அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம் 😡😠

October 5, 2024

பிரச்சினை என்னவென்றால், அவருடைய அவதூறான ஃபேஸ்புக் பதிவுக்கு என்னால் அங்கேயே, என்னுடைய மேலான கருத்துகளைப் பதிவு செய்யமுடியாத படிக்கு என்னத்தையோ சதி செய்து வைத்திருக்கிறார்; அதனால் தான் இந்தக் குழாயடிச் சண்டையை இங்கேயே நடத்திக் கொண்டு சுயராஜ்ஜியம் அல்லது ப்ளாக் சுயாட்சி காணலாம் என்று…

என்னமோடாப்பா, சலிப்பாக இருக்கிறது… :-(

1

Aravindan Neelakandan

2

😡 அரவிந்தனுக்கு இது நீள கண்டனம்!

உங்களுடைய விதண்டாவாதம் துளிக்கூட ஒப்புக் கொள்ளமுடியாததொன்று.

நீங்களே அஞ்ஞானியைத் துறவி என்கிறீர்கள். அதற்கு முன்னால், சிரமப்பட்டு அவர் பொறியியல் படித்தார் என்றும் சொல்கிறீர்கள்.

அப்போது அவர் பொறியியல் உள்ளிட்ட அனைத்தைப் பற்றிய அஞ்ஞானத்தையும் கைகழுவிவிட்டு, அவற்றைத் துறந்துதானே இஸ்க்கானால் இஸ்க்கப்பட்டுத் துறவியாகச் சென்றிருக்கவேண்டும்? 

அத்துறவியை நீங்கள் கொண்டாடாமல் இருந்தாலும் பரவாயில்லை – ஆனால் இப்படிக் கரித்துக் கொட்டுவது சரியல்ல.

அன்னப்பறவை-பால் கதைபோல, நீங்கள் ஏன் அவருடைய புன்முறுவலையும் மகத்தான தன்னம்பிக்கையையும் போற்றக் கூடாது? மேலும் அவியல் அரைவேக்காடாக இருந்தால்தான் தானே கடுக்முடுக் என்று சுவையாக இருக்கும்? அதேபோலத்தானே அறிவிலியியலும்?

அவர் சொல்வதையெல்லாம் ஒருமாதிரி stonepalm (இந்த அழகான மொழிபெயர்ப்பினை நல்கியவர் உங்கள் நண்பர் தாம், எஸ்.ராமகிருஷ்ணன்) என எடுத்துக் கொண்டால், குறைந்தா போய்விடுவீர்கள்?

வக்கணையாக ஐஸக் அஸிமோவ் அப்படியிப்படி என்று படிப்பவருக்கு, ஒரு நாளாவது அவர்களுடைய புனைவுகளைக் கேள்விகேட்கும் திராணியிருந்திருக்கிறதா?

வரவர நீங்கள் எலக்ட்ரான் அலைபாய்தல்  என்றலைவது என்னைத் துணுக்குற வைக்கிறது, என்ன செய்ய! கொத்துப் புரோட்டாவின் துணுக்குகள்தாம் புரோட்டான்கள் என்று அவர் சொல்லியிருந்தால் தான் உங்களுக்குத் திருப்தியாகியிருக்குமோ?

ஏமாற்றமாக இருக்கிறது. இப்படி அவியலை ஒப்புக்கொள்ளாமல் சோரம் போவீர்கள் என நான் என் நினைவில் கூட கனைக்கவில்லை. என்ன செய்ய…

2 Responses to “அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம் 😡😠”

  1. RC's avatar RC Says:

    அன்பு ஐயா,
    திரு அ.நீ அவர்களின் பல கட்டுரைகளை வாசித்து+புரிந்த வரையில் அவர் நாத்திகர் (non believer)/ அல்லது அவ்வாறு தன்னை முன்வைப்பவர் என்று நினைக்கிறேன்.
    objective மனநிலையில் ஆன்மீக/மத விஷயங்களை அணுகுபவர் என்றே எனது புரிதல். விவேகானந்தர், நாராயணகுரு ++ அவரின் பதிவுகள்+கட்டுரைகள் அவரைப்பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அளிக்க உதவும்.

    காலத்தை ஒதுக்கி விட்டு விரும்பும் மாற்றத்தை அடைய விரும்பும்/யோசிக்கும் அவரின் மனநிலையில் இருந்தே அவரின் சிந்தனைகள், கோட்பாடுகள் ++ இருக்க வாய்ப்பிருக்கின்றது. உரத்துச்சொல்லும்/எழுதும் இவரைப்போன்றவர்கள் மேல் சிறிது விலக்கம் எப்போதும் உண்டு எனபதைச்சொல்லவும் தயக்கமேதுமில்லை.

    இந்தப்பின்புலத்தில் திரு.அ.நீ அவர்களின் பதிவிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு நான் அளிக்கமாட்டேன். இல்லை என் தொடக்கப்புள்ளி தவறு+என் புரிதல் கோளாறு என்று புறந்தள்ளவும் உங்களுக்கு உரிமையுண்டு.

    ஆன்மீக/மத குருமார்கள், பிரச்சாரத்தில் நிரூபணஅறிவியலோ அல்லது வேறு எதுவோ அதை உபயோகிக்கும் வழிமுறைகள் சார்ந்து ஒரு அவநம்பிக்கையாளருக்கு இந்தக் கோபமும் கவலையும் ஏன் என்றே எனக்கு புரியவில்லை.

    ‘கந்தனிருக்க பயமேன்’ எனபதே எனது சுருக்கமான பதில்.


Leave a Reply to RC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *