சக் க்லாஸ்டர்மன்: இக்காலங்களில் நான் ஏன் ஜெயமோகன்-எஸ்ராமகிருஷ்ணன்-சாருநிவேதிதா போன்ற அலக்கிய அறிவுஜீவிய இத்யாதிகளைக் குறித்துப் புகழ்ந்து எழுதுவதேயில்லை?

February 17, 2024

…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில்  அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்:

1. நீங்கள் நம் அரசியல் அவியல் குறித்த திருடவிடர் முன்னேற்றக் கழகத் தலீவர்களான ஆராசா டிஆர்பாலு தயாநிதி உதைநிதி முதலையமைச்சர்-இசுடாலிர் போன்ற அயோக்கிய இத்திவியாதிகள் உதிர்க்கும் உதிரிக் கருத்துகளை வெறும் 5% கண்டுகொண்டாலே உங்களுக்கு வாழ்நாளுக்கு திகட்டத் திகட்ட இறும்பூது கியாரண்டி. ஆகவே என் மேற்படி நகைச்சுவை(!) தேவையில்லை.

2. நான் வேண்டிய அளவு மேற்குறிப்பிட்ட அலக்கியச் சராசரிகளைக் கிண்டல் செய்து எழுதிவிட்டேன். அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தங்களை 1%ம் திருத்திக்கொள்ள வேண்டிய (செம்மை படுத்திக் கொள்வதையே விடுங்கள்!) அவசியமேயில்லை என்பதையும் உணர்கிறேன் – ஏனெனில், நம் சராசரி வாசகர்தரம் அப்படி. அரைகுறை வாசகன் எப்படியோ அப்படியே அயோக்கிய அலக்கிய அலப்பரை, வேறென்ன சொல்ல

(என் பாழ்நெற்றியில் இவ்விஷயத்துக்காக அடியடி என அடித்துக்கொண்டு, ரணகளமாகிவிட்டது)

3. நான் சிலபல பிற விஷயங்களில் கொஞ்சம் மும்முரத்துடன் இருக்கிறேன் – ஆனால் அவை பற்றியெல்லாம் எழுதுமளவுக்கு எனக்குப் பொறுமையோ சமயமோ இல்லை.

4. என் அசரீரியாக, அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க வெகுஜனக் கலாச்சார விமர்சகரான, எனது அபிமானத்தைப் பெற்ற இளம் சக் க்லாஸ்டர்மேன் எழுதியிருக்கிறார். ஆளை விடும்.

எனக்கு இனிமேலும் இம்மாதிரிச் செய்வதில் ஆர்வமில்லை.

சக் க்லாஸ்டர்மன் சொல்வதன் தமிழக் கலாச்சார சாராம்சம்:

…இந்த வகையான எழுத்து என்பது மிகவும் சுலபம்; அதாவது, இருப்பதிலேயே (இன்னமும்) முட்டாக்கூத்தனமாக எவனாவது நம் தமிழ் அலக்கியவாதி அற்ப அயோக்கிய அலப்பரை எழுதியிருப்பான். அதனைப் பிடித்துக் கொண்டு, அந்த ப்ரத்யட்சமான முட்டாக்கூத்தனத்தை  விமர்சிப்பது/கிண்டல் செய்வது என்பது தான் அந்த எழுதுமுறையின் குவியம்…

இதனை அடிப்படைகள் கொஞ்சமேனும் உடைய எவனுமே செய்துவிட முடியும். (அதாவது நான் அவசியமில்லை)

எப்படியும் கண்டகண்ட கழுதைகளை வேணது வெகு சுலபமாகக் கிண்டல் செய்து என் வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொண்டாகிவிட்டது, நான் ஈஸி-பீஸியாக எழுதுவதை நானே படித்துச் சிரித்துக்கொண்டுமாகிவிட்டது – இனி பிற வேறு வயிற்றெரிச்சல்கள் நகைச்சுவைகள்  மட்டுமல்ல, விகசிப்புகள் பக்கமும் போகவேண்டுமன்றோ?

ஆகவே.

4 Responses to “சக் க்லாஸ்டர்மன்: இக்காலங்களில் நான் ஏன் ஜெயமோகன்-எஸ்ராமகிருஷ்ணன்-சாருநிவேதிதா போன்ற அலக்கிய அறிவுஜீவிய இத்யாதிகளைக் குறித்துப் புகழ்ந்து எழுதுவதேயில்லை?”


  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை…


Leave a Reply to ஸ்பரிசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *