[அய்யய்யோ! மறந்தே விட்டேனே!!] வீரவணக்கம்! நேற்று மாணவர்போராட்ட மரண இரண்டாமாண்டு நினைவேந்தல்!!

March 9, 2015

தகத்தகாய மாஜி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளே! எனக்கு மன்னிப்பு உண்டா?

உங்களை நான் எப்படி மறக்க முடியும்?

இரண்டு வருடங்கள் முன்னால் உலகத்தைக் குலுக்கிய உங்கள் போராட்டத்தின்போது – உங்கள் திருக்கைகளால் வீசப்பட்ட கல்லினால் தானே எங்கள் பள்ளிக்குழந்தை திரு அடி பெற்று, ரத்த தானம் கொடுத்து — உடனே எங்களால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு ஓட முடிந்தது?

உங்களுடைய ‘களப்பலி’ சாகும்வரை ஒரேஒருவேளை  உண்ணாவிரத அறப் போராட்டத்திற்குப் பின் –  தியாக பிரியாணி சாப்பிட்ட எச்சங்களை – பள்ளி வாசலில் நீங்கள் போட்ட குப்பைகூளங்களை அள்ளும் பாக்கியம் எங்களுக்கு உங்களால்தானே கிடைத்தது?

உங்கள் அளப்பரிய தியாகத்தை, தன்னலம் பாரா போராட்டத்தை எப்படி உங்கள் தங்கத் தமிழகம் மறக்க முடியும்??

நாமெல்லாரும் மறந்தாலும், எப்படி அந்த ஸ்ரீலங்கா தமிழர்கள், உங்களின் மகாமகோ உதவிகளை மறக்க முடியும்???

ராஜபக்ஷவை ஐநா சபைகாரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தூக்கில் போட்டு விட்டார்களாமே!

‘தமிழ்’ ஈழமும் சந்தடிசாக்கில் உதித்து விட்டதாமே? என்னே நும் பராக்கிரமம்!

ஆனானப்பட்ட பிரபாகரனே திரும்ப உயிர்த்தெழுந்து வந்து மறுபடியும் திருப்பலிகள் கேட்கிறாராமே!

தன் முயற்சியில் தளர்ச்சியடையாத டெஸோ-வும் மறுபடியும் முருங்கமரத்தில் ஏறிக்கொள்ளப் போகிறதாமே?

-0-0-0-0-0-0-0-

எல்லாப் புகழும் அந்நாள் ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் மாஜி குஞ்சாமணிகளுக்கே!

வளர்க உம் தொப்பை! வால்க நும் வீரதீரம்!!

பின்குறிப்பு: மற்றபடி மேதகு பெரியதல அவர்களுக்கு (மன்னிக்கவும், அவர் துணைவியாருக்கு) ஒரு குட்டித்தல பிறந்திருக்கிறதாமே? தறுதல அல்லார்க்கும் ஒர்ரே மகிள்ச்சிதானே? என் வாள்த்துகள்!

-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள, திராவிடத் தமிழ் ஸ்டூடென்ட் பராக்கிரமத்தைப் பறைசாற்றும் ஆவணப் பதிவுகள்:

One Response to “[அய்யய்யோ! மறந்தே விட்டேனே!!] வீரவணக்கம்! நேற்று மாணவர்போராட்ட மரண இரண்டாமாண்டு நினைவேந்தல்!!”

  1. பொன்.முத்துக்குமார்'s avatar பொன்.முத்துக்குமார் Says:

    // மற்றபடி மேதகு பெரியதல அவர்களுக்கு (மன்னிக்கவும், அவர் துணைவியாருக்கு) ஒரு குட்டித்தல பிறந்திருக்கிறதாமே? தறுதல …. //

    எங்கள் பெருந்தல-க்கு (இல்லல்ல, அவர் துணைவியாருக்கு) பிறந்த குட்டித்தல-யையும் நாளைக்கு (அட, நாளைக்குன்னா நாளைக்கே இல்லீங்க … சும்ம்ம்மா) குட்டித்தல-க்கு பிறக்கப்போகும் (அட, மன்னிக்கவும் அவர் துணைவியாருக்குத்தான்) சுட்டித்தல-யையும், நாளன்னிக்கு (அட நாளன்னிக்கே இல்லீங்கங்கிறேன் … சொன்ன்னா புரிஞ்சிக்கணும், ஆமா சொல்லிட்டேன்) சுட்டித்தல-க்குப்பிறக்கப்போகும் (ஐயோ, துணைவியாருக்குத்தான் … மறுபடி ’மன்னிக்கவும்’ போடவேண்டியிருக்கு பாருங்க, கிரஹச்சாரம்) மொட்டத்தல-யையும் கொண்டாட இருக்கும் வாராது வந்த தமிழக மாமணி-களை (மணி-ன்னா நீங்க வேற எதையோ நெனைச்சிக்கப்போறீங்க – நீங்கவேற அடிக்கடி ‘குஞ்சாமணி’, ‘குஞ்சாமணி’-ன்னு சொல்றீங்களா, அதான் கவனமா இருக்கணும்-னு சொல்லத்தோணிச்சி, அவ்ளோதான், வேற ஒண்ணுமில்ல, சொல்லிட்டேன்) ’தறுதல’ என்று விளிக்கும் உமது திமிரை வன்மையாக கண்டிக்கிறோம். ‘பெருந்தல’-யையும் அவர்தம் வாரிசு ‘தல’-களையும் மதிக்காத வெறுந்தல கொண்ட உமக்கு மருந்தில.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *