அண்ணா பல்கொலைக்கழக எஞ்ஜினீயரிங் கஞ்சிநீரிங் திராவிட மாணவன் எனக்குக் கொடுத்த கொடும் அதிர்ச்சி
January 26, 2026
(அல்லது)
குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.
(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.
(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)
…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.
இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை…
இப்படியாகத்தானே.
ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் – ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)
…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?
(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)
…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!)
செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.
பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.
அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.
ஏன்?
மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)
இருந்தாலும்.
அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.
ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….
(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)
ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!
எனக்கு விக்கித்துப் போய்விட்டது!
சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”
விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்…
கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்… இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…
… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….
சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?
“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”
வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.
பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”
அப்படியா சரி. Cosine3600 க்கு என்ன சொல்லுது?
“ஐயோ! இது ஒண்ணுன்னு காமிக்குது!”
அடப் பாவமே என்றேன்!
“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!
!!!!
அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?
இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!
நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)
தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில் விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.
விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…
அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…
எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!
அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”
சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ
இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…
2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ
இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…
2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?
அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன்.
“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”
அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.
அடுத்த முதலையமைச்சர் சோசப்பு விசய் வாள்க!
-0-0-0-0-
என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…
தேவையா?
“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”
(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?
#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)



January 26, 2026 at 20:38
Thanks to that Vijay rasigan. We got a post from you after a long time 😁