கடற்கரைக்கு இன்னொரு பாக்கியம் கிடைக்குமா?

August 7, 2018

இன்னும் எத்தனை திராவிடப் பகுத்தறிவுக் கூமுட்டைகள் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றனவோ, அக்கூமுட்டைகளின் குடும்பங்களின் கதியை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறதே எனச் சிந்திக்கும் வேளையில்…

சில அறிவியல்பூர்வமான ஊக்கபோனஸ் பகுத்தறிவுச் சிந்தனைகள்…

…அல்லது அரைத்த மாவையே சுயமரியாதையுடன் ‘பெரியார்’ ஈவெரா பார்வையில் அரைப்பதெப்படி?

கடற்கரையின் துயரம்: எந்தப் பிரபல திராவிட அரசியல் பிணம் விழுந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை புதைக்க இடமெல்லாம் தேடமாட்டார்கள். உடனடியாக மெரீனா பீச்சாங்கரை போய், போய்ச்சேர்ந்த கால வரிசையாக அடக்கத்துடன் அடக்கத்தைச் செய்தவண்ணம் இருப்பார்கள்.

இனிமேலாவது மெரினாவில் இதனைச் செய்யாமல், ஒவ்வொரு கடற்கரை மாவட்டத்துக்கும் இடஒதுக்கீடு செய்வார்களா? உதாரணமாக, அடுத்தமுறை திருவாரூர் அருகில் நாகப்பட்டினம் நாகூர் வேளாங்கண்ணி என எதற்காவது இந்த கடற்கரை சமாதி பாக்கியம் தரலாமே! அப்பகுதிகளுக்கு சுற்றுலா வசதிகள் மேம்படவாவது இது காரணமாகலாமே?

மேலும் ஜெயலலிதா சமாதிக்கு அடுத்ததாகத் தெற்கே புது சமாதி ஒன்றை அமைக்க கொஞ்சம் அரசியல் பிரச்சினைகள் வரலாம். அண்ணாதுரை சமாதிக்கு வடக்கே இடமும் இல்லை. மெரீனா சாலைக்கு ஒட்டிக்கொண்டு வேறு இது அமையவேண்டும். தனியாக மயிலாப்பூர் கலங்கரை விளக்கம் பக்கத்தில் அமைக்கலாமென்றால், அந்தச் சமாதி பாவம், அனாதையாக இருக்கும். தேவையா?

ராஜ்பவன் வளாகத்தில் இன்னும் கொஞ்சம் நிலத்தைச் சாப்பிட்டு அதில் ஒரு புது இடுகாட்டைக் கட்டலாம் என்றால் – அங்கெல்லாம் ஒர்ரேயடியாக காங்கிரஸ் துர்வாசனை. மேலும் அந்தக் கவர்னர்வேறு – அவருக்கு வீடுவேறு வெகு அருகில் இருக்கும். சவத்துக்கும் தடவிக்கொடுக்கும் ஆசாமியாக திராவிடர்களால் சித்திரிக்கப்படும் அவருடன் புதைக்கப்பட்டதற்கு, ஒத்துவருமா சொல்லுங்கள்? மேலும் சமாதி இன்ஸ்பெக் ஷன் செய்கிறேன் ஆய்வு அறிக்கை தரப்போகிறேன் பேர்வழியென அவர் கிளம்பினால் அச்சமாதியிலிருந்து இன்னும் எத்தனை திராவிட எலும்புக்கூடுகள் கிளம்புமோ, தேவையா?

ஆகவே, மாநில சுயாட்சி மாதிரி, தனியான தனித்துவமான ஒரு இடத்தில், ஒரு சமாதி சுயாட்சி கொடுத்தால்தான் திராவிடர்களின் ஆன்மா பகுத்தறிவுடன் சாந்தி முகூர்த்தத்தை அடையும் என்பதைப் புரிந்து தெளிந்தால், எல்லா பிரச்சினைகளும் சிடுக்கவிழ்க்கப்படுமோ?

அல்லது சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளான கஞ்சினீயர் சுந்தரராஜன், பியூஷ் ‘மனுஷ்’ ஸேத்தியா, உதயகுமாரரார், வைகோவால்சாமியார் போன்றவர்கள் இதற்கெதிராகவும் சாமியாடி – ‘கடற்கரையை பிணக்கரையாக்காதே’ என புரட்சிகர அக்கறையோடும் போராடினால் – அதற்கும் தமிழ் சினிமாப் பேடிகள் தெகிர்யத்துடன் ஆதரவு கொடுத்து புதுப்புது கருப்புச்சொக்காயும் கால்சராயும் அணிந்து ஒருநாள் (அல்லது ஒரு வேளை?), உம்மென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பார்களோ?

இந்த மாசுபடலுக்கு எதிராகவும் நம் கூமுட்டைப் புரட்சிகரப் போராளி மாணவர்கள் – மெரீனா கடற்கரைக்கே வந்து டேரா அடித்துப் போராடிவிடுவார்களோ?

சவாலே, சமாதி??

கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது இல்லையா? :-(

+ பிற பகுத்தறிவுக் குழப்பங்கள்.

2 Responses to “கடற்கரைக்கு இன்னொரு பாக்கியம் கிடைக்குமா?”


  1. […] கடற்கரைக்கு இன்னொரு பாக்கியம் கிடைக… 07/08/2018 […]


Leave a Reply to பகுத்தறிவு, நாத்திகவாதம், பிணம் – குறிப்புகள் | ஒத்திசைவு... Cancel reply

Your email address will not be published. Required fields are marked *