என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993

August 12, 2023

1

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்?

…பேராசிரியர் வேணுகோபாலன் அவர்களின் ட்வீட் பதிவை அகஸ்மாத்தாகப் பார்க்க நேர்ந்த பின், அலையலையாய் நினைவுகள், விவரிக்க இயலாத சோகமும் பெருமூச்சும்…

2

அச்சமயங்களில் என் அலுவலகங்களில் ஒன்று, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டு ஈகா தியேட்டர் அருகில் இருந்தது. அந்த நிறுவனம் தொடர்பாக வாரத்துக்கு மூன்று-நான்கு நாள் போல, அந்த நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றிருக்கும் தொழிற்சாலைகளைச் சுற்றி வந்து, அவற்றின் ஆரோக்கியத் தன்மை, சுணக்கமின்மை, தொழில்முனைவோரின் பங்கேற்பு, கொள்ளிருப்பு-விற்பனை குறித்த தஸ்தாவேஜுகளின் நம்பகத்தன்மை, இயந்திரங்கள் சரியான முறையில் வேலை செய்கின்றனவா என்பது பற்றியெல்லாம் முழ நீள அறிக்கைகள் கொடுக்கும் சுவையான-திருப்தி தரும் வேலை.

…மேலும், அப்போதிலிருந்தே திராவிடமாடல் எனும் ஊழலின் ஊற்றுக்கண்ணைப் பற்றி நான் பல புரிதல்களுக்கு வந்ததற்கு இம்மாதிரி ஆய்வுகளும் ஒரு காரணம்; ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு திமுக திராவிட அரசியல்வாதி சித்தூர் பக்கத்தில் வைத்திருந்த ஒரு ‘கல்/ஜல்லி தொழிற்சாலை’யின் தரமாக தயாரிப்பு: விதம்விதமான ஸைஸ்களிலும் நிறங்களிலும் ரேஷன் அரிசியிலும் பருப்புகளிலும் கலப்பதற்காகத் தயாரித்த டன் கணக்குச் சிறுகற்கள். அயோக்கிய திராவிடப் பதர்கள்.

(அந்தக் காலத்தில்  அலுவலகத்தில் இம்மாதிரி ரிப்போர்ட்கள் தயாரிக்கத் தோதாகக் கம்ப்யூட்டர்கள் இருந்திருக்கவில்லை (அவை சிலசமயம் பாவமாக இருந்தாலும். ஒப்பந்தப்புள்ளி ஸிஎம்ஸி அன்பர்களுக்கு, என்னை அவற்றைத் தொடவிடுவதற்குப் பயம், அதனைப் புரிந்துகொள்வதில் எனக்கும் பெரிய பிரச்சினை இல்லை – ஏனெனில் எனக்கு வேலை ஆகவேண்டும்)  என்பது நினைவுக்கு வருகிறது – ஆகவே, என் சொந்த டப்பாவை எடுத்துக்கொண்டுபோய் அங்குள்ள மானிட்டர்-கீபோர்ட்களுடன் கோர்த்து ரிப்போர்ட்களையும் பரிந்துரைகளையும் தட்டச்சிக் கொண்டிருப்பேன்)

வார நாட்களில் சேகரித்த விஷயங்களைக் கோர்வையான அறிக்கைகளாக எழுத நேரம் வாய்க்காது, மேலும் எனக்குப் பலப்பல பிற ஆர்வங்களும் (என் தகப்பனார் செல்லமாக ‘dog wandering’ நாய்சுற்றல் என அழைத்தவை அவை – நான் இக்காலங்களில் கொஞ்சம் ‘வேறு உபயோக கரமாக நேரத்தைச் செலவழித்திருக்கலாமோ’ என வருந்தத்தக்க வகையில்  ‘தமிழ் இலக்கியம்’ எனும் விபரீதச் சராசரித்தனமும் அவற்றில் ஒன்று) இருந்தன – ஆகவே இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைபோல ஞாயிற்றுக் கிழமைகளில் என் லொடலொட ராஜ்தூத் பைக்கில் பொட்டியைக் கட்டிக்கொண்டு அவ்வலுவலகத்துக்குச் சென்று விடுவேன். ஒருவர் தொந்திரவும் இல்லாமல் சுகமாக ஏழெட்டு மணி நேரங்கள் வேலை செய்ய முடியும். கூடவே ஒரு டெலிஃபன்கென் ரேடியோ குறுடப்பியும். ஆனந்தமாக ரேடியோ ஆஸ்த்ரெலியா டாயிட்ச்வெல் என மேலை/ஸாஸ்த்ரீய சங்கீதம் கேட்டுக்கொண்டே.

ஈகா தியேட்டருக்குப் பக்கத்தில் ஒரு தரமான உடுப்பி ஹோட்டல். சாப்பாட்டுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

8 ஆகஸ்ட் 1993 அன்று அப்படியாப்பட்ட ஒரு ஞாயிறு; நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் அப்போது இருந்த ஸ்டூடெண்ட் ஸெராக்ஸ் கடையிலோ அல்லது அதற்குப் பக்கத்திருந்த ஒன்றிலோ சில முக்கியமான தஸ்தாவேஜுகளை நகலெடுத்துக்கொண்டு, மதியம் சுமார் இரண்டரை  மணிவாக்கில் என் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

மெக்நிகால்ஸ் ரோட் மேம்பாலம் ஏறிக்கொண்டிருந்தபோது வலதுபுரத்திலிருந்து ஒரு பேரோசை. கொஞ்சம் எதிரொலித்தது… வண்டியை ஒரு சில வினாடிகள் நிறுத்திப் பார்த்தேன் – தூரத்தில் ஒரு புகை மண்டலம், ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்துச் சிதறியிருக்கவேண்டும், ஏதோ உயிர்ச்சேதாரம் இல்லையேல் நன்றாக இருக்கும் எனச் சொல்லிக்கொண்டு என் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன்.

3

என் அலுவலகத்தில் தினக்கூலி/டெய்லிவேஜ் முறையில் ஒரு ப்யூன் இருந்தார். ஒரு நாளைக்கு ரூ 80/- மேனிக்கு (ஒப்பு நோக்க, ஒரு லிட்டர் டீஸல் ஏழு ரூபாய்தான், அந்தக் காலங்களில்)  மாதாமாதம் ஸெட்டில் செய்யப்படும் சம்பளம். விடுமுறை நாட்களில் வந்தால் ரூ 130/- என நினைவு. நான் ஞாயிறு செல்லும்போதெல்லாம் அவரையும் அழைப்பேன் – ஆர்வத்துடன் வருவார், ஃபைல்களை தூசி தட்டுவது அடுக்குவது, தஸ்தாவேஜுகளை அந்தந்த ஃபைல்களில் கோர்ப்பது, மேஜை நாற்காலி துடைப்பது போன்ற வேலைகளைச் செய்வார்; மதியவுணவுக்கும் காப்பிக்கடைக்கும் கூட அழைத்துச் செல்வேன். (அங்கே நான் ‘அதிகாரி’யாக இருந்ததால் எனக்கு ஓவர்டைம் வகையறாக்கள் கிடையாது – ஆனால் கையில் இருந்ததை முப்பது-நாற்பது என மேலதிகமாக அவருக்குக் கொடுப்பேன்; அவருக்கும் வாயெல்லாம் பல், பாவம்)

மாத வருமானம் எனப் பெரும்பாலும் அவருக்கு அதிகமில்லை, வம்பில் இருக்கும் ஆர்வம் படிப்பில் இல்லை; எவ்வளவுதான் முயன்று – “குறைந்தபட்சம் டைப்ரைட்டிங் கற்றுக்கொள் உன்னை ஏதாவது ஃபோட்டோ டைப்ஸெட்டிங் கம்பெனியில் சேர்த்துவிடுகிறேன்” எனச் சொன்னாலும் தாடியைச் சொறிதல் மட்டுமே பதில், வயது 28 போலத்தான் இருந்தாலும் அப்போதே குழந்தைகள் ஏழுபேர் இருந்தார்கள் என நினைவு. அயனாவரத்தில் வீடு. மனைவியைச் சிறுமியாக இருந்தபோதே திருமணம் செய்திருக்க வேண்டும், பாவம்.

அவ்வப்போது கைமாற்று ‘அடுத்தவாரம் ஒரு அமௌண்ட் வரும் திருப்பித் தந்துடுவேன்’ என வருவார். பிள்ளைகுட்டிக்காரன் எனப் பரிதாபப்பட்டு கையில் இருப்பதைக் கொடுப்பேன். ஆனால் அந்த ‘அடுத்த வாரம்’ என்பது வரவே வராது. போதாக்குறைக்கு, பிறர் பார்க்காத சமயத்தில் அலுவலகப் பேப்பர்களை ரகசியமாக எடுத்துச் சென்று பழையபேப்பர்காரனுக்குப் போட்டு வேறு பணம் பார்ப்பார்! என்னுடைய ஃபைல்களையும் இப்படிச் செய்தபோது கடுங்கோபம் வந்து திட்டி, அதனைத் திரும்பக் கொணர்ந்தால்தான் ஆயிற்று எனச் சொன்னபின் எப்படியோ திரும்பிக் கொணர்ந்தார். எனக்கு அப்போது இளகிய மனதென்று நினைக்கிறேன் – ஆனால் அலுவலகத்தில் இருந்த பிறர் சலித்துப்போய், இந்த ஆளே வேண்டாம், வேறு யாரையாவது வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னால், தடாலென்று கீழே விழுந்து காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவார். இல்லை என்னிடம் வந்து ‘ரெகமண்ட்’ செய்யச் சொல்வார்.

“படிப்புமில்லை ஏதாவது வேலை கற்றுக் கொள்ள முனைப்புமில்லை, இப்படி வதவதவென்று பெற்றுப் போட்டால் குழந்தைகளுக்காவது அது நியாயமா, உன் பொண்டாட்டி ஆரோக்கியம் என்னதுக்காகும்” என, மறுபடியும் வாராக்கடனுக்கு அவர் அஸ்திவாரம் போட்டபோது ஒரு நாள் கோபம் பொங்கக் கேட்டே விட்டேன்; அவர் சிரித்துக்கொண்டே “எல்லாம் அல்லாஹ் பாத்துப்பாரு, ஒரு வழி காண்பிப்பாரு…”

பிரச்சினை என்னவென்றால் – அவருடைய ஒன்பது வயதுப் பாலகன் ஒருவன் ஏற்கனவே அல்லாஹ்வால் வழி காண்பிக்கப்பட்டு புதுப்பெட் குஜ்ரி மார்க்கெட்டில் ஒரு மெக்கானிக்கிடம் (மண்டையில் குட்டும் காலில் ஸ்பேன்னரால் அடிக்கப்பட்டும்) வேலை செய்ய ஆரம்பித்திருந்தான், பாவம்…  ஒருமுறை இந்தப் பையனை அரசுப் பள்ளியில் கொண்டுபோய் என் சிலவில் சில பொருட்களை வாங்கிக் கொடுத்து, தலைமையாசிரியரிடம் கெஞ்சிக் கூத்தாடிச் சேர்த்தேன் – ஆனால் ஒரே வாரத்தில் அவனை நிறுத்தி மெக்கானிக்கிடம் அனுப்பி விட்டான், பாவி! விஷச் சூழல்.

பின்னர் அவன் மைத்துனன் ‘கல்ஃப்’ சென்று வந்தான். அவன் போதனையோ என்னவோ நினைவில்லை – இந்த மனிதர் தீவிர இஸ்லாமியரானார்; வெள்ளிக்கிழமை மதியம் டபக்கென்று சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடுவார். ஆனால் மறுநாள் சனிக்கிழமை வந்து முழு நாளுக்கும் கூலி வேண்டுமென்பார்; கேட்டால் ஞாயிறும் வந்து வேலை செய்கிறேனே என்பார். ஆனால் ஞாயிறன்று அதிகப்படி கூலிக்குத் தானே வருகிறாய் என்றால், நான் புள்ளகுட்டிக்காரன் பிலாக்கணம்.

இம்மாதிரித் தொடர்ந்தது, ‘முஸ்லீம்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்’ கதையாடல்.

சரி.

4

ஆகஸ்ட் 8, 1993 மதியம். மூன்று மணி வாக்கில், அலுவலகத்தில் வேலையை விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம் என்றால்…

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கொஞ்சம் அதிகமாகவே ட் ராஃபிக். ஒரே காவல்துறை நடமாட்டம். ஒன்றிரண்டு ஆம்புலன்ஸ்களும் தீயணைப்புத் துறை வண்டிகளும் அல்லோலகல்லோலத்துடன் சென்றன – எல்லாம் மெக்நிகல்ஸ் சாலை மேம்பாலம் வழிதான்.

சேத்துப்பட்டின் ஸ்பர்டேங்க் ரோட் பக்கத்தில் ஏதோ பெரிய விபத்துத்தான் போல என நினைத்துக்கொண்டேன்.

நாலு மணி வாக்கில் என்னிடம் வந்த ப்யூன் அன்பரின் வாயெல்லாம் பல். மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை, பாவம்.

“ஸார், பசங்க பழிவாங்கிட்டாங்க” என்பது போல அவர் ஏதோ சொன்னார். எனக்குப் புரியவில்லை ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார் என லூஸ்ல வுட்டுவிட்டேன்.

பின்னர் ஏதோ குறுகுறுத்ததில் சென்னை வானொலி நிலையச் செய்தி (+பிபிஸி மூலமாக என நினைவு) மூலமாக, ‘குண்டு வெடிப்புச் சம்பவம்’ பற்றி அறிந்து கொண்டேன். 

அப்போது சுமார் 4 மணி இருந்திருக்கலாம்.

எனக்கு விதிர்விதிர்த்து விட்டது.

ஒரிருவர் பதற்றத்துடன் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் ஆஸ்பத்திரி பக்கம் சென்று கொண்டிருந்தனர். எனக்கும் நடக்கும் தொலைவில் தான் அந்த மருத்துவ மனை இருந்ததால் நானும் ஏதோ ஹிப்னடைஸ் செய்யப்பட்டவன் போல அங்கே சென்றேன்; ஒரே போலீஸ், பதட்டம், சோகம். கொஞ்சம் உணர்ச்சிப் பிரவாகம்.

(அச்சமயம்தான் பேராசிரியர் வேணுகோபால் போன்றவர்கள், சடலங்களை அடையாளம் காட்டுவதற்காக உள்ளே மார்ச்சுவரி பக்கம் இருந்திருக்க வேண்டும், பாவம்!)

என்னால் உள்ளே செல்ல முடியவில்லை என்பதற்கு அப்பாற்பட்டு, ‘ஹிந்து முஸ்லீம் பாய்-பாய்’ என பினாத்திக்கொண்டிருந்த என் மேலேயே எனக்குக் கோபமும் வருத்தமும் வந்ததால், மனது ஒரு நிலையில் இல்லை.

பிரமை பிடித்தவன் போலத் திரும்பவும் அலுவலகம் சென்றடைந்தேன் என நினைக்கிறேன்.

5

பியூன் அன்பர் அப்போதும் ஒரு மகிழ்ச்சியில் தான் இருந்தார்; எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. எப்படியும் அவருக்கு (அலுவலக ஃபோனை தனிப்பட்ட/சொந்த விஷயங்களுக்கு தாராள மனதுடன் உபயோகிப்பவர் ஆனாலும்) இந்த வெடிகுண்டு விஷயம் சரியாகத் தெரியவர வாய்ப்பில்லை என நினைத்தேன்; ஆகவே, அவரிடம் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை.

இருந்தாலும் அவருக்கு உற்சாகம் பீறிட்டு வழிந்துகொண்டிருந்தமையால் – அவர் “இந்து பயங்கரவாதி ஆர்எஸ்எஸ்காரன்களுக்கு பாடம்’ என்கிற ரீதியில் பேச வந்தாலும், நான் ஒன்றும் பதில் பேசவில்லை. முட்டாள் ஏதோ பயபிராந்தியில் உளறிக்கொண்டிருக்கிறான் என விட்டுவிட்டேன்.

அதே சமயம், கொஞ்சம் மனம் பிறழ்ந்து போயிருந்ததால், வேலையை ஏரக்கட்டி, வீடு (நங்கநல்லூர்) திரும்ப, என் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தேன்.

பின்னர் தோன்றியது,  அவரைக் கேட்டேன், “உங்களுக்கு எப்படி அந்த குண்டுவெடிப்பு பற்றித் தெரியும்? முன்கூட்டியே உங்களுக்கு யாராவது சொன்னார்களா?”

உடனடியாக அவர் சுதாரித்துக் கொண்டார். “இல்ல, ஏதோ தோணிச்சி, சொன்னேன்!”

எனக்குப் பட்டென்று சில விஷயங்கள் க்ளிக் க்ளிக் எனப் பொருந்தியது போலப் பட்டது. :-(

“அப்படியா,  ‘அவர்களுக்கு தண்டனை கிடைத்தது சரிதான்’ என்பது போலத்தானே பேசினீர்கள்?” என்று கேட்டேன். “அதுவும் உங்கள் சகோதரர்கள் மூலமாக அவர்களுக்கு தண்டனை கிடைத்தது போலத்தானே… மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது போலத்தானே காட்டிக்கொண்டீர்கள்? “

அவர் அவசரத்துடன் அதை மறுத்தார். “இன்ஷால்லாஹ், நல்லவேளை நெறயபேரு சாகல… எந்த உயிரும் அனாவசியமா கஷ்டப் படக்கூடாதல்லா…”

திருப்பிக் கேட்டேன் – “நாளெல்லாம் இங்க என்கூடத்தான் இருக்கீங்க, ஒங்க்ளுக்கு எப்டி அந்த விஷயமெல்லாம் தெரியும்?”

“இல்ல சார், ரோட்ல பேசிக்கிட்டே போனாங்க, அதனால தான் தெரியும் – நிரபராதிங்கள தண்டிக்கக்கூடாதுன்னு நபி நாயகமே சொல்லிருக்கார்….”

கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரும் நெளிந்து கொண்டிருந்தார். “ஏதோ தவறா நடந்திரிச்சி, எவனோ காபிர் எங்க மதத்துக்கு இழிவு கற்பிக்கணும்னு சதி செஞ்சிருக்கான். எங்க ஜமாத்துல இமாம் சொன்னாரு… ஏதாவது கலவரம் கிலவரம் நடந்தா ஜாக்கிரதையா ஒதுங்கிப் போய்டுங்க… எந்த நேரத்துல என்ன வோணும்னாலும் நடக்கலாம் இன்ஷால்லாஹ் அப்டீன்னார்!”

எனக்கு ஆச்சரியமாகி விட்டது – “எப்ப சொன்னாரு?”

“முந்தா நேத்துதான் சொன்னாரு… அப்படியே நடந்திரிச்சி – யாரோ செஞ்சத்துக்கு இப்ப முஸ்லீம்க மேல பழி போடுவாங்க பாருங்க..”

நான் ஒன்றும் பேசவில்லை. “ரூம்கள பூட்ட ஆரம்பீங்க, போவலாம்” என்று மட்டும் சொன்னேன்.

“காப்பி டீ குடிக்கலீங்களா?”

“…”

வீட்டுக்குப் போய், பாவப்பட்ட, இறந்த ஆர்எஸ்எஸ் பலிதானிகளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு குளித்தேன்… எவ்வளவு குளித்தாலும் கண்டகண்ட ஹிந்து வெறுப்புப் பொறுக்கிகளுக்கு இவ்வளவு நாள் என் அளவுக்கும் மீறி உதவி செய்திருக்கிறோமே எனும் வெட்கக்கேட்டு அழுக்கு போகவேயில்லை…

6

இந்த அன்பர் கொலைகாரர்களில் ஒருவர், சதிகாரர் எனவெல்லாம் அபாண்டமாகச் சொல்லவில்லை. ஆனால் அவர் வெறுப்பியப் புற்று நோய்க் கலாச்சாரத்தின் புரையோடிய கட்டிகளில் ஒருவர். ஆகவே ஏதோ சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் எனக்குத்தான் அது ஒத்துவரவில்லை.

நான் பலமுறை எழுதியதுதான்.

நாளுக்கு ஐந்துமுறை பகிரங்கமாக “எங்கள் கடவுள்[அல்லாஹ்] தான் ஒரே, ஒற்றைக் கடவுள்; எங்கள் முகம்மதுதான் அல்லாவின் தூதர்” எனச் சொல்லும், பிற மதத்தினரை இழிவாக மதிக்கும் மார்க்கத்துக்கு – இப்படி வன்முறையை மட்டுமே நம்பி உய்வது மட்டும்தானே சாத்தியம்?

இஸ்லாம் மத நிறுவனரே ‘இஸ்லாமியற்றவர்களைக் கொல்லுங்கள்’ என்று சொல்வதை மட்டும் செய்யாமல், இடஞ்சுட்டிப் பொருள் விளக்கச் செயல்முறைகளில் இறங்கினால் – அந்தப் பலப்பல எடுத்துக்காட்டுகளைத் துப்புரவாகப் பின்பற்றுவதுதானே ஒரு விசுவாசி இஸ்லாமியனுக்கு ஒத்து வரும்?

வாராவாரம் வெள்ளிக்கிழமை மஸுதி மதியக் கூட்டங்களில் வெறுப்பியத்தைப் பிரச்சாரம் செய்தால் – அதுவும் சிறு வயதிலிருந்து ஒருவனுக்கு இந்த அற்பத்தனம் புகட்டப் பட்டால், அவன் என்னதான் செய்வான்?

‘முஸ்லீம் அல்லாதவர்களின் மீதான வன்முறை, முஸ்லீம்களுக்கு சொர்க்கம் பெற்றுத்தரும்’ என்பது புகட்டப் பட்டால் – ஒருவன் காஃபிர்களை வெறுத்து வன்முறையில் ஈடுபடத்தானே செய்வான்?

படிப்பறிவு இல்லை – அதனால்தான் பெரும்பாலான முஸ்லீம்கள் இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்கிறார்கள்; ஆனால் எவ்வளவோ படித்த(!) முஸ்லீம்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களும் அதே கதைதான் – ஆனால் கொஞ்சம் ஸோஃபிஸ்டிகேஷன் இருக்கும், அவ்வளவுதான்.

(இதில் ஒருவர், அந்த அரைகுறை அயோக்கிய ஆமிர் கான் பட எழவு ஒன்றை நாமிருவரும் சேர்ந்து பார்த்தேயாகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார் – அது பீகெ எனும் அசிங்கமான, ஹிந்துவெறுப்பியப் படம் – ஆனால் இஸ்லாமிய விமர்சனப் படம் எனவொன்று வந்தால் அவை இரண்டையும் அவர் வீட்டில் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே பார்க்கலாம் என நான் பதிலுக்குச் சொன்னதும் அவர் முகம் போன போக்கு பரிதாபம், பாவம்!)

இதையெல்லாம் மீறி சில முஸ்லீம்கள் பிற மதத்தினர் மீது கமுக்கமாக நட்புடன், மரியாதையுடன் இருக்கிறார்கள் என்பதும் தெரியும். இது ஒரு ஆச்சரியகரமான சிறுபான்மை உண்மை. (ஆனால் இந்த எண்ணிக்கையும் அருகிக் கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது)

…இஸ்லாம் எனும் மார்க்கத்தின் அடிப்படைகளிலேயே – ஆவண பூர்வமாகவும், காத்திரமாகவும், எடுத்துக்காட்டுகளுடனும் – முஸ்லீம்களல்லாதவர்கள் மீதான வன்முறையானது போற்றப் படும்போது – kuf’r/காஃபிர்களாகிய நமக்கு என்ன வந்தது, சொல்லுங்கள்?

7

அடுத்த பத்து நாட்களில் மறுபடியும் எதையோ அலுவலகத்திலிருந்து திருடி விற்று மாட்டிக்கொண்டார் அதே அன்பர். பல நாள் திருடன் எப்போதும் திருடன் தான்.

அதுவும் மதமார்க்கமே காஃபிரைக் கொலை செய் எனும் போது, கொலை செய்தால் உனக்கு சொர்க்கம் எனும்போது – இம்மாதிரி ஆட்கள் பகிரங்கமாகத் தொடர்கொலைகள் செய்யாதிருப்பதே நல்லவிஷயம் தான் என நினைத்தேன். ஏதோ வெறுமனே பசிப்பிணி(!)க்காகத் தானே திருடினார் எனச் சொல்லிக் கொண்டேன்.

சரி. திருட்டு அம்பலம்.

வழக்கம்போலவே – மத்தியஸ்த முட்டுக் கொடுத்தலுக்காக – சாதுவான அப்பிராணி முகத்துடன் என்னிடம் வந்தார்.”சார் ஆயிரம் ஆயிரமா நான் கேட்டபோது கொடுத்துருக்கீங்க, எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க, இந்த வாட்டி தான் சார் லாஸ்ட். இனிமேல் திருடவே மாட்டேன் சார், அல்லாஹ் மேல சத்தியம்.” அழுதார்.

அவர் குழந்தைகளின் முகங்கள் (மூவரைப் பார்த்திருக்கிறேன் – அந்த குட்டி மெக்கானிக் பையன் உட்பட) நினைவுக்கு வந்தன. அதே போல, அநியாயமாகவும் குரூரரமாகவும், வன்முறைக்குத் தொடர்பே இல்லாமல் இருந்தாலும், ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள், அனுதாபிகள் முகங்களும் நினைவுக்கு வந்தன. அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கக் கூடும் அல்லவா?

ஆனால், நான் ஒன்றும் சொல்லவில்லை. முட்டுக் கொடுக்கவில்லை.

அவருக்கு முகம் பேயறைந்ததைப் போல ஆகிவிட்டது.

அடுத்த நாளிலிருந்து அவரை வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள், என் நிறுவனத்தினர். மிச்சம்மீதி கொடுக்கவேண்டியதையும் செட்டில் செய்த பின் தான் இதுவும் – அவர் கடைசியாக திருடி விற்ற பணத்தையும் பிடித்துக்கொள்ள நான் பரிந்துரை செய்தேன் – அது செய்யப் பட்டது… மாஷால்லாஹ்.

வெளியே போய் என்னைத் தாயோளி, பாப்பாரக்கூ என்றெல்லாம் திட்டினார் இஸ்லாமிய அன்பைப் பொழிந்தார் என்று சொன்னார்கள். என்மேல் பாம்ப் போடப்போகிறேன் என்றெல்லாம் உளறிக் கொண்டிருந்தாராம் கூட…

என் மேலதிகாரி பயந்துபோய், போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாமா எனக் கேட்டார். கொஞ்சம் யோசனைக்குப் பிறகு நான் அதெல்லாம் வேண்டாமென்றேன். கோபத்தில் பேசி ஏசியிருக்கிறார் அவ்வளவுதான்; நான் அப்படியே அதனை லூஸ்ல வுட்டுவிட்டேன்.

ஆம். ஒரு மயிரும் நடக்கவில்லை.

இன்று வரை உயிருடன் தான் இருக்கிறேன். நன்றி.

(ஏதோ அவருடைய குழந்தைகளாவது நல்ல பாரதப் ப்ரஜைகளாக  உருவாகி வந்தால் சரி; எனக்குக் கொஞ்சம் பேராசைதான்!)

-0-0-0-0-0-

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்?

:-(

2 Responses to “என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993”


  1. இது எல்லாம் பலருக்கும் ஒருவிதத்தில் அனுபவப்படும் நிகழ்ச்சி. தங்கள் பதிவில் ஒரு மென்மையும் இருக்கிறது…


  2. திரு சண்முகம் ஜி அவர்களின் – பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னல் ஆகஸ்ட் 8, 1993 நினைவுக் குறிப்புகள்:

    Chennai RSS Office Bomb Blast | இந்த நாளை மறக்க முடியுமா ? | Pesu Tamizha Pesu


Leave a Reply to ஸ்பரிசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *