சுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்

August 14, 2018

பலப்பல வருடங்களாக, ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும், நம் பாரதத்தின் சுதந்திர தினமும் ஆகஸ்ட் 15 அன்று, எளிமையாகவும் அழகுணர்ச்சியுடனும் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன…

ஆக, வழக்கமான விஷயங்கள் இந்த முறையும் நடந்தன.  வளாகத்தைச் சுத்தம் செய்வது, நாடக, இசை, நடன நிகழ்ச்சிகளுக்காக முஸ்தீபுகளைச் செய்வது எனச் சிலபல நாட்களாகவே பிள்ளைகளும் ஆசிரியர்களும் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த மணியம்.

இன்று முழுவதும், நாளைய பாரதக் கொடியேற்றலுக்கும், காலை நிகழ்ச்சிகளுக்கும் தயார் செய்துகொண்டிருந்தோம்.

நாளை நம் சுதந்திரதினம் – நம் அனைவருக்கும் வாழ்த்துகள். நாம் பொலிவோம்.

My Bharat will certainly awake in glory; with wings as eagles, it shall soar, in spite of what the naysayers pontificate to the contrary. I am quite sanguine about that.

-0-0-0-0-0-0-

கடந்த சில வருடங்களாக, குழந்தைகள் 3வயதில் பள்ளிக்கு வருவதிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, எங்களால் என்ன செய்யமுடியுமோ அதை மட்டுமே  செய்கிறோம். ஏனெனில் – கடந்த நான்கு வருடங்களாக, வாத்திகள்+நிதி தட்டுப்பாடான காரணத்தினால், +2 வகுப்புகளை நிறுத்திவிட்டோம்.

இந்த நிலையிலும் பக்கத்துக் கிராமங்களில் இருந்து ஏகப்பட்ட கேள்விகள், கோரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன – “இன்னொரு பிரிவு ஆரம்பிக்கக்கூடாதா?” – இவை நியாயமானவைதான். ஆனால் எங்கள் பள்ளி, தனியார் ட்ரஸ்ட் நடத்தும் வகை. அரசிடம் இருந்து ஒரு சுக்கு உதவி பெறுவதாக இல்லை. பெறாமல் இருக்கும்போதே ஆயிரம் கெடுபிடிகள்.

மேலும் – பொய்பொய்யாக, பெரும்பாலான மிஷனரி பள்ளிகள் செய்வதைப் போல ஜோடித்து அரசுதவியும் தனியார் நிதியும் பெறவும் விருப்பமில்லை. கிராம மக்களிலும் பணக்காரர்கள் கூட உதவவரமாட்டார்கள்.

நிலைமை இப்படி இருக்கையிலே (எனக்கு இது முட்டாள்தனமாகப் படுகிறது இப்போது) ஏதோ யோசனைகளைச் செய்து – தம் பிடித்து – கடந்த இரண்டு வருடங்களாக கீழ்வகுப்புகளில் இன்னொரு பிரிவு (ஸெக் ஷன்) ஆரம்பித்து அதனை வருடாவருடம் மேலே எழுப்பிச் செல்லலாம் என ஆரம்பித்திருக்கிறோம். கொஞ்சம் முழி பிதுங்குகிறது. எப்படியாவது இதனைச் செயல்படுத்திவிடுவோம் எனக் குருட்டு தைரியம் இருந்தாலும்…

நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள் – உங்கள் பள்ளிப் பிள்ளைகள் படித்து வேலைகளில் அமர்ந்திருப்பார்கள் அல்லவா, அவர்களிடம் உதவி கேட்கலாமே?

எது எப்படியோ – எங்கள் பள்ளியிலிருந்து எவ்வளவு பிள்ளைகள் மேற்படிப்பு படித்து ‘பெரிய’ உத்யோகங்களில் அமர்ந்து, ‘கை நிறைய’ சம்பாதிக்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியவில்லை – இது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் இவர்களில் பெரும்பான்மையோர் – நல்ல பிரஜைகளாகவும் செயலூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை எனத்தான் எனக்கே நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.  (பொதுவாகவே எங்கள் பிள்ளைகள் அடிப்படையில் நல்லவர்கள்தாம்)

ஆனால் – இந்தப் பையன்களின் இக்கால விவரங்களைத் திரட்டி, அவர்களில் சிலரை நான் நேரில் தொடர்பு கொண்டு ‘முடிந்தால் உதவி செய்யமுடியுமா’ எனக் கேட்டபோது – நல்ல பிரஜைகளாக இருப்பதற்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது. பிரச்சினை என்பது இதுதான்: an arrogant sense of entitlement. புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

எனக்குக் கொஞ்சம் வெறுத்துவிட்டது.

இச்சமயம் – நான் பள்ளியில் படித்து இப்போது ‘நல்ல’ வேலைகளில் இருக்கும் அனைத்துப் பிள்ளைகளுடனும் பேசவில்லை என்பதைத் தெரிவிக்கவேண்டும். ஒருகால், பிற பிள்ளைகள் அப்படி இருக்கமாட்டார்களோ, என்ன எழவோ?

என் பேச்சில்தான் கோளாறோ? இருக்கலாம்.

எது எப்படியோ – அடுத்த ஆண்டு இறுதிக்குள் முட்டிமோதி மூன்று-ஐந்து வகுப்பறைகளைகளையாவது கட்டுவதற்கான நிதியைத் திரட்டவேண்டும்.

பார்க்கலாம்.

ஏனெனில் – சுற்றுவட்டாரத்துக் குழந்தைகளுக்கு, எங்கள் பள்ளி செய்யும் உதவி மகத்தானது. என் கண்கூடாக அதனைப் பார்த்திருக்கிறேன்.

ஆக – சும்மா நொள்ளைக் காரணங்களைக் காட்டி, பிரதிபலன்களைச் சிறுபிள்ளைத்தனமாக எதிர்பார்த்து எம் தாமஸ குணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. முட்டிமோதி மேலெழும்பி வரவேண்டும்.

விவேகாநந்தர் சொன்னதுபோல, have to repeatedly tell this to myself over and over and over… ‘Do not be anxious, do not be in a hurry. Slow, persistent and silent work does everything.’

நன்றி.

-0-0-0-0-0-

மறுபடியும்: நம் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள். ஸ்வதந்திர தேவி, நின்னை அனுதினம் தொழுதிடல் மறக்கிலேனே!

என்னுடைய பாரதம் மஹோன்னதமானது!  26/01/2015

மேரா பாரத் மஹான், of course.

:-)

12 Responses to “சுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்”

  1. RadhaKrishnan. R's avatar RadhaKrishnan. R Says:

    Dear Sir,

    Kindly tell me where this school is situated. I will see, whether I can be of help to you.

    Thanks.

  2. அருண்'s avatar அருண் Says:

    அன்பருக்கு,

    தயவு செய்து எனக்கும் தெரியப்படுத்தவும். என்னால் இயன்ற உதவியை மகிழ்வுடன் செய்யத் தயார்.இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பதில் நம்பிக்கை உள்ளவன்…:)

    நன்றி

  3. Swami's avatar Swami Says:

    Dear Sir
    Can I be of some help?

    Best regards


  4. Dear Shri Ramaswamy, Please send a mail to amaruvi@gmail.com with bank name, IFSC code, account number etc. Will contribute yat kinchith.

  5. suresh kumar's avatar suresh kumar Says:

    Please forward details to my mail id also.


  6. Thanks, all of you and others who have directly wrote to my mail id.

    So sweet of you folks to have responded.

    Please give me a couple of days and I will get in touch with you – with some relevant details.

    Hugs:

    __r.

  7. Subbu's avatar Subbu Says:

    Dear sir,
    I’m also in.


  8. Ram,
    I would like to contribute for your initiative.
    I will wait for your email

    Thanks
    Navin

  9. K.Muthuramakrishnan's avatar K.Muthuramakrishnan Says:

    please write to me kmrk1949@gmail.com

  10. Sen Dhur's avatar Sen Dhur Says:

    sir, would like to contribute. details pls … my id chenthoors@gmail.com


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *