(அல்லது) லெமூரியாக் காலத்திலிருந்தே மறத் தமிழர்களின் செல்ல ஆயுதம் வாள் அல்ல, அல்ல, அல்ல – அது கத்தி, கத்தி, கத்திதான்!

எச்சரிக்கை:  இது என்னோட சொந்த   மீன்பாடி வண்டி ஃபிக்‌ஷன்  (பயப்படாதீங்க – இது நம்ப ஆட்டோ ஃபிக்‌ஷனுடைய அத்தை பையன் தான்!)

கருத்துப் படம்:  ஆட்டோ -- மீன்பாடி வண்டி

கருத்துப் படம்: ஆட்டோ — மீன்பாடி வண்டி

பொதுவாக அறிவிலிகள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ் ஓங்கி வளர்ந்திருந்தது என்பார்கள். அவர்களைப் பாவம், மறட் டமிளர்களாகிய நாம், மறப்போம், மன்னித்தும் விடுவோம்.

உண்மையில் தமிழ் மொழி தோன்றியதற்கு முன்பாகவே தமிழ்க் கத்தி தோன்றி விட்டது என்பதை அவர்கள் அறியாதவர்கள்.  Read the rest of this entry »

(அல்லது) மாணவர்களும் அரசியலும்

என்னுடைய, தற்போதைய புத்தம்புதிய  புதிய ஆத்திச்சூடியில்,

அ: அரசியல் பழகு.
ஆ: ஆற்றாமை தவிர்.
இ: இலத்தல் இகழ்ச்சியல்ல
ஈ: ஈடுபாடு கொள்.


(ரொம்ப அறிவொர மாரி இருக்குல்ல, மன்ச்சுக்குங்க; எனக்குந்தாங்க இந்த அறிவொர, சொறிவொரல்லாம், சரீங்க்ளா?)

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வாழ்க்கையில், சமூகத்தில், நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான, இன்றியமையாத அங்கம்.

மிகு பொது நலம் (’greater common good’) – மீதாகக் குவிந்த வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் விட்டுப் போனவற்றை / போனவர்களை / பாதிக்கப் பட்டவர்களை, தொடர்ந்து அரவணைத்து மேலெழுப்பிச் செல்வதும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியங்களாகவும் என்பதாகவே நான் அறிகிறேன்.

… பொதுவாக, நான் ஏற்றுக் கொண்ட தொழில், எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை அல்லது நான் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும்போது எனக்கு அவ்வேலைகளைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அவற்றுடைய இலக்குகளை அடைவது தான் முக்கியம். இந்த முனைவுகளில் இல்லாத அரசியலா! இதில் இல்லாத நடைமுறை தந்திரோபாயங்களா? இந்த முயற்சிகளில், தனிமனிதர்களின் தன்னல இச்சைகளையும் பொச்சரிப்புகளையும், மனமாச்சரியங்களையும் – அவை இலக்குகளை அடைவதற்கு உபயோகமாக இல்லாமலிருந்தால், அவற்றை மறித்தால், அந்த மனிதர்களையே கூட கடாசியே வந்திருக்கிறேன். நல்லிணக்கமா? க்கூட்டுறவா?? இன்னாங்கடா, இன்னாடா ஸொல்றீங்க?? இதெல்லாம் கிலோ என்ன விலை? Read the rest of this entry »

ஆக, நான், படிக்காதுப் படிக்காது நம் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சொன்ன அறிவுரை(!) போலக் கடைசியில் உண்மையாகவே, நடக்கவே ஆரம்பித்து விட்டதோ?

ஊழிற் பெருவலி யாவுள !:-(

திமுகவின் இடியாப்பச் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு,  நான் ஏற்கனவே சொன்னது போல, அதனை (அதாவது, பின்னதை) சாம்பாருடன் சேர்த்து, சாம்பாரகத்தை, நமது சாம்பார்நாட்டை, மூன்று பாத்திரங்களில் ஊத்திமூடி. ஒரு முடிவுக்குக் கொணடு வருவதுதான்.

சாம்பார் நாடு 2021 - எல்லைகள் - உள் நாட்டுப் பிரிவுகள் - முக்கிய,  முக்காத சுற்றுலா தளங்கள் - இன்ன பிற...அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.

சாம்பார் நாடு 2021 – எல்லைகள் – உள் நாட்டுப் பிரிவுகள் – முக்கிய, முக்காத சுற்றுலா தளங்கள் – இன்ன பிற…
அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.

Read the rest of this entry »

இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.

D V Karunn Says: 22/12/2012 at 16:50 e

we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.

’டி வி கருண்,’

என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு

Read the rest of this entry »