இளம் அண்ணாமலையும் ஒப்பாரி வள்ளல்களும்…

April 10, 2025

வேறு வழியேயில்லை, ஆகவே!

1

ஒப்பாரி வள்ளல்களின் கழுத்தறுப்பு தாளவில்லை. நானுமே, சர்வநிச்சயமாக –  ஜொலிக்கும் இளம் அண்ணாமலை அவர்களின் நலம்விரும்பி + பாஜ கட்சியின் ஆதரவாளன் (முக்கிய காரணங்கள் பலப்பல, மேலும் இவர்களுக்கு ஒரு காத்திரமான மாற்று என என் ஒண்ணரைக்கண்ணுக்கு எட்டிய தூரம் வரை டெலஸ்கோப் மைக்ராஸ்கோப் வைத்துத் தேடினாலும் கிட்டவில்லை என்பது வேறு விஷயம்!) என்றாலும் – என்னைப் போய்த் தொடர்பு கொண்டு “இப்படி அநியாயத்துக்கு செய்துவிட்டார்களே, அறிவிலி பாஜ உயர்மட்டத் தலைவர்கள்…” புலம்பும் இளம் (ரெண்டு கெழங்கட்டைகள் உட்பட) தேசிய(!)வாதிகளைப் பார்த்தால் சலிப்பாக இருக்கிறது.

என்ன ப்ளடி குடி முழுகிவிட்டது இப்போது? ஆதாரபூர்வமான செய்தி வெளியீடு கட்சியிடம் இருந்து வந்ததா? அல்லது, தமிழகத்தின் விடிவெள்ளியான இளம் அண்ணாமலைதான் அரசியலை விட்டே விலகுகிறாரா?

அப்படி ஒன்றுமில்லையே – ஆகவே என்னதான் நடந்துவிட்டது என்றால் – ட்விட்டர்/எக்ஸ் ஃபேஸ்புக் யூட்யூப் அலசல்களை (இவற்றில் ஒன்றைக்கூட கால்வாசியேனும் பார்க்கச் சகிக்கவில்லை!) டன் டன்னாக அனுப்புகிறார்கள். கூடவே இலவச இணைப்பாக, கீழ்கண்டவை போல கருத்துகளோ கருத்துகள்! விசும்பல்கள், பாவலாக்கள்+++ …தேவையா, சொல்லுங்கள்??

  • …பொட்டி வாங்கிக்கொண்டு ரங்கராஜ் பாண்டே இப்படிச் சொல்லலாமா?
  • மாரிதாஸ் மாரிபிஸ்கட் சாப்டுக்கிட்டே அண்ணாமலை கல்தாவைக் கொண்டாடுகிறார்….
  • உருண்டையுருட்டிக்கண் மூத்த ஊடகவியலாளர் மணியே(!) சொல்லிப்புட்டார்…
  • டெல்லி ராஜகோபாலன் ப்ரேக்கே போடாமல் சுடச்சுட ஹாஃப்பேக்கிங் செய்து ப்ரேக்கிங் டான்ஸ் சுடச்சுடச் செய்திவிட்டார் – டெல்லி லீக்ஸ், மெட்ராஸ் நீரிழிவு நோய்,  திராவிடச் சிறுநீர்ச்சொட்டு என எகப்பட்ட கசமுசா…
  • கோலாகல ஸ்ரீநிவாஸ் பெப்ஸிகோலா குடித்துக்கொண்டே ஓளிந்தபடி அமித்ஷா வீட்டு அந்தரங்க அறைகளில் நடப்பதைப் பார்த்து துல்லியமாக ரன்னிங்கமெண்டரி கொடுக்கிறார்…
  • ப்ரகாஷ் எம் சுவாமி, பார்லிமெண்ட் சீலிங் ஃபேன் ஒன்றில் இருந்து ஆயிரத்திலொருவன் போலத் தொங்கியபடி அயல்நாட்டு தூதரகங்களில் அவருக்கென பிரத்யேகமாக இருக்கும் ஒற்றர் படையை வைத்து காய் நகர்த்துகிறார், தேங்காயை மாங்காயாக மாற்றி மிளகுரசவாதம் செய்கிறார்….
  • வழவழாகொழகொழா ஸ்பெஷலிஸ்ட் பா.கி (ருஷ்ணன்) எதையும் பாக்கி வைக்காமல் படு தெகிர்யத்துடன் வெண்டைக்காயை அரைவேக்காட்டில் வேகவைத்துப் பரிமாறுகிறார்…
  • வாய் வியாபாரிகளை ஒழிக்கவேண்டும்…
  • நான் பாஜகவுக்கு ஓட்டே போடப்போவதில்லை, நோட்டாவுக்குத்தான்…
  • தேர்தலன்று வெளியூர் பயணம் சென்றுவிடுவேன்…
  • தேசமாவது தேசியமாவது… எனக்கு என் உணர்ச்சிவசப்படல்தான் முக்கியம், ப்ளட்டி ஹெல்…

… …

  • இப்படியே மற்றபலர் க்ரானைட் க்வார்ரியில் ஜேக் ஹேம்மர் போல எல்லாவற்றையும்  செய்திசெய்தியாக உடை உடை என உடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்….
  • (நல்லவேளை, இளம் பத்ரிசேஷாத்ரி இந்த ஆரூடவாதக் குருட்டாம்போக்கில் அட்ச்சிவுடும் கும்பல்களில் இல்லை என்பது ஆசுவாசம் தருகிறது)

இப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்க ப்ரக்ருதிகளில் ஓரிரு விதிவிலக்குகள் அப்படியிப்படி என இருக்கக்கூடும் என  ஒருமாதிரி ஒப்புக்கொண்டாலும் – கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் ஏனிப்படி அட்ச்சிவுடுகிறார்கள், இந்த “நேர்காணலில் நம்மோடு இணைந்திருக்கும் வாய் ஓயாதபேச்சு ஓய்வில்லாக் கருத்தாளர்கள்?”

அவர்கள் அப்படித்தான் என்றாலும், நம்மவர்களுக்கு எங்கே போயிற்று அடிப்படை அறிவு?

போயும் போயும், இந்த பப்பரப்பா ஊடகப்பேடிகள் கதாகாலட்சேபத்திற்காக நீட்டிமுழக்கிச் சொல்வதையா, புளுகுவதையா வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அப்படியும் இப்படியும் புயற்காற்றில் அல்லாடும் பாய்மரக் கப்பல் போலத் தத்தளிப்பது?

நேர்கோணல் செய்யும் அரைகுறை தண்டக்கருமாந்திரங்கள் வேறு – படாபேஜாரான சோகக்கதைகள்! இவர்கள் நெறியாளர்களாமே, ப்ளடி – இவர்களில் முக்காலேமூணுவீசம் பேரை கழுத்தை நெரித்துக் கொன்றாலே, தமிழகத்தின் பிரச்சினைகள் பல தீர்ந்துவிடும்…

அதலபாதாள ஐக்யூவையும், உளறல் சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு இந்த அரைவேக்காட்டான்கள் நீட்டி மினுக்கி முழக்குவது இருக்கிறதே… சனியன்கள். இந்த அழகில் – இதில் பெரும்பாலான தண்டங்களுக்கு அரசியல் ‘வியூகம்’ கிசுகிசுக்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மசுத்தைப் பற்றியும் துக்குணியூண்டு அறிவோ ஆர்வமோ இல்லவேயில்லை…

…ஆனால் – ஏண்டா பாவி ஏழரை அப்ரசண்டிகளா, ஏண்டா இம்மாதிரி அரைவேக்காட்டுத்தனங்களைக் கர்மசிரத்தையாகப் பார்த்து, பொங்கோபொங்கென்று பொங்குகிறீர்கள்?

அடச்சே என ஆகிவிட்டது. இன்னமும்கூட வெறுத்துப்போகும் நாட்களும் வருமோ?

(அல்லது)

எனக்கும் சிலபல ஐஏ எஸ் ஐபிஎஸ் வகை உயர்மட்ட அதிகாரிகளுடன் அறிமுகமுண்டு – நிறைய தொழில்முனைவோர்களுடனும் அப்படியே. ஒன்றிரண்டு தமிழகக் கட்சிகள் சார்ந்து பொறுப்புகளில் – இப்போது படுமட்ட/உயர்மட்டங்களில் உள்ளவர்களுடன் முற்காலங்களில் தொடர்பு இருந்தது, மறுபடியும் தொடர்பு கொள்ளவும் முடியும், பரஸ்பர பரிச்சயங்களும் இருக்கிறார்கள். சில ஜட்ஜ்களும் அறிமுகம். ஆகவே நானும் ‘ஸோர்ஸ்’ எனப் பிலுக்கி அவர்கள் சொல்வதையும் சொல்லாததையும் கருணாநிதி போலப் புளுகிக் கொட்டிக் குட்டையைக் குழப்பி ‘உடைத்துப் பேச’ ஆரம்பிக்க, இது ஒர் சந்தர்ப்பமா?

என்ன எழவோ!

2

பகுதி நேர ஸோஷியல்மீடியா போராளிகள் அளவுக்கு அதிகமாக தமக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேலாக, இந்தப் பிரக்ருதிகளின் ஆர்வல அடியொட்டுகள் – அதாவது, நம்மைப் போன்ற சாமானியர்கள் (அதாவது அடியில் கண்ட சொத்ததிபர்கள்)  – கேள்விப்படுவதற்கெல்லாம் கொடுமையான, பால்மணம் மாறாத எதிர்வினைகளை ஆற்றோ ஆற்றி என்று ப்ளடி ஆற்றித் தள்ளிவிடுகிறார்கள், என்ன செய்ய…

இந்த சக-சாமானியர்களுக்கு என்னுடைய சொந்த அக்மார்க் கருத்துகளை, நமக்காக-நாமே என முன்வைக்கிறேன்; கருத்தில் கொள்வதும் கொல்லாததும் உங்கள் இஷ்டம்.

  • மக்களுக்கு (உங்களுக்கும் எனக்குமேகூட) கருத்துச் சொல்ல அடிப்படை உரிமை இருக்கிறது – ஆனால் ஒருவரையும்கூட படுஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
  • வெட்டி அரட்டையும்,  கவைக்குதவாத வீராப்பும், ஒப்பாரிப் பிலாக்கணமும், நெட்டை நெடுமரமென கையைப் பிசைந்து கொண்டு கையறு நிலையில் வாடும் பண்பும் ஒருங்கே வாய்த்த ஒரே ‘இனம்’ தமிழீனம் மட்டுமே!
  • யாராவது, அதிகார பூர்வமாக ‘அண்ணாமலை தூக்கப்படுவார்’ எனப் பேத்தினார்களா? பாரதீய ஜனதாவிலுள்ள காரண காரியங்கள் உட்தேர்தல்கள் செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அடுத்த தலைவர் அறிவிக்கப் படுவார் எனத்தானே அண்ணாமலை உட்படப் பேசுகிறார்கள்?
  • பாஜ கட்சிக்குத் தெரியாதா அரசியல் ‘காய்’களை எப்படி நடத்தவேண்டுமென்பது? அவர்களுடைய குறிக்கோள் என்ன எடப் பாடிபில்டராக  ஆவன செய்யவேண்டுமென்றா? திமுகவுக்கு ஓத்தூதவேண்டுமென்றா?
  • அண்ணாமலைகளை அவர்கள்தாமே, பாஜக மேலிடக்காரர்கள்தாமே தேர்வு செய்தார்கள்? அவர்களா, முட்டாள்தனமாகக் கைகழுவி விடுவார்கள்?
  • அண்ணாமலைகளுக்குத் தெரியாதா அரசியல் என்றால் என்ன, அதிலிருக்கும் சாதகபாதகங்கள் யாவையென்று? அவருடைய உயர்-புத்தி கூர்மையை (High IQ) நாம் ஏன் குறைவாக மதிப்பிட வேண்டும்?
  • அண்ணாமலை என்ன தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்றா சொல்கிறார்? கட்சி மேலிடத்தின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றப் போவதாகத்தானே சொல்கிறார்? இது ஒரு பெரிய, மகிழ்ச்சிதரும் விஷயமில்லையா?
  • அண்ணாமலைகளை விட, புலம்பலாளர்களாகிய நாம் அதிக உழைப்பைக் கொடுக்கிறோமா?
  • அரசியல் என்பதே அதிகாரத்தை நோக்கியதுதான். நம் குடும்பங்களில் இல்லாத அரசியலா? இந்தப் புரிதலடைந்தால் – விதம்விதமாக கலர்கலராக மேதாவித்தனமாக பினாத்த மாட்டோம்… : மத்திய பாஜகவுக்கு தமிழ் நாடு பற்றிய புரிதலில்லை… அண்ணாமலைக்கு எதிராக ஒரு குழு காய் நடத்துகிறது. ஏ என்பது ஸியின் பி டீம். அண்ணாமலைக்குக் ஏன் குழி பறிக்கிறார்கள்?  (மோதிக்கு பறிக்கப்படாத குழியா? யோகிக்கு?? அவர்களுக்கு எதிராக நடக்காத உட்கட்சி அரசியலா??). அண்ணாமலை அரசியல் அஸ்தமனம். எல்லாம் போச்சு. தமிழகத்தில் இனி பாஜக முளைக்கவே முளைக்காது…
  • தனி நபர் வழிபாடு என்பதைக் கேவலப் படுத்தமாட்டேன்.  தமிழகம் போன்ற அடிப்படையில் திராவிடப்பொறுக்கிப் பிரதேசத்தில் – அண்ணாமலை, மோதி போன்றவர்கள் உதித்து வளர்ந்து ஆகவே அவர்களை ஆராதிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதிலும் எனக்குச் சந்தேகமேயில்லை. இருந்தாலும், ஓவராக சிவாஜிகணேசன் போல நடித்து நம் திறனை வெளிப்படுத்த வேண்டிய அவசியமேயில்லை. தேவையற்ற துதிபாடி அல்லது கொடுத்தகாசுக்குமேலகூவி அந்த மஹோன்னதர்களுக்குச் சங்கடம் வரவழைக்கக் கூடாது அல்லவா?
  • இணையத்தில் கம்பு சுத்தி இமோஷனலாக உருகுவதைப் போன்ற மஹாஅசிங்கம் – பாஜக போன்ற தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இருக்கவே கூடாது.
  • பெட்டைப் புலம்பல் கூடவே கூடாது.
  • டைம்பாஸ் செய்யக்கூட – ஊடகப் பேடிகள் பக்கம் செல்லக் கூடாது.
  • முடிந்தால் எதாவது உதவி செய்யலாம் (நம்மை முன்னிறுத்தி அல்ல, பாரதத்தின் மேன்மைக்காக) – முடியாவிட்டால் அனைத்து ஓட்டைகளையும் மூடிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து பம்மலாம்.
  • பொறுமை வேண்டும். இல்லாவிடில், தாராளமாக – வெறும் உணர்ச்சிவசப் பட – நடிகக் கோமாளிகள் பக்கம் செல்லலாம். 

சரி.

உருப்படியாக, ஏதாவது விஷயத்த தொடர்ந்து செய்ங்கடா, டேய்!

குறைந்த பட்சம், நம் ஊடக உளறலாளர்களைப் பார்த்துக் குதித்துக் கும்மியடித்துச் சிரிங்கடா, டேய்!!

நன்றி.

பாரத் மாதா கீ ஜெய்…

5 Responses to “இளம் அண்ணாமலையும் ஒப்பாரி வள்ளல்களும்…”

  1. தமிழன்'s avatar தமிழன் Says:

    ஐயா, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்தும், திரைமறைவில் நடக்கும் ‘சதிகள்’ குறித்தும் எண்ணற்ற புலனாய்வுகள் அனுதினமும் வெளிவருகின்றன. பாஜக-வின் கட்சி/ஆட்சி பொறுப்புகளுக்கான தேர்வுகள் பெரும்பான்மை ஊகங்களுக்கு நேரெதிராகவே அமைந்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் தேசியத் தலைமைக்கான பெயரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை அவசரப்படத் தேவையில்லை என்பதும் சரியே.

    ஆனால் ஐயா, நாமிருப்பதோ தீராவிஷங்களில் ஊறித் தத்தளிக்கும் தமிழகத்தில், தற்போது களத்தில் முளைத்துள்ள காளான்களும் அனேகம். அண்ணாமலைக்கு முன் தமிழக பாஜக-வின் செயல்பாடும் செல்வாக்கும் நாமறிந்ததே, தலைவர் மாற்றம் குறித்த வதந்திகளால் ஏறுமுகத்திலிருக்கும் கட்சி சுணங்கிவிடக்கூடாதென்பதும், மிகமுக்கியமாக அவை மீண்டும் தீயசக்திகளுக்கே சாதகமாகிவிடக் கூடாதென்பதுமே சாமானியர்களின் கவலை.


    • உங்கள் கருத்துகளோடு 100% உடன்படுகிறேன். அண்ணாமலை வாராது போல வந்த மாமணி என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை.

      இருந்தாலும் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்: 100+ வருட திராவிடத்தனம் ஒழிய கொஞ்ச நாட்களாகலாம், நாளையில்லாவிட்டால் அதற்கு அடுத்த நாள், 2026ல் இல்லையென்றால் 2031ல். ++ (இதில் சிலசமயம் one step forward, two steps backwards – but such is life…)

      (என்னுடைய முன்னாள் மாணவர்களில் சிலபலர் திராவிட விஜய் குஞ்சாமணி சப்புவோர் கழகத்தவர்களாக இருப்பது என்னை இப்படி ஆக்கியிருக்கிறது, என்ன செய்ய)

      • தமிழன்'s avatar தமிழன் Says:

        //இதில் சிலசமயம் one step forward, two steps backwards – but such is life…//
        உண்மைதான் ஐயா, seems like TN BJP has entered the phase of stepping backwards now.

        //என்னுடைய முன்னாள் மாணவர்களில் சிலபலர் திராவிட விஜய் குஞ்சாமணி சப்புவோர் கழகத்தவர்களாக இருப்பது என்னை இப்படி ஆக்கியிருக்கிறது, என்ன செய்ய//
        இதுதான் தமிழகத்தின் இழிநிலை, இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் உட்பட அனைத்து திராவிடியாக்களும் தற்சமயம் குதூகலித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பர் என்பதில் ஐயமில்லை.

  2. அன்பரசு's avatar அன்பரசு Says:

    2026 இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான்.2029 இல் ஒன்றிய அளவில் திராவிட மாடல் ஆட்சி அமையும்.காவி பாசிசம் விரட்டப்படும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *