அறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா?

July 1, 2018

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப் புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன்.

இதுகுறித்த முந்தைய பதிவுகள்.

-0-0-0-0-

இதுவரை நான் இதனைச் செய்தது, ஊரிலேயே படுபிஸியான தெருவோரத்தில் அவற்றைக் கும்மாச்சியாகக் குவித்து, தேவைப்படுபவர்கள் எடுத்துச்செல்லவிடுவது. (சென்ற முறை பகிரங்கமாகச் செய்தது பெங்களூர் மஹாத்மாகாந்தி ரோடில்- சில வருடங்களுக்கு முன்னால். பின்னர் மூன்று நான்குமுறை தெரிந்தவர்களுக்குத் தலா ரெண்டு பாணா சூட்கேஸ் அளவு கொடுத்திருக்கிறேன், அவ்வளவுதான்)

ஆனால் இம்முறை அப்படியில்லை…

-0-0-0-0-0-0-

நானும் பிள்ளைகளும் புத்தகங்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறோம்.

பிரி பிரி என்றுச் சொல்லிச் சொல்லி மாளவில்லை; ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒர்ரே பழம் நினைவுகள், எப்போது படித்தேன், அதில் என்ன பாத்திரம் பிடித்திருந்தது, இது அந்தக் கதை போலவல்லவா, , அந்த நாட்கள் – என்று பேச்சோதிபேச்சு. நேர விரயம். இப்படியே போனால் – இன்று இரவு பத்து மணியாகவிடும்போல… (இத்தனைக்கும் 4 வருடங்களுக்கு முன்னால் இதே காரியத்தைச் செய்திருக்கிறார்கள், ‘அந்த நாட்கள்’ என்று புளகாங்கிதம் அடைவதற்கு அவ்வளவு நாட்களேயாகவில்லை! இருந்தாலும் இந்தக் கதை!)

…அவர்களுக்கு இப்படிக் கொடுப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. புத்தகப் புழுக்களானதால் ஒரு ஒட்டுதல். பிரிவதில் சோகம்.

ஆனால் மேற்கண்டவை அக்கம்பக்கப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லப் போகின்றன, பல பிற குழந்தைகளும் சந்தோஷமடைய சாத்தியக்கூறு இருக்கிறது என்றவுடன், ஆஹா, கொடுக்கலாம் என்றனர். சுபம்.

சரி. ஒரேயொரு அட்டை டப்பியில் (அல்லது ஆணிய டப்பா – அல்லது பொதுவாக பொட்டி, அய்யோ பொட்டா என்றிருக்கவேண்டுமோ? இப்படி ஒரு குழப்பக்கார மாற்றுவார்த்தையாளனாகிவிட்டேனே என்பதை நினைத்தால்…) இந்த சுமார் 200-250 பழம் புத்தகங்களைப் போட்டு வைக்கிறேன். விருப்பமுடையவர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொண்டால், அவர்களுக்கு அதைச் சேர்ப்பித்து விடுகிறேன். அல்லது ஒரு சௌகரியமான இடத்திற்குக் கொணர்கிறேன். (பெங்களூர் (6ஜூலை வரை) அல்லது சென்னை (ஜூலை8-9))

இவற்றில் உள்ளவை குறித்த சில செய்திகள்:

‘சிற்றிலக்கியம்’ (அய்யய்யோ!): அன்னம்விடுதூது, காலச்சுவடு (முதல் இதழிலிருந்து சுமார் பத்து இதழ்கள்), முன்றில், இலக்கு, ஊற்று, தளம், மீட்சி, காற்று, புதிய நம்பிக்கை, பறை, திசை நான்கு, அஸ்வமேதா, தோழமைப் புறாக்கள், விருட்சம் (நிறைய), நிகழ் (நிறைய), மண், பயணம், விஸ்வரூபம், மன ஒசை (குப்பை, நிறைய), கல்குதிரை, கனவு, வெளி, கணையாழி (1995 வரை – படு நிறைய)

+ ஒன்றிரண்டு கணிநி தொடர்பானவைகூட இருக்கலாம். பொதுவாகவே இடதுசாரி (sorry) புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும், சிலபல பொருளாதாரம் சார்ந்தவை – Asian Drama வகையறா, மெய்ன்ஸ்ட்ரீம் வகை சஞ்சிகைகள். சிலபல நாவல்கள். என்னுடைய கடைசி காப்பி தேசாந்திரி! – இந்தச் சனியனை என்வீட்டிலிருந்து களையெடுப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. மொத்தம் மூன்றுபேர் தனித்தனியாக எனக்கு இதனை ‘அன்பளிப்பாக’ வாங்கிக்கொடுத்தனர் என நினைவு. (நான் ‘இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமாம்!’). ங்கோத்தா, எல்லாம் என் நேரம், வேறேன்ன சொல்ல.

சரி. தயவுசெய்து இவற்றைப் படிப்பதற்காக மட்டுமே உபயோகிக்கவும்.

தேசாந்திரி உட்பட, பழையபேப்பர் காரரிடம் அவர் அதனை நியாயமாகவே மரக்கூழாக்குவதற்கு தானம் செய்யவேண்டாம்; உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வேறு யாருக்காவது அவற்றைக் கொடுக்கவும்.

நன்றி.

21 Responses to “அறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா?”

  1. cyndhujhaa's avatar cyndhujhaa Says:

    ஸார் ,

    நான் பெண்களூர்.

    நேரே வந்து (இ)லக்கிய பொய்த்தகங்களை எடுத்துக் கொள்கிறேன். அட்ரஸ் கொடுங்கள்.

    ஸிந்துஜா

    98441 01135

    2018-07-01 18:36 GMT+05:30 ஒத்திசைவு… :

    > வெ. ராமசாமி posted: “இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப்
    > புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன்.
    > இதுகுறித்த முந்தைய பதிவுகள். புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி?
    > புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) ”
    >

  2. sivaa's avatar sivaa Says:

    ஸீரோ டிகிரி இருக்கா


    • அய்யா, இருந்தது. போய்விட்டது. சாரு நிவேதிதாவின் ஜேஜே: சிலகுறிப்புகள் பற்றிய விமர்சனம் மட்டும்தான் இருக்கிறது. மற்ற அனைத்தையும் கழித்துக்கட்டிவிட்டேன்.

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    அய்யா,
    எஸ்ரா புத்தகம் இருந்து இருந்தால், நானே வந்து
    வாங்கியிருப்பேன் (😏) அது இல்லாததால், இந்த தடவை வரவில்லை.
    மன்னிக்கவும் 🙏

  4. Sambasivam's avatar Sambasivam Says:

    பழைய கணையாழி கிடைத்தால் எடுத்துக்கொள்வேன். நன்றி

  5. vijay's avatar vijay Says:

    // …அவர்களுக்கு இப்படிக் கொடுப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. புத்தகப் புழுக்களானதால் ஒரு ஒட்டுதல். பிரிவதில் சோகம்.// மாறாத சோகம் தானே


  6. மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் :)

  7. Badri Seshadri's avatar bseshadri Says:

    புத்தகம் தருகிறேன் என்றவுடன் 7.5-க்கும் மேலான வாசகர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!


    • அய்யோ பத்ரி! நானும் முதலில் அப்படித்தான் நினைத்துக்கொண்டு கொஞ்சம் பயந்துபோய்விட்டேன். மேலும் பதினோரு மின்னஞ்சல்கள் வேறு…

      சரி, நெடுங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் கணக்கு உதைக்கிறதே எனக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால், கழுதை, ரொம்ப ஸிம்பிளான விஷயம். ஒன்றுக்கு மேற்பட்ட ஃபேக் ஐடிகளை வைத்துக்கொண்டு ஒரிருவர் மட்டுமே அத்தனை புத்தகங்களையும் லவட்டிக்கொண்டு போக நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு இப்படி அழிச்சாட்டியம் செய்திருக்கின்றனர். அவ்ளோதான்.

      சலிப்பாக இருக்கிறது.

      நீங்கள் உண்மையாகவே பத்ரிதானா? சந்தேகமாகவே இருக்கிறது.

  8. Ram's avatar Ram Says:

    பழைய துக்ளக் இதழ்கள் (குறிப்பாக எமெர்ஐன்ஸி காலத்தவை) உங்கள் disposal பட்டியலில் உள்ளனவா?
    ராம்


    • அய்யா, அச்சமயம் நானும் மிசா சட்டத்தில் உள்ளேதள்ளப்பட்டு என் செல்லமும் தியாகியுமான இசுடாலிருடன் சிறையில் அமோகமாக வாடிக்கொண்டிருந்ததால் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பக்க நாடார்கடையில் துக்ளக் வாங்கவில்லை. மன்னிக்கவும்.

      ஸீரியஸாக, அய்யா – இல்லை.

  9. Suman's avatar Suman Says:

    Sir, I’m interested and from Bangalore. please advice.

  10. Maru's avatar Maru Says:

    Dear I’m also interested, but my bad luck I happened to read this post now.


    • Sir, this tranche of books is almost done with – some 5 guys have collected already. 2 more to come.

      Apologies. If you write to me with your particulars, I will contact you the next time around.

      Thanks for your interest.


Leave a Reply to Sambasivam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *