இதனை, என் படுமோசமான தோல்வி என எடுத்துக் கொள்ளவேண்டுமா?
October 20, 2023
சர்வநிச்சயமாக. ஆம்.
1
என் பிள்ளைகளிடம் பலமுறை, பலவிதமாகச் சொல்லியிருக்கிறேன்:
1. தமிழ்த் திரைப்பட ஜிகினாக்களால் ஒரு மசுத்துக்கும் பிரயோஜனம் இல்லை. நேரம், பணம் இவை குறித்த விரயம் தவிர – உங்கள் வாழ்க்கையையே விரயம் செய்துவிடக்கூடிய வல்லமை படைத்தவை அவை.
2. கேளிக்கைகளுக்கும் வாழ்க்கையில் முக்கியமான இடமுண்டு. இசை, விளையாட்டுகள், படிப்பு, செய்முறைகள் எனப் பலவிதமானவை அவை. ஆனால் தமிழ்ச் சினிமாவுலகம் என்பது ஏறத்தாழ ஒரு சாக்கடை.
3. தமிழ்ப் படங்களில் உன்னதம் என்பதற்கு ஏறத்தாழ ஒரு பெரிய, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க, உலகளாவிய பெருமரியாதை பெறக்கூடிய – ஒரேயொரு எடுத்துக்காட்டுமில்லை. வெட்கங்கெட்ட திருட்டுகள் அல்லது/+ மயிர்க் கூச்செறிப்புகள் அல்லது/+ பிதுங்கிவழியும் உடற்கூறுகள் அல்லது/+ காட்டுக்கத்தல்கள்/+ அல்லது வக்கிர ஸ்டைல் சண்டைகள்/+ அல்லது அழுகையொப்பாரிகள்/+ அல்லது நகைச்சுவையென்ற பெயரில் ஒப்பேற்றல்கள்/+ – இவை அனைத்தையும் கலந்துகட்டியும் – எனத்தான் அவற்றில் மிகப்பெரும்பாலானவை. (பள்ளியில் பணி செய்துகொண்டிருந்த அக்காலங்களில் நான் ஒரு வடிவேலு கவுண்டமணி செந்தில் விவேக் வகையறா நகைச்சுவை எழவையும் பார்த்திருக்கவில்லை – சமீப காலங்களில் தாம் இவற்றில் சிலவற்றை, யூட்யூப் உபயத்தில் பார்த்திருக்கிறேன் – இவற்றில் சில மிக புத்திசாலித்தனமாக நகைச்சுவையை வெளிப்படுத்துபவை என்பதைப் புரிந்துகொள்கிறேன்; அவ்வளவுதான்!)
4. தமிழ்த் திரைப்படங்களில் இருந்தும், ஏன் பலப்பல ஹிந்தி படங்களில் இருந்தும் ஒரு சுக்குக்கும் எந்த மசுத்தையும் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
5. இருந்தாலும் தமிழ்ப்படங்களைப் பாருங்கள், உங்களுக்கு அதைத் தவிர வேறேது கதிமோட்சமும் இல்லையென்றால் – அவற்றின் பவிஷு என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவுமாகக் கூட அது இருக்கலாம் – ஆனால் வெறி கொண்டு எஃப்டிஎஃபெஸ் என அலையாதீர்கள், அளவுக்கு மீறிச் செலவழிக்காதீர்கள்.
6. திரைப்படப் பேடிகள் உங்கள் மூளைகளைக் கொள்முதல் செய்து அவர்களுடைய உள்ளுறுப்புகளின் சாத்தியக்கூறுகளை உங்களிடம் அநியாய விலைக்கு விற்கிறார்கள் – அதற்குப் பலியாகி ரசிகர் மன்ற முண்டம் நற்பணிப் பிண்டம் என நாய்போல அலையாதீர்கள்.
7. தமிழ்த்திரைப்படம் என்பது உன்னதமான தொழிலோ, அதில் ஆதர்சபுருஷர்கள் என்றோ ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவர்கள் நம்மெல்லாரையும் போல ஒருமாதிரி வர்த்தகத்தில் தான் – ஆனால் கேடுகெட்டவற்றில் இருக்கிறார்கள்; + அத்துறை தமிழகக் கருப்புப் பணச் சலவையில், வரிஏய்ப்பில் முதலிடம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
8. தண்டச்சோற்று நடிகக் கோமாளிகளின் குஞ்சாமணிகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதைவிடக் கேவலமான காரியம் என்பது ஒன்றில்லை – ஒருகால், திராவிடக் கட்சிகளின் சகவாசம் என்பது அப்படி இருக்கலாம். அவர்களுடைய கருத்துகள் குசுவளவு கூட மதிக்கத்தக்கவையல்ல.
9. படிப்பறிவோ அல்லது உலக ஞானமோ பெரிதாக வாய்க்கப் பெறாத உங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட – உங்களை அப்படங்களுக்கு அன்புடன் கூட்டிச்செல்ல முயன்றாலும், மரியாதையுடனும் முடியாது என்று சொல்லி – உங்கள் சுயத்தை, உங்கள் நேரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆட்டுமந்தையில் சேர ஆவல் காட்டாதீர்கள்.
10. நீங்கள் சொந்தக் காலில் நின்ற பிறகு, நேர்மையான தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்த பின்னர் – நீங்கள் எக்கேடோ கெட்டுப்போய் விஜய்குஜய் மயிர்மட்டை என எவனுடையதையும் பிடித்துக்கொண்டு தொங்குங்கள் – ஆனால் அப்பன் செலவில் அதனை இப்போதே செய்யாதீர்கள். அது, கஷ்டஜீவனத்தில் இருக்கும் உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.
11. டட்டடா டட்டடா…
2
…ஆனால், என் பழைய மாணவர்களில் சிலர் (18-24 வயதினர்) இந்தக் கேடுகெட்ட விஜய்குஞ்சய் அழிச்சாட்டிய பிலிம் அற்பனின் லேட்டஸ்ட் படத்தைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களுடைய ஸெல்ஃபிகளை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதாவது என்னை இழித்து வசைபாடுகிறார்கள் எனத்தான் இதனை வைத்துக் கொள்கிறேன். (இவர்கள் ஒருவரும் வேலையில் என்றில்லை)
இவை வந்தவுடன் – என் வாழ்க்கையில் முதன்முறையாக இவர்களுடைய ஸெல்ஃபோன் எண்களை (அவர்களுக்குக் காரணத்தைச் சொல்லிவிட்டு, அவர்கள் வேலையிலோ உயர்படிப்பிலோ சேர்ந்த ஒரு வருடத்துக்குப் பின், அவர்களுக்கு விருப்பமிருந்தால், திரும்பத் தொடர்பில் வர முயலலாம் என்று தெரிவித்தும்) ப்ளாக் செய்திருக்கிறேன். இதுதான் என்னால் முடிந்தது.
இதுவரை யாரையும் எக்காரணம் கொண்டும் நான் ப்ளாக் செய்ததே கிடையாது. ஆனால் இன்று எனக்கு விக்கித்துவிட்டது.
என் நண்பன் ஒருவனிடம் அங்கலாய்த்தேன்.
ஆம்.
நான் தோற்றுவிட்டேன்.
இதனை தனிப்பட்ட முறையில் எனக்குக் கொடுக்கப் பட்ட கதிகலங்கவைக்கும் கன்னத்திலறை என எடுத்துக் கொள்கிறேன்.
யோசிக்கிறேன்; என் வாழ்நாளில், அப்படியும் இப்படியும் 18+ வருடங்களாக முழு நேர தன்னார்வ/வாலன்டரி வாத்தியாக இருந்திருக்கிறேன்…. இதெல்லாம் வியர்த்தமா?
இல்லை எனத்தான் சொல்லிக்கொள்ள ஆர்வம்.
ஏனெனில் – இந்தக் கழிசடைக் கலாச்சாரத்தில் சங்கமிக்காத, செயலூக்கம் மிகுந்த ஒருசில மாணவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆறுதலளிக்கிறது. அவ்வளவுதான்.
இருந்தாலும் – தமிழகத்தின் சாபக்கேடுகளில், அசிங்கங்களில், அயோக்கியத்தனங்களில், சீரழிவுகளில் – இந்தத் திரைப்படைச் சொறிசிரங்கும் ஒன்று என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
#DravidianModel



October 21, 2023 at 17:40
October 21, 2023 at 17:42
sadness1 https://x.com/AishThalapathy/status/1715209799468724287?s=20
sadness2 https://x.com/Aravint31660514/status/1715293649507066191?s=20
sadness3 https://x.com/Yokesh_msd/status/1715303647985459526?s=20
sadness4 https://x.com/actor_vijayteam/status/1715274863558991898?s=20
sadness5 https://twitter.com/Amars370/status/1714886276577395084