இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருரை நிமித்தம் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

உட்கார நிற்க, நம் தமிழர் பண்பாட்டில், அது படும் பாட்டில், எந்த ஒரு கருத்தார்ந்த, செறிவுமிக்க விஷயத்தைப் பற்றிய கூட்டமும், என்னதான் அதன் பாடுபொருள் மிகமிக முக்கியமாக இருந்தாலும், உரையாடலுக்கு மகாமகோ அவசியம் இருந்தாலும் – அதற்கு நூறு பேர் வந்தாலே மிக அதிகம் – கடந்த பல்லாயிரம் வருடங்களாக இதுதாம் நம் பண்டமிழ் முறை, தொல் மரபு. ஆனால் விதம் விதமான பட்டி விக்கிரமாதித்த மன்றங்களுக்கு, அல்லது வழக்காடும் கிழட்டு மன்றங்களுக்கு, இன்னல்பிற நிகழ்ச்சிகளுக்கு, கெக்கெக்கெ என்று சிரிக்க, கூட்டம் அலை மோதும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை என்றால் கேட்கவே வேண்டாம். நிரக்ஷரகுக்ஷிகளின், அரைகுறைகளின் சொர்க்கங்களல்லவா அவை? Read the rest of this entry »

எப்பொழுதெல்லாம், நம் பாரம்பரியப் புல் வகைகளைப் பற்றி அவை அரிசி போன்ற பெருதானியங்களாக இருந்தாலும் சரி, சிறுதானியங்களானாலும் சரி, மற்றபடி தீவனப் புல், மூங்கில் வகைகளானாலும் சரி – எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் (அவை, நிறையவே வருபவைதான்!) அதை நிவர்த்தி செய்து கொள்ள, தற்காலத்தில் நான் அணுகுவது இந்த புத்தகத்தைத்தான்.

handbook_southindiangrasses Read the rest of this entry »

சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ  (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.

அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”

நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும்  மிக்க,  சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக்  களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?” Read the rest of this entry »