அரவிந்தன் கண்ணையனார் புராணம் (இங்கு!) முற்றும்

March 7, 2019

அல்லது, எனக்கு முற்றி விட்டது.

எனக்கு வேறு வேலையேயில்லையா? கண்டகண்ட கருத்துலக அறிவுஜீவிகள் கழுதைத்தனமாக அட்ச்சிவுட்டு தவறுகளையும் பிழைகளையும் துளிக்கூட வெட்கமேயில்லாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்க – அவற்றைப் பற்றி, சொட்டைமண்டை நெற்றிவேர்வை சொட்டச்சொட்ட உழைத்து எதிர்வினை கொடுக்க, நான் ஒரு தொழில்முறை கருத்துலகக் கழுதையல்லன். வெறும் சாதா கழுதைதான்.

0. எனக்கு தப்பித்தவறி ஏதாவது மின்னஞ்சல் அனுப்பினால், அதில் ஏதாவது முக்கியமான செய்தி/உளறல் இருந்தால், அதற்கான சுட்டியையும், ஸ்க்ரீன்ஷாட் எழவையும் அனுப்பினால் அதனை நான் படிக்கக்கூடும், அதுவும்கூட நிச்சயமில்லை; அப்படியே படித்தாலும் அவற்றையெல்லாம் குறித்து எழுதத் தெம்பில்லை. ஏற்கனவே நான் என்னுடைய ‘இணையக் கடமைகளில்’ ;-) மூன்றுவாரங்கள் போலப் பின் தங்கியிருக்கிறேன். :-( மேலும் என்னுடைய குவியங்கள் மிகச் சிறிதானவை – ஆனால் என்ன தெரிந்திருக்கிறதோ அது ஒரளவுக்கு ஒழுங்காகவே தெரிந்திருக்கிறது. மேலும், என்னைத் தொடர்ந்து செழுமையும் மேன்மையும் படுத்திக்கொள்ளவே எனக்கு ஆசை.

இருந்தாலும் (அல்லது ஆகவே!) அரவிந்தன்கண்ணையனாருக்கு இருக்கும் அதிவுயர்வேக கூக்ல்வழி இணையத்தொடர்பும் இன்ஸ்டன்ட் ஞானம் பெறும்வழியும் எனக்கும் வாய்த்திருக்கிறது என்றாலும் – என்னால் அளவுக்குமீறி மேதாவித்தனமாக, றெண்ட் நிமிட் நூட்ல்ஸை அட்ச்சிவுடமுடியாது. மன்னிக்கவும்.

எது எப்படியோ – கண்டமேனிக்கும் பூடகமாக, யார்ஏன்எதற்கு என முன்னேபின்னே இல்லாமல் செய்தியை அனுப்பினால், அதனையெல்லாம் என்னால் ஆய்ந்தறிந்து உளங்குளிர முடியாது. உங்களையும் குளிரவைக்க முடியாது. நீங்கள் அந்த ஏழரைகளில் ஒரு அரையாக இருந்தாலுமேகூட இப்படித்தான்.

1. அரவிந்தன்கண்ணையனார் அவர்கள் – சமணர் பற்றியென்ன, உலகத்தில் எந்த விஷயத்தைப் பற்றியும், ஏன், செவ்வாய்கிரகத்தில் நேருவியம் பற்றியும் என்னவேண்டுமானாலும் மேதாவித்தனமாக, “இணையத்தைத் தட்டினால் தெரியும்” வகை ‘ஆராய்ச்சி’ செய்து எழுத உரிமையிருக்கிறது.  “காலணியாதிக்கம்” எனச் செருப்புகளின் காலனிய அரசியல் என்றெல்லாமும்…

+ ஊக்கபோனஸாக ‘தமிழ்ச் சமணர்கள் ஒருவரைக்கூட ஹிந்துத்துவ சைவர்கள் விட்டுவைக்காமல் கழுவேற்றிவிட்டனர், அதற்குமுதலில் கழுவி ஊற்றிவிட்டனர், ஐயகோ, அவர்கள் அனைவரும், ஒருவர் விடாமல் அழிந்துவிட்டனரே‘ எனப் பிலாக்கணம் வைக்கவும். (ஆனால் பாருங்கள், ஒத்திசைவு எழவைப் படிக்கும் சக ஏழரைகளில் ஒருவர், வீட்டில் தமிழ்பேசும் பாரதச்சமணர், அவரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டே இதனையும் படிப்பார் என நம்புகிறேன்! பிரச்சினை என்னவென்றால், இம்மாதிரிச் சான்றோர்களுக்கு அமெரிக்கக் கண்ணையச் சராசரிகளுடன் பொழுதன்னிக்கும் பொருதும் மனப்பாங்கில்லை, என்ன செய்வது சொல்லுங்கள். (இந்தச் சமணர், தன்னை ஹிந்து என்றே அழைத்துக்கொள்கிறார். அமித்ஷா குறித்து ஏகத்துக்கும் பெருமை வேறு.))

2. அதேபோல ஜெயமோகனுக்கும் அதே உரிமை இருக்கிறது. ‘சமணர்கள் பொதுவாகவே ச+மணம் தங்கள் பொருளாதார நிலையில் இருப்பவர்களையே  உள்ளுக்குள் மணம் புரிந்தவர்கள்தான், என மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் கூறியிருக்கிறது.‘ (கூடிய விரைவில் பாராகவனும் சாருநிவேதிதாவும் எஸ்ராமகிருஷ்ணனும் யுவகிருஷ்ணாவும் மணிகண்டனும் சமஸ்ஸும் ஸமோஸ்ஸாவும் சுமந்தராமனும் சுமக்காதராவணனும் சமணர்கள் குறித்த தங்களுடைய ஏகோபித்த ஜனநாயகக் கருத்துரிமையை நிலை நாட்டுவார்கள் என நம்புகிறேன்! பாவம் சமணர்கள்!)

3. “You are not entitled to your opinion. You are entitled to your informed opinion. No one is entitled to be ignorant ” என Harlan Ellison அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் பாரதத்தைப் பொறுத்த பொறுக்கமுடியாத உதிரிக் கருத்தாக்கங்களைப் பார்த்தோமானால் – லிபரல் உளறல்வாதிகளுக்கும் இடதுசாரி உதிரிகளுக்கும், ‘அறியாமையில் மினுக்கிக்கொண்டு கருத்துதிர்க்க’ – சர்வ நிச்சயமாக உரிமையும் தடித்தோலுடைத்த வல்லமையும் இருக்கிறது.

4. வேண்டுமளவுக்கு அரவிந்தன்கண்ணையனாரின் கருத்துலீலைகள் பற்றி எழுதியாகி விட்டது. (இக்குறும் பதிவுக்கு அடியில் உள்ள (உங்களுடைய அடியில் உள்ளதை அல்ல!) சுட்டிகளைப் படித்து வெறுப்புறவும்!)

அவர் தன்னுடைய கிடுகிடுபள்ளத்திலிருந்து மேலெழும்பி வருவதாக இல்லை எனத் தோன்றுகிறது. அங்கேயே சுகம் காண்கிறார் போலும். ஆனால், நான் திருந்திவிட்டேன். எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்த வியர்த்த விளையாட்டை விட்டுவிடுகிறேன். அவர் எங்கிருந்தாலும் அங்கேயே வாழ்க வளமுடன்.

5. சொல்ல மறந்து விட்டேனே – ‘அவர் தனிப்பட்ட முறையில் நல்லவர்!’ – ஆஹா!

6. ஐயாமார்களே, அம்மணிகளே – நானும் அப்படித்தான்.  ‘தனிப்பட்ட முறையில் றொம்பறொம்ப நல்லவன்!‘ ஓஹோஹ்ஹோ!! இது றொம்பறொம்ப முக்கியண்டா!

7. போங்கடா.

8. நன்றி.

-0-0-0-0-

அரவிந்தன் கண்ணையனார் புகழ்பாடும் பிற காட்டுரைகள்:

 

 

5 Responses to “அரவிந்தன் கண்ணையனார் புராணம் (இங்கு!) முற்றும்”

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    அப்பாடி , ஒரு வழியாக அ .க புராணம் முற்று பெற்றது. ஸ் ஸ் ………..இனிமேல் நல்ல பல செய்திகளை படிக்கலாம். நினைத்தாலே இனிக்கிறது.

  2. Kannan's avatar Kannan Says:

    Great relief !!!

    Now let’s talk about the most pressing matter, should DMDK form alliance with ADMK or not?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *