இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)

January 19, 2019

​மறுபடியும்இன்னொரு வருடம் உருண்டோடிவிட்டது.

இந்த உதயகுமார், மேதாபட்கர், அருந்ததிராய், அருணாராய், ராமச்சந்திரகுஹா, ராஜ்தீப் ஸர்தேஸாய், டெரெக் ஓ’ப்ரியன் போன்ற அறிவுஜீவிகளுக்கெல்லாம், மனிதவுரிமை கினிதவுரிமை என்றலையும் போராளிகளுக்கெல்லாம் – மிகவும் சௌகரியமாக மறதி ஏற்பட்டு விடும் விஷயமிது; ​பேடிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பதும் சரியில்லைதான்.​

ஆனால், நம்மால் இந்தத் துயர நிகழ்வை மறக்கக்கூடுமா?

நான் அந்த இளைஞன் ராஜீவை மறப்பேனா?

மேலும் படிக்க.

 

 

2 Responses to “இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)”

  1. Swami's avatar Swami Says:

    I have got some dust in my eyes :(

  2. mekaviraj's avatar mekaviraj Says:

    குஜராத் கலவரங்கள் அல்லது பாபர் மசூதி கலவரங்கள் பற்றிப்பேசினாலே ‘கஷ்மீர் பண்டிட்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசியிருக்கிறாயா, அல்லது கண்டித்திருக்கிறாயா?’ என்று பாய்வது பாஜக அபிமானிகளின் வழக்கம். எனக்குத்தெரிந்து தொண்ணூறுகளின் மத்தியில் இருந்து பாஜக தனக்கெதிராக வாதங்களை சமாளிப்பதற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறது. 1991ல் கஷ்மீரில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டு பள்ளத்தாக்கில் இருந்து விரட்டப்பட்ட கஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதை 2014 தேர்தல் அறிக்கையிலேயே வேறு குறிப்பிட்டிருந்தது.

    அந்த அளவுக்கு பாஜக அபிமானிகள் உணர்வுபூர்வமாக அணுகும் இந்தப்பிரச்சினையில் கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என்று உங்களுக்குத் தெரியுமா? வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் பண்டிட்டுகள் எத்தனை பேர் என்கிற கணக்கெடுப்பு கடந்த ஐந்தாண்டுகளில் எடுக்கப்பட்டதா? அவர்களின் மறுகுடியேற்புக்கான திட்டங்கள், கொள்கை முடிவுகள் வகுக்கப்பட்டனவா? அல்லது அவர்களை மறுகுடியேற்பு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்றால் அவர்கள் உடமைகளை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? பாதிக்கப்பட்ட பண்டிட்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய விசாரணைக்கமிஷன் எதுவும் அமைக்கப்பட்டு அவற்றில் ஏதும் முன்னேற்றம் நடந்ததா?

    இது எதுவுமே நடக்கவில்லை என்று இந்தியா டுடே குற்றம் சாட்டுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதன் நிருபர் எழுப்பிய வினாக்களுக்கு எந்தத் தெளிவான பதிலும் அரசிடம் இருந்து வரவில்லை. எத்தனை பண்டிட்டுகள் இருக்கிறார்கள் எனும் தகவல் கூட மத்திய அரசிடம் இல்லை என்று இந்தியா டுடே சொல்கிறது.++

    என்னைப்போன்ற ‘இந்து-விரோதி’களுக்குத்தான் கஷ்மீரி பண்டிட்கள் மேல் எந்த அக்கறையும் இல்லை. ஆனால் பண்டிட்கள் என்றாலே உணர்ச்சி பெருக்கெடுத்து கொந்தளிக்கும் பாஜக அபிமானிகள் அரசை நோக்கி இந்தக்கேள்விகளை எழுப்புவார்கள் என்று நம்புகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் பண்டிட்கள் நலனுக்கு, மறுகுடியேற்றத்துக்கு, அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த நீதி கிடைப்பதற்கு மோடி என்னென்ன முயற்சிகள் எடுத்தார், அவற்றில் கிடைத்த பலன்கள் என்ன என்று மத்திய அரசை உணர்வுபூர்வமாக கேள்விகள் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
    ~

    ஸ்ரீதர் – தன்னை அறிவுஜீவி என்று நினைத்து கொள்கிறார்.

    India today – ஒரு கேவலமான பத்திரிகை :)

    RTI மாதிரியான கேவலமான தேச நலனுக்கு எதிரான ஒரு சட்டத்தை காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது :)

    இந்த பதிவுக்கும் , இதற்கும் என்ன சம்பந்தம் ?

    அவ்ளோ தானே ராம்


Leave a Reply to Swami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *