எஸ்.ராமகிருஷ்ணன்: மொழிபெயர்ப்பு விழா

September 26, 2015

புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது.  ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(

இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களின் கழுத்தறுப்புகளை விட மோசமான  மொழியறுப்புகளைச் செய்து தனித்துவம் மிளிரக் காட்சிதரும் பெருந்தகைகள், பலப்பலர், தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கின்றனர்.  அவர்களை அவ்வப்போது படித்து, நான் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.

…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… !

-0-0-0-0-0-0-0-

ஒரு பீடிகை

க்றிஸ் ஆன்ஸ்டட் அவர்களின் யேக்வுட் கார்ட்டூன்கள் எனக்குப் பிடித்தமானவை. அவை கொஞ்சம் ஒருமாதிரியாக இருப்பதால் + துரதிருஷ்டவசமாக, புரிந்துகொள்ள  கொஞ்சம் கஷ்டமாக இருப்பதால், அவை பரவலாக அறியப்படவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் – இவற்றை அடிப்படையாக வைத்து, ஒரு வேலையற்ற மனிதர், ட்ரேன்ஸ்லேஷன் பார்ட்டி தளத்தை உபயோகப் படுத்தி – ஆங்கிலத்தில் இருந்து ஜப்பானிய மொழிக்கும் – பின்னர், பின்னதிலிருந்து முன்னதற்கும் என, சிலபல சுற்றுகளில் – மூலம் என்பது எப்படி ஒரு அழகான நிர்மூலம் ஆகிறது என்று காண்பிக்கிறார்.
பார்க்க:

Screenshot from 2015-09-26 22:10:51

ஆகவே ஊக்கமுற்ற நான், இதே விஷயத்தை, ஒரு (பரி)சோதனை முயற்சியாக – மேதகு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சில பத்திகளுக்குச் செய்திருக்கிறேன். உபயம்: https://translate.google.co.in/

இது தமிழ்->ஆங்கிலம்->தமிழ்-> ஆங்கிலம் என சிலபல சுற்றுகள் சுற்றப்பட்டு பதிப்பிக்கப் படுகிறது.

-0-0-0-0-0-0-
“கண்ணாடி ஜன்னலை பிடித்தபடியே சாரலை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையோடு ஏரியை சுற்றி வரலாமா என்று தோன்றிக் கொண்டிருந்தது. போவதற்குள் மழை நின்றுவிடும் என்றும் மனது சொன்னது. மலை நகரங்கள் நம்மை எளிதாக பற்றிக் கொண்டு அதன் விருப்பத்தில் நம்மை இழுத்தடிக்கின்றன. நாம் செய்யவேண்டியதெல்லாம் காற்றிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட காகிதத்தை போல அதன் போக்கில் நம்மை விட்டுவிடுவது மட்டுமே
நிர்மூலம்:
சாரலைப் பிடித்தபடியே கண்ணாடி பேன் பார்த்து கொண்டிருந்தேன். நான் ஏரி பேய் மழை ஒட்டிக்கொண்டுவிட்டன. மழை மனதில் நிறுத்த முடியவில்லை. எங்கள் மலை நகரங்களில் எங்களுக்கு எளிதாக்க தனது விருப்பத்தை  இழுத்தடிக்கின்றன. நீங்கள் மட்டும் எங்களுக்கு விட்டு உறுதி, காகித விமான தன்னை ஒப்படைத்தார்.
ஊக்கபோனஸ்: வீரியமிக, மெயெழுதற நிமூல
சாரலை பிடிதபடியே கணாடி பே பாது கொடிருதே. நா ஏரி பே மழை ஒடிகொடுவிடன. மழை மனதி நிறுத முடியவிலை. எக மலை நகரகளி எகளுகு எளிதாக தனது விருபதை  இழுதடிகிறன. நீக மடு எகளுகு விடு உறுதி, காகித விமான தனை ஒபடைதா.
-0-0-0-0-0-
அந்த நாள் வரை மறுபடி மறுபடி வாசிப்பதற்கு என்னிடம் இன்றும் இரும்புகை மாயாவி காமிக்ஸ் உள்ளது. அதை வாசிக்கும் போது எழுத்தாளன் தான் உண்மையான இரும்புகை மாயாவி என்று தோன்றுகிறது. காரணம் எழுதும் நிமிசங்களில் அவனது கை மட்டுமே இயங்குகிறது. அவன் மறைந்துவிடுகிறான். கை மட்டுமே எதை எதையோ எழுத்தில் உருவாக்குகிறது. மின்சாரம் இழந்தவுடன் மாயாவி தன்னிலை பெறுவது போலதானிருக்கிறது எழுதி முடிக்கும் மனநிலையும்.

பால்யம் உருவாக்கும் கனவுகள் குளத்தில் எறிந்த கற்களை போன்றவை. அவை கண்ணில் படுவதில்லை ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள்ளாக அமிழ்ந்து கிடக்கின்றன. காமிக்ஸ் கனவுகளும் அப்படியானது தான்.

நிர்மூலம்:
இரும்பைப் பாண்டம் காமிக்ஸ் நாள் வரை மீண்டும் மீண்டும் படிக்கிறேன். ஆசிரியர் படி, அது உண்மையான எஃகு பாண்டம் என்று தோன்றுகிறது. மட்டுமே காரணமாக நிமிஷங்கள்  எழுதி தன் கையை இயங்கும். அவர் காணாமல். என்ன கை எழுத்து ஏதாவது உருவாக்குகிறது. இழந்த போன்ற மனதில் அகநிலை மாநில முடிக்க மறைமுக சக்தி இருக்கிறது.

போன்ற பால்யம், என, குளத்தில் கற்களை வீசி போன்ற கனவுகள் செய்தல். ஆனால் அவர்கள் முறிவு படத்தன மயமாக்கும் நீரில் மூழ்கியிருந்த கண், உள்ளன. இது மிகவும் காமிக்ஸ் கனவுகள் இருந்தது.

ஊக்கபோனஸ்: வீரியமிக, மெயெழுதற நிமூல
இருபை பாட காமி நா வரை மீடு மீடு படிகிறே. ஆசிரிய படி, அது உமையான எஃகு பாட எறு தோறுகிறது. மடுமே காரணமாக நிமிஷக  எழுதி த கையை இயகு. அவ காணாம. என்ன கை எழுது ஏதாவது உருவாகுகிறது. இழத போற மனதி அகநிலை மாநில முடிக மறைமுக சதி இருகிறது.

போற பாய, என, குளதி ககளை வீசி போற கனவுக செத. ஆனா அவக முறிவு படதன மயமாகு நீரி மூகியிருத க, உளன. இது மிகவு காமி கனவுக இருதது.

-0-0-0-0-0-
என்னுடைய தீர்ப்பு: எஸ்.ரா அவர்களின் மூலத்துக்கும், என் முழிபெயர்ப்புவிழா நிர்மூல ஊக்கபோனஸுக்கும் ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை.

நன்றி.

7 Responses to “எஸ்.ராமகிருஷ்ணன்: மொழிபெயர்ப்பு விழா”

  1. ravi's avatar ravi Says:

    சொம்மா , எஸ்.ராவை பிட்சிகினு தொங்காதப்பா .. இங்கே வா நைனா….
    http://solvanam.com/?p=41831


    • அங்கே எட்டிப் பார்த்தேன் – ஆனால் பூவண்ணன் அங்கே தாண்டவமாடிக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் அடிவயிற்றில் கலக்கமாக இருக்கிறது,

      ஆகவே, ஆளை விடும்.

      பெரியார் அவர்களை, வேண்டுமானால் இங்கேயே திட்டிக்கொள்கிறேன்! ;-)

  2. k.muthuramakrishnan's avatar k.muthuramakrishnan Says:

    பூவண்ணன் எடுத்துக்காட்டியுள்ள ஒரு செய்தியை அளித்த காந்திஆசிரமம் கிருஷ்ணன் அவர்களுடைய மகன் நான். சொல்வனத்தில் போய் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

    • ravi's avatar ravi Says:

      அந்த பின்னூட்டம் அங்கு இல்லை .. இங்கே அந்த தகவலை பதியவும்

      • K..Muthuramakrishnan's avatar K..Muthuramakrishnan Says:

        இப்போது போய்ப் பாருங்கள்! கொஞ்சம் தாமதித்து மட்டுறுத்தல் செய்யாமல் வெளியிட்டு விட்டார்கள்.

  3. Vel's avatar Vel Says:

    http://www.athishaonline.com/2015/10/2015.html மிகசிறப்பாக எழுதுகிறார். இவரை பற்றி உங்கள் கருத்தென்ன.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *