மனுஷ்யபுத்திரன்: கருணாநிதி, தாம் சுருட்டிய பணத்தை, ஓட்டு வாங்கத் திருப்பிக் கொடுத்த இரட்டிப்பு ஊழல்களுக்காகத் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்!

February 20, 2019

மப்புவாரார் அவர்கள், மப்பும் மந்தாரமுமான மந்தச் சூழலில் சில சமயம் தப்பித் தவறி உண்மைகளை, மந்தகாச மண்டூகமாக மதியற்று உளறியும் விடுவார், பாவம்! (மனமுவந்து மன்னிக்கவும்)

மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி

 

இப்படியாகத்தானே எடுத்துக்காட்டாக, 2011 ஜூனில், மப்புவார் தொடர்ந்து எழுதுகிறார்:

ஒரு தேர்தலை யுத்தகால கெடுபிடியுடன் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டியிருந்தது என்றால் அது தமிழகத்தில்தான். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தி.மு.க. இவ்வளவு பரவலாகவும் பகிரங்கமாகவும் செயல்படுத்த முனைந்ததன் விளைவாக அது நேரான வழிமுறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு இயக்கம் என்கிற அவப்பெயரையே தேடித் தந்தது.

இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள் என்று கருணாநிதி அவ்வளவு திடமாக நம்பினார்.

தேர்தல் கமிஷன்தான் தன்னைத் தோற்கடித்துவிட்டது என்று இன்றளவும் புகார் சொல்லி வருவதன் மூலம் அவர் தனது வழிமுறைகளைப் பற்றி தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

தி.மு.க.அரசு எல்லா விதத்திலும் தனது நம்பகத்தன்மையையும் தார்மீக நெறிகளையும் இழந்ததன் மூலம் இப்போது அதிகாரத்தை இழந்திருக்கிறது.

…அன்றே, 2011லேயே சொன்னார் அண்ணல் மப்புவார்!

எல்லா விதத்திலும் நம்பகத் தன்மையையும் தார்மீக நெறிகளையும் இழந்து அம்மணமாக நிற்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்!

இதுவா களையெடுக்கப்படாமல், துப்புரவாக ஒழித்துக் கட்டப்படாமல் – மறுபடியும் துளிர்க்கவேண்டும்?

-0-0-0-0-

இருந்தாலும்

திருட்டிலும் பொய்மையிலும் ஈடுபட்டவர் என ஒருவரை, நேர்மையாகவே குற்றம் சாட்டிவிட்டு – பின்னர் பவ்வியமாக இளித்துக்கொண்டு அவருக்கே பூச்செண்டு கொடுப்பதுதான் டமிள்க் கவிஞ்ஜர்களின் புடைப்பிலக்கியம் என்றறிக!

https://tamil.thehindu.com/tamilnadu/article24531461.ece

சரி. இதுவாவது பரவாயில்லை. ‘மரியாதை நிமித்தம்’ அதுஇதுவென்று சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு, ‘அரசியல் பண்பு’ என உளறிக்கொட்டிக்கொண்டு ‘சாகக் கிடக்கும் வயோதிகருக்கு உரிய மரியாதை தருவது தவறா’ என்று – பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முக்காடு போட்டுக்கொண்டு போய்விடலாம் என நினைத்தால்…

…ஒருவர் திருடினார் எனச் சொல்லிவிட்டு – அவர் தயவால்தான் வாழ்கிறோம் என்று சொரணையில்லாமல் சொல்வதற்கு – மிகத் தடிமனான திராவிடச் சதை வேண்டும்.

100% அக்மார்க் வெட்கம்கெட்டவராக இருக்கவேண்டும்.

திருட்டுச் சொத்தில் வாழ்பவன் என்று மினுக்குபவனுக்கு விமோசனம் உண்டா? அவனையே விடுங்கள் – அந்த மினுக்குபவன் போடும் பிச்சையில் வாழ்கிறோம் எனப் புளகாங்கிதம் அடைபவனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இது குறித்த அரைமணி நேர நெகிழ்வாலஜி காணொலி பார்த்து இன்புறச் செல்வீர் இந்தத் திக்கில்: https://www.hixic.com/sakthisaravanan/poet-manushyaputhiran-about-karunanidhi

-0-0-0-0-0-

இப்படியெல்லாம் உண்மைகளை விளம்பிவிட்டு – எப்படித்தான் தமிழ் இலக்கியவாதிகள் கட்சிப் பிரச்சாரத்தைச் செய்கிறார்களோ!

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நேர்மை அறம் கிறம் என ஜுரம் வந்து பினாத்துகிறார்களோ!

மானங்கெட்ட ஜன்மங்கள். ஈனப் பிறவிகள்.

-0-0-0-0-

இப்போது சொல்லுங்கள் – இம்மாதிரி மப்புவார் போன்ற தரங்கெட்ட ஆசாமிகளாலேயே நேர்மையாகவும் மிகச் சுளுவாகவும் விமர்சிக்கப்படும் கட்சி இந்த திமுகவாக இருக்கும்போது, இந்த அற்பப் பதர்களா 2019 லோக்சபா தேர்தல்களில் தமிழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்?

ஹ்ம்ம்??

 

4 Responses to “மனுஷ்யபுத்திரன்: கருணாநிதி, தாம் சுருட்டிய பணத்தை, ஓட்டு வாங்கத் திருப்பிக் கொடுத்த இரட்டிப்பு ஊழல்களுக்காகத் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்!”

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    பல எழுத்தாளர்கள் எப்படி தாங்கள் இந்த “புத்திரனால்”, அவரின் பதிப்பகத்தால் ஏமாற்றப் பட்டோம் என குமுறியது தான் இதுவரை அறிந்த உண்மை. இப்போது தான் அவரது 100% அக்மார்க் வெட்கம் கெட்ட தனம் தெரிகிறது.
    எங்கிருந்தோ எப்படியோ வந்த பணம் தானே என்று அவர்களும் இதுபோன்ற சிலபல வெட்கங்கெட்டவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள்.
    இவர்களாவது, 2019லாவது, தேர்ந்தாவது, எடுக்கப் படுவதாவது! ஹ்ம்ம்


  2. […] நீங்கள் குறிப்பிடும் பதிவு அந்த அற்பத் திராவிடர் மப்புவார் […]


Leave a Reply to திமுக பிரச்சார பீரங்கி மனுஷ்யபுத்திரன்: திமுகவின் தொலைநோக்கற்ற திட்டங்களாலும் வெற்றுச் செலவ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *