ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் – சில குறிப்புகள் (+ கொஞ்சம் பேலியோடயட் கோமாளிகள் பற்றி) (பாகம் 1/2)
January 21, 2017
…ஆனால் எதுக்காவடா இன்னிக்கு போராளித்தனமாகப் பேயாட்டம் ஆடலாம் வாய்ப்புரட்சி செய்யலாமெனத் தினவெடுத்து அலையும் குளுவான்களுக்கு இன்று இந்த எழவை நான் எழுதும்வரை இந்தச் சின்ன விஷயமான ஜல்லிக்கட்டு என்பது நடக்கவேண்டுமா நடக்கக்கூடாதா (அல்லது) தங்கள் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை எதிர்ப்பது எப்படி எனும் மகாமகோ பிரச்சினைதான். என்னவோ நம் எழவெடுத்தத் தமிழ்நாட்டுத் தமிழனின் வீரம்(!) தீரம் புஜபலபராக்கிரமம் இனமானம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம் இந்த ஜல்லிக்கட்டினால் தான் ஒப்பேற்றப்படவேண்டும் என்பதைப்போல! தமிழனின் மகாமகோ பண்பாடே பாவம், இதில் மட்டும்தான் பொதிந்துள்ளது போல… மயிராண்டிகள்.
அல்லது, இன்னொருபக்கம் இந்த எதிர்ஜல்லிக்கட்டாளர்களின் எருதுரிமை நடனம்! இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் ஒரே நாளில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து எருதுகளும் துன்பப்படுத்தப்படுவதைப் போல – இல்லாவிடில் தமிழகத்தில் எருது சுபிட்சம்மட்டுமே என்றெல்லாம்… மேலும் பெருங்கசாப்புக்கடைகளில் – அநியாயத்துக்குக் குரூரமாக – அதாவது, தவிர்க்கக் கூடிய/வேண்டிய வன்முறைகளால் கொல்லப்படும் காளைகளும் பசுக்களும் ஆடுகளும் கோழிகளும் – ஏதோ தானே மனமுவந்து தற்கொலை செய்துகொண்டு பின் பரிசுத்த ஆவியாக வந்து எங்களைச் சாப்பிடுங்கள் எனச் சொல்வதுபோலும்… மயிராண்டிகள்.
நம் தமிழச் சமூகத்தில் ஆயிரம் பிற பிரச்சினைகள், பண்பாட்டு அழுத்தங்கள் இருக்கின்றன – இந்தப் போராட்டப் பேடி மகான்களானவர்கள் — 1) சாராயக் கடைகள் மூடப்படுவதற்காக 2) பான்பராக்வகை லாகிரி வஸ்துக்கள் ஒழிக்கப்படுவதற்காக 3) அனைத்துக் குழந்தைகளுக்கும் 12ம் வகுப்பு வரையாவது தரமான (ஆங்கில வழிக்) கல்வி (தமிழ் + ஹிந்தி போன்றவைகளுடன் சேர்த்தித்தான், வெறியுடன் பொங்கவேண்டாம். நன்றி!) கொடுக்கப்படுவதற்காக 4) கல்விமாமாக்களின் ஊழல்பணக் கலவித்தொழிற்சாலைகள் இழுத்துமூடப்படுவதற்காக 5) இலவசங்களை வழங்கி தமிழகமக்களைச் சொறிபிடித்த பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கு எதிராக 6) நம் ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக 7) நம் பண்டைய கோவில்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை மீண்டும், அவற்றைச் சுற்றியுள்ள அறவுணர்ச்சி மிக்க பொதுமக்களால் நடத்தப்படுவதற்காக 8) மதறாஸாக்களில் நம் குழந்தைகளுக்கு இக்காலங்களுக்குத் தேவையான கல்வியையும் பண்பாட்டையும் புகட்டுவதற்காக 9) 12ம் வகுப்பு முடித்த துடிப்பும் திறமையுள்ள ஆனால் மேற்படிப்பில் ஆர்வமில்லாத நம் இளைஞர்களுக்கு சிறுகுறும் தொழில்களை நடத்திப் பொருளீட்டப் பயிற்சி தர 10) ஒரு ஏக்கரில் சுயசார்புள்ள விவசாயத்தைச் செய்து லாபமும் ஈட்டுவது என்பதைப் பரவலாக்க 11) சாலையோரங்களில், கிடைத்த இடங்களிலெல்லாம் மரங்களை நட்டுப் பராமரிக்க 12) மழை நீரை (நம் வீடுகளில் மட்டுமல்லாமல்) தடுப்பணைகள் போன்றவற்றைக் கட்டி, ஊர்ப் பொது இடங்களிலும் சேமிப்பது எனும் புண்ணிய காரியத்தைச் செய்ய 13) நம் பெருஞ்சாலைகளிலாவது குறைந்த பட்சம் 2கிமீ நீளத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அதனை வாரம் இருமுறை சுத்தம் செய்ய 14) நம் மக்களுக்கு அடிப்படை கணிநி வழிப் பயிற்சி தர 15) சிறுசிறு அழகான பரிசோதனைகளைச் சிறார்களுக்குச் செய்து காண்பித்து அறிவியல் பூர்வமாக எப்படி விஷயங்களைப் புரிந்துகொள்வது எப்படி எனப் புகட்ட 16) வட்டாரக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாரயிறுதி நாட்களில் மிதிவண்டிகளில் எளிமையாக ஆனால் காத்திரமாகச் சுற்றுப்பயணம் செய்ய 17) நாடெல்லாம் இருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள் இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்ய, அவற்றுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க, சிலவற்றை தத்து எடுத்துக்கொள்ள, வரலாறுகளைக் கற்றுக்கொடுக்க 18) திரைப்படக் கோமாளிகளின் வாலைப் பிடித்துக்கொண்டு அலையாமல், ஆனால் தரமான திரைப்படங்களை ஊக்குவிப்பது/திரையிட 19) நம் செல்லமான திராவிட மாயையை ஒழிப்பது என முனைய 20) சிறு நூலகங்களைத் தெருமுக்குகளில் நடத்த 21) வட்டார வரலாறு + புவியியல் + தாவரங்கள் + மிருகங்கள் போன்றவற்றை முன்வைத்து தாலுக்காவுக்குத் தாலுக்கா – அருங்காட்சியகங்களை அமைக்க 22) பன்முகத் தன்மையைப் பேணுவதற்காகவென 23) தாலுக்காவுக்குத் தாலுக்கா நவீன+தரமான விளையாட்டிடங்களைக் கட்டிப் பராமரிப்பதற்காக 24) வானசாஸ்திரத்தைப் போதிப்பதற்காக, தொலை நோக்கிகளைக் கட்டமைத்து – பிரபஞ்சத்தைப் பார்த்து அமைதியடைவதற்காகவென 25) தத்தம் சாதனங்களை+கருவிகளைத் தாமே மராமத்து செய்துகொள்ளும் சுயசார்புத் தன்மையை முன்னெடுப்பதற்காகவென … … … எனப் பலவாறு, நேரடியாகவே – தூர்வாரி, பள்ளிகளில் மேலதிக வகுப்புகள் நடத்தி, மரம் நட்டு, கட்டமைப்புகள் செய்து, பணிமனைகள் நடத்தி என்றெல்லாம் விதம்விதமாக ஆக்கபூர்வமாக, அழகாகப் போராடலாம்.
ஆனால், அம்மணிகளே அம்மணர்களே! இவையெல்லாம் ஸெக்ஸியான சமாச்சாரங்களல்லவே! ஒற்றை அடையாளக் குறிக்கோள் அபத்தங்களில்லையே! வாயோர நுரை தள்ள உச்சாடனங்களைச் செய்யமுடியாதே! மற்றவர்களை உசுப்பேற்ற முடியாதே! கும்பல்கும்பலாகச் சுற்றிவந்து தட்டாமாலை ஆடமுடியாதே! ஒரு நாள் ஒரு வாரம் என்று அதீத உணர்ச்சிவசப்படுதல் முடியாதே!
மாறாக — மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் கர்மயோகிகள் போல, பலசமயம் தனிமனிதனாக மட்டுமே – உழைக்கவேண்டுமே! ஆவேச உணர்ச்சி போராளித்தனம் பொங்கவில்லையென்றால் ஊடகப்பேடிகள் கண்டுகொள்ளமாட்டார்களே! ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எழவுகளை அன்றன்றைக்குத் தேத்த முடியாதே… பொங்க முடியாதே!
…ஆக – ஆக்கபூர்வமான எதைப் பற்றியும் கவலைப் படமாட்டார்கள் இந்தப் போராளிகள்! பின்பக்கத்தால் குசுவிடலாமா அல்லது வாயினால் விடலாமா போன்ற உலகத்தைக் குலுக்கும் அதியுன்னத மகாமகோ பிரச்சினையைப் போட்டு அலசோ அலசு வென்று அலசுவார்கள். அல்லல் படுவார்கள். ஐயகோ, இதனைக் கேட்பாரில்லையா என்று முனகுவார்கள்… போராளித்தனமாகப் போராடுவார்கள். டீவி கேமராக்கள் முன் நாடமாடுவார்கள்…
ஏற்கனவே ‘தமிழ்’ ஈழத்துக்காக ‘ஸ்டூடெண்ட் ப்ரொடெஸ்ட்’ எழவுகளை மானாவாரியாகச் செய்து, வெற்றிகரமாக ஈழத்தை மீட்டு கொலைவெறிப் பித்தலாட்டப் பிரபாகரன்களிடம் கொடுத்துவிட்ட அனுபவம் வேறு இவர்களை ஆட்டுவிக்கிறது, என்ன செய்ய!
(தினசொறிகளைப் படித்துத் துணுக்குறுவதையும், ஊடகப்பேடிகளின் தொலைக்காட்சி அவலங்களைப் பார்த்துத் திகிலடைவதையும் செய்யக் கொடுப்பினை இல்லாத பாவியாகிய நான், இன்றுதான் ஜல்லிக்கட்டு ஆதரவு யுகப்புர்ச்சியாளர்களைப் பற்றி, சென்னைக் கூட்டங்களைப் பற்றி அறிந்துகொண்டேன், நன்றி! + அதே சமயம் இணைய மிருகஆதரவு வகை பொத்தாம்பொதுவான எதிர்ப்பாளர்களைப் பற்றியும், மிக்க நன்றி!)
…ஏனெனில், நான் ஜல்லிக்கட்டாயப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. பேலியோ எழவு அரைகுறைகளையும் வேலைமெனக்கெட்டு எதிர்த்தவனில்லை. கண்டமேனிக்கும் ஜல்லியடிப்பதையும் விரும்புவனல்லன். தயைசெய்து என்னை மன்னிக்கவும். ஆனால் என்னிடம், இந்த எழவாளர்கள் ஏன் வம்புக்கு வருகிறார்கள்? என்னிடம் வந்து ஏன், தங்கள் மகாமகோன்னதத்தைப் பறைசாற்றுகிறார்கள்? வம்புக்கு வந்தபின் நான் எதையாவது எழுதினால் ஏன் பொருமுகிறார்கள் இந்த அரைகுறைகள்?
அவர்கள்தாம் என்னிடம் வந்து பேசுகிறார்கள். நானாக அவர்களிடம் போய் வீண் வம்புக்கு இழுக்கவில்லை. அதேசமயம், இந்த அரைகுறைகள் செய்வது போலல்லாமல் – நான் அவர்கள் வலைதளத்திற்குப்போய் அவர்களைத் தேவைமெனெக்கெட்டு வம்புக்கும் இழுக்கவில்லை. நான் இங்கு ஏதோ 10 பேருக்கு எழுதிக்(!)கொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் படிக்கச் சொல்லவுமில்லை – அவர்களுக்கு அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தப் பாவப்பட்ட மூளையும் இல்லை என்பது வேறுவிஷயம். ஆனால் – ஓடிவந்து படித்துவிட்டு அபத்தமாக உளறிக்கொட்டினால் என்ன அர்த்தம்?
பேலியோ டயட், வீகன் டயட், ஃப்ருகிடேரியன் சாப்பாடு என்கிற பெயரில் தொடர்பில்லாதவைகளைக் கண்டமேனிக்கும் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்; அஅறிவியல் தனமாகத் தொடர்ந்து பேத்தியெடுத்து – ஆனால் அறிவியல்சார்புடன் தான் பேசுகிறோம் என மந்திரமாயமாக உங்கள் சமூகத்துக்குள்ளேயே உளறிக்கொள்ளுங்கள். ஆனால், ஏன் இந்த அசிங்கமான மதமாற்ற அவலம்? ஜிஹாதி வெறித்தனம்?? ஒழுங்குமரியாதையாகத் தானுண்டு தன்வேலையுண்டு ;-) என்று இருப்பவர்கள் மீது என் இந்த இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிகள் போல இந்தக் கழுத்தறுப்பு? முதலில் உங்கள் கழுத்தறுப்பு அலங்கோலத்தை அரங்கேற்றிவிட்டு, பின்னர் பதிலடி கிடைத்தால் குய்யோமுறையோ என்று விக்கிவிக்கி அழுவதும் அல்லது வெறுப்புமிழ்வதும்தான் உங்கள் அதிகபட்ச எதிர்வினையா?
எது எப்படியோ! (எனக்கு வந்திருக்கும் பேலியோ வம்பாளர்களின் குசுத்தனமான மின்னஞ்சல்கள் அவர்கள் அதிகபட்சம் வாய்ப்பேச்சு ஜிஹாதிகள் மட்டுமேதான் என்பதைக் குறிக்கின்றன, நன்றி!)-
-0-0-0-0-0-0-
சரி.
நான் இக்காலங்களில் பணி(!) செய்துகொண்டிருக்கும் ஒரு பல்கலைக்கழக எழவில், சுமார் பத்து தினங்களுக்கு முன் – அதன் கையேந்திபவன் உணவகத்தில் ஒரு இளைஞன் (இவர் ஒர் தமிழ்வீரர் என்பதைர் சொல்லவுர் வேண்டுமோர்?) ஆவேசமான ஆங்கிலத்தில் (=wtf) பேசிக் கொண்டிருந்தான். திடீரெக்ஸ் ஜல்லிக்காட்டான் என அவன் பேச்சிலிருந்தே புரிந்தது. சமூக மானம், திராவிடப்(!) பாரம்பரியம், பண்பாட்டுச் சுதந்திரம், நவகாலனியம், பெரியாரின் பேரன், இன உரிமை, ஜல்லிக்கட்டின் பண்பாடு ஆவணப்படுத்தப்படாமை, இலக்கியத்தில் இடம் இல்லாமை, ஆகவே அது கண்டுகொள்ளப்படாமை, ஹிந்துத்துவாவின் நுண் அரசியல்… என்றெல்லாம் விரிந்தது அது. அவன் பக்கம் உதவியாகச் சிலபல பிறமாநிலக் குளுவான்கள். dravidian rights திராபை ஃபைட்ஸ்.
அவனுக்கு எதிராக ஒரு மிருகவுரிமைக் குளுவானிய கும்பல் ஒன்று கருத்துச் சுதந்திரம், இந்தக் காலத்திலா இப்படியென்றெல்லாம் அரற்றிக்கொண்டிருந்தது. மனிதவுரிமையுடன் மிருகவுரிமையும் முக்கியம். சரி. மானுடத்துடன் மிருகடமும் தேவை; ஆனால் இவர்கள் – மார்க்சியரீதியாக ஒடுக்கப்படும் மக்கட்திரள்களுக்கு மட்டும் மார்க்சியரீதியாக ஆதரவாகக் குரலெழுப்பாதோரின் மார்க்சிய சங்கம். அதாவது மார்க்சியமற்ற ஒடுக்குமுறைகளை மட்டும் கண்டுகொள்ளும் உதிரிவர்க்கம். இவர்களும் மாவீரர்கள்தாம். எதிர்காலத்தில் கண்டதுக்கும்உரிமை ஜோதியில் ஏகோபித்து ஐக்கியமாகி – கடமைகளைப் பற்றிப் பேசாமல் கமுக்கமாக இருந்துகொண்டு – இந்தியாவை, கனகம்பீரமாக – என்ஜிஓ தன்னார்வ நிறுவனப் பிச்சைப்பணத்துடன் சல்லாபித்துக்கொண்டு, அமோகமாக முன்னேற்றப் போகிறவர்கள். நன்றி. bull rights and bullshit rights.
இச்சமயம், ஒரு குறிப்பு: என்னுடைய மஞ்சள்காமாலை அனுமானத்தில் – இந்தப் பல்கலைக் கழகத்தில் ‘படிப்பவர்’களில், அதிகபட்சம் ~5% மாணவர்கள் உருப்படியாக இருந்தால் (=பெற்றோர்/+அரசு செலவில் உண்மையாகவே படிப்பவர்கள்), மூளைகளைக் கொஞ்சமேனும் அறிவார்ந்த விஷயங்களுக்காக உபயோகித்தால் அதுவே அதிகம்.
இவர்களில் மிகப் பெரும்பாலோர் (~95%) இருவகையினர்: 1) பெற்றோர் செலவில், பொறுப்பற்று ஜாலியாக ஒப்பேற்றி பஜனை செய்பவர்கள் 2) அரசுச் செலவில் பொறுப்பற்று ஜாலியாக ஒப்பேற்றல் பஜனை செய்பவர்கள். (ஆனால் இவர்கள் பேசுவதெல்லாம் பெத்த பேச்சு. ideation unpacking imagination subaltern oppressed disenfranchised non-essentialization epistemology pedagogy ideology மொளகாய் பஜ்ஜியெனக் கண்டபடி அட்ச்சுவுடுபவர்கள்; இவற்றின் ஸ்பெல்லிங்காவது இவர்களுக்குத் தெரிந்திருந்தால் நான் என்னை கழுவில் ஏற்றிக்கொண்டு கழுவி ஊற்றிக்கொள்ளத் தயார்!)
…ஹ்ம்ம்… ஆனால் – எது எப்படியிருந்தாலும், எனக்கே ஆச்சரியம் கொடுக்கும் வகையில், எனக்கு எதிர்கால இந்தியாவின் மீது ஒரு மௌடீகமான நன்னம்பிக்கை இருக்கிறது என்பதை மிக நன்றாகவே அறிவேன் – அதனால்தான், உருப்படியானவர்களின் விழுக்காட்டை, ஜாலியாகப் பொறுப்பற்று என் சொந்தச் செலவில் 5% என ஒப்பேற்றியிருக்கிறேன். :-(
மேலும், உருப்படியான – உண்மையாகவே ஜொலிக்கும் மாணவர்கள் ஒருசிலரிடம் அறிமுகம் இருக்கிறது; பிறருடன் நரிமுகம். அவ்ளோதாம்பா.
பதினைந்து நிமிடங்களுக்குப் பின் – அந்தத் தமிழ்ப்பையனுக்கு நான் ஒருமூலையில் உம்மணாமூஞ்சியுடன் உட்கார்ந்து பொட்டிதட்டிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டதுபோலும். நான் அணிந்துகொண்டிருந்த வேட்டியினால் அவன் என்னைத் தமிழன் என்னைப் புரிந்துகொண்டிருக்கலாம். அல்லது என்னை அவன் பலவிதமான ‘கல்வி'(!) தொடர்பான உரையாடல்களில்/அமர்வுகளில் பார்த்திருக்கக்கூடும் அல்லது அமேஸான் கின்டிலே கதி என அனாமத்தாக ஏதாவது மரத்தடியில் அமர்ந்திருப்பதை கவனித்திருக்கக்கூடும். அல்லது முட்டாக்கூ அசட்டுத் தமிழன் என (மிகச் சரியாகவே!) என் முகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறதோ என்ன எழவோ!
எது எப்படியோ – அவன் என்னைப் பார்த்து – “you tamil?” எனக் கேட்டுப் பின்னர் “நீங்கள் ஜல்லிக்கட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றானே பார்க்கலாம். :-(


January 22, 2017 at 10:58
கத சூப்பரா இருக்கு சார். அடுத்து என்னாகும்? … உங்க கைல சிக்காத வரைக்கும் நான்லாம் சந்தோசமா ஜல்லியடிப்பேன்.
January 22, 2017 at 14:47
இந்தப் பதிவை(!) படிக்கும் பொழுது நடுவே தானே சிரிப்பதும், பற்களை நற நறவென்று கடிப்பதும் இன்னும் சில உபாதைகளும் உண்டாகிறது. அதற்கு என்ன டயட்? எதை அடக்குவது (அ) தழுவுவது (அ) போராளிப்பது என்பதையும் ‘டமிலண்டா’ என்று ஒரு முறை கூவிவிட்டு (டா முக்கியம்) சொல்லுக.
January 23, 2017 at 08:45
வால்த்துகல் ஐயா! ஏறு தளுவி (அதாவது இப்போது பொங்கி எளுந்துள்ள ஏறுகளை அடக்க முயன்று) தமிள்ப் பண்பாட்டைக் காத்துள்ளீர்கள். Let your tribe increase உங்கள் பழங்குடி உள்ளே கோடு (நறி: எரா)என்று வாழ்த்த வயதில்லாததால் வணங்கிக் கொல்கிறேன்.
January 23, 2017 at 09:57
NEET தேர்வு குறித்த உங்கள் கருத்துகளை இதுவரை நீங்கள் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. உண்மையில் மாணவர்களை மிகவும் பாதிக்கும் விஷயம் என்பதால் உங்கள் கருத்துகளை அறிய ஆர்வமாக உள்ளேன். தயவு செய்து விளக்கமாகப் பதிவிடவும்.
January 23, 2017 at 13:38
எள்த்றத்ல அல்லாமே நீட்டுனீட்டுதானேகண்டி எது கம்மீண்ற? பிர்யலியே!
நம்ப பஸ்ங்க்ளுக்கு பட்ப்பு வோணாம் வேலகூடவோணாம் – வெறும் சம்ப்ளம் கொட்த்தா போறும், கூவிக்கினே கெடப்பானுவோ! ப்ரொட்டேஸ்ட்டு! போறாட்டம்!! அரப் போர்!!! ட்விட்டரு பேஸ்த்புக்கூ!
இவ்னுங்க்ளுக்கு எதுக்கு பரீச்சை பேரீச்சைன்னிட்டு வம்புக்கு வர்ரீங்கோ? :-((
March 22, 2017 at 10:21
நீங்க கருத்து சொல்லாட்டி என்ன? இன்று காலை ஒரு செய்தி சேனலில் மானமிகு வீரமணி NEET தேர்வு தமிழகத்துக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். NEET தமிழகத்துக்கு மிக மிக நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என்று என் சிற்றறிவுக்கும் எட்டும்படி நெற்றியடியாக சொல்லிவிட்டார். (பொதுவாகவே தமிழகத்துக்கு எது நல்லது என்று காட்டும் கண்ணாடி திராவிடமே! இடவலம் மாற்றிப் புரிந்துகொள்வது நம் சாமர்த்தியம் :-))))
January 26, 2017 at 08:02
Ram, i went thru both the parts… thanks always..
one question always nagging me?
Without Jallikattu, cant we save our native bull breeds ( as many of us claim ) practically?
please write on this sometime….
January 26, 2017 at 08:21
Thanks lenin, am going to write about it in tamil – but not in extenso. We should not forget guys who are doing preserving and propagating desi breeds without any fanfare. :-(
January 28, 2017 at 14:49
Thanks Ram
January 28, 2017 at 14:56
Thanks again, Ram.
January 26, 2017 at 14:38
சரியான இடத்தில் தொடரும் வந்து விட்டது. இந்தத் தொடருக்கும் பின், நம் தேசி வகைகளை பாதுகாக்கும் மனிதர்கள் பற்றியும், பாதுகாக்கும் காக்கும் முறை பற்றியும் அறிய ஆவல். எனினும் அந்த 25 ஆக்கபூர்வ எண்ணங்கள் அருமை. ஏதேனும் 10, 12 நிறைவேறினாலே, தமிழகம் மிக உன்னத நிலை அடையும். Niti Ayog ல் இருக்க வேண்டியவர் நீங்கள்.
January 29, 2017 at 02:06
Forgive me for my comment in English. Your views on jallikkattu, cattle, humane treatment of animals and the pressing priorities before TN are quite well taken. Similar views have been expressed by many thoughtful persons in the Government and even in the academia but to no avail. I fear that while you are doing what badly needs to be done the people and leadership of TN are willfully blind, deaf and proof to any sensible thought. As for the intelligentsia they have largely arid minds and have been well described by Nassem Taleb as Intellectual Yet Idiot. One of the glaring omissions in our intelligentsia is total unfamiliarity with the work of Peter Singer the ethical philosopher who can help clarify to us many of the issues you have raised regarding animals.
Keep up your good work.
March 23, 2020 at 20:18
[…] ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்…21/01/2017 […]
May 5, 2020 at 17:12
[…] ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்…21/01/2017 […]