எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்!

January 6, 2015

வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

இதோ அந்த அட்டைப்படம்:

my_seven_nools

இவை முறையே – என் கிழிந்த டீஷர்ட், மேற்துண்டு, வேட்டி, லுங்கி, கோமணம், துணிப்பை, கால் துடைக்கும் கோணிப்பை ஆகியவைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

படம் வெகு அழகாக வந்திருக்கிறது அல்லவா? உங்கள் ஆமோதிப்புக்கு நன்றி.

இதனை, ரகுராய் புகைப்படத்துக்கு நிகரானது என்று ரகு ராய் அவர்களே சொல்லிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

எனக்கு எதிலுமே உன்னதம் தான், உன்மத்தம்தான்! ஒர்ரே கொண்டாட்டம்தான்! :-)

-0-0-0-0-0-0-0-

என்னுடைய செல்லங்களான எண்ணிறந்த ( எண் <<<<<< -∞)  வாசக மாக்களே! வழக்கம்போல ஒரு சுக்குக்கும் தொடர்பில்லாத ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்;  குமரியில் நின்று கொண்டிருக்கும் குண்டி நெளிந்த திருவ்ள்ளுவன் அன்றே சொன்னானல்லவா?

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும். (குறள் #373)

திராவிட உரை: கற்புடைய மகளிர், நூலால் நுணுக்கமாக நூற்கப்பட்ட துணிகளால் தங்களை மூடிக்கொண்டாலும், உண்மையான திராவிடர்கள் உள்ளே உள்ளதை அறிந்துகொள்ளும் அடிப்படை அறிவை மட்டும் பெற்று, நீண்ட வால் போய் நிமிர்ந்த நன்னடை பிறந்த லெமூரிய காலத்திலிருந்தே அலைந்துகொண்டிருப்பவர்கள் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைவீர்!

என் தெளிவுரை: திராவிடர்களின் நுண்மான் நுழைபுலம் தேடியடையும் பாங்கே பாங்கு. ஒற்றைக் குறிக்கோள் பிதாமகர்களுக்குப் பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம்,  கண்டதெல்லாம் – நுண்புணர்வுணர்ச்சிக்காகவே!

வேதாகமம் சொல்வது: விடைத்துக்கொண்டு க்விக் ஃபிக்ஸுக்காக அலையும் ஞமலிகளுக்கான ஞானமார்க்கம் தான் – நொடிக்கு நொடி ட்விட்டர்/ஃபேஸ்புக் கருத்துதிர்த்தல் எனும் பூலோகசொர்க்கம். ஆமென்.

 -0-0-0-0-0-0-0-0-

சரி. நூலாசிரியனான அடியேனுக்கு, இப்போதுபோல எப்போதும் தொடர்ந்து ஆதரவை நல்கவும்.

நன்றி. வணக்கம்.

பின் குறிப்பு: வட்டாரப் பிரச்சினையொன்றில் தன்னார்வத்துடன் மாட்டிக்கொண்டு மலங்கமலங்க முழித்துக்கொண்டிருப்பதால், ஆகவே அயர்வாக இருப்பதால் – நாளைதான் என் திடுக்கிடவைக்கும்  ஐடி தொடரைத் தொடரமுடியும். ஆகவே சும்மாசும்மா இங்கு வந்து வெட்டியாக உங்கள் ப்ரௌஸரை  ரீஃப்ரெஷ் செய்து அக்கப்போருக்கு அலையவேண்டாம்.

 

11 Responses to “எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்!”

  1. Unknown's avatar Anonymous Says:

    என் சிற்றறிவுக்கு எட்டா எழுத்து நூல் வலைப்பின்னல். தைரிய லக்ஷ்மியின் வாசம்.

  2. Unknown's avatar ஷிவா Says:

    “சும்மாசும்மா இங்கு வந்து வெட்டியாக உங்கள் ப்ரௌஸரை ரீஃப்ரெஷ் செய்து அக்கப்போருக்கு”
    Romba sari ;)

  3. சிவம்'s avatar சிவம் Says:

    வார்த்தைகள் சும்மா கேக்காமயே வந்து விழுதய்யா உமக்கு.

  4. Unknown's avatar spgr. Says:

    அட்டை படமும், நூல்களும் மிக நன்றாக இருக்கிறது.

  5. பொன்.முத்துக்குமார்'s avatar பொன்.முத்துக்குமார் Says:

    தாங்க முடியல சாமி !

  6. Venkatesan's avatar Venkatesan Says:

    அட்டைப்படம் நன்றாக உள்ளது. ஆனால், ஏழு நூல்களுக்கும் ஒரே அட்டைப்படமா? குழப்பம் வராதா? எனது பரிந்துரையாக இதோ இன்னொரு அட்டைப்படம்: http://www.rdanderson.com/stargate/entries/images/interdimparasites.jpg.

    எங்கம்மா அப்பவே சொன்னாங்க. இவரு கூட சேராதன்னு. பாருங்க. நானும் உங்களை மாதிரியே ஆயிட்டேன்.

    :-)

    • Unknown's avatar Anonymous Says:

      Forbidden

      You don’t have permission to access /stargate/entries/images/interdimparasites.jpg on this server.

      Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
      Apache/2.4.9 (Unix) OpenSSL/1.0.1e-fips mod_bwlimited/1.4 Server at http://www.rdanderson.com Port 80

      யோவ்! 403 கிடைத்தாலும் விட்டேனாபார் என அந்த அட்டைப் படத்தைப் பார்த்துவிட்டேன்.

      உங்கள் படத்துடன் ஒரு காப்பி படத்தையும் (http://doaheadwoman.com/wp-content/uploads/2013/06/Steaming-Cup-of-Coffee.jpg) போட்டால் – அதை யுவகிருஷ்ணா அவர்களின் அடுத்த புத்தகத்துக்குப் பரிந்துரைக்கலாம்! :-((

  7. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    புக் ஃபேர் சீசனில் ஸ்டால் நம்பரையும் சேர்த்துச் சொல்வது தானே தமிழ் சான்றோர் மரபு? பரம்பரை எழுத்தாளருக்கும் பஞ்சத்துக்கு எழுத்தாளருக்கும் வித்யாசம் இதுதானோ?


    • யோவ்! அதுக்கு பத்ரியக் கேக்காம ஏம்ப்பா என்னக் கேக்கற! மின்னாடியே ஸொல்ட்டேன்ல்ல? அவ்ருதாம்பா என் பப்ளிஷரு!

      எனக்கு இந்த பப்ளிஸிட்டிகிப்ளிஸிட்டிலல்லாம் ஆர்வமேயில்லபா! :-((

  8. Venkatesan's avatar Venkatesan Says:

    ஆ! இணையத்தில் இருந்து தழுவி எழுதுவதை குற்றம் கூறுகிறீர்களே. பார்த்தீரா, ஒரு அட்டைப்படத்தை சுட்டு போடுவது கூட எளிதாய் முடிவதில்லை! (அந்த லிங்க் காலைல வொர்க் பண்ணிச்சே. இப்போ என்னாச்சுன்னு தெரில!)

    போவட்டும். வாசகர் வசதிக்காக இன்னொரு அட்டைப்படம். பிள்ளையாரப்பா, இதுவாவது ஒழுங்கா வேலை செய்ய அருள்புரி! http://www.webanswers.com/post-images/B/B4/D3B0F341-ED8F-4866-A8E2B39F3A2D2B90.jpg


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *