சோகம்தரும் திமுக வெற்றிகள், மகிழ்ச்சிதரும் தோல்விகள்: சில குறிப்புகள்

May 20, 2016

தமிழகத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டிய தலையாய கட்சியாக இந்த திமுக எழவு இருந்தாலும் – இந்த 2016 தேர்தலில் இவ்வளவு தொகுதிகளில் திமுகவை வெற்றி பெறச் செய்தது – நம் தமிழர்களின் தொடர்ந்த முட்டாள்தனத்தைத் தான் குறிக்கிறது. :-(

…ஆனால் அடுத்துவரும் தேர்தல்களில், நம்முடைய தமிழர்கள் இந்தத் தவற்றினைச் செய்யமாட்டார்கள்,  எனத் தோன்றுகிறது, பார்க்கலாம்; ஏனெனில் இசுடாலிரிடம் வசீகரமில்லை; உழைப்பு இருக்கும் அளவுக்கு விவேகமோ, ‘ரிஸ்க்’ எடுக்கும் மனப்பான்மையோ, அதற்கான குண்டுதெகிரியமோ இல்லை; இன்னமும் அப்பாவின் வாலைப் பிடித்துக்கொண்டு  அலையும் தன்னம்பிக்கையற்ற சமர்த்துப்பிள்ளையாகவே, தொடர்ந்து 100 வயதுவரை திமுக இளைஞர் அணியின் நிரந்தர இளம்தலைவராக  வெகுபாதுகாப்பாக இருக்க மட்டுமே ஆசைப்படுகிறார் போலும்!

ஆனால் வசீகரம் ஓரளவுக்காவது இருக்கும் கருணாநிதி அவர்களிடம், ஆயுள்  இல்லை – இயற்கைக்கு நன்றி. எப்படியோ, ஒருவழியாக இந்தத் திராவிடக் கொள்ளைக்காரக் கட்சிகள் ஒவ்வொன்றாக ஒழிந்துபோய் இந்திய அளவிலான தேசியக் கட்சிகள் வளர்ந்தால் சரி.

சரி. மத்திய அரசு சார்ந்த மகாமகோ ஊழல் வழக்குகளிலிருந்து (2ஜி, அன்னியச் செலாவணி, கலைங்கர் டீவி, ஏர்ஸெல், திருட்டு டெலிஃபோன் இணைப்பகம்… …) திமுக குடும்பத் திருடர்கள் தப்புவதற்காக, காப்பாற்றப்படுவதற்காக, காங்கிரஸில் காலடியில் புரண்டு அதற்கு வெகு அதிகமாகத் தொகுதிகளை ஒதுக்கியதுதான் தோல்விக்குக் காரணம் என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டமுடியாத அளவில், திமுகவின் வாக்குவிகிதம் இளித்திருக்கிறது; இந்த இளிப்பு தொடரவேண்டும் என்பது என் அவா. ஏனெனில் திமுகவை மூச்சுமுட்டவைக்கும் வழக்குகளும் தொடரும், தமிழகத்திலும் அமர்க்களமான பின்னடைவு. திமுகவின் கதை – உள்ளதும் போச்சுரா நொள்ளைக்கண்ணா. வாழ்க.

திமுகவின் தோல்வியை வெற்றியாகப் பிரமைபிடித்துப் பார்த்து உளறும் உடன்பிறப்புகள் எவரும், பிலாக்கணம் இடும் அழுமூஞ்சிகளும் – ஐந்து ஆண்டுகளாகப் பதவியில் இல்லாவிட்டாலும் எப்படி இந்த திமுக, எப்படியாவது வெற்றிபெற்றுவிடவேண்டுமென தொகுதி தொகுதியாகப் பணத்தை அள்ளிவீசியது (மு. கருணாநிதியின் திருவாரூர் உட்பட!) எனக் கேள்வி கேட்பதேயில்லை.

…எது எப்படியோ – உதிர்க்கப்படவேண்டியது, ஓரளவுக்காவது உதிர்க்கப்பட்டிருக்கிறது என்பதில் என்னுடைய சோகவுணர்ச்சி கொஞ்சம் குறைவாகியிருக்கிறது.

நிற்க, 11 ஏப்ரல், 2016 அன்று – என் அனுபவத்தையும் கணிப்பையும் சார்ந்து நான் எழுதியது சரியாக வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதனை, ஒரு தேர்ந்த ஆருடக் காரனாக என்னைக் காட்டிக்கொள்வதற்காகக் குறிப்பிடவில்லை; ஆனால் கீழ்மட்ட நிலவரங்களை வைத்துக்கொண்டும், முன்னனுபவங்களைக் கருத்தில்கொண்டும், ஒருவன் ஓரளவுக்காவது காத்திரமான கணிப்புகளுக்கு வரமுடியலாம் என்பதற்காகத்தான்….

அஇஅதிமுக காரர்களை என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. இதன் அடிமட்டத் தொண்டர்களை எது முடுக்குகிறது என்றே தெரியவில்லை – ஒரேயொரு காரணத்தைத் தவிர –  இவர்களுக்கு கருணாநிதிமேல் அவ்வளவு எதிர்மறை வெறி. எம்ஜிஆர் ரசிகர்களாக இருக்க முடியாத இளம் அஇஅதிமுக காரர்கள்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். ஆச்சரியம் தான். (நானும் கருணாநிதியை அடிமனத்திலிருந்து வெறுப்பவன் தான் என்றாலும், அவர்களுடைய காரணங்கள் வேறு!)

இதற்காகவே கூட திமுக, கருணாநிதியை முன்னிலைப் படுத்தாமல் இருந்தால், அதற்கு கொஞ்சம் நன்மையாக இருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது.

சரி. எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – வாக்குவங்கி, ஜாதிவெறி, கொள்கை, கூட்டணி, ஓட்டுக்குக்குப்பணம் எண்ணிக்கைகள் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அஇஅதிமுக வெற்றிபெறும்.

ஏனெனில் – அதுவும் ஒரு அயோக்கிய கொள்ளைக்காரக் கட்சியாக இருந்தாலும், திராவிட ஐம்பெரும் கொள்கைவழி நடந்தாலும் – அதற்கு ஒரு கறாரான, வசீகரத் தலைமை இருக்கிறது. அதன் தொண்டர்கள் தொடர்ந்து உற்சாகமாகப் பணிசெய்ய, உத்வேகம் பெற, ஊக்குவிக்கப்பட விஷயங்கள் இருக்கின்றன.

அவர்கள் கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து, சுணக்கமில்லாமல் பணிசெய்கிறார்கள். இந்த ஒரு காரணத்தினாலேயே அவர்கள்தாம் வெற்றிபெறப்போகிறார்கள் எனப் படுகிறது…

…ஆனால், எனக்கு இந்த அஇஅதிமுக எழவும் ஒவ்வாது. ஆனால் சோகமென்னவென்றால், இதற்கு காத்திரமான மாற்று என ஒன்றே சுத்தமாக இல்லை. (எப்படியும், திமுக நாசமாகப் போனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்)

என் நம்பிக்கையென்னவென்றால், அஇஅதிமுக பின் வரும் காலங்களில் உதிர்ந்துபோகும். ஏனெனில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதற்கு இரண்டாம்வரிசைத் தலைமையேயில்லை.

அதுவரை  மநகூவான்களையும், பாஜகவினரையும் பூதக்கண்ணாடியில் பார்த்து ஆதரித்துத் தொலைக்கவேண்டியதுதான்.

தமிழர்களைப் போலப் பாவப்பட்டவர்கள் இத்தரணியில் வேறுயாராவது இருக்கிறார்களா?

https://othisaivu.wordpress.com/2016/04/11/post-627/

மநகூ + தேமுதிக + தமாக வகையறாக்கள் மண்ணைக்கவ்வப் போகிறார்கள் எனவும் எழுதியிருந்தேன்! :-(

-0-0-0-0-0-0-

என் நண்பர் ஒருவர் – சில நாட்கள் முன்னர்,  இப்படியொரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்; அயோக்கிய திமுக திரும்பிவந்தால் என்னவாகும் எனக் கதிகலங்கியிருந்தார் என நினைக்கிறேன், பாவம்:

I am shocked to see that the exit polls predict the return of DMK. :(

yathaa prajaa, thathaa raja ? :-(

deeply saddened

இதற்கு நான் அனுப்பியபதில் இதோ:

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥

Relax till the day of results. Exit polls are NEVER scientific. We
can’t either way say anything about the results anyway!

Having said that, I would also feel sad, if these DMK lumpens return
to haunt TN.

So, let us pray, if we must.

__r.

சரி. திமுக பொறுக்கிகள் ஆட்சியமைக்கவில்லை; ஆனால்

-0-0-0-0-0-0-0-

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவினர்,  இன்னமும் அமோகமாகத்  தோற்றால் மகிழ்ச்சியடைவேன்.  அவற்றில் கம்யூனிஸ்ட்களும், பாஜகவும், தமாகவும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெறமுடிந்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

மேலும், அஇஅதிமுக தலைமேல் சொத்துக்குவிப்பு வழக்கு வாள் தொங்கிக்கொண்டிருக்கிறது…

பார்க்கலாம், நம் எதிர்காலம் எப்படி விரிகிறதென்று….

நன்றி.

பின்குறிப்பு:  இந்தத் தடவை அரங்கேறக்கூடும்  ‘அடிக்கறாங்க, அடிக்கறாங்க’ (2016 எடிஷன்) அதிரடிக் கேளிக்கை நிகழ்ச்சியின் போது, தமிழர் தலைவரின் குஞ்சாமணியை (=’உயிர்நிலை!”) விட்டுவிடும்படிக்கு, தமிழகக் காவல் துறையிடம் சிரம்தாழ்ந்து விண்ணப்பித்துக்கொள்கிறேன். அவரே – தமிழன் முட்டாள், சோற்றாலடித்த பிண்டம், யாக்கை உயிர்நிலையாமை எனப் பிதற்ற ஆரம்பிக்கப் போகிறார், பாவம்… இதற்குமேல் அவருக்குக் கொடுமை வேண்டாம்!

நன்றி++.

 

 

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *