சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள்  – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய  சாராம்சமும், என் பதில்களும் கீழே:

:   நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.

பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »

வேறு வழியில்லை, இவற்றைச் சொல்லியாக வேண்டும்:

“The time has come,” the Walrus said,
“To talk of many things:
Of shoes–and ships–and sealing-wax–
Of cabbages–and kings–
And why the sea is boiling hot–
And whether pigs have wings.”
Lewis Carroll (from Through the Looking-Glass and What Alice Found There, 1872)

ஒத்திசைவைப் பொதுவாக அதிகம் பேர் படிப்பதில்லை – மின்னஞ்சல்களில் பதிவுகளைப் படிப்பவர்களைத் பெற்றுக்கொள்பவர்களைத் தவிர, தினம் சுமார் 500 பக்கப் பார்வைகள் (படிப்புக்கள் அல்ல) இதனைப் படித்தால் அது அதிகம். இதுதான்,  இந்த வெகு சாதாரணத் தளத்தின் பின்புலம்.

இருந்தாலும்…  இந்தக்  குறைந்த எண்ணிக்கை வாசகர்களிலும் கூட,  பலர்  இந்தப் பதிவுகளைப் படித்துக் கோபப்படுவதற்காகவே இங்கு வருகிறார்களோ என்பது என் தொடர்ந்த சந்தேகம்.

… எனக்கு வரும் ‘ஒன்ன ஒழிப்போண்டா’ வகையறா தட்டச்சு-வீர மின்னஞ்சல்கள் எனக்குப் பழக்கமே. என்னுடைய நகைச்சுவை உணர்ச்சியில்(/யிலும்) கர்வம் உடையவன் நான். முடிந்தால் அவற்றில் சிலவற்றைப் பார்த்துச் சிரித்து விட்டு அவற்றைச் செல்லமாக மண்டையில் தட்டி குப்பைத்தொட்டிக்கு அனுப்பி விடுவேன்.  பல  மேற்படி மின்னஞ்சல்கள் பொதுவாக, நேரடியாகக் குறுக்கு வழியிலேயே குப்பைக்குப் போய்விடும். 2 வருடங்கள் முன் போல, தமிழக சட்டசபை தேர்தல் சமயம் நிறைய இம்மாதிரி வந்தன – ஒரளவு இவற்றை எதிர்பார்த்தேன் கூட – என்னுடைய கோபப் (polemic) பதிவுகளும் அவைகளை ஆகர்ஷித்திருக்க வேண்டும். எனது சக விசிலடிச்சான்குஞ்சப்ப வெறுப்பாளர்களுக்கும் வேறு வேலையேயில்லையா என்ன? Read the rest of this entry »

அப்பால, வொலகத்துக் குப்பைங்கள போராடி அகத்தறத யோசிக்கலாம்… புர்ஞ்சுதா ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்டடிச்சான் குஞ்சுகளா?

 நெல்ஸன் மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் - குத்துச் சண்டைப் பயிற்சி -

ரோலிஹ்லஹ்லா ‘நெல்ஸன்’ மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் – தென் ஆஃப்ரிக செய்தித்தாள் குழும அலுவலக மாடியில், இளம்வயதுக் குத்துச் சண்டைப் பயிற்சி – ’ட்ரம்’ பத்திரிக்கைகாக எடுத்தது – ஆனால் பதிப்பிக்கப் படாதது. ( நான் எல்லெக் பீமர் எழுதிய நெல்ஸன் மன் டேலா புத்தகத்தில் இருந்து இந்தப் படத்தை ஸ்கேன் செய்தேன்)

பாவப்பட்டு, மறுபடியும் என் பதிவைப் படிக்க வந்திருப்பவர்களே! திரும்பவும் திட்டலா என்று வருத்தப் படாதீர்கள்.  என்னுடைய முந்தைய ஒரு பதிவிற்கு வந்த எதிர்வினை ஒன்றால்தான் இது. மன்னிக்கவும். செய்வினை என்பது இதுதானோ? (உங்களுக்கு வேறு உபயோககரமான வேலைவெட்டியிருந்தால், மேலே படிக்காதீர் – வொங்க நெல்த்துக்குத்தாம்பா ஸொல்றேன். பிர்ஞ்சிதா?)

… ஒரு நீள்நெடுநாள் ‘போராளி’(!) மிகவும் வருத்தப்பட்டு கொஞ்சம் கோபத்துடனேயே ஏகவசனத்தில் எழுதியிருக்கிறார்: (கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்) –

”உன்னைப் போன்ற அறிவுஜீவிகள், ஏதாவது பொது, மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றாலே நக்கல் செய்கிறீர்கள். இளைஞர்களின் போர்க்குணத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உனக்கு எவ்வளவு இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை தெரியும், இந்த மாதிரி பொத்தாம்பொதுவாக மட்டையடி அடிப்பதற்கு? நீ இந்த இளைஞர்கள் செய்வதை விட என்ன உபயோககரமாகச் செய்து கிழித்து விட்டாய்? … … அவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நீ தாங்க மாட்டாய் …  … உன்னைப் போன்ற தமிழினத் துரோகிகளின், பார்ப்பான்களின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.”

Read the rest of this entry »

இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.

D V Karunn Says: 22/12/2012 at 16:50 e

we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.

’டி வி கருண்,’

என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு

Read the rest of this entry »