மான்டிஸொரி கல்விமுறை பற்றிய ஒரு நிகழ்ச்சி + பயமாலஜி, தஹிந்துத்துவாலஜி, சந்துபொந்தில்கர்நாடகசங்கீதாலஜி, மக்ஸய்ஸாய்விருதாலஜி உட்பட பலப்பல்துறைகள்சார் வல்லுநர் டிஎம் க்ருஷ்ணா இன்னும் எதையோபற்றிப் பேசப்போகிறார், பராக்!

September 11, 2016

அம்மணி அமுக்தா மஹாபத்ரா அவர்களை எனக்குப் பலப்பல வருடங்களாகத் தெரியும் – மாமாங்கங்களாகவே கல்வித்துறையில் – குறிப்பாக அம்மணி மான்டிஸொரி முறைமைகளில் பணியாற்றி வருபவர். நம் தமிழகத்திலும் பலவருடங்கள் – அரசுப்பள்ளிகளுடன் இணைந்தும்  வேலைசெய்திருப்பவர். எனக்கும் அம்மணி மான்டிஸொரி அவர்கள்மீது தறுதலைப்பட்ச மீளாக்காதல், ஆகவே அமுக்தா அவர்கள் அனுப்பிய அழைப்பிதழையும் + சில ஆவணங்களையும் (+ என்னுடைய மேலான பரிந்துரைகளையும்) இப்பதிவின் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவசியம் இதற்குச் செல்லவும்.

ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே

… இதில் ஒரு இடியாப்பச்சிக்கல் பிரச்சினை – இதைத் தெரிந்துகொண்டவுடன் எனக்கு மூச்சே நின்றுவிட்டது போலாகிவிட்டது. இத்தனைக்கும், நான் டிஎம்க்ருஷ்ணா அவர்களின் இசையை/குரலை மதிப்பவன், அவருடைய சிலபல பரி’சோதனை’ முயற்சிகளையும் ஆச்சரியத்துடனும் கிலியுடனும் பார்த்துக்கொண்டிருப்பவன்.

எது எப்படியோ – அவருக்கு அவருடைய மனோவிகாரங்கள், எனக்கு என்னுடையவை என விட்டுவிட முயன்றாலும்… இருந்தாலும் எனக்கு ஆறவில்லை, ஏனோ எனக்கு மட்டும் மக்ஸய்ஸாய் விருதா கிடைக்கவில்லை… சரி. இதுவும் சாரி-கொஞ்சம்-ஓவர்தான்!

…மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டுதான் மேலே எழுதவேண்டும்போல. :-(

ஏனெனில் – பல்துறை வல்லுநர் (=dental harbour expert ஆங்கிலப்பெயர்ப்பு ©எஸ்ராமகிருஷ்ணன்), ‘தஹிந்துத்துவா’ தினசொறி அரைகுறைகளின் ஆஸ்தான பொங்கலாளர், ஒவ்வொன்றாக அனைத்து அறிவுப்புலங்களையும் அடுத்த சில மாதங்களில் ஏகோபித்து ஆட்கொல்லப் போகும்  மகாமகோ வித்வான் டிஎம் க்ருஷ்ணா அவர்கள் – இந்த மூன்று நாள் நிகழ்ச்சிநிரலின் இரண்டாம் நாள் காலையில் ஒரு மணி நேரம் ‘சாவிக்குறிப்பு முகவரி’ (=keynote address, தமிழ்ப்பெயர்ப்பு ©எஸ்ராமகிருஷ்ணன்; அடுத்தமுறை இதையே ‘சாவிரூபாய் விளம்பரஉடை’ என மொழிபெயர்க்கவேண்டும் எனவும் பரிந்துரைத்திருக்கிறார் என்னருமைப் பேராசான்  #எஸ்ரா!) ஒன்றை ஆற்றுஆற்று என்று ஆற்றப் போகிறாராம்.

தலைப்பு: கல்வி இல்லாமல் பயம் (=’Education without Fear’ தமிழ்ப்பெயர்ப்பு ©எஸ்ராமகிருஷ்ணன்)
screenshot-from-2016-09-11-082235
அய்யா டிஎம் க்ருஷ்ணாரே, நன்றி. நீங்கள் கல்வியைப் பற்றி மேதாவித்தனமாகப் பேசப்பேச, கல்வியைப் புகட்டப்புகட்ட – பயமேயில்லாமல் வந்திருப்பவர்களெல்லாம் பயந்து நடுங்கிக்கொண்டே ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்கிற உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. ஆனாலும் இதற்கு ஒரு மணிநேரம் அதிகமில்லையா?

அதனால் இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை. நன்றி. எப்படியும் தஹிந்துத்துவாவில் இது பற்றி ஒரு ஆறுபத்திக் கட்டுரை வரும். அவசியம் படித்து ரசிக்கிறேன்.

-0-0-0-0-0-

இனி அந்த மான்டிஸொரி நிகழ்வு பற்றிய விவரங்கள்:
screenshot-from-2016-09-11-093717
அழைப்பிதழ் – maitri_2016_letter_print
நிகழ்ச்சி நிரல் – maitri_2016_programme
விண்ணப்பப் படிவம் – maitri_2016_registration_print
இணையதளம் – http://indianmontessoricentre.org/maitri-conference-2016

அம்மணி அமுக்தா – என் கடமையை ஆற்றிவிட்டேன். இந்தப் பதிவையும் படித்து, டிஎம் க்ருஷ்ணா அவர்களின் ஏச்சையும் தாங்கக்கூடிய சுமார் 0.5 பேர் ஆர்பரித்து ஆர்த்தெழுந்து உங்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என நம்புகிறேன். ஏதாவது சில்லரை நடிகக் கோமாளிகளைக் கூப்பிட்டிருந்தால், கூட்டம் அலைமோதுமே! :-(

…ஏன் பட்டிமன்றம் வைக்கவில்லை?  கீழ்க்கண்டது போல தலைப்பு வைத்து ஏதாவது தாலிபன் ஆப்பையா நபரைத் தலைமை தாங்கவிட்டால் நிறையவே கும்பல் வருமே!!

தமிழகத்துக்கு எதுமுக்கியம் – மாண்டிசொரியா சிரங்குசொறியா?

தமிழர்கள் அணி: மாண்டிசொரிதான்!
திராவிடர்கள் அணி: சிரங்குசொறிதான்!

கலாட்சேத்திரா நடனங்களுக்குப் பதிலாக,  தமிழ்ச் சினிமாப் பாட்டுகளுக்குக் குத்தாட்டம் போடும் நிகழ்ச்சிகளை வைக்கலாமே?

ஜெயலலிதாவைக் கூப்பிட்டிருந்தால் – உடனடியாக 500 அம்மாமான்டிஸொரி பள்ளிகள் திறக்கப்பட்டிருக்குமே!

கருணாநிதியைக் கூப்பிட்டிருந்தால் – அவரை மான்டிஸொரி அம்மணி நேரில் வந்து பார்த்து காலில் வீழ்ந்து 1940களில் தன்னிடம் கல்வி பற்றிய பாலபாடங்களைக் கற்றுக்கொண்டதைச் சொல்லியிருப்பாரே! ஏமாந்தால் ‘நானே மான்டிஸொரிதான்’ எனவும் ‘நான் கலைஞன் ஆகாவிட்டால் வாத்தியாகத்தான் ஆகியிருப்பேன்’ எனவும் நகைச்சுவை ததும்பப் படு ஸீரியஸாகப் பேசியிருப்பாரே!

அம்மணி அமுக்தா! உங்களுக்கு விளம்பர உத்திகளைப் பற்றி ஒரு எழவும் தெரியவில்லை. சலிப்பாக இருக்கிறது. :-((

 

One Response to “மான்டிஸொரி கல்விமுறை பற்றிய ஒரு நிகழ்ச்சி + பயமாலஜி, தஹிந்துத்துவாலஜி, சந்துபொந்தில்கர்நாடகசங்கீதாலஜி, மக்ஸய்ஸாய்விருதாலஜி உட்பட பலப்பல்துறைகள்சார் வல்லுநர் டிஎம் க்ருஷ்ணா இன்னும் எதையோபற்றிப் பேசப்போகிறார், பராக்!

  1. Venkatachalam's avatar Venkatachalam Says:

    padiththu padiththu siriththu siriththu vayaru punnahividdathu.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *