ஈவெரா ‘பெரியார்’ தான் தமிழகத்தின் முதற்பெரும், ஆதி ட்ரோல்

February 23, 2023

Yes, EVR on a roll, as a troll…

நம் செல்லத் திராவிட ஈவெரா – வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுட்ட வந்தேறியாக இருக்கலாம், வெறுப்பையும் விஷத்தையும் ஜாதிவெறியையும் கக்கிய ஈன ஜந்துவாக இருக்கலாம். பட்டியல்திரள் மக்களைத் துச்சமாக மதித்துக் கீழ்த்தரமாக ஏசியிருக்கலாம்… முன்னுக்குப் பின் முரணாக, அறிவியல் அறிவற்று உளறிக்கொட்டிப் பேசியே தன் சுயலாபங்களைத் தொடர்ந்து பெருக்கிச் சுயமுன்னேற்றம் கண்ட பெருந்தகையாகவும் இருந்திருக்கலாம்… பகுத்தறிவையும் கொத்துபுரோட்டா செய்துண்டு செரித்த பகாசுரனாக இருந்திருக்கலாம்… தன்னைச் சுற்றி ஒரு பெரும் மூட மூர்க்கர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து வாழையடிவாழையாக அக்கூட்டம் முன்னேற வழி அமைத்துக் கொடுத்தவராகவும் இருக்கலாம்…

ஆனால், அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும், பிறரை ட்ரோல் செய்யும் பாங்கும் மெச்சத் தகுந்தவையே!

கம்யூனிஸ்ட்களில் அரிவாள்-சுத்தி சின்னக் கொடி:

தமிழர்களின் கொடி:

காங்கிரஸின் கொடி:

அப்போதைய ஜஸ்டிஸ் கட்சி / திராவிடர்கழகக் கொடி:

-0-0-0-0-

இப்போதைய சில கட்சிகளின் கொடிகளையும் சின்னாபின்னங்களையும் பார்த்தால், ஈவெரா என்ன சொல்லியிருப்பார்?

திமுக:

இவர்கள் கட்சியே அயோக்கியர்களின் கட்சி, இது அஸ்தமனம் ஆனால்தான் தமிழனுக்குச் சமூக நீதி கிடைக்கும்.

அது உதயசூரியன் அல்ல, அஸ்தமன சூரியன்.

இந்த கூட்டிக்கொடுக்கறவங்களுக்கு எதுக்கு கருப்புசெவப்பு கொடி?

இவனுங்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பறதுதான் சரி.

நாம் தமிழர் கட்சி:

இது என்ன பூனை கொட்டாவி விடற மாதிரி இருக்கிறதே! நான் முன்பே சொன்னதுபோல புலி என்றால் கொல்லப் படவேண்டியது.

எதையும் வெட்டி உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பயன் தராது. இளைஞர்களோட சக்தி தான் விரயம் ஆகும்.

மக்கள் நீதி மய்யம்:

அரிதாரம் பூசுபவர்களின் அலங்கோலம் தான் இது. கோமாளியோட கட்சி. கைகையா கோத்துக்கிட்டு, சுற்றிச் சுற்றி தட்டாமாலை அடிக்கத்தான் லாயக்கு.

சினிமா நட்சத்திரத்தச் சுத்தி கும்மி அடித்தால் தமிழனுக்கு என்ன பயன்? கொடியே கோமாளித்தனம்.

END

2 Responses to “ஈவெரா ‘பெரியார்’ தான் தமிழகத்தின் முதற்பெரும், ஆதி ட்ரோல்”

  1. சுமார் மூஞ்சி குமாரு's avatar சுமார் மூஞ்சி குமாரு Says:

    ரெட்டை இலை, தாமரைய காணோமே?!


    • எல்லாவற்றையும் நான் தான் எழுதவேண்டுமா? உங்களுடைய சோம்பேறித்தனத்தைக் கருத்தில் கொண்டு…

      நீங்களே அவற்றுக்கான ‘பெரியார்’ பழிப்புரையை எழுதலாமல்லவா?


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *