நடந்து கொண்டிருக்கும் பயங்கரம்… நினைத்தாலே படுபீதியாக இருக்கிறதே! :-(

December 24, 2024

1

இத்தனை  நாட்கள், அயோக்கிய சோம்பேறித் தமிழர்களின் (அதாவது இலக்கியம் மண்ணாங்கட்டீ மசுறு பண்ணுகிறேன் என வெற்றிடத்தை வெறித்து நோக்கியபடி வளையவருபவர்கள் இந்த ஜந்துக்கள் என்றறிக) வெட்டிப் பொழுதுபோக்கு என்பது… …வாக்கியங்களை ஒடித்து ஒடித்து அடுக்கி பிரித்துச் சேர்த்து புரோட்டா மாவு பிசைந்து பின்னர் வெளிப்படும் கொத்துப் புரோட்டா கவிதைக்கழுதைகளை ட்ரியோ ட்ரியோவென கருணையேயில்லாமல் ஒட ஓட விரட்டி அவை கொட்டடியில் வந்தடைந்தவுடன் வாலைமுறுக்கிச் சாணிபோடவைத்து அவற்றை – அதாவது பின்னதை, ப்ரிண்ட்-ஆன்-டிமேண்ட் செய்து ரெண்டு பின்னடித்து – நம் பாவப்பட்ட ப்ளடி மண்டைகளில் கட்டுவது…

மந்தை

சென்னை புத்தகச் சந்தை
கையில்
ஒரு பானை மொந்தை
கொட்றா
அந்தப் பந்தை
ஒதேடா
க்வாட்டர் பாலை
குடிறா
அந்த பெருநீர் பீரை
அட்றா
அந்த மூத்திரச் சிறுநீரை
வெளியிட்றா
எலக்கியத்தை
எள்துடா
கதைகப்ஸாவை
அல்லாத்தயும் கட்றா
என் தலேல…

பின்னர் சொக்கன் மக்கன் பாரா பாகாதடா எஸ்ராபுஸ்ரா சாரூமோரூ எனப் புஸ்வாணப் புற்றீசல் போலக் கிளம்பிய தூவானத் தும்பிகள் விக்கிபீடியா முதல் வொலகசினிமா வரை வழித்தெடுத்து நமக்குத் தொடர்ந்து பொசியும் பொக்கிஷங்கள்…

எல்லாம் நம் தலைவிதிதான் என  விதியை நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருக்கும் போது, இன்னொரு மானுட இயற்கையான செயற்கைப் பேரிடர், இடி போல நம்மைத் தாக்குகிறதே!

2

…அதாவது – பாவிகள், இப்போதெல்லாம் சாதாரணக் காமன்மேன் மனிதர்கள் கூட பேய் பிடித்தாற்போல – முழ நீள, வெகு நீளப் புத்தகங்களை எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்களே! ஐயகோ!

இந்த அநியாயத்தைக் கேட்பதற்கு ஆளே இல்லையா? இல்லை அம்மாதிரி கேட்ககூடிய ஹோதாவில் இருக்கும் ஆட்களும் வெகுமும்முரமாக புத்தகங்களை எழுதித் தொலைத்துக் கொண்டிருக்கிறார்களோ, பாவிகள்?

பொதுவாகவே சமூகவிரோதியான, நண்பர்கள் என ஒரு விரலைவிட்டுக்கூட எண்ணமுடியாத எனக்குமே கூடத் தெரிந்தே மூன்று பேர் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்… (இதில் இருவர், சென்னை புத்தகக் கண்காட்சியில் தங்கள் புத்தகங்கள் வெளியிடப் போவதாகவும் ஒரு பகீர் செய்தி, எல்லாம் அவர்களே சொன்னதுதான்! அதாவது அவங்களே எழுதி அவங்களே ப்ரிண்ட் செய்து அவங்களே வெளியிட்டு – அவர்களும் அவர்கள்தம் சொந்தங்களும் சுற்றங்களும் சுற்றிச் சுற்றிப் படித்துத் தலை சுழன்று, மண்டை காய்ந்து செத்துச் சுண்ணாம்பாகப் போக ஏதுவாக+++)

இன்னொருவர் தன்னுடைய மேதாவித்தனமான தனித்துவக் குப்பை X/ட்வீட்களை வைத்தே புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம்! கேள்விப்பட்டேன்! இந்த எழவு எப்போது குடலிறக்கம் பெறப் போகிறது என்பது பிடிபடவில்லை!

மற்றுமொருவர், ஹிஸ்டரி ட்விஸ்டரி என (பெரும்பாலும் நல்லமனதுடன்தான் என நினைக்கிறேன்! ஆனால் கொஞ்சம் ஆர்வக்கோளாறு, அதனால் கொஞ்சம் உளறாறு) சிலபல சமயங்களில் அட்ச்சிவுட்டுக்கொண்டு அலைபவர். நண்பரல்லர். ஆகவே ட்விட்டர்/X எழவிலும் என்னை பாதுகாப்பாக ப்ளாக் செய்துவிட்டார். அவரும் ஒன்றை (குறைந்த பட்சம்; அதாவது ஒரு புத்தகத்தை…) வெளியிடப் போவதாக அறிகிறேன், ஏதோ நாணயமாக இருந்தால் அதுவும் சரியே!

நமது பாவப்பட்ட, கேடுகெட்ட கீழ்மை ததும்பும் கழிவிரக்கக் கிழநிலைமை இப்படி இருக்கையிலே….

நண்பர் ஒருவர் வேறு, அவருடைய பள்ளி நண்பர்கள் இருவர் ஏதோ மேனேஜ்மெண்ட் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள் என ஒர்ரேயடியாக அநியாயமாகப் பீற்றிக் கொண்டார். (பின் அவற்றைப் பைசா கொடுத்து வாங்கிப் படிக்கவேறு படித்து… … – இன்னமும் அவருக்கு ரத்தக் கொதிப்பு குறைந்தபாடில்லை என அறிகிறேன். தேவையா, ப்ளடீ??)

… அவருக்கு ‘நன்றாக வேண்டும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’ என எனக்கே உரித்த இயல்பான குரூரத்துடன் தோன்றினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவர் வருத்தத்திலும் சுயபச்சாத்தாபத்திலும் கடுப்பிலும் – என் ஏகோபித்த கடும் மகிழ்ச்சியுடன் கமுக்கமாகப் பங்குபெற்று ஆதூரமாக நான்கு வார்த்தை  சொன்னேன்…  இல்லையில்லை ரெண்டு எமோஜி அனுப்பினேன், அவ்வளவுதான்!

schadenfreude என்பது யாதெனின்… :-))))))

…எனக்குத் தெரிந்த ஒரு பழைய ‘பப்ளிக் ஸெக்டர் யூனிட்’ உச்சாணிக்கிளை + பின்னர் ஒரு பெர்ரிய தகவல்தொழில்(!)நுட்பம்(!!) அதுயிது நிறுவனத்தில் பெஞ்சுதேய்ச்சிங் வகை  பெரும் ஹெச்ஆர் பெருச்சாளி ஆசாமி ஒருவர் (வெறும் ஹெச்ஆர் ஆசாமி என்று சொன்னாலே புரிந்துகொள்ளப்படுமே, எதற்கு இந்த எலி பெருச்சாளி என… நீளமாகப் பிலாக்கணம் வைக்கும் மேகனம் பொருந்திய அறிவுரை அறிவாளிகள், உடனடியாக இந்த பக்கத்திலிருந்து அகலலாம்!) இம்மாதிரி ஒரு மேனேஜ்மெண்ட் புத்தகம் எழுதினார். அந்த சோகக் காவியத்தில் முனைந்து முனைந்து மஹாபாரதத்திலிருந்து மேற்கோள்களும், மகத்தான திரௌபதியை அக்கால திராவிடர்கள் மானபங்கம் செய்ய முயன்ற விஷயத்தைச் சுற்றிச் சுற்றி, அதிலிருந்த மேலாண்மை படிப்பினைகளை மாய்ந்துமாய்ந்து பத்து பக்கத்துக்கு எழுதி, அதில் ஒரு ப்ளடி காட்டுரை… … (என்னிடம் அவருடைய ‘கேமரா ரெடி பேஜஸ்’ வரைவைக் கொடுத்து, விமர்சனக் குறிப்புகள் தருமாறு கேட்டார், வழக்கம்போல் விமர்சனம்கோருபவர்கள் சொல்வதுதான் – “தயவுதாட்சணியமே இல்லாமல், நேர்மையாகச் சொல்லுங்கள், இங்கிதம் எல்லாம் வேண்டாம்! என் மனது புண்படுமோ என நினைக்கவே வேண்டாம்!! என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்!”

…ஆனால், அவர் விருப்பம்போலவே, விலாவாரியாக விளக்குமாறால் அடிக்கப்பட்டதும் பேச்சு மூச்சில்லை – முழுமையாக கத்தரித்துக்கொண்டு விட்டார். ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் முன் இந்த கோர விவகாரங்கள் நடந்தன… அவர் தன் புத்தகத்தைப் பதிப்பித்தாரா என்பதும் தெரியவில்லை, ப்ளடி)

ப்ளடி ஹோப்லெஸ் மேனேஜ்மெண்ட்-புக் கொடும் பாவிகள், ஒரு அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் – மானுடர்கள் என்றால் அவர்கள் ப்ளடி சாகும்வரை வயதாகிக் கொண்டே போவது ஒரு சாதாரண உண்மைதானே!

…இதற்குப் போய் man age ment என நீட்டி முழக்கி ‘இடக்கையால் இகிகை!’ – ‘திருக்குறளும் வாபிசாபியும்’ – ‘டொயோட்டா மேலாண்மையும் திருவாசகமும்’ – ‘கொக்காட்டிச் சித்தரும் கொக்கோக க்வாலிட்டி ஜெர்க் ஸர்கிளும்’ –  ‘விடுதலைப்புலிகளின் ஆமைக்கறி மேலாண்மை’ – ‘புறத்தில் அகமேலாண்மை’ – ‘ஆண்டாளிடமிருந்து ஆள்வதைக் கற்போம்’ – வகை புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே!

இந்த மேனேஜ்மெண்டல் நெடுமுடிக்கிள்ளி ஆசாமிகள் ஒருவராவது, குறைந்தபட்சம் ஒரு நாலு வீடுகள் உள்ள லோக்கல் ‘அபார்ட்மெண்ட் அஸ்ஸோஸியேஷன்’ ஒன்றையாவது மேலாண்மை செய்திருக்கிறார்களா என்றால்…

3

ஐயய்யோ! நான் பதிவு போடவில்லை என யார் அழுதார்கள்… ஏனிப்படிச் செய்கிறேன்? 

நான் எழுதிக் கொண்டிருக்கும், ஏன் ஏறத்தாழ முடித்து விட்டிருக்கும் மிகரகசிய – மேனேஜ்மெண்ட் புத்தக வரைவை க்றிஸ்மஸ் தினத்துக்குள் எடிட்டன் பையனுக்கு அனுப்பி விடுகிறேன் எனச் சொல்லியிருந்தேன்! 

….ஆனால் இப்படி நேரத்தை விரயம் செய்துவிட்டேனே! :-(

(எது எப்படியோ… உங்கள் தனிப்பட்ட பார்வைக்கு, புத்தகத்தின் தலைப்பையும் உபதலைப்பையும் மட்டும் ஷேர் செய்கிறேன்…)

 திராவிடமாடல் ஆண்குறியீட்டுக் கீழ்க்கட்டுமானங்கள்

(பெரிய, சின்ன, இளசு, குட்டி, இணையர் வீடுகளில் தலைவிகளையும் துணைவிகளையும் இளசுகளையும் குட்டிகளையும் இணையிகளையும் திராவிட மேலாண்மை செய்வது எப்படி?)

(ஊக்கபோனஸ்ஸாக – அப்புத்தக வரைவில் இருக்கும் ஒரு, மிகமுக்கியமான கருத்துப் படம் மேலே; திராவிடமாடலுக்கு நன்றியுடன்….)

4

இந்த புத்தக எத்தனத்தின் மீதான, உங்களுடைய மேலான விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன; விமர்சகர்கள் அவர்கள் ‘நமக்கெதுக்கு வம்பு’ என வேண்டிக் கொள்ளாமலேயே, தனிப்பட்ட முறையில் என்னை தொடர்புகொள்ளாமல் ‘வேலியில் போகும் ஓணானை கோமணத்துக்குள் விட்டுக் கொண்டு ஏன் அது என்னை அம்ப்ரெல்லாயிங் அம்ப்ரெல்லாயிங் எனக் கூவவேண்டும்’ என  இருந்தாலும், உங்கள் வீடு தேடி வருவான் என் வடிவேலன், புக்கன்.

இதைச் சொல்லவே வேண்டாம் என்றாலும்… தயவுதாட்சணியமே இல்லாமல், நேர்மையாக இருந்து என் மேல் விமர்சனம் வையுங்கள், திட்டுங்கள்; இங்கிதம் எல்லாம் பார்க்க வேண்டாம், என் மனது புண்படுமோ என நினைக்கவே வேண்டாம்! என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்! சரியா??

20-30 ஆண்டுகளுக்கு முன் என் எழுத்துகளின் மேல் காட்டமாக விமர்சனம் வைத்த ஒரு நபர் (மேற்கு சைதாப்பேட்டைக்காரர் என நினைவு) வீட்டுக்குப் போய் அவருடைய தகப்பன் முன்னிலையில், அவரைப் போட்டு மொத்தியது என்பதெல்லாம் துளிக்கூட உண்மையாகவே நடக்கவேயில்லை என்பதைச் சொல்லிக்கொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன். 

நன்றி!

END

6 Responses to “நடந்து கொண்டிருக்கும் பயங்கரம்… நினைத்தாலே படுபீதியாக இருக்கிறதே! :-(”


  1. //20-30 ஆண்டுகளுக்கு முன் என் எழுத்துகளின் மேல் காட்டமாக விமர்சனம் வைத்த ஒரு நபர் (மேற்கு சைதாப்பேட்டைக்காரர் என நினைவு) வீட்டுக்குப் போய் அவருடைய தகப்பன் முன்னிலையில், அவரைப் போட்டு மொத்தியது என்பதெல்லாம் துளிக்கூட உண்மையாகவே நடக்கவேயில்லை என்பதைச் சொல்லிக்கொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்//
    :-)

  2. ரைட்டர் கொமாரு's avatar ரைட்டர் கொமாரு Says:

    வாத்யாரே, செம்ம மேட்டர் சிக்கீர்ச்சி. மேலகீர போட்டாவ வச்சி வள்ச்சி வள்ச்சி ஜாங்கிரி சுத்தி ‘திராவிடியா கூலர் குறியீடுகள்’னு பொஸ்தகம் ஒன்ன போடப்போறேன், நம்ம கவுஜ வைகயறாவ கூப்ட்டா கேள்வியே கேக்காம வந்து ஆத்தி தள்ளிருவானுவோ. இனிமே நானும் ரைட்டர்தான், ஐடியாக்கு டேங்ஸ் வாத்யாரே!


  3. […] மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன […]


Leave a Reply to Venkatramanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *