நிசப்த அறச்சீற்றமும் ஒத்திசையாத பதில் சீற்றமும் | பிஎஸ்வீரப்பா(“சபாஷ், சரியான போட்டி!”)
August 30, 2014
நிசப்தம், அறச்சீற்றம், அரைச்சீற்றம் – பதிலுக்கு இன்னும் கொஞ்சம், என் பங்கிற்கு அரச்சீற்றம் (அல்லது) இளைஞரே, உங்களுக்கு இஸ்ரேலைப் பிடிக்காமல் இருக்கலாம் – ஆனால் பொய்பொய்யாக, அபாண்டமாக, சோம்பேறித்தனத்துடன், உணர்ச்சிமேலிட ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், காப்பி-பேஸ்ட் செய்து எழுதவேண்டாமே!
இது நான்காம் பதிவு, இந்த வரிசையில். (ஸ்ஸ்ஸ்… அப்பாடா!) முதல் மூன்றுபதிவுகள்: 1) “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” 22/08/2014 2) !நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி) 23/08/2014 3) [ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள் 26/08/2014 (அடுத்த பதிவுதான் இந்த வரிசையில் கடைசி…)
-0-0-0-0-0-0-
அறச்சீற்றம் என்பது, நம் தமிழக அறிவுலக, நடைமுறைச் சூழலைப் பொறுத்தவரை, சிறுவிதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு, பெரும்பாலும் 1) காரியவாத, கணக்கிடப்பட்டு வெளிக்காண்பிக்கப்படும், ஆவேசப்படும், சுயலாபத்திற்கான அயோக்கிய அறச்சீற்றமாகத்தான் இருக்கிறது. இது ஒரு பெரிய பிரிவு.
இதன் ஒரு முக்கிய உதாரணமாக – – திராவிட இயக்கத்தின் மூலமே, அடிநாதமே இந்த போலி அறச்சீற்றம்தான். ‘ஆரிய வந்தேறி – திராவிட பூர்விகக்குடி,’ ‘வடக்குவாழ்கிறது-தெற்கு தேய்கிறது,’ ‘ஸம்ஸ்க்ருதம் தமிழின் கொட்டையை நசுக்குகிறது’ வகையறா போலி கற்பிதங்களை, பிரிவினைகளைச் சுற்றி எழுப்பப்பட்டது அது.
சில சமயம் இந்த அறச்சீற்றமானது, இந்த கீழ்கண்ட இரண்டாம் பிரிவில் 2) அறியாமை பாற்பட்ட ‘கும்பலோட கோவிந்தா‘ அறச்சீற்றமாகவும் அல்லது 3) அரைகுறை சோம்பேறித்தன அசட்டு அறச்சீற்றமாகவும் அல்லது 4) ஒரு எழவையும் புரிந்துகொள்ளாத முட்டியடி எதிர்வினை அறச்சீற்றமாகக்கூட இருக்கும். ஆனால் பின்னவற்றை விட – சாதாரண வாசகர்களாகிய, அடிமட்ட (அதிமட்ட அல்ல) மக்களாகிய நாம் – முதலாவதின் பக்கம்தான் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக – ஸ்ரீலங்காவில் நடந்த இலங்கைத்தமிழர்களும் இறந்த ‘ஈழப் போர்'(!) தொடர்பான தமிழக அரசியல்அறச்சீற்றங்கள் அனைத்தும் இந்த முதல்வகையைச் சார்ந்தவை மட்டுமே! டெஸோ வகையறாக்கள் வடிகட்டிய அயோக்கியத் தனங்களே! ஆனால் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ வகையறாக்கள் (போனவருடம் தூள்பறந்த இந்த ட்ரேஜிகாமெடி மொண்ணை ரியாலிட்டி ஷோக்களை யாருக்காவது நினைவில் இருக்கிறதா??) இரண்டாம் பிரிவினைச் சார்ந்தவை..
… … ஆனால் – நிசப்தம்காரரின் அறச்சீற்றம் என்பது இரண்டாம் பிரிவில் ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது என் அவா. என் படபடப்பு. So, this too shall pass??
ஹ்ம்ம்… விவாதத் தளங்கள் எப்படி விரிகின்றன, காலப்போக்கில் நம் மனப்பான்மைகள் எப்படி விரிவும் தெளிவும் அடைகின்றன என்பதைப் பார்க்கலாம். எனக்கு இவ்விஷயத்தில் ஓரளவு அசாத்திய நம்பிக்கை இருந்தாலும் – பல சமயங்களில் நான் ஏமாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறேன் என்பது நல்ல சூசகம் அல்ல.
“அப்படித்தான் காலங்காலமாக அதன் வரைபடம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. 1946 ஆம் ஆண்டிலிருந்த இஸ்ரேலிய வரைபடத்துக்கும் இன்றைய இஸ்ரேலிய வரைபடத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன.”
ஏனய்யா, 1946ல் இருந்த இந்திய வரைபடத்திற்கும் இன்றைய இந்திய வரைபடத்திற்கும் ‘ஏகப்பட்ட’ வித்தியாசங்கள் இல்லையா?
2009 ‘தமிழ்’ ஈழ வரைபடத்திற்கும், இன்றைய ஸ்ரீலங்கா வரைபடத்திற்கும் வித்தியாசம் இல்லையா? ஏன், உங்களுடைய குழந்தைப் பருவ படத்திற்கும் – இப்போதைய (நீங்கள் வளர்ந்துவிட்டிருக்கக்கூடும் என்கிற அனுமானத்தில் சொல்கிறேன், தவறாக இருந்தால் மன்னித்தருள வேண்டும்) புகைப்படத்திற்கும் ‘ஏகப் பட்ட’ வித்தியாசங்கள் இல்லையா?
ஆனால் அய்யா, கிண்டல்களுக்கு அப்பாற்பட்டு – இது ஒரு தப்பும் தவறுமான ஒரு அரைகுறைப் படம். என்னசெய்வது சொல்லுங்கள்! உங்களால் குறைந்த பட்சம், தான் கொடுக்கும் விஷயங்களின் அடிப்படை உண்மைகளைக் கூடவா சரிபார்க்க முடியாது? கவனக் குறைவு என்றுகூட இதனைச் சொல்லமுடியாது. தினம் ஒரு பதிவு ‘தேத்த’ வேண்டுமே என்கிற மகாமகோ அவசரத்தில் செய்யப்பட்டது என்றும் சொல்லமுடியாது. இது அடிப்படையில் ஒரு நேர்மையற்ற செயல்.
1. ஏனெனில் – இந்தப் படத்தை ஒழுங்காக இரண்டாயிரம் வருட அளவில் நீட்டியிருந்தால் – உண்மைகள் வேறுவிதமாக இருக்கும். கிமு 100 அளவில் இந்த வரைபடம் எப்படி இருந்திருக்கும்?
2. 1923ல் எப்படி பாலஸ்தீனத்திலிருந்து ஜோர்டன் பிரிக்கப்பட்டது – எப்படி இதனாலேயே பாலஸ்தீனம் சிறிதானது என்றெல்லாம் ஒரு குப்பைப் புரிதலுமில்லை.3. வரைந்த படங்களும் – ஒன்றுகூட சரியில்லை. குட்டிகுட்டியாக – பெரிதுபெரிதாகப் பல தவறுகள்!4. 2005வாக்கில் – இறந்தகடலையே மாற்றியமைத்துள்ளார்கள்! இஸ்ரேலால் முடியாததை ஃபோட்டோஷாப் செய்யும் என இதனைக் காண்க!
நிற்க, இஸ்ரேலின் அதிகாரபூர்வமான சுற்றுலா வரைபடம்: http://www.goisrael.de/Tourism_Ger/Tourist%20Information/Discover%20Israel/Documents/MapOfIsrael1.pdf இந்த கோஇஸ்ரேல் தளம், இஸ்ரேலின் சுற்றுலா அமைச்சகத்தினுடையது.
இஸ்ரேலின் – பல காரணங்களால் மாறிக்கொண்டிருக்கும் வரைபடங்கள் – காலவரிசையாக, அவற்றுக்கான காரணங்களோடு, ஆதாரபூர்வமாக இங்கு கிடைக்கின்றன: இது இஸ்ரேலிய வெளி நாட்டுத்துறை அமைச்சகத்தின் தளம். http://mfa.gov.il/MFA/AboutIsrael/Maps/Pages/Israel%20in%20Maps.aspx
இந்தப் படங்களையும், எழுத்தாளரின் படத்தையும் ஒப்புநோக்கி – இந்த அரைகுறைத்தனத்தைப் பற்றி அவருடைய தளத்தில் இதைப் பற்றி முறையீடிடுங்கள், கோரிக்கையிடுங்கள் – முக்கியமாக, ஒத்திசைவில் அரைகுறைப் பின்னூட்டமிட்ட நிசப்த மணிகண்டதாசரான திரு நரேந்திரன் அவர்கள் இதனைச் செய்யவும்… நரேந்திரன் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியை நான் மெச்சுகிறேன்! ;-)
“இந்தப் பிரச்சினையின் பின்னணியில் மிகப்பெரிய உலக அரசியல் இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அரேபிய நாடுகளுக்கு செக் வைக்கும் ஒரு தோழன் தேவை. குவைத்தும், சவூதி அரேபியாவும் என்னதான் அமெரிக்காவின் அடிமைகள் என்றாலும் இஸ்லாமிய தேசங்கள் அல்லவா? அவற்றை முழுமையாக நம்ப முடியாது.”
அய்யா – குவைத்தும் சவூதிஅரேபியாவும் அமெரிக்காவை நம்பி மட்டுமேதான் உயிர் தரித்துக்கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! அமெரிக்க ராணுவ, தொழில் நுட்ப, மூலதனச் சேமிப்பு வழிகள் இல்லையேல் – இந்த நாடுகளின் அரசுகள் எல்லாம் இருக்கவேமாட்டா. (எப்படியும், குவைத் பற்றி தேவரீர் எழுதியிருப்பது தவறு!) அவை தேசங்களாகவும் இருக்கமாட்டா! காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசித்தும்புகள் போலாகிவிடும்…
இந்த அழகில் இவைகளுக்கு ஒரு ‘செக்’ வேறு வைக்கவேண்டுமா? உங்களுக்கு அலாதி கற்பனைதான்!
‘இஸ்லாமிய தேசங்கள் அல்லவா’ என்று பொத்தாம்பொதுவாக அறச்சீற்றத்துடன் எழுதுவதற்கெல்லாம் கொஞ்சம் காமாலைக்கண் இருக்கும் பாக்கியம் இருந்தால்தான் முடியும். :-(
“அதனால் இஸ்ரேலுக்கு எல்லாவிதத்திலும் கொம்பு சீவி விடுகிறது.”
எழுத்தாளர் அய்யா, இஸ்ரேலுக்குக் கொம்பு சீவிவிட அமெரிக்கா தேவையேயில்லை; அமெரிக்க எதிர்ப்பை, அதன் நடு நிலைமையை மீறித்தான் இஸ்ரேல் உதித்தது. பல முக்கியமான தருணங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மகத்தான முட்டுக்கட்டைகள் போட்டிருக்கிறது – பல திசைகளிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் வரலாற்றைச் சில வாரங்களாவது படித்தாலேயே இவை புரியும். ஆனால் எழுத்தாளர் சாரின் வரலாற்றுப்பாடம் ‘வினவு’ தளத்திலிருந்து மட்டுமேதான் உருவப்படுகிறதோ என எனக்குச் சந்தேகம்!
1967 ஆறுநாள் யுத்தத்தின்போது (இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து அரேபிய தேசங்களும் + யாஸர் அராஃபத்தின் பிஎல்ஓ) — அமெரிக்கா (+ஃப்ரான்ஸ்) யுத்த தளவாடங்களை விற்கமுடியாது என முடிவெடுத்து – வேறு எவரும் இஸ்ரேலுக்கு அவற்றை விற்கக்கூடாது எனவும் தடை விதித்தது. அதே சமயம் ஸோவியத்யூனியன் இஸ்ரேலின் எதிர்த் தேசங்களுக்கு தங்குதடையில்லாமல் தளவாடங்களை அளித்தது. இதில் கடைசியில் இஸ்ரேல் வென்றாலும் – வெஸ்ட்பேங்க், கோலன் உச்சிகள் வகையறா பகுதிகளைத் தாண்டி இஸ்ரேல் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை; நினைத்திருந்தால் ஸிரியா+இராக்+ஜோர்டன் நாடுகளை ஆக்கிரமித்திருக்க முடியும் என்றாலும்… இதற்கு அமெரிக்க அழுத்தமும் ஒரு காரணம்.
1973 யோம்கிப்பூர் போரின்போது (இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஸிரியாவும் – ஆனால் ஜோர்டன், இராக், ஸவுதிஅரேபியாவும் கூடப் போரிட்டன) அமெரிக்கா மட்டும் கோபமாக இஸ்ரேலைத் தடுக்கவில்லையானால் – எகிப்தும், ஸிரியாவும், ஜோர்டானும் – இஸ்ரேலின் மாநிலங்களாகியிருக்கும் என்பது தெரியுமா?
… இப்படிப் பல எடுத்துக்காட்டுகள் கொடுக்கலாம். அணுசக்தி ஆராய்ச்சி, ஆயுத ஆராய்ச்சி, போர்விமான ஆராய்ச்சி – எனப் பல பல தடங்கல்களைத் தொடர்ந்து கொடுத்துவருகிறது அமெரிக்கா, அது இந்தியாவுக்குச் செய்வது போலவே – அமெரிக்கக் கணக்குகள் அப்படி.
ஆனால், ஆம். அமெரிக்காவும் இஸ்ரேலும் பரஸ்பரம் நிறைய உதவிகளும் புரிந்துகொள்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவின் கொம்பைச் சீவி விட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
எழுத்தாளரையும் அவர் அடிப்பொடிகள் கொம்புசீவிவிட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரும் பாவம்தான்.
“மேற்கு ஆசியாவில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருந்தால்தான் தனக்கு பெட்ரோல் வரத்தில் பிரச்சினை இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. “
பிரச்சினைகள் இருக்கும்போதெல்லாம் பெட்ரோலியம் விலை எகிறும். ஆக – அமெரிக்கா அதிகவிலை கொடுத்து ஆபத்தான சூழலில் பெட்ரோலியம் வாங்குவதற்காக மேற்கு ஆசியாவில் பிரச்சினைகளை இருந்துகொண்டே இருக்கவைக்கிறதோ? ஐயன்மீர் அவர்கள் – ஹாலிவுட் படங்களில் பெற்ற ஞானத்திலிருந்து, உலகளாவிய மாபெரும் சதித்திட்ட வலைப்பின்னல்கள் குறித்த அபத்த உளறல்களிலிருந்து — கூடிய சீக்கிரம் மீண்டுவர – எல்லாம் வல்ல தமிழ்க் கடவுளாகிய முருகனைப் பிரார்த்திக்கிறேன். :-(
இப்போது சில புள்ளிவிவரங்களைப் பார்க்கலாமா?
அமெரிக்காவில் (யூஎஸ்ஏ) இருக்கும் பெட்ரோலியம் (எளிதில் எடுக்கக் கூடுவது, ஆனால் முடிந்தவரை அப்படியே வைக்கப் பட்டுள்ளது, ஆனாலும் குறைந்துகொண்டுதான் வருகிறது!) – 2012 கணக்கில் = சுமார் 30, 000 மில்லியன் பேரல்கள் (ஆதாரம்: அமெரிக்க அரசின் எரிசக்தி செய்தி ஸ்தாபனம் – http://www.eia.gov/dnav/pet/pet_crd_pres_dcu_NUS_a.htm) (ஒரு பேரல் = சுமார் 160 லிட்டர்)
தட்டுப்பாட்டுக் காலத்தில் உபயோகமாக இருக்கக்கூடிய ஸ்ட்ரேடஜிக் ரிஸர்வ்ஸ் (மெஹிகோ வளைகூடா பகுதியில் உள்ளது) – 22 ஆகஸ்ட், 2014 நிலவரப்படி = 691 மில்லியன் பேரல்கள் (ஆதாரம்: அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தந்திரோபாய எரிபொருள் சேமிப்பு நிறுவனம்- http://www.spr.doe.gov/dir/dir.html)
மேற்கண்டவைகளைத் தவிர, எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகையாக உள்ள பெட்ரோலியம் இருப்புக்கள்:
- அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய கண்ட அடுக்குப் பிரிவுகளில் உள்ள இருப்புகள் – 2011 கணக்கில்: சுமார் 88, 000 மில்லியன் பேரல்கள். இதனுடன் எரிவாயுவையும் சேர்த்து எரிசக்தியின் கணக்கில் அடக்கினால் இதுவே 160,000 மில்லியன் பேரல்கள் ஆகிவிடும். (ஆதாரம்: அமெரிக்க அரசின் சமுத்திரம்சார் சக்தி ஆணையம் http://www.boem.gov/uploadedFiles/2011_National_Assessment_Factsheet.pdf )
- அமெரிக்க நிலப்பகுதியில் எடுக்கப்படக் கூடிய இருப்புகள் 2007 கணக்கில் – சுமார் 42, 000 மில்லியன் பேரல்கள் (ஆதாரம்: அமெரிக்க புவியியல் கணக்கீட்டு நிறுவனம் – http://certmapper.cr.usgs.gov/data/noga00/natl/tabular/2007/summary_07.pdf)\
- ஆர்க்டிக் பகுதி இருப்பு – 1998 கணக்கு: சுமார் 10, 000 மில்லியன் பேரல்கள் (ஆதாரம்: அமெரிக்க புவியியல் கணக்கீட்டு நிறுவனம் http://pubs.usgs.gov/fs/fs-0028-01/fs-0028-01.pdf)
- அலாஸ்காவின் பிற பகுதிகளில் உள்ள இருப்புகள் – 2002 கணக்கில்: சுமார் 10, 600 மில்லியன் பேரல்கள் (ஆதாரம்: அமெரிக்க புவியியல் கணக்கீட்டு நிறுவனம் http://pubs.usgs.gov/fs/2002/fs045-02/
- மேற்கண்ட கணக்கில் சேராத – 2008 வாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட டகோடா மாநிலங்களிலுள்ள இருப்புகள்: 24, 000 மில்லியன் பேரல்கள். (ஆதாரம் – ஸிஎன்பிஸி நிறுவனச் செய்தி – இது ஓரளவு சரியான மதிப்பிடல்தான்)
ஆக ஒரு குறைந்த பட்சக் கணக்கு போட்டாலே – அமெரிக்காவின் தற்சார்பு பற்றிய — ஒரு பெரிதளவும் சரியான அனுமானத்துக்கு வரலாம். உளறவே தேவையில்லை.
இவற்றில் எரிவாயு, ஷேல், கிரொஜென் போன்றவற்றையும் – அவற்றுடைய எரிபொருள் சக்தி மீதான பெட்ரோலியம் ஒப்புமையைச் சேர்த்தால் (their equivalence to petroleum barrels) – கிட்டத்தட்ட 3, 000, 000 மில்லியன் பேரல்களுக்கு மேலேயே போகும். — (ஆ)
சரி – நாம் அமெரிக்காவிலுள்ள சொந்த பெட்ரோலியம் இருப்பு என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகபட்சம் தினமும் செலவழியும் பெட்ரோலியம் = சுமார் 20 மில்லியன் பேரல்கள் (இது கடந்த சில வருடங்களாகக் குறைந்துகொண்டே வருகிறது – ஆனால், மேலேறும்).
இது சுமார் 30 மில்லியன் பேரல்கள் அளவுக்கு (மிகமிக அதிகபட்சமாக) மேலேறினால் கூட – அமெரிக்காவின் கைவசம் இருக்கும்
- (அ) அளவைக் கொண்டு – சுமார் 20 வருடங்களுக்குச் சாவகாசமாக ஓடும். அதாவது, எங்கிருந்தும் இறக்குமதி செய்யாமலேயே!
- (ஆ) எண்ணிக்கை மூலமாகப் பார்த்தால் – அது சுமார் 275 ஆண்டுகளுக்குத் தாராளமாக வரும்…
இப்போது இறக்குமதி கணக்குகளுக்கு (=சராசரி எண்ணிக்கைகளுக்கு) வருவோம். இதற்கு நான் அமெரிக்க எரிபொருள் செய்தி நிறுவனத்தின் ஆவணங்களை உபயோகித்திருக்கிறேன், குறிப்பாக – தேசவாரியான – அமெரிக்க எரிபொருள் இறக்குமதி எண்ணிக்கைகளை.
தினத் தேவையான சுமார் 20 மில்லியன் பேரல்கள் பெட்ரோலியத்தில் – அமெரிக்கா வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது என்பது சுமார் 9 மில்லியன் பேரல்கள்.
இதில், கனடாவிலிருந்தும் மெஹிகோவிலிருந்தும் சேர்த்து இறக்குமதி செய்துகொள்வது = சராசரியாக சுமார் 4.5 மில்லியன் பேரல்கள்.
மிச்சத் தேவையான 4.5 மில்லியன் பேரல்களில் – அதிகபட்சம் சுமார் 1.23 மில்லியன் பேரல்கள் மட்டுமே ஸவூதி அரேபியாவிலிருந்து பெறப்படுகிறது. எழுத்தாளர் அய்யா சுட்டும் குவைத் நாட்டிலிருந்து 0.33 மில்லியன் பேரல்கள் மட்டுமே பெறப்படுகிறது.இவை இரண்டும் சேர்ந்து அமெரிக்காவின் பெட்ரோலியத் தேவையில் சுமார் 8% மட்டுமே பூர்த்தி செய்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
ஆக: “மேற்கு ஆசியாவில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருந்தால்தான் தனக்கு பெட்ரோல் வரத்தில் பிரச்சினை இருக்காது என அமெரிக்கா நம்புகிறது.” எனும் எழுத்தாளரின் கூற்று – நான்கு விதங்களில் அபத்தமானது.
- ஆபத்தான சூழ்நிலையில் அதிகவிலையும் கொடுத்துக்கொண்டு மேற்கு ஆசியாவிலிருந்து பெட்ரோலியத்தை வரவழைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
- எப்படியும் ஸவுதியும் குவைத்தும் மிக அதிக அளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிடவில்லை. (எழுத்தாளர் மற்ற வளைகூடா, மேற்காசிய நாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை – ஆகவே நானும்!)
- எப்படியும் வெனிஸுவேலாவும், மெஹிகோவும் கனடாவும் – தங்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்தினால் போதும். அமெரிக்காவுக்கு பிரச்சினை இருக்காது. (அவைகள் மேலதிகமாக அனுப்பத் தயாராக இருந்தாலும் – அமெரிக்கா அவற்றையும் இருப்புக் கணக்கில் வைத்திருக்கத்தான் விரும்புகிறது)
- அமெரிக்க தொழில் நுட்பமும், தொழில் முனைவும் அதனை எப்போதும் முன்னடுக்கிலேயே வைத்திருக்கும். கண்டபடி இயற்கை வளங்களைச் சுரண்டினாலும், அவர்களுக்கு நிறைய மீட்புகள் இருக்கின்றன.
மேலும் அமெரிக்கா பற்றிய – எழுத்தாளர் அய்யா சொல்வது போன்ற கதை – நிஜ, நடைமுறைகளின் விரிப்பில் இல்லை. இந்த பன்னாட்டு அரசியல் விஷயங்களில் எளிமை என்பதே கிடையாது.
ஒரு புண்ணாக்கு பெட்ரோலியத்தை மட்டும் வைத்துக்கொண்டு அனைத்து அரசியலையும், அகில நடப்புகளையும் புரிந்து கொள்ளவே முடியாது.அய்யா அவர்கள் – தன்னுடைய வளமான கற்பனை+வதந்தி பரப்பும் மனப்பான்மையுடன் ரியல்பொலிடிக் என்றால் என்ன, நடைமுறை ஜியோபாலிடிக்ஸ் என்பது என்ன, அமெரிக்காவும் மேற்காசியாவும் ஏன் இப்படி இருக்கின்றன என்பதையெல்லாம் வரலாற்று ரீதியாக, பூகோள ரீதியாக – முக்கியமாக, தொழில் நுட்பங்கள் ரீதியாகப் பார்த்தால் – இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துதிர்க்க மாட்டார்…
மேலும் அமெரிக்க அரசாக்கத்துக்குள்ளே இருக்கும் முரணியக்கங்களையும் புரிந்து கொண்டால், ‘அமெரிக்கா நம்புகிறது’ என்றெல்லாம் அதிசயிக்கத்தக்க வகையான கருத்துதிர்த்தல்களில் ஈடுபடமாட்டார்.
‘ஈராக்கில் வேதியியல் ஆயுதங்கள் இருப்பதாக சதாமைக் கொன்றது.’
அய்யய்யோ! அய்யா!! எல்லா ஆயுதங்களும் குண்டுகளும் (அணு, ஹைட்ரஜன் + நியூட்ரான் குண்டுகள் தவிர்த்து) வேதியியல் வகைகள்தாம்! கெமிஸ்ட்ரிக்கும் கெமிக்கலுக்கும் உள்ள வித்தியாசங்களைத் அய்யா அவர்கள் உணர்ந்தால் சரி!
மேலும் ஸத்தாம் ஹுஸ்ஸைய்ன் இறந்தது மரணதண்டனை காரணமாக – அவருக்கு ஒரு இராக்கிய நீதிமன்றம் தண்டனை கொடுத்ததனால். அச்சமயம் அமெரிக்கா அங்கு ஏறத்தாழ ஆட்சியில் இருந்தாலும், ஸத்தாம் செய்த பல நீச குற்றங்களுக்காகத் தான் அந்த நீதிமன்றம் அந்த தண்டனை கொடுத்தது. ஆனால் கெமிக்கல் ஆயுத விவகாரத்தால் அல்ல!
‘சந்தனக் கட்டை’ + ‘திமுக, கோபாலுக்கு லஞ்சம்’ புகழ் வீரப்பன் என்கௌன்டரில் இறந்தது – 2004ல். அச்சமயம் அப்துல் கலாம் அவர்கள்தாம் நம் நாட்டின் ஜனாதிபதி.ஆகவே, எழுத்தாளர் பார்வையில் ஒரு திடுக்கிடும் தலைப்பு – அப்துல்கலாம் தான் வீரப்பனைக் கொன்றார்!
அய்யா, நகைச்சுவைக்கும், அதி அற்புதமான கற்பனைக் கழுதைகளை ஓட்டுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? :-((((
August 31, 2014 at 03:27
திரு. ராமசாமி,
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”.
இறையனார் கொடுத்த பாடல். இதைப் பற்றி தருமியிடம் விவரமாக விவாதிக்க முடியுமா?
ஏற்கெனவே ‘தெரியாது’ என்று கூறி விட்டார். ‘சொன்னார்கள்’ என்றும் தரவு கொடுத்தார். நீங்கள் விவரமாக பின்னிப் படல் எடுப்பது ஏன்?
இதை விடுத்து நீங்கள் ஆதாரங்களுடன் இஸ்ரேல் – அரபியர்கள் பிரச்சினையை எடுத்துச் சொல்லலாம் அல்லவா?
முதல் வகைச் சீற்றம். பதிவின் வார்த்தைகள் அளந்து எழுதப் பட்டது. பின்னிப் படல் எடுக்கும் நீங்கள் அதை கவனிக்கவில்லையா?
நீங்கள் யாரையும் திருத்த முயலாது, தயவு செய்து இஸ்ரேல்- அரபிகள் பிரச்சினையை உங்களின் ஒரு பதிவாக நேரம் கிடைக்கும்போது எழுதவும். நன்றி.
ராகவன் ராமன்.
—->>>> வெ. ராமசாமி —>>> அய்யா ராகவன் ராமன்,
“ஏற்கெனவே ‘தெரியாது’ என்று கூறி விட்டார்.” அவர் எங்கு அப்படி கூறியிருக்கிறார் என்பதைச் சுட்ட முடியுமா? எப்படியும் அவர் அப்படியே தெரிவித்திருந்தாலும் – தன் அபாண்டங்களை, அறியாமைகளை, தவறுகளைத் தவறுகள் என ஒப்புக்கொண்டு இஸ்ரேல்+அமெரிக்காவிடம் மன்னிப்பு ;-) கேட்டுக்கொண்டால் பரவாயில்லை.
ஆனால், என்னிடம் சேமித்து வைத்திருக்கும் ‘அங்க என்னம்மா சத்தம்?’ பிரதியில் அப்படி ஒன்றும் தெரியாது என்று சொல்லவில்லையே! எல்லாவற்றையும் பற்றி ‘பிட்ச்சிக்கடா டாய்!’ என்கிற ரீதியில் சகட்டுமேனிக்குக் கருத்துகளை அடித்து விட்டிருக்கிறார். நான் இந்தப் பதிவை தரவிறக்கம் செய்தது 18ஆம் தேதி வாக்கில். இன்று சென்றால், அந்தப் பதிவில் அங்கிருந்த பல விசிலடிச்சான்குஞ்சப்ப பின்னூட்டங்களிலிருந்து, ‘கோயிஞ்ச்சாமி’களின் ‘ஸார் வொங்ககிட்ட என்னா தெளிவு’ வகை கருத்துகளிலிருந்து வேறெந்தப் பின்னூட்டத்தையும் காணோம்! சரி.
ஆனால் – மத்தியக் கிழக்கு பிரச்சினைகள் என்பவை ஒரு முப்பரிமாண 256*256*256 கனசதுரங்களுடனான செஸ் போன்றவை. என்னைப் போன்றவனால் – இவற்றைப் பற்றி எளிமையான கட்டுரைகள் எல்லாம் எழுதமுடியாது.
இதற்குத் தாங்கள் தயவுசெய்து திருவாளர் நற்றமிழன் பழனிசாமி (ஆதாரம்: நிசப்தம்காரரின் சிலாகிப்பு) அவர்களைத் தொடர்பு கொள்ளவும் – அவர் ஒரேயொரு பவர்பாய்ன்ட் ஸ்லைடில் அனைத்தையும் விளக்கிவிடுவார் என நினைக்கிறேன். நன்றி.
__ரா
August 31, 2014 at 05:57
மொட்டையாக 1967 யுத்தம், 1973 யாம் கிப்பூர் யுத்தம் என்று எழுதினால் எப்படி? இரண்டு முறையும் எகிப்து போர் தொடுத்தது என்று விவரமாகக் கூற வேண்டாமா?
1967இல் தனது இடமான காசாவை இழந்தது; ஜோர்டான் தனது இடமான மேற்குக்கரையை இழந்தது. “இஸ்ரேல் எங்களை உதைக்காமல் போனால் போதும், அந்த இடங்களை இஸ்ரேலே வைத்துக்கொள்ளட்டும்” என்று எகிப்தும் ஜோர்டானும் சமாதான ஒப்பந்தம் இடவில்லையா?
அந்தத் தோல்வியில் நாசர் நொந்து போகவில்லையா? அதை ஈடு கட்டவே சதாத் 1973இல் போர் தொடுத்தார்.
மன்னிக்கவும்- நீங்கள் வெறுமனே போர்கள் மட்டும் குறிப்பிட்டால், இஸ்ரேல்தான் போர் தொடுத்தது என்று எண்ணம் வரலாம். இரண்டுமே தற்காப்புப் போர்கள்.
—->>>> வெ. ராமசாமி —>>> அய்யா ராகவன் ராமன்,
நன்றி. இவையும் மிக முக்கியமான விஷயங்களே!
ஆனால் நான் இவற்றைச் சுட்டியது இரண்டு காரணங்களுக்காக – அதாவது நிசப்தம்காரரின் மிக அபத்தமான, ஆனால் வெகு தைரியத்துடன் உதிர்க்கப்பட்ட கருத்துகளுக்காக:
1. இஸ்ரேல் – “முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. அப்படித்தான் காலங்காலமாக அதன் வரைபடம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது” எனும் ‘பிட்ச்சிக்கடா டாய்’ கருத்துக்காக!
முடிந்தவரை அது வெற்றிகொண்ட பகுதிகளையும் விட்டுக்கொடுத்தே வந்திருக்கிறது அது என்று காண்பிப்பதற்காக சில ருசுக்களை வெளியிடத்தான் இந்தப் பதிவு.
2. “இஸ்ரேலுக்கு [அமெரிக்கா] எல்லாவிதத்திலும் கொம்பு சீவி விடுகிறது” – எனும் கருத்து; இதுவும் சரியில்லை எனச் சுட்டத்தான்.
எப்படித்தான் இப்படி ஜோடித்த அரைகுறைக் அடிப்படைகளுடன் – ஆனால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் கருத்துகளை உதிர்க்கிறார்களோ, தெரியவில்லை.
ஆம் – ஆனால் நான், இஸ்ரேலை நான் சாத்வீக நாடு எனச் சித்திரிக்க வரவில்லை. அதன் இருப்பிடம், அதன் வரலாறு அதனைப் பலவிதங்களில் கட்டிப் போட்டாலும், அது துளிர்க்கிறது, அங்கு ஒரு நல்ல நடைமுறை ஜனநாயகம் இருக்கிறது என்றும் காண்பிக்கத்தான் – அடுத்த பதிவையும் எழுதப் போகிறேன்.
மற்றபடி – மேலும் பார்க்கலாம், மறுபடியும் நன்றி.
__ரா
August 31, 2014 at 10:10
திரு ராமசாமி,
நீங்கள் கேட்டது – ““ஏற்கெனவே தெரியாது என்று கூறி விட்டார் “..”.. அவர் எங்கு அப்படி கூறியிருக்கிறார் என்பதைச் சுட்ட முடியுமா?”
நான் கவனித்தபடி, அவரது பதிவிலிருந்து வருமாறு –
“….ஆனால் என்ன நடக்கிறது என்று துல்லியமாகத் தெரிந்து கொண்டதில்லை”.
” …‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார்.
“வெளிப்படையாகச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சினையின் பத்து சதவீதம் கூட தெரியாது.”
தாங்கள் கூறியது – ” அந்தப் பதிவில் அங்கிருந்த பல விசிலடிச்சான்குஞ்சப்ப பின்னூட்டங்களிலிருந்து, ‘கோயிஞ்ச்சாமி’களின் ‘ஸார் வொங்ககிட்ட என்னா தெளிவு’ வகை கருத்துகளிலிருந்து வேறெந்தப் பின்னூட்டத்தையும் காணோம்!”
உங்களுக்கு முகப்புத்தக ஈடுபாடு உண்டென்றால் ( உண்டு என்று நான் கருதவில்லை) அவரது முகப்புத்தகப் பக்கத்தில், ஆகஸ்ட் 12ஆம் நாள் பதிவில் ஏகப்பட்ட பின்னூட்டங்கள் காணலாம்.
“…. திருவாளர் நற்றமிழன் பழனிசாமி (ஆதாரம்: நிசப்தம்காரரின் சிலாகிப்பு) அவர்களைத் தொடர்பு கொள்ளவும் –” நீங்கள் பகடியாக எழுதியிருப்பீர்கள். நான் இதையும் கடந்தே வந்துள்ளேன்.
” …மத்தியக் கிழக்கு பிரச்சினைகள் என்பவை ஒரு முப்பரிமாண 256*256*256 கனசதுரங்களுடனான செஸ் போன்றவை. என்னைப் போன்றவனால் – இவற்றைப் பற்றி எளிமையான கட்டுரைகள் எல்லாம் எழுதமுடியாது”.
எளிமை இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். உங்களால் முடியும். நேரம் கிடைக்கும்போது பகிரவும். ‘கோயிஞ்சாமிகள்’ தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று ஆதங்கப் பட்டால் போதாது. அதை மாற்ற வேண்டாமா? உங்களுக்கு எது முக்கியம்? மணிகண்டன் அவர்கள் இஸ்ரேல் + அமெரிக்கா இடம் மன்னிப்பு கேட்பதா? அல்லது கோயிஞ்சாமிகள் விஷயம் தெரிந்து கொள்வதா? முடிவை உங்களிடமே விடுகிறேன்.
( இவ்வளவு சொல்கிறாயா, நீயே எழுதுவதுதானே என்று கேட்கலாம். நியாயம்கூட. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டேன். என்ன, நான் மிகவும் நிதானமாகவே இட முடியும்).
ராகவன் ராமன்.
பின் குறிப்பு – உங்களுடன் வார்த்தைக்கு வார்த்தை விவாதம் செய்வது எனது நோக்கமல்ல. தயவு செய்து அப்படிக் கருத வேண்டாம். உண்மையிலேயே இஸ்ரேல்- அரபிகள் பிரச்சினையை அதிகம் பேர் அறிந்து இருக்கவில்லை.
August 31, 2014 at 13:41
“நிலமெல்லாம் ரத்தம்” பா.ராகவன், மத்திய கிழக்கு குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
August 31, 2014 at 13:50
இந்தப் பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாத விஷயம். சமீபத்தில் இந்தத் தளத்தைப் பார்க்க நேர்ந்தது.
திரு. டான் ப்ரவுனார் எழுதிய டாவின்ஸிகோடை இந்தத்தளத்தில் டிம் ஓ’ நெய்லார் என்ற பெருமகனார் பின்னிப்பெடலெடுத்திருப்பதைப்பார்த்தபோது உள்ளபடியே நெஞ்சம் பூரிப்படைந்தது. கூடவே ஒத்திசைவார் ஞாபகமும் வந்தது.
டான் ப்ரவுனார் இளைய கருப்பனார் போல சுத்த திராவிட டமிள் மரபுக்கு சொந்தக்காரர் என்று கூற இயலாதெனினும் நிசப்த யானைவெடிகள், பாவப்பட்ட வவ்வால்கள், எஸ்ராக்களுக்கு சளைத்தவரல்லர் என்பதில் ஒரு அற்பட் டமிள் மகிள்ச்சி!
இதன் நீதியாவது என்னவென்றால்
”எங்கு எங்கு கோயிஞ்சாமிகள் இருக்கிறார்களோ
அங்கு அங்கு ராமசாமிகளும் தோன்றுவரே” என்று டொள்காப்பியப் பொருளதிகாரம் கூறுவது முக்காலும் உண்மையே!
August 31, 2014 at 13:53
மன்னிக்கவும். சென்ற பின்னூட்டத்தில் இணைப்பு விடுபட்டுவிட்டது. http://www.historyversusthedavincicode.com/author.html. இதுதான் அந்தத் தளத்தின் முகவரி.
September 1, 2014 at 11:22
நீங்கள் பின்னிப் பெடலெடுப்பதற்கு வா.மணிகண்டன் எழுதியிருப்பது ஏதோ தொழில்முறை ஜர்னலில் வெளியான ஆய்வுக்கட்டுரை அல்லவே. அவர் எழுதியிருப்பது அவரது புரிதலை, ஒரு வலைப்பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருப்பது. அவ்வளவே. ஏன், பின்னூட்டங்களில் யாராவது சுட்டிக்காட்டினால் தன் புரிதலைச் சரி செய்துகொள்ளலாம், திருத்திக்கொள்ளலாம் என நினைத்துக்கூட அவர் அந்தப் பதிவை எழுதியிருக்கலாம். அதேபோல நீங்கள் உங்களுத் தெரிந்ததை எழுதலாம். படிப்பவர்கள் எது சரி என்று முடிவு செய்துகொள்ளட்டுமே. அவர் எழுதினால் 5000 பேர் படிப்பார்கள், நீங்கள் எழுதினால் 50 பேர்தான் படிப்பார்கள் என்றால் அதற்கு அவர் என்ன செய்வார்? பலரிடம் சரியான (உங்கள் பார்வையில்) கருத்துகள், தகவல்கள் சென்று சேரவேண்டும் என்று கருதினால் உங்கள் எழுத்துகளையும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படிக்க என்ன செய்ய வேண்டும், இப்போது ஏன் அப்படி இல்லை என்று பரிசீலிக்க வேண்டும். இதில் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் இருக்காது. அப்படியென்றால் ‘தவறான தகவல்கள் ஆயிரக்கணக்கானவர்களைச் சென்று சேர்கிறதே’ என்ற பதட்டப்படக் கூடாது. அப்படிப் பார்த்தால் விக்கிபீடியாவிலிருக்கும் தகவல் பிழைகளைத் தினமும் பல லட்சம் பேர் பார்க்கிறார்கள். அதற்கு என்ன செய்வது?
” ‘தமிழர்களும் இறந்த’ ஈழப்போரில்” என்று எழுதுகிறீர்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பெரிய மனது பண்ணி ஏதோ கொஞ்சம் தமிழர்களும் உயிரிழந்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களே, அந்த மட்டும் பரவாயில்லை!
ஒன்று சொல்கிறேன். ‘யாசர் அராஃபத்தை (what charisma he had!) தூர்தர்ஷனில் காட்டிய காலத்தில்’ ஈழப் போராளிக் (இந்த வார்த்தையே அப்போது தெரிந்துகொண்டதுதான்) குழுக்கள் பெய்ரூட் (?) சென்று பி.எல்.ஓ.விடம் பயிற்சி பெற்றுத் திரும்புவார்கள். அப்போதிருந்தே எங்கள் (= அந்தத் தலைமுறையின் பெரும்பாலான தமிழர்கள்) மனதில் பாலஸ்தீன் என்றால் அது தமிழ் ஈழத்தின் மறுவடிவம்தான். இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். (அதற்காக ஹமாஸை யாரும் ஆதரிக்கவில்லை. ) அதேபோல இஸ்ரேல் = சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு. இதுதான் எங்கள் ஆழ்மனச் சித்திரம். கூடவே குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிகள் நூற்றுக்கணக்கில் தினமும் (அந்த சில நாட்களில்) கொல்லப்படும் நிதர்சனம். இதில் யோம் கிப்பர் யுத்தம் நினைவிருக்கிறதா என்றால், அதற்காக இன்று ஒரு பிஞ்சுக்குழந்தை சாக வேண்டுமா என்றுதான் கேட்க முடியும்.
மற்றபடி அமெரிக்கா மட்டும் தடுத்திருக்காவிட்டால் சிரியா, லெபனான், ஜொர்டான், எகிப்து எல்லாம் இஸ்ரேலின் மாநிலங்களாகியிருக்கும் என்பது நடைமுறை ஜியோபாலிடிக்ஸ், ரியல்பொலிடிக் தெரிந்த ஒருவர் கூற்றாகத் தோன்றவில்லை. அமெரிக்கா தலையிட்டிருக்காவிட்டால் பாகிஸ்தானையே இந்தியா இணைத்துக்கொண்டிருக்கும் என்று சிலர் சொல்வது போல இருக்கிறது.
September 1, 2014 at 11:34
// நிலமெல்லாம் ரத்தம்” பா.ராகவன், மத்திய கிழக்கு குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன் // புனைவெழுத்தாளர் எழுதும் சரித்திர புனைவை ‘இதுதாண்டா சரித்திரம்’ என்று புரிந்து கொள்வதை விட சரித்திர அறியாமையே மேலானது.
September 2, 2014 at 05:14
ஐயா, முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதாய்யா,
நான் வேற, அவரும் மணிகண்டன் போலன்னு நினைச்சுட்டேன்!
September 1, 2014 at 12:39
இனி இப்படி மேம்போக்காக எழுதமாட்டார் என நம்புவோமாக!
நான்(nudenandu), எழுதுவதில் எனக்கே பல சந்தேகங்கள் தோன்றியதால்தான் உங்களிடம், “மேற்கொண்டு எழுதலாமா?” என்று கேட்டேன். உங்களின் அறிவுரைப்படி, (சற்று மிகையாகப் படலாம்!) நிறைய படிக்கவும் முடிந்தவரை சிறு சிறு பயணங்களும் செய்கிறேன். எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். எழுதிய வலைப்பூவையும் அழித்துவிட்டேன் (nudenandu.blogspot.com). என்றைக்கு எழுதுவதற்கான தகுதியை அடைவதாக முழுமையாக உணர்கிறேனோ அன்று மீண்டும் எழுதத் தொடங்குவேன். ஆனால் நிசப்தக்காரர் “எழுத்து என்பது எழுத எழுத ‘டியூன்’ ஆகும்” என்று சொல்பவர்! (உங்களிடம் நான் கேட்ட அதே கேள்வியை, விவரம் தெரியாது, அவரிடம் கேட்டபோது அவர் எனக்கு கூறிய பதில் தான் இந்த ‘டியூன்’).
ஏற்கனவே B.E க்கும் B.Tech கிற்கும் இவர் கொடுத்த விளக்க பீதியிலிருந்தே இன்னும் வெளிவர முடியவில்லை. (http://www.nisaptham.com/2014/04/blog-post_11.html) ஆகவே, இவர் போன்றோருக்கு இவ்வளவு விரிவான தொடர் பதிவுகளெல்லாம் தேவையில்லை. உங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.
நன்றி!
அன்புடன்,
லெனி
September 1, 2014 at 19:59
வா . மணிகண்டனை மட்டும் குறை சொல்லிப்பலனில்லை…..
இவன் தான்டா தமிழ் எழுத்தாளன் என்று அறிவுக்கொழுந்துகளால் அங்கீகாரம் பெறப்படவேண்டுமென்றால் சில அபத்தங்களை செய்தே ஆகவேண்டும்…..
1. தமிழ் ஈழத்தை ஆதரிக்கவேண்டும் [ விடுதலைப்புலிகளை மட்டும் ]…. புலிகள் செய்த அராஜகங்களைப்பற்றி மூச்சுக்கூட விடக்கூடாது…..
2. ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று கூவ வேண்டும்…[ இது விஷயமாக அவருக்கும் எனக்கும் நீண்ட விவாதம் நடந்தது…. கடைசியாக நான் அப்படித்தான்….. நீ இங்கே வராதே என்றார் ….]
3. சிவன் , ராமன் , விநாயகர் போன்றோர் அந்நிய தெய்வங்கள்…. சிறு தெய்வ வழிபாடு மட்டுமே தமிழர் மரபு …[ இது விஷயமாக திரு. அரவிந்தன் நீலகண்டன் , சசிகுமார் மற்றும் நான் ஆகியோர் மறுப்பு தெரிவித்தபோதும் பலனில்லை…]
4. லேட்டஸ்டாக …. விநாயகர் வழிபாடு மராட்டியத்தில் இருந்து வந்தது….. பழந்தமிழர்கள் பிள்ளையாரை வழிபட்டதில்லை …[ இதுவிஷயமாக , திரு. ஜடாயு , சசிகுமார் மற்றும் நான் ஆட்சேபம் தெரிவித்தோம்….. தன் தரப்பு ஆதாரங்களாக தீராவிட அறிவுக்கொழுந்துகளை முன் நிறுத்துகிறார்….. ]
பத்து நாட்களுக்கு ஒருமுறை இப்படி தத்துப்பித்தென்று எழுதுவதை வழக்கமாகவே கொண்டுள்ளர்…. மீறி விவாதித்தால் , நான் அப்படித்தான்….. உன் ஆதாரத்தை நீயேவைத்துக்கொள் என்பார்……
கவலை வேண்டாம்… மிக விரைவில் அதிஷா , யுவ கிருஷ்ணா , மற்றும் ஆர். முத்துக்குமார் வரிசையில் இணைவார்……
இளைஞர், சற்று தெளிவாக எழுதுகிறார், எளிமையாக எழுதுகிறார் , முக்கியமாக எங்கள் பகுதிய சார்ந்தவர் என்றுதான் தொடர ஆரம்பித்தேன்….. ம்ஹூம்….. சூளைச்செங்கல்லும் பிடாரிகள்தான்……
September 2, 2014 at 06:39
லெனி அவர்கள் கூறியது – ” ஏற்கனவே B.E க்கும் B.Tech கிற்கும் இவர் கொடுத்த விளக்க பீதியிலிருந்தே இன்னும் வெளிவர முடியவில்லை. (http://www.nisaptham.com/2014/04/blog-post_11.html) ”
நண்பரே, மணிகண்டன் மேற்கூறிய பதிவை மாணவர்கள் பல்வேறு துறைகளை தேர்ந்தெடுக்க உதவும் விதமாக, பாமரரக்குக் கூறும் விதமாக தன் இணையத்தில் பதிந்தார். என் அறிவிற்கு அவர் அப்படி ஒன்றும் அபத்தமாக எழுதவில்லை. தயவுசெய்து இதைப் பரிசீலிக்கவும் – http://century.custhelp.com/app/answers/detail/a_id/220/~/the-difference-between-engineering-and-engineering-technology%3F.
நண்பர் சான்றோன் அவர்களுக்கு – நண்பரே, விநாயகர் விஷயத்தில் அவர் தரவுகள் கொடுத்துள்ளார். தம்ழ்நாட்டு ஆதி வழிபாடு இல்லை என்றே சொல்கிறார். நானும்தான் அங்கே நக்கல் அடித்தேனே தவிர, அவர் எழுதியது உண்மைதானே?
அவர் எந்த கருத்தை முன் வைக்கிறார் என்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அந்தக் கருத்தைப் பலப்படுத்த தரவுகள் முன் வைக்கிறாரா என்பதே முக்கியம். நாளைக்கே அவர் “உலகம் தட்டை” என்று ஒரு கருத்தை முன் வைத்து அதற்குத் தரவுகளும் ஆதாரங்களும் கொடுத்தால் ( ஆதாரங்கள், தவறு என்றாலும், இருக்கின்றன!), நான் எதிர்மறை விமர்சினங்கள் எழுதினாலும், பதிவிற்கு ” சபாஷ்” என்றே கூறுவேன்.
இஸ்ரேல் – காசா பிரச்சினையில் அவர் கருத்துக்கு அவர் ஆதாரங்களை முன் வைக்கவில்லை. “பொது மக்கள் உயிர் சேதம்” என்ற ஒரே கோணம் அவர் சிந்தையை மறைத்து விட்டது. அவ்வளவுதான்.
September 2, 2014 at 06:53
நண்பர் சரவணன் கோபப்படுவது ஏன்? தரவுகளும், ஆதாரங்களும் இல்லாத பதிவுகள் பின்னிப் படல் எடுக்கப்படும். அவ்வளவுதான். இன்று ராமசாமி செய்யா விட்டால் நாளை ஒரு கோவிந்தசாமி செய்வார்; அவ்வளவே. ராமசாமி எழுதியது தவறென்று நீங்கள் கூறுவதை, மனிகண்டண்டன் அவர்களின் பதிவிற்கு ஆதாரங்கள் கொடுத்து விட்டுக் கூறவும்.
September 2, 2014 at 13:30
திரு.ராகவன் ராமன் அவர்களே…..
மணிவண்ணன் தரும் தரவுகள் எப்படிப்பட்டவை? கால்டுவெல்லின் கருத்தை அப்படியே ஒற்றியெடுத்த மறைமலை அடிகள் , தெ.பொ.மீ போன்றோரின் கருத்துகள் தான் ஆதாரமா?
சரி… அப்படியே வைத்துக்கொள்வோம்….
சிறுத்தொண்டர் என்று பின்னர் அழைக்கப்பட்ட பரஞ்சோதி என்ற நரசிம்ம வர்ம பல்லவரின் சேனாதிபதி தான் வாதாபியில் இருந்து விநாயகரை கண்டுவந்தார் என்கிறார்….
சரி….மாணிக்கவாசகர் விநாயகருக்கு காப்புச்செய்யுள் பாடியுள்ளாரே என்று கேட்டால் இருவரும் சமகாலத்தவர்கள் ,….. அதனால் சிறுத்தொண்டர் பிள்ளையாரை கொண்டுவந்த பிறகு பாடியிருப்பார் என்கிறார்…..
மாணிக்கவாசகர் , திருஞானசம்பந்தர் , சிறுத்தொண்டர் ஆகிய மூவரும் சமகாலத்தவர்கள்…. ஆனால் மாணிக்கவாசகர் மூவரில் மிக மூத்தவர்….. பரஞ்சோதி வாதாபி யுத்தத்தில் மனம் வெறுப்புற்று , சிவனடியாராக மாறும்போது மாணிக்கவாசகர் தம் இறுதிக்காலத்தில் இருக்கிறார்……
விஞ்ஞானமும் , தகவல் தொடர்பும் ,போக்குவரத்தும் மிகவும் முன்னேறியுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம் ….. சீரடி சாய்பாபா , புட்டபர்த்தி சாய்பாபா , மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் போன்றோர் கடந்த பல பத்தாண்டுகளாக வழிபடப்படுகின்றனர்….. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பிரச்சாரமும் செய்யப்படுகிறது…….இருப்பினும் பெரும்பாலான ஹிந்துக்கள் இவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்வதில்லை…… [ சிவ -விஷ்ணுவின் மகனாக முன் நிறுத்தப்படும் சபரிமலை ஐயப்பன் வழிபாடும் கூட …..]
தற்கால நிலைமையே இப்படியிருக்க , ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்க வாசகர் , அவருக்கு மிக இளையவரான ஒருவர் வடக்கில் இருந்து கொண்டுவந்த கடவுளை ஏற்றுக்கொண்டு உடனடியாக காப்புச்செய்யுள் பாடினார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது……
மன்னவனும் நீயோ? , வள நாடும் உனதோ ? என்று ஒரு புலவர் மன்னனை பார்த்து கேட்ட மரபு நம்முடையது ….
அப்படியிருக்க , ஒரு சிவனடியார் , ” கற்றுனைப்பூட்டி ஓர் கடலினிற்பாய்ச்சினும் நற்றுணையவது நமச்சிவாயவே ” என்று கர்ஜித்தவர் , சிவனையே சதாசர்வ காலமுமும் பாடிப்பரவிய [ சிவன் மனைவி பார்வதியையும் , மகன் [ தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் ] முருகனையும் பெரிதாக பாடியிராத மாணிக்கவாசகர் , ஒரு தளபதிகொண்டுவந்த கடவுளை உடனே ஏற்றுக்கொண்டார் என்றால் , அதை நாம் அப்படியே நம்ப வேண்டுமா என்ன?
September 2, 2014 at 13:32
கட்டுரையின் மையக்கருத்தை விட்டு விலகி , விவாதத்தை வேறு திசையில் திருப்பியமைக்கு மன்னிக்கவும்….
September 2, 2014 at 13:39
அய்யா, பரவாயில்லை. சுவாரசியமாகவே இருக்கிறது. :-)
எழுத்தாளர் காணாபத்யம் முதலான அனைத்து மதங்களிலும் விற்பன்னராக இருந்திருக்கிறார் என்பதே – எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். ஆனால், தேடி அவர் பதிவுகளை மேலதிகமாகப் படிக்க – வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன் – பயபீதியாகவே இருக்கிறது. :-(
September 2, 2014 at 14:44
அவர் பதிவுகளில், உண்மை சம்பவங்கள், அனுபவ குறிப்புகள், கதைகள் போன்றவற்றை மட்டும் படிக்கும் படி உங்களுக்கு பரிந்துரை செய்கின்றேன். அந்தளவிற்கு பயமெல்லாம் இருக்காது. பொழுது போகும். ஆதாரம் தேவைப்படும் விவகாரங்களை படித்தால், அது உங்கள் விருப்பம். நீங்களே ஆதாரங்களை தேடி, படித்து, தனியாக பேசிக்கொள்ள வேண்டியதுதான்.
September 2, 2014 at 14:59
என்ன ராகவன் சார், கூகிள் search ல difference between engineering and technology னு type செஞ்சு பாத்தீங்களா? தப்பு செஞ்சுட்டேளே! அதுக்கு பதிலா difference between be and btech னு type செஞ்சு பாருங்கோ! முதல் link – http://www.inspirenignite.com/what-is-the-difference-between-be-and-b-tech-or-me-and-m-tech/
இது கொஞ்சம் சரியா இருப்பதா தோணுது! நீங்க செய்ற இதே வேலைய தான் சார் அவரும் செஞ்சு கட்டுரை கட்டுரையா எளுதி தள்றாரு! ஆனா பிரச்சினை இன்னானா நீங்க செஞ்ச அதே தப்ப அவரும் செஞ்சுடுறார்! கூகிள் ல தகவல் திரட்டுறதுக்கும் கொஞ்சம் புத்திசாலித்தனம் வேணும் சார்!
ஓர் என்ஜினியரா, அவர் சொல்லியிருப்பது சுத்த அபத்தம்!
// டெக்னாலஜிக்கும், எஞ்சினியரிங்குக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை யாராவது கேட்பார்கள். சுஜாதா, அப்துல்கலாம் எல்லாம் கல்லூரியில் படித்த காலத்தில் B.E தான். பேச்சிலர் ஆஃப் இஞ்சினியரிங். இப்பொழுதுதான் B.Tech வந்திருக்கிறது. டெக்னாலஜிஸ்ட். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காலங்காலமாக அடிப்படை மாறாமல் இருப்பதைப் படிப்பது எஞ்சினியரிங். மின்சாரம் எப்படி பாய்கிறது? மோட்டார் எப்படி சுழல்கிறது? கட்டிடங்களின் அடிப்படை என்ன என்பதெல்லாம் எப்பொழுதும் அப்படியேதான் இருக்கும். அதனால்தான் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என்பதெல்லாம் B.E. எஞ்சினியரிங்.
தகவல் தொழில்நுட்பத்துறை அப்படியா? நேற்று படித்தது இன்று மாறிவிடுகிறது. இன்று படித்துக் கொண்டிருப்பது நாளைக்கு இருக்காது. இப்படி மாறிக் கொண்டேயிருப்பதை பாடமாக எடுத்துப் படிப்பது டெக்னாலஜி. பி.டெக். இங்கு டெக்னாலஜி படிக்கும் மாணவனும், எஞ்சினியரிங் படிக்கும் மாணவனும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். எஞ்சினியரிங் படிப்பவன் அடிப்படை பொறியியலில் கரை காண வேண்டும். டெக்னாலஜி படிப்பவன் புதிய நுட்பங்களை மிக ஆர்வமாகத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் BE என்றும் B.Tech என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.//
செம காமெடி சார்! computer science & engg என்று ஒன்று இருப்பதையே இவர் மறந்துட்டார் போல! இவர் சொன்ன விளக்கப்படி பார்த்தால் இந்த துறையில் programming language இன் முன்னோடிகளான FORTRAN, COBOL போன்றவற்றைத்தான் இன்னும் சொல்லிக்கொடுக்கிறார்கள் போல! உடனே CS&E விதிவிலக்கு என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இத்துறை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும்!
September 2, 2014 at 15:15
நண்பர் சான்றோன் அவர்களுக்கு – ” ” கற்றுனைப்பூட்டி ஓர் கடலினிற்பாய்ச்சினும் நற்றுணையவது நமச்சிவாயவே ” என்று கர்ஜித்தவர்”..
நண்பரே, மேலே சுட்டப்பட்ட வாக்கியத்தை வாசித்ததும் புன்முறவல் பூத்தேன். நன்றி.
விஷயத்திற்கு வருவோம். அப்பர் என்ன நரசிம்ம பல்லவருக்கு ஆயிரம் வருடத்திற்கு முந்தியவரா என்ன? நரசிம்ம பல்லவருடைய அப்பர் மகேந்திர பல்லவர் காலத்தவர்தானே? என்ன, ஒரு முப்பது, ஐம்பது வருடங்கள் முந்தியிருக்குமா?
அப்பர் பாடியிருக்க வேண்டுமென்றால் ஏற்கெனவே பிள்ளையார் புகழ் பெற்றிருக்க வேண்டும். உண்மை. இதை யாரும் அங்கே சொல்லவில்லை.
நண்பரே, நான் மணிகண்டன் அவர்கள் சரி என்று கூறவில்லை. ஆனால் எப்பொழுது பிள்ளையார் தமிழ் நாட்டிற்கு வந்தார் என்ற ஆதாரம் கைவசம் உடனே இல்லை. நம்மை சிந்திக்க வைத்து விட்டார் இல்லையா?
நண்பரே, நான் எல்லோருக்கும் நன்மைகளையே நினைக்கிறேன்.
பிள்ளையார் விஷயத்தில் ஆதாரங்கள் கொடுத்தார். சர்ச்சைக்குரிய ஆதாரங்களே, ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனாலும் கொடுத்தார். இஸ்ரேல் விஷயத்தில் கொடுக்கவில்லை. அவ்வளவுதான்.
எதிர் காலத்தில் மணிகண்டன் நன்றாக வருவார் நண்பரே!
September 2, 2014 at 15:40
நண்பர் லெனி சார், சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியமே இல்லை.
பி.ஈ படிப்பும் பீ.டெக் படிப்பும் ஒன்றே என் அவர் எப்படி சார் சொல்ல முடியும்? பீ.ஈ படித்தவனுக்கு சம்பளம் அதிகமாக வேலை; பீ.டெக் படித்தவனுக்கு குறைந்த சம்பளம். வித்தியாசம் வேண்டும் அல்லவா?
மணிகண்டனை விடுங்கள். என் மகன் பீ.டெக் படிக்க ஆரம்பித்தான். என் தொடர்ந்த நச்சரிப்பால் பீ.ஈக்கு மாற்றிக்கொண்டான். வித்தியாசம் உள்ளாது நண்பரே! என்மகன் எத்தனை முறை நன்றி கூறி இருப்பான்!?..
நண்பரே, போகட்டும்; எத்தனை பேர் ஓரளவாவது வழி காட்டியுள்ளார்கள்?
நான் கூகிள் வழிதான் ஆராய்ந்தேன். என் ஆய்வு தவறல்ல நண்பரே! என் மகனே ஒரு உதாரணம்.
September 2, 2014 at 16:47
<> மன்னிக்கணும் சார்! உங்களுக்கு விவரம் போதவில்லை! விவாதம் அவசியமற்றது!
நன்றி!
September 2, 2014 at 18:02
திரு. ராகவன் ராமன் அவர்களே……
திருநாவுக்கரசரை , மாணிக்கவாசகர் என்று குறிப்பிட்டு விட்டேன்…… அவருடைய ஃபேஸ் புக் தளத்திலும் அவ்வாறே இருந்ததை தொடர்ந்துவிட்டேன் ,,…… இருப்பினும் தவறுதவறுதான் ….மன்னிக்கவும்…..
பெயர்க்குழப்பினும் என்னுடைய வாதத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்துகொண்டமைக்கு நன்றி……
September 2, 2014 at 20:11
லெனின் சார், நன்றி.