2024 பாரதத் தேர்தலில் தமிழகம் – அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்
April 18, 2024
+1.
(என்னுடைய சாராம்சம் …and I know I am preaching to the choir, but then…)
1. கண்டகண்ட சால்ஜாப்பு சொல்லாமல், உங்கள் உரிமையும் கடமையுமான வாக்கைச் செலுத்துங்கள்; ‘படித்தவர்கள்’ என தம்மைக் கருதிக்கொள்ளும் கருத்துதிர்ப்பாளர்களின் மெத்தனம், கேவலமானதொன்று – இந்த அசிரத்தையானது நம் சந்ததிக்கே, ஏன் நம் தமிழகத்துக்கே திராவிடச் சமாதி அமைத்துவிடும். பிறகு அத்தனை தயிர்வடைகளுக்கு நாம் எங்கேதான் போவது, சொல்லுங்கள்?
2. அண்ணாமலைக்கும், அவர் சார்ந்துள்ள நரேந்த்ரமோதியின் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணிக்கும் ஓட்டுப் போடவும். “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என நம் ஔவையாரே சொல்லியிருக்கிறாரே!

1
சின்னப்பா கணேசன் அவர்களின் கீழ்கண்ட புத்தகத்தை அண்மையில் படித்தேன்; பரிந்துரை செய்கிறேன். ஆழத்துடனும் வீச்சுடனும் நன்றாக வந்திருக்கிறது.
அவசியம் வாங்கிப் படிக்கவும்; தமிழகத்துக்கு, பாரத மத்திய அரசு என்னென்ன விஷயங்களைச் செய்துள்ளது என்பது(ம்) குறித்த எக்கச்சக்க புள்ளிவிவரங்கள் + திராவிடமாடல் நம் மண்டைகளில் ஏற்றியுள்ள தகிடுதத்தங்கள் குறித்த சிடுக்கவிழ்த்தல் விவரணைகள். நன்றாக உழைத்திருக்கிறார் – புத்தகமும் நன்றாகவே உருவாகி வந்திருக்கிறது. 350+ பக்கங்கள்.
விவரங்களுக்கு வாட்ஸ்அப்: +91 90923 45641 – ரூ 350/- + ரூ 100/- குரியருக்கான கட்டணம்.
2
அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்:
(பத்தே நிமிடங்கள் தான்!) போதை கும்பலிடம் இருந்து நம் சந்ததியினரை மீட்க, கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காக்க கட்டாயம் வாக்களியுங்கள்..!
(வெறும் 16.5 நிமிடங்கள் மட்டுமே!) முதலிடத்தில் தர்மபுரி, 2-வது இடத்தில் நாமக்கல்..! பரிதாபமான இடத்தில் தென்சென்னை.!
அவசியம் பார்க்கவும். வாக்களிக்கவும்.
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்”
2024ல் ஆரம்பித்து, பாரதமாதாவின் செல்லத் தங்கையான தமிழ்த்தாய், இந்த திராவிடப் பொறுக்கிகளை ஓடஓட விரட்டி அடித்துப் பிடித்துக் கம்பி எண்ண வைத்து, தமிழகத்தை ஏற்றத்தின் பாதையில் வழி நடத்த ஆரம்பிக்கப் போகிறாளோ?
ஜயஸ்ரீ ராம்.
🕉 🇮🇳



April 18, 2024 at 18:21
ஜயஸ்ரீ ராம்.
My Sister keep training my Mom (86 yrs) to remind her about Thamarai, and cross question every 1 hr !! :)
we are pushing every one around us to vote for Thamarai, at least this is good change from middle class folks (like us) crossing finger, touching wood, praying BJP should make significant dent (praying) (ukrainepray)
April 18, 2024 at 18:37
Sir, fantastic. ‘Little by little, the world turns around…’
Pray ask… I don’t understand that ukrainepray deal! Could you please explain?
April 18, 2024 at 19:53
ukrainepray !!
Fingers Crossed: Definition, Meaning, and Origin (usdictionary.com)
etymology – What is the origin of the phrase ‘touch wood’? – English Language & Usage Stack Exchange
Pagan practices .. :)