‘தமிழின் படுபீதியளிக்கும் தொன்மை’ எனும் வீரியமிக்க, ஆத்துமசுகமளிக்கும் உடும்புத்தைலம்
March 1, 2025
…உங்கள் உடனடி உடும்படித்தேவைக்கு, சங்ககால பொற்கால-போர்க்கால ரீதியில், அதன் ஏகபோக டீலர்களை அணுகவும்:
திராவிடமாடல் + தமிழ்க்குடிபெருங்குடி வெறியர்கள்,
c/o லெமூரியக் குமரிக்கண்டம்.
ஹோல்ஸேல் ரேட்டில் சகாய விலை! ஸ்டாக்குகள் தீர்ந்துகொண்டே இருக்கின்றன, உஷார்!!
அல்லது, படிக்கவும்: தமிழப் பிரமைகள் – Tamil delusions, கலவை வெங்கட் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு. (சுட்டி அனுப்பிய நண்பருக்கு நன்றி.)
நானும் ஒருமாதிரி இவ்விஷயங்களைப் பற்றி (தமிழுக்குத் தேவையேயற்ற அண்டப் புளுகுகள்) சிலபல முறை எழுதியிருக்கிறேன்.
- Tamil Dating Industry: ‘Sangam Age’ spins & our lovely Tamil Hysteriagraphy – quick notes January 5, 2023
- ‘சங்க காலம்’ என்பது தமிழர்கள் ஏகோபித்து அடித்த கூட்டுகஞ்சா பராக்கிரமத்தின் விளைவு March 2, 2023
இந்தத் தமிழப் பிரமைகளைக் குறித்து துண்டு துண்டாகவாவது ஆதாரங்களுடன் எழுதி, பின்னர் பின்னடித்து வெண்முரசு ஸைஸுக்குப் புத்தகமாக வெளியிட்டால், வரலாறு காணாத ரீதியில் இன்னமும் அலைமோதிக்கொண்டு எண்ணிறந்தவர், லட்சக்கணக்கானவர்கள் படிப்பார்கள் எனவொரு பகீர்பிரமை எனக்கு…
அதாவது 7½ (ஏற்கனவே உள்ள வாசகர் படை, அடியேன் உட்பட) + 2 (அதிகப்படியாகப் படிக்கப் போகிறவர்கள்) = 100,000+.
உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி. ஆனால் உடும்புத்தைலம் முக்கியம், சரீங்களா?


March 6, 2025 at 10:01
Herman Tieken’s fiction is old. எல்லாமே தமிழ் தாத்தா தான் எழுதியது என்றால் ஒட்டு மொத்தமாக முடித்து விடலாம்.
March 7, 2025 at 17:53
You have a great sense of humour. :-)
March 8, 2025 at 13:01
So pandya kings are die hard dravidianists to pit tamil against sanskrit in those days itself? It is really amazing and also sucking! So dravidianism is not a colonial and missionary invention? It seems Pandya kings were aware of indo aryan and dravidian language groups even then!
March 8, 2025 at 15:36
Congratulations.
You have a great & fertile imagination. You should improve on your fiction writing skills, though!