“தமிழகத்தின் ஓசோ” யார்?

February 6, 2023

ஓஷோ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஆன்மிக அரைகுறை ரஜ்னீஷ் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஏன், அவருடைய சமகால ஸேம்-ரெவல் ஜே க்ருஷ்ணமூர்த்தியையும்…

ஆனால்…

இந்த ப்ளடி ‘ஓசோ‘ எனப் படுபவர் யார்?

இந்தத் தமிழ் ஆசாமி யாராக இருக்கக் கூடும்? இந்த முன்னொட்டு அடைமொழிக்குக் காரணம் என்ன? 

அல்லது இது வெறுமனே, ஓஷோ என்பதை ஓசோ எனத் தமிழ்ப் பண்ணப்பட்டதன் விளைவா?

இந்த, ‘தமிழகத்தின் ஓசோ’ (அதாவது அண்ணாத்துரை ‘இன்னாட்டு இங்கர்ஸால்’ ஆனது போல…) ஆண்மிக வாதியைப் பற்றி ஏன் நாம் அறிந்துகொள்ள முயலவேயில்லை? ஏன், அவர் பெயர்கூடப் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை?

தமிழன் ஏன் இப்படி ஒன்றுமறியா அரைகுறையாகவே 1967லிருந்து இருக்கிறான்?

நம் தங்கத் தமிழகத்தின் தலையாய மைந்தனாகிய ஓசோ-வை நாம் தலையில் வைத்துக்கொண்டு ஆனந்தக் குத்தாட்டம் போடாமல் நாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்?

எனக்கு, உள்ளபடியே மிகவும் ஆகச் சிறந்த வருத்தமாக இருக்கிறது.

உங்களுக்கு?


:-(

??

11 Responses to ““தமிழகத்தின் ஓசோ” யார்?”

  1. Radharukmani Gopinath's avatar Radharukmani Gopinath Says:

    மண்டை வெடித்து விடும் யார் சார் அந்த தமிழகத்தின் ஓசோ? :)

  2. K.Muthuramskrishnan's avatar K.Muthuramskrishnan Says:

    I do not want that title even if you are willing to confer it to me


    • தமிளின் இண மாண தலீவரின் பேருக்கு பங்கம் நடந்தால்.. என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. வேண்ணுமென்றால் லாரி ஓட்டுநர் திரா.பாலுவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.


      • சாராய அதிபனும், துறைமுகங்கள் பல கொண்டோனும், ஊழலின் உச்சோனும், டிஆர்பி ராஜா எனும் கூறுகெட்ட குலக்கொழுந்தைப் பெற்றெடுத்தோனும், ரெண்டுபொண்டாட்டிக் காரனும் (ஜிஎஸ்டி மேலதிகம்) ஆன தெராவிடப் பதருக்கும்  – தெராவிட வீரமணியின் ஓசிச்சோற்று விஷயத்துக்கும் உள்ள தொடர்பு இழை புரியவில்லை – ஆனால் பரவாயில்லை.


      • ஓசோ மீது கை வைத்தால் கையை வாங்குவோம் என்று திருவாய் மலர்ந்து அருளியிருந்தார் லாரி ஓட்டுநர்


      • சரிதேன்! 😳

        ஆனால், எவன் (அடியேன் உட்பட) தன் கையை விற்கத் தயாராக இருப்பான், சொல்லுங்கள்?


      • இடது கை வாங்கும் லஞ்சம் வலது கைக்குத் தெரியாத வகையில் பஹுத்-அறிவின் வழி அறிவியல் பூர்வமாக நடப்பவர்கள் அவர்கள். எனவே அவர்கள் எதையும் வாங்குவார்கள், ‘கை’ உட்பட. அதனால் தான் ‘கை’ அவர்களுடன் சேர்ந்துள்ளதோ என்னவோ.

  3. Ssk's avatar Ssk Says:

    I thought it was thuglak “So”


Leave a Reply to Ssk Cancel reply

Your email address will not be published. Required fields are marked *