸ்தான் சுட்டார். ஆனால் நான் சுடவில்லை, சுடவும் மாட்டேன். குறிப்பிட்ட மேற்கண்டவர்கள் தாம் சுடுகிறார்கள். ;-) அதில் சிலர் (இணையத்திலிருந்து) சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்…

பொதுவாகவே – திராவிட இயக்கங்களால் பீடிக்கப்பட்ட தமிழ்ச்சூழலும் சராசரித்தனமும் பின்னிப்பிணைந்த மணியம்தான். ஆக தமிழ் உலகில் மாற்றுக்காக இயங்கினால், சராசரித்தனத்துடன் போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். வேறுவழியேயில்லை. ஆனால் – சொகுசாக கலிஃபோர்னியாவிலிருந்து கொண்டு கமென்ட் அடிப்பது மிகவும் சுலபம் அல்லவா?

-0-0-0-0-0-0-

4. இன்னொரு நண்பர் ஒரு மின்னஞ்சலில்,  ‘அந்தப் பதிவின் தொனி அதன் சாரத்தை விஞ்சி விட்டதோ‘ என மனதிற்குப் பட்டதாக எழுதியிருக்கிறார்.

உண்மைதான். சில சமயம் அமிலத் தன்மை மிகவும் அதிகமாகி விடுகிறது. என்னையே சுட்டெரிக்கிறது.

ஏனெனில் – நகரங்களில் வசதியாக உட்கார்ந்து கொண்டு, சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு – விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள, உரையாட வசதிகள் இருந்தாலும் ஒன்றையும் செய்யாமல்  சகட்டுமேனிக்கு அடித்து விடுவது என்பதை நான் – தமிழுக்கு, தமிழ்ச் சூழலுக்குச் செய்யும் துரோகம் என்றுதான் சொல்வேன்.

எவ்வளவோ இளைஞர்கள் (பெரும்பாலும் முதல்தலைமுறையாக ‘படிப்பறிவு’ பெற்றவர்கள்) இந்த மாதிரி அரைகுறைப் பதிவுகளால் அலைக்கழிக்கப் படுகின்றனர். அவர்கள் – இந்தக் பெருந்தகைகள் எழுதுவதையெல்லாம் தேவவாக்கு என நினைக்கின்றனர். இந்தப் போக்கு என்னை பதைபதைக்க வைக்கிறது.

மணிகண்டன் அவர்களின் அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பல – இப்படி வெள்ளந்தியாக (=முட்டாள்தனமாக)  இருப்பது வருத்தமாக இருக்கிறது. மாதிரிக்குச் சில:

  • selva raj8:23 PM GMT+5:30 மனம் கனக்கிறது
  • மாடிப்படி மாது5:12 PM GMT+5:30 \\\ மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம் \\\\  பதிவு முழுவதும் நீங்கள் விவரமாக சொன்னதை இந்த ஒரே வரியில் சுலபமாக புரிய வைத்து விட்டீர்கள்
  • Ram2:04 AM GMT+5:30 >>>>>>‘ஆமா இரண்டாயிரத்துக்குப் பிறகு அதுல ஒண்ணு இந்தியாவுக்கு வந்ததாகவும் இன்னொண்ணு இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கு’

‘கடைசியா யாரு வாங்கினாங்க?’
‘இஸ்ரேல்’

இம்சித்தலுக்குப் பெயர்பெற்ற
இம்மூன்று நாடுகளின் பெயரும்
இ என்று தொடங்குவது
இயல்பில் அமைந்ததாய்த் தோன்றவில்லை

(இந்த அற்பன் ராம் யார்? இந்தியா இம்சிக்கிறது என்றால் விட்டுவிட்டு ஓடவேண்டியதுதானே?)

  • ஜெ.பாண்டியன்2:49 AM GMT+5:30 அஞ்ஞானச் சிறுகதை மூலம் ஹிட்லரின் ஆவி படர்ந்த நாடுகளை சுட்டிக்காட்டிய விதம் கதையின் சிறப்பு..
  • Nandanan5:31 PM GMT+5:30 ஹிட்லர் மட்டும் இவிங்கள அப்படி கஷ்ட படுதலேன்னா இந்நேரம் ஐரோப்பா முழுவதும் இஸ்ரேல் ஆகி இருக்கும் !
  • நாடோடிப் பையன்7:57 PM GMT+5:30 கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.

 

 :-(((
முத்து அவர்கள் எழுதுவது போல “அவருக்கே [மணிகண்டன்] எதுவும் தெரியாத ஒரு விஷயத்தை இப்படி கோயிஞ்சாமிகள் மனதில் தவறாக விதைப்பது தவறு அல்லவா..???…”

-0-0-0-0-0-0-0-

5. பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், டீக்கடை, சலூன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும்  பொருளுக்கு விளக்கங்கள் வித்தியாசப்படும். அது அவரவர்கள் நிலையைப் பொறுத்தது.

அதற்காக ஒரு நிலையில் இருப்பவர்கள் அடுத்தவர்களைப் பேசக்கூடாது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், சொல்வதால் எத்தனை பேர் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று உண்மையாக நம்புகிறீர்கள்? அடுத்தவர்களை மட்டம் தட்டுவதால் என்ன சாதிக்கலாம் என்று நம்புகிறீர்கள்? உங்களுக்கு ஃஃபன் ஆகத் தோன்றுவது மற்றவர்களுக்கு மன உளைச்சலைத்தரக்கூடும். உண்மையில் நீங்கள் நல்லது செய்ய விரும்பியிருந்தால் மணிகண்டனிடம் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கலாமே?

அய்யா பக்கிரிசாமி, தாங்கள் சொல்வது சரிதான். நான் உங்கள் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்தவன் அல்லன். இதனைக் கிண்டலாகச் சொல்லவில்லை. உங்கள் முந்தைய பின்னூட்டங்களையும், சமன நிலையையும் கவனித்துத்தான் சொல்கிறேன்.  உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இந்த பின்னூட்டப் பின்னலில் பங்கு பெற்றுள்ள முத்து, ராஜா, ஸாம், சேஷகிரி, க்ருஷ்ணகுமார் – ஏன், ஈரோடு பென்ஹர் அவர்களுக்கும் கூட நன்றி.

இப்போது நான்கு விஷயங்கள்:

1. அவர் அபிப்பிராயம் எவ்வளவு மோசமான எதிர்வினைகளை உண்டு பண்ணுகிறது என்பதையும் தாங்கள் கொஞ்சம் கருத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவோ வெள்ளந்தி (ஹீரோ வொர்ஷிப் செய்யும்) இளைஞர்கள் – இவருடைய வாசகர்களாக இருக்கிறார்கள். இவருக்குக் கொஞ்சமேனும் பொறுப்புணர்ச்சி வேண்டாமா? இவர் எழுதுவதால் ஏற்படும் (எனக்கு மட்டுமல்ல – மற்றவர்களுக்கும் ஏற்படும்) மனவுளைச்சல்களை, வயிற்றெரிச்சல்களை ஏன் நீங்கள் கருத்தில் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?  இவர் முன்பு எழுதிய ஒரு ரொபாடிக்ஸ் கட்டுரையில்  மிகவும் தவறுதலாக  (தென்னாஃப்ரிகாவில் நடந்த ஒரு விபத்து பற்றி) ஒரு கருத்தை எழுதியிருந்தார். தொழில் நுட்பம் என்றால் என்னவென்றே தெரிந்துகொள்ளாமல் – அறிவியல் என்றாலே மோசம் என்கிற ரீதியில் ஒரு கருத்து. இத்தனைக்கும் தகவல்தொழில் நுட்பம் என்றவொன்று இல்லையென்றால் இவருக்கு, அவர் செய்து கொண்டிருக்கும் வேலை கிடைத்திருக்குமா?

இந்த கந்தறகோளத்தைச் சுட்டிக் காட்டி ஒரு ஈரோடு இளைஞன் (இவன் எனக்கு எழுத – நான் அவனுக்கு பதில் எழுத என்றெல்லாம் முன்னமேயே ஆர்ட்வீனோ வகையறா திட்டம் ஒன்று தொடர்பாக நடந்தது) என்னிடம் கேட்டபோது (நானும் ஒரு பெரிய ரொபாடிக்ஸ் விற்பன்னன் என்றெல்லாம் இல்லை  – ஆர்வமும், சில தானியங்கி யந்திரங்கள் செய்த வரலாறும், சில புத்திசாலி பிடெக் பையன்களின் ப்ராஜெக்ட் கைட் ஆக இருந்த அனுபவமும்தான்)  – நான் அவனை மணிகண்டன் அவர்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னேன்; ஆனால் அவன் செய்யவில்லை என நினைக்கிறேன்.  அவன் மணிகண்டன் அவர்களின் தீவிர வாசகர்களில் ஒருவன் –  கொஞ்சம் சிந்திப்பவனும் கூட. ஆனால் அவன் – இந்த இஸ்ரேல் கட்டுரையைப் பார்த்து  “ஏன்தான் மணிசார் இப்படி எழுதியிருக்காரோ” என எழுதினான். அதற்கு என்பதிவுதான் என் பதில்.

இது தொடர்பாக நவம்பர் 2013 வாக்கில் நான் எழுதியது:

 “ஹ்ம்ம் – பொதுவாகச் சமன நிலையில் (ரொபாடிக்ஸ் சார்ந்த சில கட்டுரைகள் போன்றவற்றைத் தவிர்த்து)  எழுதும் நிசப்தம் பதிவுக்காரரைக் கூடப் பாவம்,  அதி உணர்ச்சி வசப்பட்டு எழுத வைத்துவிட்டார்கள்.

(https://othisaivu.wordpress.com/2013/11/16/post-286/ எழுதியது)

2.  “உண்மையில் நீங்கள் நல்லது செய்ய விரும்பியிருந்தால் மணிகண்டனிடம் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கலாமே?” – நீங்கள் சொல்வது சரிதான்; ஆனால் 1) நான் உண்மையிலேயே நல்லது செய்ய விரும்பவில்லை. 2) முன்னொரு சமயம் இன்னொரு ‘டமில் எள்த்தாளர்’ அவர்களுக்கு நீளமாக, தரவுகளுடன், மிகுந்த அளவுகடந்த மரியாதையுடன் – எனக்கு இது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும் –  ‘நீங்கள் நன்றாக எழுதக்கூடியவர், நிறைய விஷயங்களைப் பற்றி எழுத ஆர்வமுடையவராக இருக்கிறீர்கள்  – உங்களுக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள், உங்களை ஆராதிக்கிறார்கள் – அவர்களை மதித்தாவது ஏன் இத்தவறுகளைத் திருத்திக் கொள்ளக்கூடாது?’ என வினயத்துடன் எழுதியபோது அவருடைய மின்னஞ்சல் பதில்:  தலைப்பு – “போடா மயிர்” – எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. மின்னஞ்சலின் சாராம்சம் – வசைகளைத் தவிர்த்திருக்கிறேன் – “நான் எழுதினால் படிக்க ஆயிரம்பேர் இருக்கிறான், உனக்கு? ஒரு ஸ்கூல் வாத்தியாரிடமிருந்து எனக்குக் கற்றுக்கொள்ளவேண்டியது எதுவுமில்லை!”   — அவ்வளவுதான். விட்டுவிட்டேன்.

ஆனால், மணிகண்டன் அவர்களும் அப்படித்தான் செய்வார் என்று சொல்லவரவில்லை. ஆனால் எனக்குத் தயக்கம். ஆனால் பொதுசபை என்று வந்தால், அடிப்படை விஷயங்களை அறிந்தோரிடம் கற்றுக்கொள்ளாமல், அபாண்டங்களைத் தொடர்ந்து அவர் எழுதினால்  – என்மாதிரி விமர்சனங்களும் வரத்தானே செய்யும்?

3. அமிலத்தன்மையுடன் எழுதுகிறேன். இது சரியில்லைதான். ஆனால் என் மனவெதும்பல் அப்படி. தமிழகத்தின் நிலையை கீழேயிருந்து பார்க்கப் பார்க்க – எனக்குப் பலசமயங்களில் பிராந்து பிடித்துவிடுகிறது. ஆக, நான் எழுதுவதை(!) ஒரு பேக்கேஜ் மாதிரி எடுத்துக்கொள்ளுங்கள். நான் நல்லது எல்லாம் செய்ய விருப்பமில்லாதவன் என்பதையும் எடுத்துக் கொள்ளுங்கள். மணிகண்டன் அவர்களை எப்படி ஒரு பேக்கேஜ் ஆக எடுத்துக்கொள்கிறீர்களோ அப்படியே என்னையும் எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு கோரிக்கை.

4. அய்யா  – தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்: “…. ஒரு நிலையில் இருப்பவர்கள் அடுத்தவர்களைப் பேசக்கூடாது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், சொல்வதால் எத்தனை பேர் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று உண்மையாக நம்புகிறீர்கள்?

இது உங்களுக்கும், நீங்கள் எனக்கு சொல்லவருவதற்கும்கூட ஒத்துவரும் தானே? :-(

-0-0-0-0-0-0-0-

சரி, போதும். எனக்கும் அலுப்பாக இருக்கிறது. அடுத்த பதிவில்  – அந்த நிசப்த மணிகண்ட இஸ்ரேல் வெறுப்புப் பதிவின் மிச்சசொச்சத்தையும் பார்க்கலாம்.

தொடர்புள்ள பதிவுகள்:

 

 

21 Responses to “[ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள்”

  1. Ramanan Says:

    This quote I read long ago comes to my mind when I see the reactions….

    “The society which scorns excellence in plumbing as a humble activity and tolerates shoddiness in philosophy because it is an exalted activity will have neither good plumbing nor good philosophy: neither its pipes nor its theories will hold water.”

    John W. Gardner

  2. nparamasivam1951 Says:

    மணி அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட உள்ளார். அதற்கான வாசக தேடல், மற்றும் பதிப்பாளர்தேடல், பதிவுகளின் வெவ்வேறு தலைப்புகள் மூலம் புது வாசகர் இணைதல் என்ற நோக்கில் தினம் ஒரு பதிவு வருகிறது. இது என் கருத்து. தவறாகவும் இருக்கலாம்.

  3. muthu Says:

    //வினயத்துடன் எழுதியபோது அவருடைய மின்னஞ்சல் பதில்: தலைப்பு – “போடா மயிர்” – எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. மின்னஞ்சலின் சாராம்சம் – வசைகளைத் தவிர்த்திருக்கிறேன் – “நான் எழுதினால் படிக்க ஆயிரம்பேர் இருக்கிறான், உனக்கு? ஒரு ஸ்கூல் வாத்தியாரிடமிருந்து எனக்குக் கற்றுக்கொள்ளவேண்டியது எதுவுமில்லை!” — அவ்வளவுதான். விட்டுவிட்டேன்.//

    இது அநேகமாக நம்ம அண்ணன் பின்நவீனத்துவ பேமானி தான்..

  4. Prabhu Says:

    Inaiya suppudu Ram. How is it? :)

  5. Anonymous Says:

    நீங்க பாட்டுக்கு ரோஷப்பட்டு பாலஸ்தீனப் பிரச்னை பற்றி ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் ஏதேனும் எழுதிவிடாதீர்கள் , இத்தப் படி, அத்தப் படி என்று சொல்லியே பொழப்ப ஓட்டிரலாம் !

    • பொன்.முத்துக்குமார் Says:

      ஆமா நாம அப்படியே ’இத்தப் படி, அத்தப் படி’-ன்னு சொன்னத மட்டும் படிச்சி ஏழு கிழியா கிழிச்சிட்டோம்ல.

      என்ன சொல்றோம்-கிறதையே மூஞ்சிய பானைக்குள்ள கவுத்துகிட்டு வந்து சொல்லுற “தைரியசாலி” ஆழமா சுவாரஸ்யமா எழுதிட்டா மட்டும் வந்து சூட்டோட (சூ..தோட இல்லப்பா) சூடா படிச்சி புரிஞ்சிக்கிடப்போறாராக்கும்.

      குத்து கொமட்ல !

      —–>>>>>> வுட்ரூபா, முத்துக்குமாரு… பொள்ச்சு போவட்டம்…

      மெட் ராசு டமில் வாள்க… :-))

  6. velmurugan Says:

    நீங்க பாட்டுக்கு ரோஷப்பட்டு பாலஸ்தீனப் பிரச்னை பற்றி ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் ஏதேனும் எழுதிவிடாதீர்கள் , இத்தப் படி, அத்தப் படி என்று சொல்லியே பொழப்ப ஓட்டிரலாம் !


  7. மணிகண்டன் மனிதர்களை பற்றி எழுதுவது நன்றாகவே இருக்கின்றது. பலரை கூர்ந்து கவனிக்கும் ஆளாக இருக்கின்றார். சம்பவங்கள், மனிதர்கள் வகையறா ஓகே.

    ஆனால் சமூக, அரசியல் விவகாரங்களை எழுதும் போது மிகவும் மேலோட்டமாக, நண்பர்களுடன் பேசுவதை போல எழுதிவிடுகின்றார். நம் நண்பர்கள் அப்படி பேசினால், சில சமயம் பதில் சொல்வோம், விவாதம் வரும், கொஞ்சம் தெளிவு வரும். ஆனால் அதை எழுதும் போது விவாதம் எல்லாம் செய்ய முடியாது. தப்பு என்று தெரிந்தாலும் சொல்ல முடியாது, சொன்னால் உங்களுக்கு கிடைத்த அனைத்து அறிவுரைகளும் கிடைக்கும். புண்ணிய பாக்கியம் இருந்தால் நல்ல வசைகளும் கிடைக்கும்.

    கொடுமை என்னவென்றால், யாரின் கருத்து தவறு என்று சொல்கின்றோமோ அவரை விட அவரது தொண்டரடிபொடியர்களின் கூச்சல் பலமாக இருக்கின்றது.

    மருத்துவர்களை பற்றிய கட்டுரை, அடிக்கடி வரும் ஐடி தவிர்த்த தொழிலில் வரும் வருமானம் பற்றிய கட்டுரைகள் எல்லாம் அந்த வகைதான். இவர் எழுதிய சில கட்டுரைகளை படித்து ஐடி துறையில் இருக்கும் எனக்கு என் வேலையை பற்றிய பயமே வந்துவிட்டது, நல்லவேளையாக எப்படியோ அதை மறந்து போனேன்.

    தினமும் எழுதுவதற்கும் கட்டுரையின் தரத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என் கருத்து. அவரால் சுவரஸ்யமாக சொல்ல முடிகின்றது.


  8. இந்தளவிற்கு அவரது கட்டுரையை உடைத்து போட்டு ஆராயும் உங்களால், அவரது “அங்க என்னம்மா சத்தம்” என்ற தலைப்பை அதே போல் ஆராய முடியுமா? அதற்கு உங்களுக்கு வடிவேலரசியல் தெரிந்திருக்க வேண்டும். தெரியுமா?

  9. Ranga Says:

    Such an intelligent person as you would understand the reasons behind all this misfactualization of facts by vinavu and other ‘vethu’ writers. Show off and whip up the passion against brahmins, people from other states and anything brahmins and people from other states are likely to support. Who cares for facts when the agenda is clear. The feelows who post comments are also not as naive asyou think but they share the common agenda. But what this agenda can get them is just some solace against their imagined enemies. arikkudhu… soRiyaRaanungO..

  10. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    பினாத்துவது தமிழகத்தைச் சார்ந்தவர்களின் ஏகபோக உரிமையோ என்று நான் ஒரு சமயம் எண்ணியதுண்டு.

    ஆனால் தீஸ்தா சீதளவாதம், டீவி கூச்சல்கார ந்யூஸ்காரர்கள் என்று ஹிந்துஸ்தான அளவில் லிஸ்ட் நீளுகிறது.

    உலக அளவில் எப்படி என்று இதை ஆராய்பவர்களுக்கே தெரியும்.

    ஆனால் பேத்தல் பேர்வழிகள் பெருந்தகைகளாக இருந்தால் அவர்களின் பினாத்தல்கள் கண்டிப்பாகத் தோலுரிக்கப்பட வேண்டும். நிர்தாக்ஷண்யமாக அந்தப் பெருந்தகைகளின் பினாத்தல்கள் தோலுரிக்கப்பட வேண்டும் என்ற பேச்சு மட்டிலும் கிடையாது. அதை செயல்படுத்தவும் செய்பவன் என்ற படிக்கு உங்களுடைய பினாத்தலை தோலுரிக்கும் ஒவ்வொரு முயற்சியையும் விதந்தோதுகிறேன்.

    உலகிற்கு உண்மை எது பேத்தல் எது என்பது தெரிகிறதே. இப்படி உண்மை விளம்பப்படுவதை விதந்தோதுவதற்குப் பதில்…… ஏன் அரிப்பெடுத்து……. உண்மை விளம்புபவர்களிடம் வசவில் இறங்குகிறார்கள் என்பது புரியவில்லை. இந்தக் குளுவான் களில் யாரேனும் விவாதத்தில் இறங்க வேண்டுமானால்…….. தவறான வ்யாசத்தை எழுதிய நபருடன் அல்லவோ விவாதத்தில் இறங்கியிருக்க வேண்டும். அல்லது நீங்கள் சொல்வதை அறிவு பூர்வமாக தவறு என்று நிறுவ முனைந்திருக்க வேண்டும்.

    உலக நடப்பாகட்டும் விக்ஞானமாகட்டும் இலக்கியமாகட்டும் …………

    அற விழுமியங்களில் பிடிப்புள்ளவர்களுக்கு தத்யம் எது பினாத்தல் எது என்று தரம் பிரிக்கப்படுவதில் பெருமிதமே இருக்கச் செய்யும்.

    ஆனால் இணையத்தை மேய்ந்து ……… கண்டதே காட்சி கொண்டதே கோலம் ………. என்ற ரீதியில் உரலே உண்மை அதை வாந்தியெடுப்பதே அறிவுஜீவித்தனம்……… என்ற தமிழக இணைய கந்தறகோளப்போக்கு …………. ஏதோ குளுவான் களுடையது என்று மட்டிலும் நினைத்து விடாதீர்கள்.

    நான் மதிக்கும் பெருந்தகைகள் சிலரிடம் கூட இந்த கந்தறகோள கண்றாவி காணப்படுகிறது. அவர்களுடைய நல்ல வ்யாசங்களை விதந்தோதிய நான் அவர்களுடைய பினாத்தல்களைப் பின்னிப்பெடலெடுக்கும் போது ஆயாசமடைகிறார்கள். இதே போல வசவிலும் கூட இறங்குகிறார்கள். எனக்கு ரொம்ப பொறுமை உண்டு என்ற என் இறுமாப்பு இப்படியான பெடலெடுப்பில் உடைபடுவதில் கூட ……….. ஒரு மன நிறைவு………. நம்மை சுத்திகரிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே என்று………

    ஒரே பீடிகை என்று நினைக்க வேண்டாம்……….

    நான் விளாசிய அந்த கந்தறகோள அலக்கியத்தை நீங்களும் வாசித்து……….. நான் நொந்து நூலானபடிக்கு நீங்களும் நொந்து நூலாக வேண்டும் என்று சிறியேன் ப்ரஸ்தாபம் செய்யும் அலக்கியம் கீழ்க்காணும் உரலில்………..

    http://jayabarathan.wordpress.com/seethayanam/

    அலக்கியத்தின் பெயர் சீதாயணம். அதை எழுதிய நான் இன்னமும் பெருமளவு மதிக்கும் பெருந்தகை விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள்.

    ப்ரச்சினை அவருடைய புனைவு இல்லை. ராமாயணத்தை அவரவர் போக்குக்கு எழுதியவர் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். சீதாயணம் என்ற பெயரில் இந்த அன்பர் தன் கற்பனையை புனைந்ததை நான் அறவே குற்றம் சாற்ற விழையவில்லை. எத்தை வேண்டுமானாலும் புனைவது இவரது கருத்து சுதந்திரமே. அதை நான் மதிக்கவே செய்கிறேன்.

    ஆனால் இந்தப் பெருந்தகை தன் புனைவின் ஆரம்பத்திலும் அறுதியிலும் வால்மீகி ராமாயணத்தைப் பற்றியும் மஹாபாரதத்தைப் பற்றியும் தன் அறியாமையை அறிவு சீவித்தனமாக பொது தளத்தில் பினாத்திய பாங்கை வாசித்தீர்களானால் சிரித்து உங்கள் வயிறு புண்ணாகுமா அல்லது அழுகை வருமா என்பது சாக்ஷாத் அந்த ராமபிரானுக்கே வெளிச்சம்.

    இந்த லக்ஷணத்தில் அந்த அலக்கிய விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம் போல அனுபந்தமாக இந்தப் பெருந்தகை …….தலைப்பை மட்டிலும் வாசித்து விட்டு…….. முழு நூலையே வாசித்தது போன்று பாவலா காட்டும் படிக்கு ஐந்தாறு நூற்களை அனுபந்தமாகப் பட்டியலிட்ட கந்தறகோளம்.

    இந்த அலக்கியம் பேசும் ஒரு பினாத்தலை அறிவு பூர்வமாக விசாரித்து பொது தளத்தில் பகிர்ந்துள்ளேன். உலகிற்கு உண்மையை தயங்காது வெளிப்படுத்த வேண்டும் என்ற உங்களது செயல்பாடு …….. இந்த அலக்கியத்தின் மற்ற பேத்தல்களையும் கட்டுடைத்து பொது தளத்தில் பகிர்வாயாக என்று தூண்டுகிறது என்றால் மிகையாகாது.

    கூசாது பொய்களைப் பரப்புரை செய்பவர்களுக்கே கூச்ச நாச்சம் ஏதும் இல்லை எனும்போது உண்மை விளம்ப முனைபவர்கள் எதற்கு தயங்க வேண்டும்.

    காந்தியடிகளை விந்தந்தோதும் நீங்கள் அயர்வில்லாது நேர்மையின் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். பொய்யை கட்டுடைக்க வேண்டும். உலகிற்கு உண்மையை தயங்காது பகிர வேண்டும்.

    சத்யமேவ ஜெயதே.

  11. Raja M Says:

    அய்யா ராமசாமி அவர்களுக்கு,

    உங்கள் கட்டுரைகளின் முழுத் தொகுப்பையும் படித்த பின்னர் பின்னூட்டமிட்டு இருக்க வேண்டும். படிக்காமல், அவசரக் குடுக்கையாக பின்னூட்டம் இட்டதற்கு, தலையில் குட்டிக் கொள்கிறேன்.

    “ஆனால் என் மனவெதும்பல் அப்படி. தமிழகத்தின் நிலையை கீழேயிருந்து பார்க்கப் பார்க்க – எனக்குப் பலசமயங்களில் பிராந்து பிடித்துவிடுகிறது. ஆக, நான் எழுதுவதை(!) ஒரு பேக்கேஜ் மாதிரி எடுத்துக்கொள்ளுங்கள்.”

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. நீங்கள் ஒரு ஆசிரியரின் நிலையில் இருப்பவர். இந்த மாதிரிப் பிரச்னையை பல தளங்களில், தினசரி சந்தித்து வருபவர். அதை மீறி நல்ல பல காரியங்களை செய்து வருகிறீர்கள். அதனால், அதைப் பற்றி எழுத உங்களுக்கு முழு உரிமையும் உண்டு (இம்மாதிரியான விஷயங்களில் எந்த நேரடி அனுபவமுமற்ற என்னைப் போன்றவர்களைக் காட்டிலும்). தொடர்ந்து எழுதுங்கள்.

    நீங்கள் செய்திருப்பது திரு. மணிகண்டனுக்கு பெரும் உதவியே – அவர் அதை தற்சமயம் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லாமலிருந்தாலும். உங்கள் கட்டுரை, தமிழில் தரமாக எழுத விழையும் அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று! விவாதங்களில் எதிர் நிலைகளில் இருக்கலாம். கருத்துப் பரிமாற்றம், ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமானால், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.


  12. நான் பள்ளியில் படித்தபொழுது ஒன்பதாவது வகுப்பில் சில மாணவர்கள் படிப்பை நிறுத்திவிடுவார்கள். P.வைத்தியநாதன் என்ற ஆசிரியரின் அடிக்கு பயந்தே அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்பது அப்போது நாங்கள் அனைவரும் அறிந்த உண்மை.ஆசிரியரின் உள்ளக்கிடக்கை மதிப்புக்குரியதுதான். ஆனால் அதனால் விளைந்த விளைவுகள் மோசமாகவே இருந்தன.

    செய்யும் செயலால் விரும்பிய முடிவு கிடைத்தால் சத்தியமாக மகிழ்ச்சியே.


    • அய்யா பக்கிரிசாமி,

      என் நிலைப்பாடு என்னவென்றால் – நான் – சராசரித்தனங்கள், ஒப்பேற்றுதல்கள் போன்ற போலித்தனங்களை வெறுக்கிறவன். வெளியாட்களிடம் மட்டும் இல்லை – என்னுடையவை, சொந்த சறுக்கல்களையும் வெறுப்பவன், மீண்டெழுந்து மேலெழும்பி வர முயற்சித்துக் கொண்டிருப்பவன்.

      நாமெல்லாம் எப்படியும் கடைசியில் இறக்கத்தானே போகிறோம். ஆகவே வாழ்ந்து என்ன பயன், ஏன் எதையும் செய்யவேண்டும் – அப்படியே எதனையாவது செய்தாலும், ஒருவர் மனமும் கோணக்கூடாது என்றெல்லாம் அலைக்கழிக்கப் படுபவன் அல்லன் நான். மற்றவர்கள் கோணக்கோண எழுதிக்கொண்டே இருக்கும்போது – சில கோணல்களைச் சுட்டுவது தவறு என்று கருதுபவனல்லன்.

      நாசூக்கு பார்த்துப்பார்த்து, தொடரும் அற்பத்தனங்களைப் பொறுத்துக்கொண்டு – நம் தமிழ்ச் சூழலை அரைகுறைகள் ஆக்கிரமிப்பதை நான் வெறுக்கிறேன். நான் ‘கடவுள் விளையாட்டு’ விளையாடவரவில்லை. வேறு யாராவது இப்படிப்பட்ட அற்பத்தனங்களை சுட்டிக் காட்டினால் – மரியாதையுடன், வினயத்துடன் அதனைச் செய்தால், அதிலும் எனக்கு உவப்பே. ஆனால் யார் செய்கிறார்கள்?

      ‘எதிர்ல வர்ற நரி, வலப்பக்கம் போனாலென்ன, இடப்பக்கம் போனாலென்ன – நம்மமேல விழுந்து பிடுங்காமலிருந்தால் சரி’ எனத்தான் காலம் பொதுவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

      … இருந்தாலும், மறுபடியும் மறுபடியும் தோல்விகள் பெற்றாலும் – எனக்கு நல்ல விஷயங்களில், தவறுகள் சரிசெய்யப்படலாம் போன்றவைகளில் நம்பிக்கை இருக்கிறது.

      நான் ஒரு அகஸ்மாத்தாக ‘ஆசிரியரானவன்’ – an accidental ‘teacher’ – ஆனால் செய்யும் தொழிலை என் நோக்கில் திறம்படச் செய்யமுனைபவன், தவறுகளைத் திருத்திக் கொள்பவன். ஆனால் கோபக்காரன்.

      என்னுடைய அடிப்படைத் தொழில், நான் விரும்பும் தொழில்(கள்) விவசாயம், தோட்டவேலை, இன்னபிற கைவேலைகள் செய்தல். இவற்றைத்தான் நான் இக்காலங்களில் செய்துகொண்டிருக்கிறேன். இவற்றையும் சராசரித்தனமாகச் செய்வதாக இல்லை.

      கவலை வேண்டேல் – நான் ஒரு இரண்டாம் பி. வைத்தியனாதன் அல்லன்.

      புரியும்படி சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை – திருப்பித் திருப்பி சொன்னதையே சொல்வதில் மிக அலுப்பாக இருக்கிறது.

      எப்படியும் YMMV.

      • பொன்.முத்துக்குமார் Says:

        // நாசூக்கு பார்த்துப்பார்த்து, தொடரும் அற்பத்தனங்களைப் பொறுத்துக்கொண்டு – நம் தமிழ்ச் சூழலை அரைகுறைகள் ஆக்கிரமிப்பதை நான் வெறுக்கிறேன். //

        இது, இது, இதுதாங்க சார் நமக்கு தேவை. நமது சக்தியையே உணராமல் சீரழிந்துபோகாமல் காக்க ஒரு ராமசாமி பத்தாது. நம்மில் அனேஏஏஏஏகர் சிற்பிகள்தான். ஆனால் அந்த திறமையி உணராமல், ஊதிப்பெருக்கிக்கொள்ளாமல் இன்னமும் அம்மிகொத்திக்கொண்டல்லவா இருக்கிறோம். அதையும்விட பெருங்கொடுமை, அதை கொண்டாடிக்கொண்டுமல்லவா இருக்கிறோம் !

    • A.Seshagiri Says:

      “P.வைத்தியநாதன் என்ற ஆசிரியரின் அடிக்கு பயந்தே அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்பது அப்போது நாங்கள் அனைவரும் அறிந்த உண்மை.ஆசிரியரின் உள்ளக்கிடக்கை மதிப்புக்குரியதுதான். ஆனால் அதனால் விளைந்த விளைவுகள் மோசமாகவே இருந்தன.”

      இவ்வளவு தூரம் விளக்கி எழுதின பிறகும் ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்’ பக்கிரிசாமி போன்றவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.இவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ‘வழக்கம்போல்’ தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

      • பக்கிரிசாமி.N Says:

        மன்னிச்சுக்கோங்க ராமசாமி. புரியாம சொல்லிட்டேன். மனதில் வைத்துக் ‘கொல்லாமல்’ தொடர்ந்து “வழக்கம் போல” எழுதுங்கள்.

        சந்தோஷமா ?

      • Sam Says:

        Mr. Pakkirisami, your comments are ridiculous…still Mr.Ramasami tried to give better explanation to get this into your head. Now I know, why your teacher did what he did.

        [edited a lil’ bit; sorry]

      • பக்கிரிசாமி.N Says:

        கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க ! இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப ஜாஸ்திங்க… அறிவு!


Leave a reply to nparamasivam1951 Cancel reply