१) ஓப்பன்ஹெய்ம[ர்] பார்த்தாயா? २) அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை’ எடுபடுமா? ३) பத்ரிசேஷாத்ரி கைது பற்றி… ४) மணிப்பூர் கலவர நிலவரம்? ५) சமீபகாலத்தில் ஒருபதிவும் இல்லையே… ६)…

August 5, 2023

வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன்.

1. எனக்குப் பல விஷயங்களில் அறிமுகமே இல்லை. என் அறியாமைகளை வெட்கமேயில்லாமல் ஒப்புக்கொள்வதில் நான் ஜெயமோகனாதிகளுக்கும் வெகுஜன ஈர்ப்பாள வரலாற்றாளர்களுக்கும் எதிர்க்கட்சி.

2. எனக்குச் சில விஷயங்களில் ஓரளவுக்கு ஆழம் இருக்கிறது – ஆனால் அத்துறைகளிலும் நான் இன்னமும் செல்லவேண்டிய ஆழம் அதிகம் என்பதையும் ஆர்வம் கலந்த ஆச்சரியத்துடன் உணர்கிறேன்.

3. சிலபல விஷயங்களில் ஓரளவுக்கு காத்திரமான அறிவு இருக்கிறது, அனுபவங்களும் வாய்த்திருக்கின்றன – அதாவது, அப்புலங்களில் யார் ஞானஸ்தர்கள், ஆகவே நம்பகத்தன்மை மிக்கவர்கள், யாரார் மேனாமினுக்கி அரைகுறைகள் என்று அறிந்துகொண்டு கடக்கும் (அல்லது/மேலும் கிண்டல் செய்யும்) திறன் இருக்கிறது.

4. பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமே இல்லை. அப்படி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அறியவேண்டும் என்றால் – நேரடியாக, வெட்கம்கிட்கம் எனவெல்லாம் பார்க்காமல் அவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்துகொள்ள முனையும் பழக்கம் இருக்கிறது. ஒரு பிரச்சினையும் இல்லை.

5. மீதமிருக்கும் என் வாழ்நாட்களின் தொடர்ந்த குறுகலை நான் அறிவேன். என் எல்லைகளை உணர்ந்து சிரித்துக்கொண்டே பல இக்கட்டான விஷயங்களை இயல்பாகக் கடந்து செல்வதற்கும் என்னை நான் பழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறேன். + க்ரஹஸ்தனாக, என் வேலைகள் இன்னமும் மீதமிருக்கின்றன.

6. சமகால விஷயங்கள், பப்பரப்பாக்கள் பற்றித் தெரிந்து கொள்வதில் பெரிதாக ஆர்வமில்லை. அவற்றை லூஸ்லவுடவே விரும்புகிறேன்.

“The art of not reading is a very important one. It consists in not taking an interest in whatever may be engaging the attention of the general public at any particular time. When some political or ecclesiastical pamphlet, or novel, or poem is making a great commotion, you should remember that he who writes for fools always finds a large public. – A precondition for reading good books is not reading bad ones: for life is short.”

Essays and Aphorisms – Arthur Schopenhauer (1788-1860)

7. நிலைமை எப்படி இருந்தாலும் நான் ‘லைக்’களுக்கு ஏங்கும் அதற்காக நடனமாடும் ஒரு இன்ஸ்டாக்ராமவாசி வகையறா அல்லன் என்பதில் ஒரு அல்ப திருப்தி. வயதும் ஏகத்துக்கும் ஆகிக் கொண்டிருக்கிறதே!

१ 

ஓப்பன்ஹெய்ம[ர்] பார்த்தாயா?

இல்லை. எனக்குப் பெரிய பேக்-லாக்  – அதாவது பார்க்கவேண்டிய படங்களும் படிக்கவேண்டிய புத்தகங்களும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன.

ஓப்பன்ஹெய்மர் புத்தகங்களையும் – முக்கியமாக அவருடைய கீழ்கண்ட, அழகான கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தையும் படித்திருக்கிறேன். எனக்கு இது போதும்.

+பொதுவாகவே, க்றிஸ்டொஃபர் நோலன் மேல் பெரிய மரியாதையும் இல்லை. 

மற்றபடி ஒரு நாளைக்கு 45 நிமிடத்திற்கு மேலாக பிலிம்/காணொலி பார்ப்பது இல்லை – பாட்கேஸ்ட்/podcast வகையறாக்களைக் கேட்பது கொஞ்சம் அதிகம். ஆகவேயும். படங்களைச் சுடச்சுடப் பார்ப்பதில் ஒரு அலுப்பும் இருக்கிறது. (இத்தனைக்கும் கஷ்மீர்ஃபைல்ஸ், காந்தார, கேரளாஸ்டோரி படங்களையும் சுமார் 25+ வருடங்களுக்குப் பின்னர் தியேட்டர் போய்வேறு பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்)

அடுத்த ஓரிரு வாரங்களில் தான் நான் அப்பேர்க்கொத்த, 1999ல் வெளிவந்து அல்லோலகல்லோலப்பட்ட மேட்ரிக்ஸ் ‘The Matrix’ படத்தையே, கொஞ்சம் அடிவயிற்றுக் கலக்கத்துக்குத் தயார் படுத்திக் கொண்டு, ஒரு வழியாகப் பார்க்கப் போகிறேன். நன்றி.

அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை எடுபடுமா?

+1008.

நான் அவருடைய பாரதீய அபிலாஷகள் நிறைவேறவேண்டும் (அதன் ஒரு அங்கமாக, திருட்டு அயோக்கியத் திராவிடம், தமிழகத்தில் இருந்து வேரறுக்கப் பட வேண்டும்) என மனதாற விழைகிறேன்.

‘எடுபடும்’ என்பதைப் பலவிதங்களில் புரிந்துகொள்கிறேன் – வெறுமனே, அவர், நரேந்த்ரமோதியின் கடந்த 9ஆண்டுச் சாதனைகளை மட்டும் விளக்கிச் சொல்லி ‘மீண்டும் மோதி, வேண்டும் மோதி…’ வழியாக 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி மட்டும் இருக்கும்படியான ரீதியில் அது குறுகாது எனத்தான் கருதுகிறேன்.

அப்பலவிதங்களாவன:

0. பாபுஜி 1915 வாக்கில் செய்து கண்டடைந்த ‘பாரத் தர்ஷன்’ வகை நேரடிச் சமூகக் களப் புரிதல்களுக்கு இந்த யாத்திரை உதவும்.

1. பாரதீய மக்களுடன் நேரடித் தொடர்பு – பிரச்சினைகளையும் அவர்களுடைய அன்பையும், மாற்றத்திற்கான தாகத்தையும் புரிந்துகொள்ளுதல் – அவர்களுடன் ஊடாடி உறவாடுதல் தொடர்பான வாய்ப்புகள்.

2. தொலைக்காட்சி ஸ்மார்ட்ஃபோன் மூலம் மட்டும் அண்ணாமலை எனும் செயலூக்கமும் அறச்சீற்றமும் மிகுந்த, கடும் உழைப்பையும் கொடுக்கும் இளைஞரை, அவருடைய பேச்சுச் சாதுர்யத்தை, வீரியத்தைப் பார்த்து வந்தவர்களுக்கு – அவரையே ரத்தமும்சதையுமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் வசீகரம்.

3. வட்டார பாஜக அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது + உள்ளுர் உட்கட்சிப் பிரச்சினைகளை நேரடியாக அணுகுவது, குறைகளைக் களைவது, உள்ளூர்க் கட்சிக் கள நிலவரங்களுக்கு நேரடி அறிமுகம் பெறுவது.

4. பலதரப்பட்ட, பலவிதமாக தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி ‘பாஜக தலைவர்களிடையே சுமுகமாக உறவு இருக்கிறது’ என நேரடியாகச் சொல்லாமல் பட்டவர்த்தனமாகத் தொடர்ந்து அறிவிக்கும் வாய்ப்பு.

5. அவ்வப்பகுதிக் கட்சிக் களப்பணியாளர்களை, கார்யகர்த்தாக்களை, தலைவர்களை அடையாளம் கண்டு விளம்பரப் படுத்துவது.

6. பகுதிசார் ராஷ்ட் ரிய ஸ்வயம்ஸேவக் ஸங் உள்ளிட்ட பாரதீய அமைப்புகளுடனுடன் பாஜகட்சியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது.

7. வட்டார (கட்சி சாரா) முக்கியஸ்தர்களையும் தொழில்முனைவர்களையும் பிற சமூக ஆர்வலர்களையும் கண்டுகொண்டு பரப்புரை செய்வது

8. தொடர்ந்து கட்சியையும், மோதியையும் ஊடகங்கள் வழியாகவும் பரப்புரைகள் மூலமாகவும் பேசுபொருளாக ஆக்குவது – தினசரிகளின் முதற் பக்கங்களிலிருந்தும், டீக்கடைப் பேச்சுகளிலிருந்தும் அகல மறுப்பது.

9. திராவிட திமுகவினரின் காட்டாட்சி தீவட்டிக் கொள்ளை அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, கிடுக்கிப் பிடிக் கிண்டல் கேள்விகள் கேட்பது, வசீகரக் கவர்ச்சி மூலமாகவும் கட்சிக்குப் பலம் சேர்ப்பது, இளைஞர்களுக்கு ஒரு ஆதர்சபுருஷராகவும், விடிவெள்ளியாகவும் திகழ்ந்து, எதிர்காலத்தைக் குறித்த ஆரோக்கியமாக நம்பிக்கையை விதைப்பது….

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக….

10. “டேய் திராவிடப் பொறுக்கிகளா! கொள்ளைக்காரனுங்களா!! புலிவருது புலிவருதுன்னு பயமுறுத்திட்டிருந்தீங்களேடா குள்ள நரீங்களா…  நெசம்மாவே பாஜக சிங்கக் கூட்டம் உள்ள வந்திரிச்சிடா! நான் வந்துட்டேண்டா! நீங்க அல்லாரும் டவுசர்ல பயமூச்சா போற காலத்துக்கு அப்பால பேண்டுல பேளற காலம்கூட வந்திட்டு…’ எனப் பட்டிதொட்டிகளிலெல்லாம் உடன்பருப்புகளை விதிர்விதிர்க்கச் செய்வது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் – குறுகிய கால வரையறையில் மட்டுமல்ல – இளம் அண்ணாமலையின் பாஜக யாத்திரை, நெடுங்கால ரீதியில் தமிழக அரசியலைப் பாதிக்கும் என்றுதான் நினைக்கிறேன். என் ஆசையும் அதுதான்.

வந்தே மாதரம். ஒழிக திராவிடம்.

பத்ரிசேஷாத்ரி கைது பற்றி

இளம் பத்ரி அவர்களை மனதாற வாழ்த்துகிறேன் – அவர் கருத்துகளுக்காகவும் + திராவிட அரசின் அற்பத்தனத்தை அவர் தைரியமான எதிர்கொண்ட முறைக்கும். + பிரதிபலன் என ஒன்றையும் எதிர்பார்க்காமல், பல உற்சாக உதவிகளை அவர் அடியேன் தொடர்புள்ள சில விஷயங்களுக்காகச் செய்தமைக்கும்… + அதிசராசரித் தமிழ்ச் சூழலில், ஒரு புத்திசாலியாகத் தொய்வில்லாமல் இருப்பதற்கும்.

அவருடைய ‘சர்ச்சை’க்குரிய விடியோவைப் பார்த்தேன்.

அவர் மணிப்பூர் பற்றிச் சொன்னதில் சிற்சில தகவல்ரீதியாகச் சரியில்லை என்றாலும் சில விஷயங்கள் (அவர் நமது ராணுவத்தைக் குறித்துச் சொன்னவை+) எனக்கு ஒத்துவரவில்லை என்றாலும் – ஆதன் யூட்யூப் சேன்னல் நேர்காணலில், தம்முடைய மணிப்பூர் சம்பவங்கள் குறித்த கருத்துகள் சமீபகாலங்களில் அவர் வடித்துக்கொண்டவை, ஆகவே தான் விற்பன்னர் அல்லர் எனச் சொன்னது முக்கியமாக விஷயம்.

அவர் நம் தலைமை hairdye நீதிபதி பற்றி வைத்த விமர்சனம் மிகச் சரியே. பொதுவாகவும், அவர் மணிப்பூர் நிலவரம் குறித்துச் சொன்னவையும் சரியே.

தலைமை நீதிபதியும் ஒரு சாதாரண, சகக் குடிமகன் தானே! நம்முடைய  மக்கள் வரிப்பணத்தில் பெருஞ்சம்பளமும் உபரிஉபகாரங்களும் பெற்றுக்கொண்டு வகிக்கும் பதவிக்காவது மாண்புமிகு அவ்வாசாமி மதிப்புக் கொடுத்து, தேவையற்ற அறச்சீற்றக் கருத்துகளை அட்ச்சிவுடும்போது கவனம் வேண்டாமா? அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பினை மதித்து, அதிகாரப் பகிர்வு பற்றிய சிந்தனைகளைப் பின்புலமாகக் கொள்ள வேண்டாமா? தம் அதிகாரத்தின் எல்லைகளை உணரவேண்டாமா?

இப்படிப்பட்ட, பொறுப்புணர்ச்சியற்ற பப்பரப்பா நீதிபதிகளைப் பற்றி, ஒரு சக-குடிமகனாகக் கருத்துகளை முன்வைத்ததில், பத்ரி சரியான விஷயத்தையே செய்திருக்கிறார்.

இன்னொரு விதமாகப் பார்த்தால் – நம் தலைமை நீதிபதிக்கும் (அவரும் எனக்குத் தெரிந்தவரையில் பாரதக் குடிமகன் என்கிற வகையில்) கண்டமேனிக்கும் உளறும் உரிமை இருக்கிறது என்றாவது பத்ரி அவர்கள் அவ்வாசாமியை லூஸ்ல வுட்டிருக்கலாம்…

ஆனால் ‘உளறலிற் பெருவலி யாவுள’ என திருவள்ளுவர் பகபகவென நகைத்துப் பகர்ந்திருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார். ஸுப்ரீம் வலி வலித்திருக்கிறது – ஆகவே அங்கலாய்த்துவிட்டார் எனப் புரிந்துகொள்கிறேன்.

…அயோக்கியத் திருட்டுத் திராவிடர்கள் என்றாலே கொஞ்சம் மேல்மாடிப் பிரச்சினை உண்டு எனப் பல நேரடி அனுபவங்கள் மூலமாக அறிவேன்; அதே சமயம், அவர்களுடைய மூளைக்குறைவுப் பிரச்சினையை – மூளைப் பிறழ்வு வன்முறையாலும், மூடவெறித்தனமான செயல்பாடுகள் மூலமாகவும் நிரவிவிட்டுக் கொள்வார்கள் என்பதையும் அறிவேன்.

முதலில்: தனக்குத்தானே சங்கூதிக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் விடியலாரின் திமுக ஆட்சிக்கு வாழ்த்துகள்; திராவிட அரசு திராபைதான், காத்திரமான முடிவுகள் என ஒரு சுக்கையும் எடுக்க முடியாத திறனற்ற அரசுதான். ஊழலின் ஊற்றுக்கண் தான்; பாரதத்தை உடைத்து எரித்து அதில் லஞ்சக்குளிர் காய்வதில் அதற்கு இருக்கும் மும்முரமே அழகுதான். இருந்தாலும் தற்கொலை முயற்சியில் அந்த ஜந்து தொடர்ந்து ஈடுபட்டு – மறுபடியும் மறுபடியும் நீதிமன்றங்களில் மூக்குடைக்கப் படுவதும், வெட்கமோ வீரமோ அற்று புறமுதுகு வாங்குவதும் அலாதி இன்பம் தருபவையே…

பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் லாக்கப்புகள்.

திராவிட ஊழற்பேய் தலைவிரித்தாடினால், காவல்துறையும் தன் பங்குக்குத் தானாடும்.

வேறென்ன சொல்ல.

ஆகவே, தொடர்ந்து அயோக்கியத் தனங்களிலும் பெருங் கொள்ளைகளிலும் ஈடுபட்டு அடுத்த தேர்தலில் திமுக திராவிடர்கள் மண்ணைக்கவ்வ வாழ்த்துவதைத் தவிர வேறு வழியேயில்லை.

இரண்டாவதாக, சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்வரை திடகாத்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மரியாதைக்குரிய அமைப்பு – இப்படிப் படுமோசமாக, படிப்படியாக திராவிடத்தால் வீழ்ந்து அற்பத்தனமாக இயங்கி, வெறும் மூன்றாந்தர ஏவலர்களாகச் செயற்படும் நிலைமைக்குத் தங்களைத் தாங்களாகவே (தொடர்ந்து, படிப்பினைகளையே துளிக்கூடப் பெறாமல்!) தாழ்த்திக் கொள்ளும் தமிழகக் காவல்துறைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 

பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது, என்ன செய்ய. முதுகெலும்பும் சுயசிந்தனையும் சட்ட அறிவும் கொண்ட ஒரு தமிழகக் காவல்துறை அதிகாரியைப் பார்க்க  வேண்டுமானால், நாமும் செந்தில்பாலாஜி அண்ணியார் போல ஹபியஸ் கார்ப்பஸ் பெட்டிஷன் (ஆட் கொணர்வு மனு)  எழவு ஒன்றைத் தாக்கல் செய்யவேண்டுமோ?

ஒப்பு நோக்க சிறிய, ஆனால் அவமானம் தரும் சம்பவமான வேங்கைவயல் அயோக்கியத்தனத்தைத் துப்பறிய வக்கில்லாமல், அது இப்படிச் சோரம் போகும் என நான் கூட நினைத்திருக்கவில்லை – இத்தனைக்கும் எனக்கும் அறிமுகமாகியென சிலபல நேர்மையான தமிழகக் காவல்துறையினர் அங்கொருவர் இங்கொருவராக இருக்கிறார்கள்… ஆனால் துறையில் அதிகார துஷ்பிரயோகம் என்பதும் தேவையேயற்ற ஆமாஞ்சாமித்தனமும் புரையோடிக் கிடக்கிறது.

நான் நேரடியாக இத்துறையின் மெத்தனத்தையும், அது அதிகார அரசியல் வர்க்கங்களுக்கும் வெட்கங்கெட்டுச் சாமரம் வீசுவதையும் பார்த்திருக்கிறேன் என்கிற முறையில் – வருத்தம் கலந்த வாழ்த்துகள். 

பத்ரி சேஷாத்ரி கைது விஷயத்திலும் – கண்டகண்ட சட்டங்களின் கீழ் விட்டேற்றியாக எடுத்தேன் கவிழ்த்தேன் என குற்றப்பத்திரிகையிலிருந்து அனைத்து விஷயங்களிலும் சொதப்பிப் பதிவு செய்திருக்கிறார்கள்; சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத்தான் துப்பில்லை, ஆனால் அடிப்படை இந்திய தண்டனைச் சட்டம், அதன் சட்டகம் குறித்த அறிவு கூடவா இவர்களுக்கு இருக்காது? சோகம்!

ஆனால், இதற்கு மேலும் தலைகுனிவு ஏற்பட அதற்கு முடியாது – ஆகவே இனிமேல்  தமிழகக் காவல்துறைக்கு ஏறுமுகம்தான்.

மூன்றாவதாக – நமது மனிதவுரிமை+அரிப்புஜீவிக் கோமாளிகள். இதில் ஒரு பொறுக்கியாவது இந்த பத்ரிசேஷாத்ரி கைது குறித்த அராஜகம் பற்றி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறதா? மாறாக, தமிழக ‘வலதுசாரிகள்’ வெகு நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இச்சமயம், லஷ்மி மணிவண்ணன் எனும் இலக்கியக் காரர் மட்டும் பத்ரிசேஷாத்ரிக்கு ஆதரவாக விலாவாரியாக எழுதியிருக்கிறார் என நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்; ஒரு முழுமைக்காக இதனை நான் கொடுக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஸ்வராஜ்யா கட்டுரையையும் இங்கு குறிப்பிட வேண்டும்: Tamil Nadu: Arrest Of Ace Publisher Badri Seshadri And Totalitarianism of Dravidianist Politics

நான்காவதாக – இச்சமயம் அமெரிக்காவில் உள்ள அரைகுறை டண்டணக்கா வழக்குரைஞர்கள் பற்றிய ஒரு கேலிச்சித்திரம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. பெரும்பாலும், இம்மாதிரி வழக்குரைஞர்கள்தாமே எங்குமே பிற்காலத்தில் பெத்த நீதிபதிகள் ஆகிறார்கள், சொல்லுங்கள்?

ஆகவே, இம்மாதிரி நகைச்சுவை உணர்ச்சி மிக்க நீதிபதிகள் மேன்மேலும் ஆர்த்தெழ, அடியேனின் ஆவலும் ஆச்சரியமும் கலந்த அறச்சீற்ற நெகிழ்வுகள், வேறென்ன சொல்ல…

மணிப்பூர் கலவர நிலவரம்?

கிழக்கு ‘வடகிழக்கு’ப் பிராந்தியம் பற்றி ஓரளவுக்கு படித்திருக்கிறேன், சிறிது சுற்றியும் இருக்கிறேன். இப்பிராந்தியம் குறித்து – சாச்சா நேரு அருளிச் செய்த அலங்கோலங்களையும் மகோன்னத சொதப்பல்களையும் அறிவேன்.

இருந்தாலும் – இதுதொடர்பாகச் சகல விஷயங்களையும் கரைத்துக் குடித்துப் புரையேறி விட்டது என அட்ச்சிவுடமாட்டேன்.

ஆனால்.

திராவிடப் பொறுக்கிகளின் (+ இ.ந்.தி.யா பேமானிகளின்) அரைவேக்காட்டு வெறுப்பியக் கருத்துகளை முழுமுச்சூடாக நிராகரிக்கிறேன்.

பாரத மணிப்பூர் அரசுகள், இருக்கும் இக்கட்டான நிலையில் செவ்வனே செயல்படுவதாகத் தான் கருதுகிறேன்.

 ५,

சமீபகாலத்தில் ஒருபதிவும் இல்லையே

அதிக பட்சம் ஒரு பத்து பேர் தொடர்ந்து படிக்கும்(!) ஒரு வலைத் தளத்தில் அவ்வப்போது பதிக்கப்படும் ‘கருத்து’களையும் ஆவலுடன் படிக்க ஒரு ரெண்டுபேர் கொண்ட பெருங்கூட்டம் இருக்கிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகக் கருத்துதிர்ப்புத் தளங்கள் அவ்வளவு வறண்ட பிரதேசங்களா என்ன? அதுவும் இந்த ஒத்திசைவு எழவைப் படிக்காமல் withdrawal symptoms வருமளவுக்கு?

என்னமோடாப்பா. அல்லது என்னமோடிம்மா.

சரி. குடும்பஸ்த அழுத்தங்கள் காரணமாக – கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, என் தினப் பயிற்சிகளில் பலவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை – அப்படி விடுபட்டுப்போன பயிற்சிகளில் ஒன்று சுமார் 600 வார்த்தைகள் கொண்ட எத்தையாவது வியாசத்தைத் தமிழில் எழுதுவது – பின்னர் ‘வரைவுப் பதிவுகள் குவியலி’ல் அவற்றை முடிந்த வரை சேமிப்பது (அப்படி எழுதுவதில் சுமார் 90% என் மீள்கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நின்று தவம் செய்து கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்)

(இந்த அழகில் எழுதுவதில் ஆர்வம் தெரிவித்த நண்பர் ஒருவருக்கு ‘தினமும் 500 வார்த்தையாவது தமிழில் எழுத வேண்டும், வெறுமனே முயற்சி எல்லாம் செய்வேன் என்பது ஒத்துவராது’ போன்ற மேலான அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறேன்; நம் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இதுபோன்ற வெட்டிப்பேச்சுக்கும் வரி விதித்தால்தான் மோட்சம், என்ன செய்ய!)

இன்னொன்று, தினமும் சில கிலோமீட்டர்களாவது பக்கத்திலிருக்கும் ஏரியைச் சுற்றி, வெறுங்காலோட்டம்; கொஞ்சம் கம்பராமாயணம், பிபேக் தேப்ராய் மஹாபாரதம் பாராயணம். தோட்டவேலை. இவை ஒன்றையும் கடந்த ஒரு மாதமாகச் செய்யவில்லை. பேஸ்மென்டில் இருக்கும் என் செல்ல ஆய்வகத்திடம் கூடச் சரணடையவில்லை. சுத்தம். இப்படியே பல.

இந்த அழகில் ‘இத்தைப் பார், அத்தைப் படி’ எனத் தொணதொணவென்று சுட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கும் ஒரு பெத்த இயல்பியல் பேராசிரியர். தேவையா?

ஆகஸ்ட் 30 வாக்கில் மறுதொடங்கல் எனவொரு திட்டம்.

பாவம், நீங்கள்.

பிற பின்.

16 Responses to “१) ஓப்பன்ஹெய்ம[ர்] பார்த்தாயா? २) அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை’ எடுபடுமா? ३) பத்ரிசேஷாத்ரி கைது பற்றி… ४) மணிப்பூர் கலவர நிலவரம்? ५) சமீபகாலத்தில் ஒருபதிவும் இல்லையே… ६)…”


  1. யோவ்… உம்மை ரொம்ப நாளா நான் தேடிட்டு இருக்கேன்..ஸ்வாமி… வந்தீரே… மிக்க மகிழ்ச்சி

  2. Sesha a.seshagiri's avatar Sesha a.seshagiri Says:

    அப்பாடா ஒரு வழியாக எல்லாவற்றிற்கும் சேர்த்து பொரிந்து தள்ளி விட்டீர்கள் !.ஏழரையில் இருந்து நாங்கள் இன்னும் விடுபடவில்லை என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி !.

  3. ஏழரை's avatar ஏழரை Says:

    //இளம் அண்ணாமலையின் பாஜக யாத்திரை, நெடுங்கால ரீதியில் தமிழக அரசியலைப் பாதிக்கும் என்றுதான் நினைக்கிறேன். என் ஆசையும் அதுதான்.//
    +1.

    சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்து, சறுக்கலுக்கு இடமளிக்காமல், நெஞ்சுரத்துடன் தனது நிமிர்ந்த நன்னடையைத் தொடர்வார் என நம்புகிறேன். தமிழகத்தின் தலையாய தேவை அது.

    //அதிசராசரித் தமிழ்ச் சூழலில், ஒரு புத்திசாலியாகத் தொய்வில்லாமல் இருப்பதற்கும்//

    அறிவை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பெருங்கும்பலிடம் வைத்துக்கொண்டால் அவருக்கு நல்லதல்ல எனச் சொல்லிவையுங்கள். நாங்கெல்லாம் வேறமாரி!

    //அவர் நம் தலைமை hairdye நீதிபதி பற்றி வைத்த விமர்சனம் மிகச் சரியே.//

    ஊறரிந்த ரகசியத்தை உரக்கச் சொல்லுதல் கற்றோருக்கு அழகா, சொல்லுங்கள்?

    // இந்த அழகில் ‘இத்தைப் பார், அத்தைப் படி’ எனத் தொணதொணவென்று சுட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கும் ஒரு பெத்த இயல்பியல் பேராசிரியர். தேவையா?

    ஆழ்ந்த அனுதாபங்கள்🙏.

  4. tubelight's avatar tubelight Says:

    Dear Sir, what is your preferred hair dye, the color most interesting question I wanted to ask, of course, rest you have answered comprehensively in your latest essay. Thank you


  5. ஃபோனிலும், மின்னஞ்சல் வழியாகவும் மேற்படியும் இரங்கலும் ஆழ்ந்த ‘ஐய்யோ! ஏரக்கட்டிட்டேன்னிட்டு நம்பினேனே!’  வருத்தமும் தெரிவித்துள்ள சொந்தங்களுக்கும் நன்றியும் ஆவிக்குரிய எழுப்புதல் நற்செய்தியும்:

    கூடிய விரைவீக்கத்தில் நானும் விஜய்குஜய் ரஜினிகஜினி அடிஉதய் போல நேரடி அரசியலில் குதிப்பதாக இருக்கிறேன்.
    “திரும்ப வந்துட்டேண்டா, ப்ளடி பேஸ்கெட்ஸ்…”

  6. Ramesh Narayanan's avatar Ramesh Narayanan Says:

    அது ‘ஆப்பன்’, ‘ஓப்பன்’ அல்ல என்று பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்


    • ‘ஆப்பன்’ அது ஆப்பனுமல்ல, ஓப்பனுமல்ல மாறாக (தமிள் என்பது தமிழுக்கும் தமிலுக்கும் நடுவே இருக்கும்) ரெண்டுங்கெட்டான் போல என்பதையும் தஸ்புஸ்ஸுக்குச் சமர்ப்பித்துக் கொல்கிறேன்.

      அதனால்தான் மிகுந்த ரோசனைக்குப் பிறகு ஓப்பன் செய்தேன் – ஒரு ஓப்பனிங் பால்ஸ்மேனா-லட்சணமாக.

      வோப்பன் என்றும் எழுதியிருக்கலாம்.கொஞ்சம் உங்கப்பன் என்கிற ரேஞ்சில் இருந்திருக்கும், பிரச்சினை.

      ப்ளடி.

      காலங்கார்த்தால வந்த்ட்டானுங்க, கரெக்ட் செய்றத்துக்கு….

      (எல்லாமே உமக்கு விடைத்தாளா? புண்ணுக்குமுண்டோ புடைக்கும்தாள்?)

  7. Vijayaraghavan's avatar Vijayaraghavan Says:

    மாமண்ணன் படம், ஸ்ரீமான் சைத்தான்ய விளக்கம் எல்லாம் விடுபட்டு போச்சே ?


    • ஐயன்மீர் யாரும் இவை குறித்துக் கேட்கவில்லை – ஆகவே அவற்றை என் பெரும்பேராசானுக்கு சாய்ஸில் விட்டுக் கொடுத்து விடுகிறேன். :-(

      மேலும், இவை இரண்டைப் பற்றியும் பெரிதாக எதுவும் தெரியாது, + after all, the first is about a Tamil fillum and the second is about a  Fillum tamil.

      திராவிடத்தையும் தமிழ்பிலிமையும் மீறி – நவீண தமிழில் எதாவது இருக்கிறதா என்ன? (okay, there is – let me add ‘Sangam Age’)

  8. Sesha a.seshagiri's avatar Sesha a.seshagiri Says:

    ரொமீலாதாப்பரே அசந்து போனாராமே இந்த கீழடி ஆய்வை பார்த்து ….
    தங்கள் பார்வைக்கு

    https://m.dinamalar.com/detail.php?id=3398294

  9. Ramanathan N's avatar Ramanathan N Says:

    வந்தேன்டா பிளாக்காரன்!!
    எல்லாத்தையும் பாட போறேன்!!
    எதிரிகளை பாடம் பண்ண போறேன்!!

    நன்றி ஒரா …

  10. dagalti's avatar dagalti Says:

    Return to the 7 1/2

    பத்திரியே கைதெனகேள் பூஞ்சையனேன் ஏதறியேன்
    பொத்திடுவேன் வாயொடுகை பொங்கிவிடும் சீற்றமினி
    அத்தனையும் அங்கிடவே அஞ்சுமெனை ஆதரியாய்
    உத்தமனே ஏழரையேன் உய்வனினி உன்னிடமே


    • யோவ்! இன்னாய்யா இது?’

      இந்தக் கடையில் ரிடர்ன்கள் ஒப்புக்கொள்ளப்படமாட்டா.

      இன்று முதல் நாளை கடனெழவு.

      கண்ணைப் பார், சிலப்பதிகாரம்.

      மழை நீர் சேமிப்பீர்.


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *